Tag: யாழில் கோர விபத்து
யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்
யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வானொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா
- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்
- யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
- தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது
- ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது
- முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில்
யாழில் கோர விபத்து சாரதி பலி
யாழில் கோர விபத்து சாரதி பலி
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.




















