Posted in உலக செய்திகள்

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை – ட்ரம்ப்

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தற்போதைய ஜனாபதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி, ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில், டிரம்ப் மீது இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்போவதாக ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் ஆதாரமின்றி சுமத்திய குற்றச்சாட்டுகளை அடுத்து, அவரது

ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அது அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான கலவரங்களில் ஒன்றாக மாறியது.

அதைக் கண்டித்து, டிரம்ப் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி தெரிவித்தது.

இந்த நிலையிலேயே, ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில்

கலந்துகொள்ளப்போவதில்லை என்று டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி- டக்கிளஸ் வெடி

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி- டக்கிளஸ் வெடி

தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு

பொதுவான நினைவுத் தூபி அவசியம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட

காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக்

காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற

தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும்

என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர், தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துளைப்பு

இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம்

தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

வடகொரியா இதுவரை தன்னிடம் இல்லாத புதிய நீண்ட தூர மற்றும் குறும் தூர ஏவுகணை சோதனையை தொடராக நடத்த உள்ளதாக

அமெரிக்கா உளவு நிறுவனத்தை மேற்கொள்ள காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

அமெரிக்காவின் நேரடி அச்சறுத்தல் காரணமாக தமது நாட்டை பாதுகாப்பாக

வைத்து கொள்ள வடகொரியா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் தயாரிக்க பட்டு வருகின்றன

வடகொரியாவில் இருந்தபடியே அமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வட கொரியா

தயாரித்துள்ள நிலையில் அதனை விட மீளவும் தூர வீச்சு கொண்ட ஏவுகணையை

தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்கிறன்ற விடயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்

சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்

சிரியாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என

இஸ்ரேல் வரைபடத்துடன் வெளியிட்ட நிலையில் தற்போது சிரியா தமது ஏவுகணைகளை அதிகரித்துள்ளது

இந்த வருடம் உலகில் அதிக கூடிய ஏவுகணைகளை கொண்ட நாடக சிரியா

மாற்றம் பெறும் எனவும் இங்கு எல்லைகளில் தற்போது முதல் நவீனரக

ஏவுகணைகள் குவிக்க ப்பட்டு வருகின்றன சிரியா லெபனான் எல்லைகளில் இவை முக்கியமாக குவிக்க பட்டு வருகின்றன

ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் இதர ஆயுத

குழுக்கள் தமது நாட்டின் மீது எவ்வேளையும் தாக்குதல்களை தொடுக்கலாம்

என்ற நிலையிலும் ,இஸ்ரேலின் ஏவுகணைகள் தொடராக சிரியாவில்

உள்ள ஈரான் ,,மற்றும் சிரியா ,ஹிஸ்புல்லா நிலைகளை தாக்கி வருகிறது ,

இதனை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை வலையமைப்புடன் கூடிய பாதுகாப்பு அரண்கள் அமைக்க பட்டு வருகின்றன

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

ஈரான் நாட்டுக்கு எதிராக பெரும் திடீர் தாக்குதல் ஒன்றை

தொடுக்கும் முகமாக அமெரிக்காவின் நாசகாரி கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்க பட்டுள்ளன

மேற்படி கப்பல்களை முற்றுகையிட்டு தாக்கி அழிக்கும் நோக்குடன் ஈரான் எழுநூறு சூப்பர் விசைப்படகுகள் குவிக்க பட்டுள்ளன

இதில் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராடர் வசதி கொண்ட கட்டமைப்பு

உள்ளது ,வடகொரியாவில் வாலாட்டி சுருட்டி கொண்ட அமெரிக்கா இப்போது ஈரானுடன் முட்டி மோதுகிறது

இவை இலங்கை இராணுவத்தில் உள்ள இஸ்ரேலின் சூப்பர் டோரா படகுகளுக்கு

இணையானவை ,எனினும்
அமெரிக்காவின் நாசகாரி கப்பல்களுக்குள் முன்பாக இந்த

ஏவுகணை படகுகள் தாக்கு பிடி க்குமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

ஈரான்
ஈரான்
Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோய் பரவளில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,914 பேர்

பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 301,655 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல பிரிட்டனில் 1,325 பேர் பலியாகியும் இதே சம நாளில் 68,053 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


தொடர்ந்து சிவகுப்பு எச்சரிக்கை விடுக்க பட்டு முழு லொக்கடவுன் தொடர்கிறது

வரும் நாட்களில் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,முகக் கவசம் அணியாது வீதிகளில்

செல்வோருக்கு போலீசார் தண்டம் அறவிட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

இராணுவம் வேட்டை – 70 தாலிபான்கள் சுட்டு கொலை

இராணுவம் வேட்டை – 70 தலிபான்கள் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தான் கந்தகார் பகுதியில் குவிக்க பட்டிருந்த தாலிபான்கள்

நிலைகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 70 தாலிபான்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு இறந்தவர்களில் ஏழு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது

அரசுக்கு எதிராக முழுவீச்சில் பெரும் தாக்குதல்களை நடத்தி வரும் தாலிபான்களை

அடக்க இவ்வாறான இராணுவ நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்

தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்

பங்களாதேசில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென பற்றிய

தீயினால் அப் பகுதியில் அமைக்க பட்டிருந்த சுமார் ஐம்பது வீடுகள் முற்றாக எரிந்து அழிந்தன

மேற்படி தீ சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

வீடுகளுக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீயில் கருகியுள்ளதால மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்

தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்

இந்தியா மகாராஸ்திர பகுதியில் உள்ள மருத்துவமனையின்

மகாப்பேறு பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி பிறந்த ஏழு

சிசுக்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,மேலும் ஆத்திரமுற்ற

மக்கள் மருத்துவமனை முன்பாக மாறியலிலுள் ஈடுபட்டுள்ளனர் ,இதனை அடுத்து போலீசார் குவிக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

நினைவுத் தூபிகள் இடித்து அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாணவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்கலை முன்றலில் கூடியுள்ளனர்.

யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னிணைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக

மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நினைவு தூபி இடித்தடிக்கப்பட்டது.

இதேவேளை நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நிலையில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

சிங்கப்பூரில் உள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் காலே உதித்த தேரர், வணக்கத்திற்குரிய பலங்கொட புத்தகோஷா தேரர் மற்றும் சிங்கப்பூர் புத்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரின்

அனுசரணையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட்-19 தொற்று நோயின்

காரணமாக பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு 07 ஆம் திகதி 1000 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஒருங்கிணைப்பானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவினால் மேற்கொள்ளப்பட்டது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்வாதார வழிமுறைகள் இழப்பு காரணமாக கஷ்டங்களுக்கு உள்ளான குடும்பங்களை

அடிப்படையாக கொண்டு வரவிருக்கும் இந்து நம்பிக்கையின் தைப் பொங்கல் திருவிழாவை நடத்துவதற்கான ஊக்கமாகவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கிளநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட , 57வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத் யாப்பா, 571 மற்றும் 662 வது பிரிகேட்

தளபதிகள், 9வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 20 வது பட்டாலியன் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரிகள் குறித்த பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று

சுகாதார வழிகாட்டுதல்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை கேணல் அனில் சோமவீர மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை

ஒருங்கிணைப்பாளர் சிவில் விவகாரங்கள் லெப்டினன்ட் கேணல் எல்.கித்சிறி ஆகியோர் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக

நிறைவு செய்ய நன்கொடையாளர்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

Posted in இலங்கை செய்திகள்

மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

கொட்டாவை – மாகும்புர பிரதேசத்தில் 314 வீடுகளைக் கொண்ட மாடிவீட்டுத் தொகுதி நடுத்தர வர்க்கத்தினருக்காக ஐயாயிரம் மாடிவீட்டுத் தொகுதிகளை அமைக்கும் அரசாங்கத்தின்

வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக மூவாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 40 பில்லியன் ரூபா செலவிடப்படும். மாக்கும்புர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் அதிவேக

நுழைவுப் பகுதிக்கும் ஹைலெவல் பாதைக்கும் அருகில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

கொழும்பு ஒன்று முதல் 15 வரையான கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 68 ஆயிரத்து 894 குடிசைகள் அமைந்துள்ளன.

இவற்றில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களை புதிய வீடுகளில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ஆம்

ஆண்டு ஜனவரி ஏழாம் திகதிக்குள் மூவாயிரம் வீடுகளை அமைக்க அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும்

வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.

இந்த டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதனால் வன்முறையை

தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.

மேலும் இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் பரவாமல் தடுக்கும் வகையில் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அடுத்த வாரத்தில் இருந்து

அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் எந்தவகையான முறைக்கேடுகள் நடைப்பெற்றாலும்

அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை

ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வாரம் முதல் இவர்களை அழைத்து வருவதற்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளது.

Pay தனிமைப்படுத்தல் அதாவது பணம் செலுத்தி தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படவில்லை. 45,000 க்கும்

மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு வரவழைத்து இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது

பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத

குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 2361

பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிபகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில்

இன்று (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 60 வயதுமதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தின் அடையாளம் இதுவரை கணப்படாத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா

வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக பொலிசார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் நேற்று (07) இரவு 9.30 மணி அளவில் மேற்கொண்டுள்ளது.

5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழு முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான

இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்து வாடகை வீடு எடுத்து நீண்டகாலமாக வசிக்கும் தாயும் மகனும் எந்தவொரு பிரச்சினைக்கும் செல்வதில்லை என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய கும்பலும் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

அமைச்சருக்கு கொரனோ

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்த, ஹிக்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள

தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை

சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை

மத்துகம வெலிமானாவ பகுதியில் இன்று(08) அதிகாலை 1 மணியளவில் 62 வயது பெண் சொகுசு வாகனத்தில் மோதி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொலையை செய்த உறவினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் 37 வயது மகன் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வீட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரது சொத்துகளை பிரித்து கொள்வது தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

cbi-6295 என்ன வெள்ளை நிற வெகனார் வாகனத்தில் குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த அவர், தகவல் அறிந்தவர்கள் 0718591701 என்ற மத்துகம பிரதான பொலிஸ் பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா

முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின்

மூலம் நேற்றைய தினம் (07) கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருந்த 377 பேர் நேற்றைய தினம் கைது

செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 220 பேர் ஆன்டிஜன் பரிசோதனைக்கும், 157 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைக்கும்

உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீன் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கொரோனா

தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.