நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது
நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது
நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது ,நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கல்முனை
அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை (17) இடம்பெற்றது.
இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சேதமடைந்துள்ள நிலையில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது
புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியது
புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியது
புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியது புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியதுஅனுரகுமார ஆட்சியில் வெளியிட பட்டுள்ள வரைவது செல்வது அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது .
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகையானது 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு
அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு
அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு ,அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக .ஆளும் அனுரகுமார ஆட்சியில் வெளியிட பட்டுள்ள வரைவது செல்வது அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் இந்த விடயம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அறிவிக்க பட்டுள்ளது .
எனினும் சம்பள உயர்வு அதிகரிக்க படும் அதேவேளையில் வரி வீதமும் அதிகரிக்க படுகிறது .
பொருளாதர நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை எப்படி ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அதிகரிக்கும் என்பதில் பலத்த சந்தேகங்களை இந்த வரவு செலவு அறிக்கை எழுப்பியுள்ளமை குறிப்பிட தக்கது
பல்கலைக்கழக மாணவனுக்கு உதவி சுவிஸ் ராசா அண்ணா |உதவிய சுவிஸ் ராசா அண்ணா
பல்கலைக்கழக மாணவனுக்கு உதவி சுவிஸ் ராசா அண்ணா |உதவிய சுவிஸ் ராசா அண்ணா
பல்கலைக்கழக மாணவனுக்கு உதவி சுவிஸ் ராசா அண்ணா |உதவிய சுவிஸ் ராசா அண்ணா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை |கண்ணீரில் மக்கள்
இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்
இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்
இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்
வவுனியாவில் 09 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 09 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 09 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியா வீடு திறப்பு விழாவில் அண்ணா அவுஸ்ரேலியா |Vanni mainthan
வவுனியா வீடு திறப்பு விழாவில் அண்ணா அவுஸ்ரேலியா |Vanni mainthan
வவுனியா வீடு திறப்பு விழாவில் அண்ணா அவுஸ்ரேலியா |Vanni mainthan
வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI
யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI
யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI ,சுவையான ஆட்டு இறைச்சி கொத்து | மட்டன் கொத்து ரொட்டி | Mutton kothu rotti
How to make kothu rotti | easy mutton kothu rotti |Mutton curry | மட்டன் பிரட்டல் |mutton gravy | easy mutton curry recipe
Mutton kothu rotti ingredients:
Mutton curry
Some roti
Fennel seeds – ½ teaspoon
Sliced green chillies
Sliced onions – 2
Some curry leaves
Egg 6
Sliced cabbage
Sliced leeks
Sliced carrots
Salt for taste
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry | king prawns curry | prawns curry | tamil style prawns curry
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curryஇறால் கறி செய்யும் முறை
இறலை சுத்தம் செய்து கழுவி எடுக்கவும்.
இறால் 500 கிராம்
பெரிய வெங்காயம் 1
பெரிய தக்காளி 1
உல்லி 10 பல்லு
பச்சை மிளகாய் 3
இஞ்சி விளுது
தேங்காய் பால் பவுடர் 2 தேக்கரண்டி
கறித்தூள் 3 தேக்கரண்டி
வெந்தயம் 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
புளி தேவையான அளவு
உப்பு
எண்ணெய்
மஞ்சல்
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இறால் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
சூடான எண்ணெயில் இறால்களை போட்டு பொரித்து எடுக்கவும் வைக்கவும்.
பெரித்த அதே எண்ணெயில் வெந்தயம் , உல்லி , வெங்காயம் , பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் .
என்னாம் வதங்கிய சட்டியில் தக்காளி மற்றும் இஞ்சி போட்டு வேகும் வரை வதக்கவும் .
பின் அதனுள் உப்பு மற்றும் கறித்தூள் சேர்க்கவும் . தூள் வெக்கை அடங்கியதும் அதனுள் புளி சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதனுள் தேங்காய் பால் சேர்த்து கிளறி 8-10 நிமிடம் நங்கு கொதிக்கவிடவும் .
சுவையான யாழ்ப்பாணத்து இறால் கறி தயார் .
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu ,மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்..
மீனை வெட்டி உப்பு மஞ்சல் போட்டு கழுவவும் .
Fish – விளை மீன் 1kg
Onion – வெங்காயம் 1
Green Chilli – பச்சை மிளகாய் 3
Fenugreek – வெந்தயம் 1 tablespoon
Tamarind – புளி
Curry leaves – கருவேப்பிள்ளை
Chilli powder – மிளகாய் தூள் 3 tablespoon
Salt – உப்பு
Coconut milk – தேங்காய் பால்
Garlic – உல்லி 3 cloves
Cumin Seeds – சின்னசீரகம் 1 tablespoon
சிறிதளவு எண்ணெய் விட்டு கருவேப்பிளை , பெரியசீரகம் , வெந்தயம் , பச்சைமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும் பின் தேவையான அளவு தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை வதக்கவும் .
பின்னர் அதில்புளி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும், பின்னர் அதில் கெட்டியான தேங்காய் பால் விட்டு கொதிக்கவிடவும், கொதித்த குழம்பில் மீன் துண்டுகளை போட்டு வேக விடவும் ..
சிறிது நேரத்தில் சுவையான மண் சட்டி மீன் குழம்பு தயார்.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் 15 பேர் பலி
புதுடெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் 15 பேர் பலி
புதுடெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் 15 பேர் பலி ,உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில்
உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடள், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14இல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார்.
பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்
இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்
இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர் ,விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (15) நேரில் சென்று பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பிலும் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம் சாவகச்சேரி தளங்கிளப்பு பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி ,நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.
தற்போது நிழல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார்.
அதில், அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலில் கட்டு போட்டுள்ளார்.
இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி, மாடல், விஜே மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்து தனது திறமையாலும் அழகாலும் தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கை வரும் சீனா அதிகாரிகள்
இலங்கை வரும் சீனா அதிகாரிகள்
இலங்கை வரும் சீனா அதிகாரிகள் ,ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன
அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீன அமைச்சர் பான் யூ, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
IMF வுடன் நாளை பேச்சு
IMF வுடன் நாளை பேச்சு
IMF வுடன் நாளை பேச்சு ,இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம்,
அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் திங்கட்கிழமை (17) சமர்பிக்கவுள்ளது
இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம், இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
குறித்த வரவு – செலவுத் திட்டமானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மறுபுறம் இந்த வரவு – செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம், நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது.
இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டின் நான்காவது – மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், அதே ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
அத்துடன், 2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது.
அடுத்த வரும் வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கினாரா யோகி பாபு
விபத்தில் சிக்கினாரா யோகி பாபு
விபத்தில் சிக்கினாரா யோகி பாபு ,சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரு நோக்கி யோகிபாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை
சுங்கச்சாவடியை கடந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு மீது ஏறி கார் விபத்துக்குள்ளானது.
இந்தில் எந்தவித காயமுமின்றி யோகி பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியானது. மேலும், காவல்துறையினர் நீண்ட நேரம்
போராடி நெடுஞ்சாலையின் நடுவில் சிக்கிய காரை அப்புறப்படுத்தியதாக செய்திகள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக தனது சமூகவலைதளத்தில், “நலமாக இருக்கிறேன்.
இது தவறான செய்தி” என்று தெரிவித்தார் யோகி பாபு. மேலும், இந்த விபத்து தொடர்பாக, “அது ஒரு தவறான செய்தி. அந்த மாதிரி எதுவுமில்லை. யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
அது ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வண்டி தடுப்பின் மீது மோதிவிட்டார். முன்னால் சென்ற நாங்கள் திரும்பி போய் என்னவென்று பார்த்து சரி செய்து அனுப்பிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.
விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்
விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்
விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில் ,யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த எம்.பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது



























