மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்
மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்
மத்திய மாகாணத்தில் இதுவரை 1,076 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அறுவர்
மரணித்துள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில், இன்று (30) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 35 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார் என்றும் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவு, தேதுனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே, கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் என்றும் பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது
உறுதியானதாகவும் மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ்
தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் 535 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்
இலங்கையில் கண்காணிக்க படும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் கண்காணிக்க படும் சுற்றுலாப் பயணிகள்
நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களுடன் தொடர்புகளை
மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாதென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அவர்களின்
செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு முதலில் வருகைதந்துள்ளனர்.
அந்நாட்டிலிருந்து இதுவரை 390 பேர் வருகைதந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு
வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு
கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்
இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் 527 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் 122 பேர் கடும் காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர். 238 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழப்புக்கள் இல்லாத 130 வாகன விபத்துக்கள் இந்தக்
காலப்பகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.
இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்
இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன் பகுதியில் மதியம் இரண்டு மணியளவில்
Ballarto Road பகுதியில் உணவகம் ஒன்றின் அருகில் தகராறில் ஈடுபட்ட
பெண் ஒருவரின் காரினை போலீசார் சோதனை செய்ய முற்பட்டனர் ,
அப்பொழுது அந்த இரு காவல்துறை ஊழியர்களையும் காரினால் தகக்கிவிட்டு
தப்பி செல்ல முறைப்பட்டனர் .
எனினும் 170 மைல் வேகத்தில்பயணித்த கார் மரத்துடன் மோதி சிதறியது ,
காயமடைந்த இரு காவல்துறை ஊழியர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த சம்பவம் தொட்ரபில் தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை
ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை
சிரியாவில் இடம்பெற்று வரும் போரில் அங்கு நுழைந்து ஆதிக்கத்தை
செலுத்தி வரும் ஐ எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்த வருடம் சுமார் 1525
படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,.தலை வெட்டி ,குண்டு தாக்குதல் ,மற்றும்
கடத்தி சுட்டு கொலை , உள்ளிட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது
தொடர்ந்து இவர்களினால் பெரும் படு கொலைகள் இடம்பெற்று வருவதாக
சுட்டி காட்ட பட்டுள்ளது ,உண்மையில் இந்த ஐஎஸ் பின்னால் இயங்குவது யார் என்ற கேள்வி முதலிடத்தை தொட்டு நிற்கிறது
பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
கடந்த தினம் உசத்தை தொட்டுள்ளது இன்று மட்டும் சுமார் +53,135 பேர் ஒரே நாளில் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இதே நாளில் 414 பேர் பலியாகியுள்ளனர் தொடர்ந்து 4,191 பேர் மிக
ஆபத்தான நிலையில் உள்ளனர்
நோயின் தாக்குதலை அடுத்து 40 நாடுகளுக்கான விமான
சேவைகள்இரத்து செய்ய பட்டுள்ளதுடன் எல்லைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
குளிர்காலம் தொடங்குவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி
அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி
அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு கடந்த தினம் கொரனோ
நோயின் தாக்குதல் பல் மடங்காக அதிகரித்துள்ளது
ஒரே நாளில் சுமார் 2,706 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில்
புதிதாக 19,924,059 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து 28,920 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
டிசம்பர் முடிவதற்குள் ஐந்து லட்சம் மக்கள் பலியாவார்கள் என தெரிவிக்க
பட்ட நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்து செல்வது பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
கொலை குற்றவழக்கில் ஒருவருக்கு 115 வருடம் சிறை
கொலை குற்றவழக்கில் ஒருவருக்கு 115 வருடம் சிறை
இந்தியாவில் ஒருவரை கொலை செய்தும் , மனைவியை கொலை செய்ய
முயன்ற வழக்கில் நீதிமன்றம் இவருக்கு 115 வருட காடூழிய சிறை தண்டனை வழங்கியுள்ளது
இந்த அதிரடி தீர்ப்பு இவ்விதம் கொலைகளை புரிபவர்களுக்கு பெரும்
அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சமுக ஆர்வளர்கள் கருத்துரைத்துள்ளனர்
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
நாடளாவிய ரீதியில் 14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும்
வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்திற்கான நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் இலக்கு என்ற
கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்
னெடுக்கப்பட்டுள்ளது. காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின்
ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பரவிய கொரனோ – வீடுகளில் 78 பேர் மரணம்
பரவிய கொரனோ – வீடுகளில் 78 பேர் மரணம்
கொழும்பு நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களுக்குள் 78 பேர், கொரோனா வைரஸ் தொற்றால்,
வீட்டுக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என, கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீடுகளுக்குள் உயிரிழந்தவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, 78
பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
வீடுகளில் உயிரிழப்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள், இவ்வருடம் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய வீடுகளில் மரணமடைந்த முதலாவது கொரோனா
மரணம், ஒக்டோபர் 26ஆம் திகதி பதிவானது எனத் தெரிவித்துள்ள அவர், அன்றிலிருந்து டிசெம்பர் 27ஆம் திகதி வரை, 78 பேர்
கொரோனா வைரஸ் தொற்றால் வீடுகளிலேயே மரணமானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன், இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரை மாத்திரம், வீடுகளில் 130 பேர் உயிரிழந்தனர் என, கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதில் 37 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம்- கம்பளையில் 100 கடைகள் பூட்டு
கொரோனா அச்சம்- கம்பளையில் 100 கடைகள் பூட்டு
கொரோனா அச்சம் காரணமாக கம்பளை நகரில் 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் இன்று முதல் (29) மூடப்பட்டுள்ளன.
மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு வியாபார நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்தே,
அந்த பிரதிநிதி வந்துச் சென்றதாக தெரிவிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அவ்வாறு இனங்காணப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிஸ்கட் கம்பனியின் விற்பனை முகவர் காய்ச்சல் காரணமாக கடந்த 24 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது எழுமாறாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின. கம்பளை, பகுதியைச் சேர்ந்த 29 வயதான விற்பனை முகவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த விற்பனை முகவர், வியாபாரம் நிமித்தம் வந்துசென்ற வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
கம்பளை நகரப்பகுதியில் கொரோனா வைரஸ் அண்மைக்காலமாக வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது..
பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தளபதிக்கும் பதவி உயர்வு
பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தளபதிக்கும் பதவி உயர்வு
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும்,
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர
சில்வாவுக்கும் ‘ஜெனரல்’ என்ற பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் சந்தண விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவர்களுக்கான பதவியுயர்வை வழங்கியிருக்கியுள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்
தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்
கொரோனா வைரஸ் தொற்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அல்லது சிகிச்சைக்காக உட்படுத்தப்படிருந்த நிலையில்
தப்பியோடுபவர்களுக்கு மற்றும் மறைந்திருப்பதற்கு உதவி புரிகின்ற நபர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய
சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட இந்த நபர் சம்பந்தமாக இதுவரையிலும் ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல்
விதிகளை மீறிய மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது
இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது
தென்கொரியாவில் முதலாவது புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம்
காணப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பரவிவரும் ஒரு வகையான புது வடிவிலான கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இவர் உள்ளாகியிருக்கிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று திரும்பியதை
அடுத்து, குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால், தாம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக
நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தின் அம்யூலன்ஸ் சேவை வரலாற்றில் நேற்று முன்தினம் நெரிசல் மிக்க நாளாக
வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில்
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றமை இதற்கான காரணமாகும்
பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,131 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 106,511 பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 357 பேர் பலியாகியுள்ளனர் ,41,385 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,பிரிட்டனில் வளமையை விட இதுவே அதிக தொகையில் பாதிக்க பட்ட நாளாக மாற்றம் பெற்றுள்ளது
குளிர் காலம் தொடர்வதால இழப்புக்கள் ,மற்றும் தொற்றுக்கள்
அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
மாலியில் சமாதான நடவடிக்கையில் ஈடுபட சென்று இருந்த பிரான்சு
நாட்டு இராணுவத்தினர் மூவர் Hombori பகுதியில் மறைத்து வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கி பலியாகினர்.
இறந்தவர்கள் சடலங்கள் பிரான்சு எடுத்து வரும் நகர்வுகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
வெளிநாட்டு படைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –
பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –
கடந்த இரவு பிரிட்டன் street in Blackburn town பகுதியில் பனி மழையில் சிக்கி கார்கள் மோதி சிதறின
அதிக பனிப் பொழிவு இருக்கும் என தெரிவிக்க பட்ட பொழுதும் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து வரும் நாட்களில் இது போன்ற கால நிலை தொடரும் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டன் குற்ற தடுப்பு துறையில தேட படும் பட்டியலில் உள்ள மிக
முக்கிய 22 குற்றவாளிகள் படங்கள் வெளியீடு செய்ய பட்டுள்ளது
இவர்கள் கொலை ,கடத்தல் ,போதைவஸ்து பாவனை,மற்றும் குற்ற செயல்களுடன்
தொடர்பு பட்டவர்கள் , இவர்களை தெரிந்தால் அறிய தரும் படி வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளதுடன் ,இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்
ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்
லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை
50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சண்டைக்காட்சியில் காயமடைந்த ஆர்யா
சண்டைக்காட்சியில் காயமடைந்த ஆர்யா
ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நடிகர் ஆர்யா காயமடைந்துள்ளார்.
சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்து காயமடைந்த ஆர்யா
ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா,
விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’
படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்
இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆர்யா
அண்மையில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட ஆர்யா, சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார். தன்னால் படப்பிடிப்பு தடைபட்டுவிடக் கூடாது
என்ற காரணத்துக்காக நடிகர் ஆர்யா, வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.








