விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம் |உலக செய்திகள்
விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம் |உலக செய்திகள்
உலக செய்திகள் |பிலிப்பைன்ஸ் நாட்டில் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது .இவ்வாறு காணாமல் போன விமானத்தை முப்படையினர் தேடி வருகின்றனர் ,
நால்வருடன் பயணித்த சிறியரக விமானமே
தரை இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளை
காணமல் போயுள்ளது .
இவ்வாறு காணாமல் போன விமானத்தை தேடும்
பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .
விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்க கூடும் என
அஞ்ச படுகிறது .
ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |ஜெர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவ
படை முகாமில் வைத்து உக்கிரேன் இராணுவத்தினருக்கு
கிமாஸ் ரக பல் குழல் செலுத்திகள் ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டன .
முதலாவது அணியை சேர்ந்த 635 பேர் பயிற்சி நிறைவு செய்து வெளியேறினர் .
மேலும் இரண்டாவது அணியினர் மீளவும்
அதே முகாமில் பயிற்சிகளை பெற்றிட வரவழைக்க படுகின்றனர் .
இந்த ஏவுகனை செலுத்திகள் தாக்குதல் ,ரசியா இராணுவத்தினருக்கு மிக பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன .
இந்த ஏவுகணை செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்குவதற்கு ரசியா கடும்
கண்டனத்தை தெரிவித்து இருந்தது .
இவ்வாறான நிலையிலே இந்த விசேட
ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டுள்ளது மேலும் ரசியாவை
கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
உலக செய்திகள் |சோமாலியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
சுதந்திர விடுதலைக்காக போராடி வரும்
அல்சபா போராளிகள் வசம், சோமாலியாவின் முக்கிய பகுதிகள் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன .
மேலும் தமது சுதந்திர பிரகடனத்தை அறிவித்த பொழுதும் ,ஆளும் சோமாலிய அரசு ஏற்க மறுத்து போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளது .
இதனால் அரசு மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் கடும் யுத்தம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
போராளிகள் இராணுவ முகாம் பகுதிகளை
சுற்றிவளைத்து நடத்திய தகுத்தலில் இந்த இழப்பு ஏற்பட்டுப்படுத்த
பட்டுள்ளதாக சோமாலியா இராணுவம் தெரிவித்துள்ளது .
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
அமெரிக்கா இராணுவம் அவசர அவசரமாக தற்போது 155 மில்லி மீற்றர்பீராங்கி குண்டுகள் கொள்வனவு செய்திட பீரங்கி குண்டு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆடர் செய்துள்ளது .
உக்கிரைன் இராணுவத்தினருக்கு இவ்விதமான
பீரங்கி குண்டுகளை அமெரிக்கா பெரும் தொகையில் வழங்கியது .
இஸ்ரேல் இராணுவ முகாமில் சேர்த்து வைக்க பட்டிருந்த ,இவ்வகையான பீரங்கி குண்டுகளை உக்கிரனுக்கு வழங்கிய நிலையில் ,தற்போது மிக பெரும் தொகையில் இந்த குண்டுகளை ஆடர் செய்கிறது .
உக்கிரைன் களத்தில் இந்த ஆட்டிலறி பீரங்கி குண்டுகள் மிக பெரும் பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ புயலின் சிக்கிய பயணிகள் விமானம் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிக்க பட்டது.
பலத்த புயலில் சிக்கிய பயணிகள் விமானம்
சுமார் 10 நிமிடங்களுக்குப் மேலாக வானில் புயலில் சிக்கிய பிறகு 10:53 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்து
மற்றும் இங்கிலாந்தின் பகுதிகள் முழுவதும் வீசி
பலருக்கு பயணத் தடையை ஏற்படுத்தியது,
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சாலை போக்குவரத்து தடுக்கப்பட்டன.
பயணிகள் உயிராபத்து இன்றி தப்பித்து கொண்டனர் .
தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்
தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தேர்தலுக்கு பணம் இல்லை என தெரிவித்து ராஜபக்ச குடும்பத்தை ரணில் விக்கிரமசிங்கா காப்பாற்றியுள்ளார் .
நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்டு வரும் ராஜபக்ச குடும்பத்தை ஜனாதிபதியாக்கிய விசுவாசத்திற்கு ரணில் அடிமையாகி நடந்து வருகிறார் .
தேர்தல் இடம்பெற்றால் ஆளும் ஆட்சி கவிழ்க்க படும் நிலை உள்ளதால் ,ரணில் விக்கிரமசிங்க இவ்வித அரசியல் சித்து விளையாட்டில் நடை போடுகிறார் .
இன்றைய இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் ,
இந்த விடயம் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து
அலங்கரித்து உள்ளமை கவனிக்க தக்கது .
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளுக்கு ஓடுவதால் இலங்கை திணறிய வண்ணம் உள்ளது .
மாதம் தோறும் ஐம்பது முதல் 60 வரையான மருத்துவர்கள் ,
நாட்டை விட்டு செல்கின்றனர் .பலர் விடு முறைவிண்ணப்பம்
கோரியுள்ளனர் .
மேலும் 1000 மருத்துவர்கள் நடத்தி விட்டு சென்றுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர விடயத்தை அவர் தெரிவித்தார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த
அவல நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள்
சங்கத்தின் (GMOA) பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .
சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்
சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .
சீனா கடன் தள்ளி வைப்பு நடவடிக்கைக்கு ரெண்டு வருடம் மட்டுமே அனுமதி வழங்கியது .
இந்த காலக்கெடு போதாமை உள்ளதினால் ,சீனாவை புறம் தள்ளி
கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு நிதி வழங்க,
சர்வதேச நாணய நிதியம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
இலங்கை இவ்வாறான நிலைக்கு செல்ல ,சீனாவே காரணமாக விளங்கியதும் ,
தொடர்ந்து இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா
முயல்வதும் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .
இந்த விடயம் உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .
வெளியான புதிய புலிகள் எழுச்சி பாடல்|இலங்கை செய்திகள்
வெளியான புதிய புலிகள் எழுச்சி பாடல்
இலங்கை செய்திகள் |தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிமிகு பாடல் ஒன்று
வெளியாகியுள்ளது .
புலிகள் அமைப்பு அழிக்க பட்டாலும் அவர் தம் எழுச்சி குறையவில்லை .
தமிழர் கலைபண்பாடு மற்றும் கலை பண்பாட்டு கழகம் அழியாமல் தொடர்ந்து நடை போடுவதை இவ்வாறான ஈழ பாடல் வெளியீடுகள் எடுத்து காட்டுகின்றன .
இந்த பாடலை பாடியவர் பாவேந்தன் -இளங்கோவன்
இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – ஸ்ரீகாந்தன்
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும்
உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.
ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் ஜப்பான் நாட்டின் பீஸ் வெயின்ட் அரச சார்பாற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவு
இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகவும், ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு
கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திக்கூடங்களை பிரதம
அதிதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் திறந்து
வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் மிகச் சிறந்த முறையில் சேதனைப் பசளைகளை உற்பத்தி செய்து அதன் மூலம் நல்ல விளைச்சலைப்பெற்ற உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களுடன் நினைவுச் சின்னங்களை ஆளுநர் மற்றும் ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு ஆகியோரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
அபு அலா –
ரசியாவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதிப்பு |உலக செய்திகள்
ரசியாவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதிப்பு |உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆயுதங்களை வழங்கி வருகிறது .
ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள்
உக்கிரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
உக்கிரைன் இராணுவத்தினரால் ஈரானின் பல தற்கொலை
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .
இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமான இழப்பை அடுத்து
தற்போது ஈரான் தற்கொலை விமானங்களை
ஏவும் பயிற்றுவிக்க பட்ட நிபுணர்குழு ரசியா வந்தடைந்துள்ளது .
இவர்கள் தற்போது உக்கிரைன் லுஹான்ஸ்க்கு வரவழைக்கு பட்டு ,
ரசியா இராணுவத்தினருக்கு பயிற்சிகளை
வழங்கி வருகின்றனர் .
ஈரானின் இந்த நேரடி பங்களிப்பு ,
உக்கிரைன் மற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு,
மிக பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் பதிவாகியுள்ளன .
அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news
அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news
அமெரிக்கா ரசியா விமானங்கள் வானில் மோதல்,
உக்கிரைன் ரஷியா போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ரஷியாவின் அத்துமீறலாக இது பார்க்க படுகிறது .
வடகொரியா அமெரிக்காவுக்கு மிரட்டல்|Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news
வடகொரியா அமெரிக்காவுக்கு மிரட்டல்|Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news
வடகொரியா அமெரிக்கா தென்கொரியா இணைந்து நடத்தி வரும் போர் ஒத்திகைக்கு வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது .
வடகொரியா பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்தக்கூடும்
என்பதால் பதட்டம் நிலவுகிறது .
பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்
பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
பிரபாகரன் உயிரோடு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார் .
இந்த பிரபாகரன் உயிரோடு உளளார் என்கின்ற
அறிவிப்பானது அரசியலுக்கும் ,மக்கள் எழுச்சிக்கு உரித்தானதல்ல .
காலம் கடந்து தெரிவிக்க படும் இந்த கருத்தியல் ஏற்புடையதல்ல .
தலைவர் பிரபாகரன் ஆளுமை ,அவரது கொள்கை நோக்கு
என்பன இந்த வெளிப்பாட்டுக்கு உகந்தது அல்ல என திருமாவளவன்
தெரிவித்தார் .
சிலரது அரசியல் தேவைக்கு ஏற்ப இவ்விதம் சில பரப்புரைகள் அவசியமாகிறது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார் .
இலங்கை உலக செய்திகளில் பிரபாகரன் உயிரோடு உள்ள செய்தி வாத பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது .
யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்
யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் ஒன்று
சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
தாம் ஒன்று தமது வாழ்வு ஒன்று என வாழும் இவ் வேளையில் .
இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை ,பசியால் வடியோருக்கு உணவு வழங்கியும் ,கச்சான் விற்ற தாய் ஒருவருக்கு புரிந்த செயல் ஒன்று பாராட்ட பெற்று வருகிறது .
இப்படியும் மனிதமுள்ள பெண்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளதை எண்ணி, பலர்
வியந்து உருகி பேசி வருகின்றனர் .
இந்த காணொளி பலராலும் விரும்பி பகிரப்பட்டு வருகிறது .
முடிந்தவரை உணர்வுகளை கட்டு படுத்தி
அழுகையை நிறுத்தி பாருங்கள்.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம் .
இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்
இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது
மர்ம கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
நடத்தி அவர்கள் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள்
கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .
இலங்கை கடல் படை , இந்த தாக்குதல்களை தாம் நடத்தவில்லை என்கிறது .
சீனா நாட்டின் ஆதரவு கடல்கொள்ளையர்களினாலே இந்த தாக்குதல்
இலங்கை கடற்பரப்பில் ,நடத்த பட்டுள்ளது என்ற சந்தேகத்தை
இந்தியா ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .
ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | மட்டக்களப்பு ஆற்றில் இருந்து வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடந்த மூன்று நாடுகளுக்கு முன்னர் காணாமல் போன வாலிபனே
ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இந்த வாலிபன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகள் ,
காடுகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | மினுவாங்கொடை பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .
இருவர் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டின் பொழுதே ஒருவர் சூட்டுக்கு
இலக்காகி பலியாகியுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்
பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் 55 வயதுடைய தாய் 12 ஆம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்டார்.
கணவனை பிரிந்து வாழும் அவர் பெண் பிள்ளை ஒருவருடன் வசித்து வந்தார்.
அவரது வீட்டிற்கு வேலைகளுக்காக ஒருவர் நீண்டகாலமாக தினமும் வருவது வழமை. நேற்றுமுன்தினம் காலையும் அவர் வழமைபோல வருகை தந்து இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.
குடும்பப் பெண்ணுடன் அவர் முரண்பட்டு வாய்த்தக்கம் செய்துள்ளார். வீட்டுக்குள் இருந்த பெண் பிள்ளை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை் தாயார் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்தது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்து தலைமறைவாகிய நபர் நாவற்குழியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (16) காலை கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருகின்றேன். அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை வழங்கி வந்தேன்.
அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன்.
தண்ணீர் குழாயை நிலத்துக்கு அடியால் புதைப்பதற்காக கிடங்கு வெட்டச் சொன்னார். எனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை என நான் கூறிய போது, அவர் என்னை சமுக வேறுபாடு சொல்லி பேசிவிட்டார். அதனால் ஆத்திரத்தை அவரை கட்டையால் தாக்கிவிட்டேன். அவர் உயிரிழந்துவிட்டார் என்று சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







































