விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம் ஜனாதிபதி ரணில்
விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம் ஜனாதிபதி ரணில்
மஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை நேற்று (15) மக்கள் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்தார்.
இதன்போது விவசாயிகள் ஜனாதிபதியிடம் தங்களது பிரச்சினைகளை நேரடியாக கூறியதோடு, அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்தார்.
வேலைத் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, நீர்த்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்ப்புக்களை கைவிடுமாறும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்துக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அது தொடர்பிலான மக்களின் யோசனைகளை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறும், அவற்றில் சாதகமான விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹா கனதார குளத்தை அண்மித்து வசிக்கு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புவதாக மஹாகனதார ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சுபசிங்க ரத்நாயக்க தெரிவித்தார்.
மஹாகனகதராவ குளத்திற்கு நீரைக் கொண்டு வரும் கால்வாய்களைப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை வழங்கினால் பெருமளவிலான நீரை சேமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம் ஜனாதிபதி ரணில்
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மஹாகனதராவ குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு இவ்வருடத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு பில்லியன் ரூபாவை உடனடியாக பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”இந்த வேலைத் திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது. நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவரையில் எல்லா அரசாங்கத்திலும் நீர் வழங்கல் சபை ஒரு அமைச்சின் கீழும் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு அமைச்சின் கீழும் காணப்பட்டது. இம்முறை அவை இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் இந்த வேலைத் திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
”இந்த மஹாகனதராவ குளத்தின் கீழ் பிரிவில் உள்ள கால்வாய்கள் 1960களில் அமைக்கப்பட்டவையாகும். 50 – 60 வருடங்கள் பழமையானவை. ஜனாதிபதி அவர்களே அணை உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.
குளத்தைப் புனரமைக்க 1000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. அதன் கீழ் பிரிவிலிருக்கும் குளக் கட்டுகள் 25 கிலோ மீற்றர் நீளமுடையது. தெற்கில் இருக்கும் குளக்கட்டு 17 கிலோமீற்றர் நீளமுடையது. இரு பகுதிகளிலும் 50 இணை வாவிகள் உள்ளன.
மேலும் 500க்கும் மேற்பட்ட நீர் கசிவுகள் காணப்படுகின்றன. இவ்வாறு விரயமாகும் நீரை சேகரிக்க முடியும். தற்போது எமக்கிருக்கும் 38,000 ஏக்கருக்கான நீரில் 15000 ஏக்கருக்கும் அதிகமான நீர் வீண் விரயமாகிறது.
ஜனாதிபதி அவர்களே, நாம் கூறிய விடயங்களுக்கு சாதகமான பதில்களைப் பெற்றுத் தருவீர்கள் என நம்புகிறோம்.” என்று அந்த விவசாயி தெரிவித்தார்.
பிரிட்டன் கப்பலை உடைத்த ஹவுதி ஏவுகணைகள்
பிரிட்டன் கப்பலை உடைத்த ஹவுதி ஏவுகணைகள்
பிரிட்டன் சரக்கு கப்பலை உடைத்து எறிந்த ஹவுதி ஏவுகணைகள் ,
செங்கடலில் ஹவுதிகள் வசம் சிக்கிய பிரிட்டன் கப்பல் .
முடங்கும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
தாக்குதல் நடத்த விமானங்கள் தயார் ஈரான் அறிவிப்பு
வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்
வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு இன்று மாலை மது போதையில் வந்த சிலர்
கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர்.
பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
மரம் விழுந்து நபரொருவர் பலி
மரம் விழுந்து நபரொருவர் பலி
வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இஸ்கோலவத்த எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற லொறி சாரதி கைது
தப்பிச் சென்ற லொறி சாரதி கைது
அரலகங்வில, அலுத்வெவ கெடேஹந்திய பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதியில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற லொறி சாரதி கைது
உயிரிழந்தவர் அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.
குறித்த பகுதியில் நெல் கொள்வனவு செய்யும் நபர் இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரது லொறியை சோதனையிட்ட போது அதில் உயிரிழந்தவரின் தலைமுடி மற்றும் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டுள்ளன.
கடந்த 14ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கடந்த 15ஆம் திகதி மாலை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மஹிந்த ஆதரவு
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மஹிந்த ஆதரவு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது மக்களின் கோரிக்கையும் கூட என்பதை புரிந்துகொள்கிறேன் என்றார்.
“பிரச்சனை இல்லை. இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும். நான் அனுபவித்து விட்டேன். இன்று நாடே அதை எதிர்க்கிறது தானே
ஈரான் கப்பல் சிறை பிடிப்பு பதிலடி நடக்கும் ஈரான்
ஈரான் கப்பல் சிறை பிடிப்பு பதிலடி நடக்கும் ஈரான்
ஈரான் எண்ணெய் கப்பல் அமெரிக்காவினால் சிறை பிடிக்க
பட்டத்திற்கு தகுந்த பதிலடி நடக்கும் என ஈரான்
அறிவித்துள்ளது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை சுமந்திரன் விளையாட்டு
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை சுமந்திரன் விளையாட்டு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று மதியம் தடையுத்தரவு விதித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த தடைகளுக்கு காரணம் வேறு யாரும் அல்ல சுமந்திரன் பின்புல மூளை என மக்கள் மன்றில் கருத்துக்கள் உலாவி வருகின்றன .
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

ஹவுதி தாக்குதலில் சிக்கிய 34 கப்பல்கள்
ஹவுதி தாக்குதலில் சிக்கிய 34 கப்பல்கள்
ஹவுதி படை தாக்குதலில் சிக்கிய 34
கப்பல்கள் செங்கடலில் நடந்த தாக்குதல் .
அமெரிக்கா இஸ்ரேல் கப்பல்கள் அதிகம் பாதிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா ,அரபிய நாடுகள்
இணைந்து அறிவிப்பு ,ஏற்க மறுக்கும் இஸ்ரேல் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கிற்கு
முற்று புள்ளி வைக்க நடவடிக்கை ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக
சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக
உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து, கொழும்பிலுள்ள இல்லத்தில் இரா.சம்பந்தனை, செவ்வாய்க்கிழமை (13) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக
கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிருவாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச்சபை
அங்கீகரிக்காதவிடத்து, அல்லது அத்தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடாத்தி, அன்றையதினமே மாநாட்டையும் நடாத்துமாறு அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமில்லை
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமில்லை
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ஐக்கிய குடியரசு முன்னணி நேற்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே திருமதி குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றுதான் என்னால் கூற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
குடு சலிந்து சகா கைது
குடு சலிந்து சகா கைது
குடு சலிந்து சகா கைது ,பாதாள உலக தலைவர்களில் ஒருவரான ‘குடு சலிந்து’ எனப்படும் சலிந்து மல்ஷிகவின் பிரதான சகா ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குடு சலிந்துவின் பிரதான சகாவான பியும் ஹஸ்திக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினால் இன்று (15) அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பான தகவலை வௌியிட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்த போதைவஸ்து பாவனை
இலங்கையில் அதிகரித்த போதைவஸ்து பாவனையால் ,நாடெங்கும் குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த போதைவஸ்து பாவனையால் அதிகரிக்கும் குற்றங்கள் காரணமாகவே இலங்கையில் சட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது .
நாள்தோறும் போதைக்கு அடிமையாகி ,அந்த போஹியில் இளைக்க படும் குற்றங்கள் காரணமாக மக்கள் சொல்லேன்னா துயரை சந்தித்து வருகின்றனர் .
இந்த குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் இவ்வாறான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும் என மக்கள் மன்றம் வேடனை நிற்கிறது .
அதற்கு அமைவாக சட்டம் ஒழுங்கை கடைபிடித்து மக்களை காப்பாற்ற இவ்வாறன குற்றாவளிகளை போலீசார் கைது செய்திட ஆரம்பித்துள்ளனர் .
அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்க பேச்சுவார்த்தை
அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்க பேச்சுவார்த்தை
கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இலங்கையில் 3 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,
“03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும்.
கண்டியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (indian institutes of technology) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு அவற்றின் இரண்டு கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன் அவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் தயாராக உள்ளோம்.
அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்க பேச்சுவார்த்தை
விஜயதாச ராஜபக்ஷ குழுவின் அறிக்கை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு அறிக்கையை இணைத்து புதிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. குழுவின் தலைவர் பதவிக்கு, முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, சட்ட வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சருக்கு அவுஸ்திரேலிய தூதரகத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகளுடன் தொடர்புள்ள நிபுணத்துவ அறிவுள்ள வேந்தர்களும் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். எமது கல்வி நிலைமையை ஆய்வுசெய்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தனியார் உயர்கல்வித் துறையை முறைப்படுத்த வேண்டும். ஆனால் கல்வித்துறையை விற்பனை செய்வதற்கு நாம் தயாரில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல் 30 போர் வண்டிகள் தகர்ப்பு |மரண அடி
இஸ்ரேல் 30 போர் வண்டிகள் தகர்ப்பு |மரண அடி
இஸ்ரேல் இராணுவத்தின் 30 போர் வண்டிகள் தகர்ப்பு,
மரண அடி வழங்கியதாக ஹமாஸ் அறிவிப்பு .
போரில் திணறும் பரம எதிரி ,தீவிரம் பெற்ற களமுனை சமர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேல் விமான தளங்களை அழிக்கும் ஈரான் புதிய ஏவுகணை
இஸ்ரேல் விமான தளங்களை அழிக்கும் ஈரான் புதிய ஏவுகணை
இஸ்ரேல் இராணுவத்தின் F 35 ரக விமான தளங்களை அழிக்கும்
புதிய ஏவுகணைகளை ஈரான் சோதனை செய்துள்ளது .
ஈரான் இந்த ஏவுகணை சோதனை இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

பூட்டை உடைத்த 2 தேரர்களுக்கும் விளக்கமறியல்
பூட்டை உடைத்த 2 தேரர்களுக்கும் விளக்கமறியல்
பல கோடி ரூபாய் பெறுமதியான, பம்பலப்பிட்டி ஃபரிட் பிளேஸில் உள்ள பழைய இரண்டுமாடிகளைக் கொண்ட வீட்டுக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துக்கொண்டு, சட்டவிரோதமான முறையில், உள்நுழைந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்ட பௌத்த தேரர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவ்விருவரும், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, அவ்விருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த தேரரர்களில் ஒருவர், வயது குறைந்தவர் என்பதனால், அவரை நன்னடத்தை நிலையத்தில் தடுத்துவைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
மாலபே பிரதேசத்தில் உள்ள விஹாரையைச் சேர்ந்த தேரர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தன்னுடைய வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு, தேரர்கள் இருவர் மற்றும் மற்றொரு நபர், வீட்டுக்குள் பலவந்தமாக தங்கியிருப்பதாக, அந்த வீட்டின் உரிமையாளர் எனக் கூறப்படும் பெண், பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் குழு, அப்போது வீட்டிலிருந்த 20 மற்றும் 14 வயதுகளுடைய பௌத்த தேரர்கள் இருவரை கைது செய்தனர்.
இந்த வீடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரியான மூவருக்கு உரித்துடையது. உரிமையாளர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நிலையில், அற்றோனி தத்துவத்தின் பிரகாரம், வீட்டின் ஒருபகுதியை கொடுத்துள்ளதாகவும் அதனால், வீட்டின் உரிமையாளரின் வீட்டுக்குள் நுழைத்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு
நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம், நயினாதீவில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர்.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (13) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்
யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வானொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்































