துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி
துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 290000 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் உயிருடனும் பலர் மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தினால் உலகே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு
வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு
பாகிஸ்தானின் அமைதியற்ற வடமேற்கு பிராந்தியத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் .
மேலும் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர் .
நாட்டின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட,
முச்சக்கர வண்டியில் சென்ற தற்கொலை குண்டுதாரி, பெட்ரோலிய நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய படையினரின் வாகனம் மீது மோதியாது .
இதன் பொழுது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நிறுவனத்தின்
15 ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை
கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (11) இரவு 11மணியளவில் நீதவானின் வாசஸ்தலத்தில் 18 பேரையும் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே பதில் நீதவான் இந்த உத்தரவையிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் நேற்று (11) மதியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சிவனொளிபாத மலை ஏறும்போது குழந்தை பிரசவித்த பெண்
சிவனொளிபாத மலை ஏறும்போது குழந்தை பிரசவித்த பெண்
இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
32 வயதுடைய பெண் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
பின் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன்
அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
காதலர் தினத்தன்று இதற்கு தடை
காதலர் தினத்தன்று இதற்கு தடை
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை வாழ் பெற்றோர்கள்,சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு காதலர் தினத்தில், இது போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே, இது போன்ற ஒரு நிலைமையை தவிர்த்துக்கொள்ளும் சமூக நோக்குடன் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெற்றோர்களிடமும் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை அன்றைய தினத்தில் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் தெரிவித்தார்.
காதலர் தினத்தன்று இதற்கு தடை
இதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் தனியார் வகுப்புக்களை நடத்துபவர்கள் கல்முனை மாநகர சபையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே அமுலில் உள்ளது.
அத்துடன், தனியார் வகுப்புக்கள் நடாத்தப்படுவதற்கான சில ஒழுங்கு விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான சுத்தமான காற்றோட்ட வசதி, இருக்கை ஒழுங்குகள், கழிவறை வசதிகள் என்பன சீராக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே அவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற
முறைமையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ. எம்.றகீப் குறிப்பிட்டார்
197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்க பட்டுள்ளன
197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்க பட்டுள்ளன
வடக்கு மீள்குடியேற்ற கொடுப்பனவுகளில் 197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் அனுசரணையில் காணி உறுதிகள் விநியோகிக்கப்பட்டன.
வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் மற்றும் நிதி இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தலா 38,000. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய உள்நாட்டுப் போரின் போது பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய காணிகளை பூர்வீகக் குடிமக்களுக்கு
மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை
துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை
ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா கடும் விமான தாக்குதல்
ரஷியா கடும் விமான தாக்குதல்
உக்கிரைன் தெற்கு டினிப்பீரோ பகுதியில் உள்ள மின்சார
மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை ,
கரும்புலி விமான தாக்குதலில் ஐந்துக்கு மேற்பட்டதா மின்சார மையங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளன .
12 தற்கொலை கரும்புலி விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின .
இதில் ஐந்து சுட்டு வீழ்த்த பட்டது .
ஏனைய ஏழும் இலக்குகள் மீது வீழ்ந்து வெடித்தன
என உக்கிரைன் தெரிவித்துள்ளது .
பத்து லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .
இன்று நடத்த பட்ட தாக்குதலில் மேலும் லட்சக்கணக்கான மக்கள் ,
மின்சாரத்தை இழந்து தவிக்கின்றனர் .
கடும் குளிர் நிலவி வரும் இவ்வேளை ,
ரசியா நடத்தி வரும் இவ்வாறான தாக்குதல்களினால் ,
மேலும் பலத்த இழப்பை உக்கிரைன் சந்தித்துள்ளது .
சீனாவின் மேலும் ஒரு பலூன் சுட்டு வீழ்த்தல்
சீனாவின் மேலும் ஒரு பலூன் சுட்டு வீழ்த்தல்
சீனா நாட்டுக்கு சொந்தமான உளவு செய்மதி பலூன் ஒன்று
அலெக்ஸ்சா கடல் பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது ,
அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
நாற்பது ஆயிரம் அடி உயரத்தில் ,
கார் ஒன்று நீளத்தை கொண்ட பலூன் பறந்து கொண்டிருந்தது .
இதனை அவதானித்த அமெரிக்கா அந்த பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளது .
அதிக விமான போக்குவரகு கொண்ட பகுதியில் இந்த பலூன் பறந்து
ஆபத்தை விளைவிக்க முனைந்ததினால் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது அமெரிக்கா .
ஒரு வாரத்தில் சீனாவின் இரண்டாவது பலூனை அமெரிக்கா சுட்டு
வீழ்த்தியுள்ள சம்பவம் ,அமெரிக்கா
சீனாவுக்கு இடையில் மிக பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி ,
4 நாட்களின் பின் கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து மூவர் மீட்க பட்டனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர் .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நில நடுக்கத்தில்
சிக்கி இதுவரை 23 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
உக்கிரனுக்கு தமது ஆயுதங்களை வழங்க ஸ்பெயினுக்கு தடை போட்ட சுவிஸ்
உக்கிரனுக்கு தமது ஆயுதங்களை வழங்க ஸ்பெயினுக்கு தடை போட்ட சுவிஸ்
உக்கிரனுக்கு சுவிஸ் நாடு தயாரித்த two 35-millimetre anti-aircraft guns சூடு கலன்களை வழங்க
ஸ்பெயின் நாடு முன் வந்தது .
ஆனால் தமது நட்டு தயாரிப்பிலான இவற்றை வழங்க
வேண்டாம் என சுவிஸ் வேண்டுதல் விடுத்துள்ளது .
இதனால் ஸ்பெயின் மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது .
உக்கிரைனுக்கு போட்டி போட்டு பல நாடுகள் ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில்
சுவிஸ் மேற்கொண்ட இந்த செயல்பாடு ரசியாவுக்கு ,
ஆதரவான செயல்பாடாக நோக்க படுகிறது .
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் ரியர் அட்மிரல் அப்துல்
பாஸித் பட் (Rear Admiral Abdul Basit Butt) உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் (10) புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் 3.5
மற்றும் 3 ரிக்டர் அளவுகோலில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்
பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் என்ற ரீதியில் முழு நாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது. பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் ஏதும் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கையில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்பதால் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர்.
ஆங்கிலேயர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை கையளித்து சென்றார்கள்.
சிங்கள அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.
சிங்கள சமூகத்தினருக்கு பொருளாதார சுதந்திரம் தற்போது இல்லை என்பதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் 13 ஆவது திருத்த நகல்களை தீயிட்டார்கள். இவர்களை போல் இந்து குருக்கள் அல்லது முஸ்லிம் மௌலவி செயற்பட்டிந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.
பௌத்த பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளது என்பதால் அவர்கள் அரசியலமைப்பை எரிக்கிறார்கள்.
ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போது 13 ஆவது திருத்தம் ஆகவே சிங்கள மக்கள் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துரைக்க முன் மாகாண
சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் வான் மோதி தந்தை மகள் பலி
விபத்தில் வான் மோதி தந்தை மகள் பலி
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹபிட்டிய வீதியில் பயணித்த தந்தையும் மகளும் வேன் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் அவரது 14 வயது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை வத்தளை, ஹெந்தல – அலகந்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்து
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
போக்குவரத்து அமைச்சரின் அதிரடி உத்தரவு
போக்குவரத்து அமைச்சரின் அதிரடி உத்தரவு
வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதே நிறுவனம் மேலும் பல நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
துணை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட உபகரணங்களும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்
இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்
சிரியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் கட்டடட
இடி பாடுகளில் தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்தார் .
இந்த சம்பவம் உலக மக்களை கனியில் நனைய வைத்துள்ளது .
பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு சென்று பார்த்த அயல் வீட்டு பெண் ,
இறந்த தாயுடன் இணைக்க பட்ட தொப்புள் கொடியை வெட்டினார் .
மீட்பு படையினர் விரைந்து வந்து சிசுவை மீட்டு
மருத்துவமனையில் சேர்த்தனர் .
ஆனால் அந்த குடுப்பத்த்தில் இந்த சுசு மட்டுமே எஞ்சி இருந்தது .
அனைவரும் இறந்து விட்டனர் .
ஒரு மணி நேரம் தாமதமாக சிசு மீட்க பட்டு இருந்தால் ,
இறந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் மக்களை கண்ணீரில்
நனையவைத்துள்ளது .
கிட்னி மோசடி புரிந்த தரகர் கைது
கிட்னி மோசடி புரிந்த தரகர் கைது
கிட்னி மோசடி புரிந்த தரகர் ஒருவர் இலங்கை கட்டுநாயக்க வான்தளத்தில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார்
இலங்கை பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில்,
பணிபுரிபவர் போன்று வறுமை நிலையில் உள்ளவர்களை,
ஏமாற்றி கிட்னி மோசடியில் இடம்பெற்ற பொழுது கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இவ்வாறன கிட்டினி மோசடி புரிந்து மிக பெரும் கும்பல் சிக்கியது குறிப்பிட தக்கது .
ரஷ்யா விமானத்தை வீழ்த்த குவிக்கபட்ட ஏவுகணை|ரஷ்யா உக்கிரைன் போர்|russia ukraine news in tamil|ethiri
ரஷ்யா விமானத்தை வீழ்த்த குவிக்கபட்ட ஏவுகணை|ரஷ்யா உக்கிரைன் போர்|russia ukraine news in tamil|ethiri
ரஷ்யா விமானத்தை சுட்டு வீழ்த்த உக்கிரைனில் குவிக்க பட்ட ஏவுகணைகள் . உக்கிரைன் இராணுவம் வைத்த குறியில் சிக்குமா ரஷ்யா பயன் படுத்தும் ஈரான் விமானங்கள் . பதட்டமாகும் ரஷ்யா உக்கிரைன் போர் களம்
பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது
பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது
பெண்களுடன் அலைபேசியில் ஆபாசமாக பேசி காட்சிகளை அனுப்பி பண மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது .
இலங்கை பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவர் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது .
பெண்களிடம் ஆபாசமாக பேசி ஏமாற்றய நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன.











































