சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இறுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இறுக்கம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இறுக்கம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்கிய இருதரப்பும் ,
ஒப்புதல் வாக்குகள் அளித்தால் மட்டுமே பணம் வழங்க படுமென்கிற
இறுக்கமான கால கெடுவை விதித்துள்ளது .

இதனால் கடன் வழங்கியவர்கள் ஆதரவு ஒப்புதல் இலங்கைக்கு வழங்கினால்
மட்டுமே கடன் வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது .

இதற்கு சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமது ஆதரவு தெரிவித்துள்ளன .
இருந்தும் ஏனைய நாடுகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே நிலையாக உள்ளது .

No posts found.
இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்

இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்

இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து கடத்தி செல்ல
பட்ட பத்து கோடி ரூபாவுக்கு மேலான பெறுமதியான தங்கம் மீட்க பட்டுள்ளது .

வருவாய் துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் பொழுது இந்த தங்கம் சிக்கியது .
கைதானவர்களிடத்தில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்
Posted in உலக செய்திகள்

நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்

நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்

ஐரோப்பாவில் புகழ் பெற்று விளங்கும் டிலிவரோ டிலிவரி செய்திடும் நிறுவனம் நட்டத்தில்இயங்குவதாக தெரிவித்து 350 பணியாளர்களை நிறுத்துகிறது .

இதில் அதிக பாதிப்பை பிரிட்டன் சந்தித்துள்ளது .

தமது பணியாளர்கள் வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் ,
நிறுவனம் ஊழியர் இல்லா நிலையால் ,
இழப்பை சந்தித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது .

ஆனால் சாரதிகளோ உரிய பணத்தினை ,ஊதியமாக,
வழங்காத நிலையில் ,தாம் பணிகளை விட்டு
விலகியதாக தெரிவிக்கின்றனர் .

பிரிட்டனில் வழங்க படும் அடிப்படை ஊதியம் கூட ,
தங்களுக்கு கிடைப்பதில்லை என்கின்றனர் சாரதிகள் .

இந்திய மத்திய இணை அமைச்சரை சந்தித்த செந்தில்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மத்திய இணை அமைச்சரை சந்தித்த செந்தில்

இந்திய மத்திய இணை அமைச்சரை சந்தித்த செந்தில்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர்

அண்ணாமலை அவர்களுடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆகியோர் யாழ் நூலகத்தை

பார்வையிட்டதுடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

No posts found.
துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி

துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த ,
3 உதைபந்தாட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர் .

பலியான மூன்று வீரர்களும் ஈரான் நாட்டின் ,
amputee உதைபந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் என,
ஈரான் தெரிவித்துள்ளது .

ஈரான் கால்பந்து வீர்ரகளின் இழப்பால் ,
அவரகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

சுற்றிவளைக்க பட்ட இராணுவம் |russia ukraine news in Tamil |ரஷியா உக்கிரைன் போர் | ethiri news
Posted in உளவு செய்திகள்

சுற்றிவளைக்க பட்ட இராணுவம் |russia ukraine news in Tamil |ரஷியா உக்கிரைன் போர் | ethiri news

சுற்றிவளைக்க பட்ட இராணுவம் |russia ukraine news in Tamil |ரஷியா உக்கிரைன் போர் | ethiri news

ரஷியா இராணுவத்தினரால் சுற்றிவளைக்க பட்ட உக்கிரைன் இராணுவம் . இந்த பகுதியை மீட்க ரசியா இராணுவத்தினரால் கடும் ஏவுகணை தாக்குதல் நடத்த படுகிறது .ரஷியா உக்கிரைன் இராணுவதுக்கு இடையில் கடும் போர் இடம்பெறுகிறது.

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி
20 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர் .

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கட்டட இடிபாடுகளுள் இருந்து ,
மூன்று நாட்களின் பின்னர்,
இரண்டு வயது சிசு ஒன்று ,
உயிருடன் மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .

குறித்த காட்சியானது மக்களை கலங்க வைத்துள்ளது .

உக்கிரைன் விமானிகளுக்கு பிரிட்டனில் பயிற்சி
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் விமானிகளுக்கு பிரிட்டனில் பயிற்சி

உக்கிரைன் விமானிகளுக்கு பிரிட்டனில் பயிற்சி

உக்கிரைன் விமானிகளுக்கு அதி உயர் ரக போர் ,
விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்க படவுள்ளன .

இந்த பயிற்சிகளுக்கு பிரிட்டன் வந்தடைந்துள்ள உக்கிரைன் ,
விமானிகள் குழுவுக்கு
பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் ,அவர்கள் பயிற்சி பெற்ற
தாக்குதல் விமானங்கள் வழங்க படவுள்ளன .

இந்த விமானங்களை உக்கிரைனுக்கு பிரிட்டன் வழங்குவதற்கு,
ரசியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தநேசியா பாப்புவ நோக்கிய தீவு பகுதியில் பாரிய,
நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .

இந்த நில அதிர்வு 5,5 ஆக பதிவாகியுள்ளது .

இந்த நில நடுக்கத்தில் கட்டடங்கள் வீதிகள் என்பன இடிந்துள்ள ,
காட்சிகள் வெளியாகியுள்ளன .

எனினும் மக்களுக்கு ஏற்பட்ட முழுமையான ,
சேத விபரங்கள் தெரியவரவில்லை .

வடிவேல் சுரேஷ் இராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

வடிவேல் சுரேஷ் இராஜினாமா

வடிவேல் சுரேஷ் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிடம்
தெரிவித்துள்ளதாக தெரணவிற்கு இன்று வழங்கிய
நேர்காணலில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

No posts found.
படுத்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்| isrel iran News in Tamil | ukraine |iran |இஸ்ரேல் ஈரான் போர் செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்| isrel iran News in Tamil | ukraine |iran |இஸ்ரேல் ஈரான் போர் செய்திகள்

உக்கிரைன் களமுனையில் ஈரானின் தற்கொலை மற்றும் உளவு விமானங்கள்,
தாக்குதல்கள் திறம்பட்ட வண்ணம் அமைந்துள்ளன .

இதனால் உலகில் உள்ள 90 நாடுகள் ஈரானிடம் இருந்து,
இந்த விமானங்களை வாங்கிட போட்டி போட்ட வண்ணம் உள்ளன .

உலக சந்தையில் ஈரான் விமானங்களுக்கு ஏற்பட்ட மவுசை அடுத்து ,
அதன் விற்பனையை தடுக்கும் நகர்வில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ,
திறம்பட செயலாற்றி வருகின்றன .

ஈரானின் வங்கி கட்டமைப்பு மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மீது ,
கைக்கிங் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன .

இதன் மூலம் ஈரானுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்த,
அவர்கள் முயன்றுள்ளன .

என்னும் அந்த கைக்கிங்க தாக்குதல் முறியடிக்க பட்டு,
யாவும் சரி செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சீருடையில் இருந்த 4 பேர் கைது

பொலிஸ் சீருடையில் இருந்த 4 பேர் கைது

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஇம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் போலிஸ் சீருடை அணிந்த 4 பேர் இருந்துள்ளனர்.

அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னர், காரும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி இலக்கத் தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் சீருடையில் இருந்த 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26, 27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது..

சந்தேக நபர்கள் இன்று (09) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்காக பயணித்தார்களா
என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No posts found.
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியயை ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

ஆசிரியயை ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருக்குலைந்த நிலையில் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்து வரும் நிலையில் ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

ஆசிரியயை ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

இந்த நிலையில் சம்பவ தினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து உருக்குலைந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும்
குற்றதடுப்பு பிரிவு மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

No posts found.
அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்

அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்

இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்

அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகப்பூர்வ
இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணை தூதுவரும் பங்கேற்றிருந்தார்.

No posts found.
காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரு பெண்கள் சடலமாக மீட்பு

இரு பெண்கள் சடலமாக மீட்பு

கினிகத்தேனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தாய், மகளது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கினிகத்தேனை- பேரகஹமுல பிர​தேசத்தைச் சே​ர்ந்த50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை உடைத்துச் சென்று உள்​ளே பார்த்த போது, தாயும் மகளும் சடலங்களா கட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவனும் மகனும் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No posts found.
13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

3ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும், அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் நேற்று (08) இதனை கூறினார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் பெரும்பான்மை மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் நிறைவேற்றும் என்று கூறிய அவர் தான் முதலமைச்சராக இருந்த போது, இதனை நன்றான உணர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

இதனால், சமஷ்டியை கோருவதுடன், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சிறந்தது என்றும், அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இடையில் என்ன நடக்கும் என்பது தெரியாத என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தற்போது தீர்வை தருவதாக கூறியுள்ள நிலையில்,
நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No posts found.
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பத்து இந்தியர்கள் சிக்கி உள்ளனர் .
ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் ,
ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் .

இவ்வாறு காணாமல் போனவர ,
வர்த்தக நோக்கத்துடன் துருக்கிக்கு பயணித்துள்ளார் .

அவ்வாறான நபரே காணமல் போயுள்ளார் .
காணாமல் போனவரை கண்டுபிடிக்கும் பணிகள் முடிக்கிவிட பட்டுள்ளன .

இவர் இந்த அனர்த்தத்தில் சிக்கி இறந்திருக்க கூடும் ,
என அஞ்ச படுகிறது .

துருக்கியில் மூவாயிரம் இந்தியர்க்ள உள்ளதாக,
இந்தியா வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது .

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 12.000 கடந்துள்ளது .,

இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது .

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் மக்கள் பலரும்
உயிருடன் மீட்க பட்ட வண்ணம் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது .

பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு

பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு

உக்கிரைன் அதிபர் ஜெலன்ஸி பிரிட்டன்
மன்னர் சாள்ஸ்சை சந்தித்து பேசியுள்ளார்

இந்த சந்திப்பில் உக்கிரைனில் நடப்பது தொடர்பாக ,
நாம் கவலை உற்றுள்ளோம் .
உஙக்ளுக்கு நாங்கள்
ஆதரவாக இருப்போம் என சாள்ஸ் தெரிவித்துள்ளார் .

இந்த சந்திப்பை முடித்து கொண்டு பிரான்சுக்கு ஜெலன்ஸி செல்கிறார் ..

இவரது இந்த பயணத்தின் நோக்கம் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை பெற்றுக்கொளவது என்பதாக அமைய பெற்றுள்ளது .

ஜெலன்ஸி வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் இவ்வேளை ,
ரசியா கடும் தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளது .

பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்
Posted in உலக செய்திகள்

பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்

பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்

கடந்த தினம் அதிகாலை யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில்,
ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நால்வர் காயமடைந்தனர் .

விமானத்தின் ஆசனத்தின் பின் பாக்கொட்டில் இருந்த ,
பாக்டரி திடீரென தீ பிடித்து வெடித்து சிதறியதில் ,
இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

உடனடியாக தீ அணைக்க பட்டு விமானம் சான் டியாகோ,
சர்வதேச விமான நிலையத்தில் ,அவசர தரை இறக்கத்தை
மேற்கொண்டது .

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு ,
சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

பயணிகள் வேறு விமானத்தில் மாற்ற பட்டு,
தமது பயணத்தை தொடர்ந்தனர் .

இந்த வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .