Tag: பாலி
இரண்டு இராணுவம் பலி
இரண்டு இராணுவம் பலி
இருவேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (15) மாலை பறயனாலங்குளம் பெரியகட்டு பகுதியில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற 26 வயதுடைய இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கி செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடமயிலபிட்டிய தலாத்துஓயாவில் வசிக்கும் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதேவேளை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 35 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.
மேல் லுணுகம, மண்டாவளையில் வசிக்கும் கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரம் விழுந்து நபரொருவர் பலி
மரம் விழுந்து நபரொருவர் பலி
வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இஸ்கோலவத்த எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








