Posted in இலங்கை செய்திகள்

ஈழத்தமிழ் சினிமாவின் திரைகடலோடியை தமிழர்தேசம் இழந்துவிட்டது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஈழத்தமிழ் சினிமாவின் திரைகடலோடியை தமிழர்தேசம் இழந்துவிட்டது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த

ஓர் வேட்கையாளனை, நாட்டுப்பற்றாளனை தமிழர் தேசம் இழந்துவிட்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர் சினமாவின் அடையாளங்களில் ஒன்றான மூத்தகலைஞரனான திரு.நவரட்ணம் கேசவராஜா அவர்கள்

மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அன்னாரின் மறைவு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழ் சினிமா மீது தீராத வேட்கையும், காதலும் கொண்ட திரு.நவரட்ணம் கேசவராஜா அவர்களது மறைவு எம்மை கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த

ஓர் வேட்கையாளனை, நாட்டுப்பற்றாளனை தமிழர் தேசம் இழந்துவிட்டது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருந்த ஓர் ஆளுமை. கடலோரக்காற்று, பிஞ்சுமனம், தாயகமே தாகம், மரணம் வாழ்வில் முடிவல்ல, திசைகள், வெளிக்கும் என போர்க்காலத்தில்

அன்னார் படைத்த படைப்புக்கள் ஒவ்வொன்றும், காலத்தை கடந்து நிற்கும் படைப்புக்கள் மட்டுமல்லாது வரலாற்றை பதிவு செய்த பெரும் ஆவணங்களாகவும் அமைகின்றன.

தமிழர் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இன்றைய இடர்நிலையிலும் ‘பனைமரக்காடு’ எனும் அன்னாரது சமீபத்திய

படைப்பு, அவர் கொண்டிருந்த வேட்கை எந்நிலையிலும் தணியாத ஒன்று என்பதனை எடுத்துக்காட்டியிருந்தது.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறிவினர்கள், நண்பர்கள், கலைஞர்கள் அனைவரது கரங்களையும்

இறுகப்பற்றிக் கொள்வதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?-மனோ கணேசன்

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?

-மனோ கணேசன்

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது.

யுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. அப்படியானால் அது இரண்டு புறமும் நிகழ வேண்டும்.

வடமாகாணம் முழுக்க எங்களுக்கு இராணுவ வீரர்களின் வெற்றி தூபிகள் காணக்கிடைக்கின்றன. இராணுவ வீர்களின் உருவங்கள் துப்பாக்கியை காட்டியபடி, உயர்த்தியபடி, ஆயுதங்களை காட்டியபடி இருக்கின்றன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் காணக்கிடக்கின்றன.

இந்நிலையில் தமிழர்களின் யுத்த நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது? என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று கொழும்பில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.

எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தெற்கில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், வயம்ப பல்கலைக்கழகத்தில், அக்காலத்தில் ஆயுத போராட்டம் செய்த ஜேவீபி போராளிகளின் நினைவு தூபிகள் இருக்கின்றன. அப்படியானால், ஏன் ஒருபுறம் மட்டும் ஒரு சட்டம்?

இப்போது பார்க்கப்போனால், துறைசார் அமைச்சர் சரத் வீரசேகர, இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தன்னை காப்பற்றிக்கொள்கிறார். பொலிஸ் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே சென்றது என்கிறார். இது விகாரமான நகைச்சுவை.

அதுபோல, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர், ஐயோ, எமக்கு இதனுடன் தொடர்பில்லை என்கிறார். இதை செய்தது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் என்கிறார். அப்படி சொல்லிவிட்டு நிறுத்தவில்லை. நான் சொன்னது போல, யுத்த நினைவுகள் எங்களுக்கு தேவையில்லை. யுத்தத்தை ஞாபகப்படுத்தும் நினைவு தூபிகள் அவசியமில்லை என்கிறார்.

அவசியமில்லைதான், ஆணைக்குழு தலைவரே! ஆனால், இப்படியான நினைவு தூபிகள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ளனவே. நாட்டின் ஏனைய இடங்களில்

உள்ளனவே. யுத்தம் எங்களுக்கு தேவையில்லைதான். நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். யுத்தம் என்பது துரதிஷ்டவசமானது. யுத்தம் என்பது ஒரு குற்றம். சிங்கள, தமிழர் என இருபுறமும் நாம் சண்டையிட்டோம். இருபுறமும் மக்கள் இறந்தார்கள். அது எமக்கு தேவையில்லை. அவற்றை நாம் மறப்போம்.

ஆனால், அப்படி செய்யும் போது நாம் அதை ஒரே சட்டத்தின் கீழ் செய்வோம். நான் இந்த அரசுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தயவுசெய்து இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கூச்சலை நிறுத்துங்கள். ஒரே நாடு என்பது எமக்கும் சரி. ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த “ஜோக்கை” விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள்.

தயவுசெய்து நாட்டில் இன்று இருக்கும் சட்டத்தையாவது ஒழுங்காக அமுல் செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே சமத்துவமாக அமுல் செய்யுங்கள். தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு வேறொன்று,

முஸ்லிம்களுக்கு இன்னொன்று என்று செய்ய வேண்டாம், என நாட்டி பிளவுபடுத்த வேண்டாம். நாட்டை பிளவு படுத்த வேண்டாம் நாம் கூறுகிறோம்,

இலங்கை சட்டம் எமக்கு தேவை. பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். அப்படியானால், இப்படியான காரியங்களை செய்யாதீர்கள். தமிழ் மக்களின் மனங்களை உடைக்க வேண்டாம்.

நாம் கவலையடைந்துள்ளோம். மரணித்த எம் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதர, சகோதரிகள், அண்ணன், தம்பிகள், தங்கைகள் ஆகியோரை நினைவு கூற எமக்கு முடியாதா? எமக்கு முடியாதா?

ஏன்?, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமையும், நீதியும், வடக்கு

பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

Posted in உலக செய்திகள்

பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள் – திணறும் அரசு

பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள் – திணறும் அரசு

பிரிட்டன் ஆங்கில கால்வாயை ஊடறுத்து சுமார் ஆறு படகுகள்

மூலம் 123 அகதிகள் கடந்த சனிக்கிழமை இரவு நுழைந்துள்ளனர்

பிரிட்டன் டோவர் கடல்பகுதியை வந்தடைந்த இவர்கள் மீட்க பட்டு

தடுப்பு முகாம்களில் வைக்க பட்டு விசாரிக்க பட்டு வருகின்றனர்

கடல்வழி பாதுகாப்பு பலப்படுத்த பட்ட நிலையில் ,அகதிகள்

இவ்விதம் தொடர்ந்து நுழைந்து வருவது பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள்
பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பங்குனி வரை முழு லொக்கடவுன் தொடரும் – பார்கள் வைகாசி வரை பூட்டு

பிரிட்டனில் பங்குனி வரை முழு லொக்கடவுன் தொடரும் – பார்கள் வைகாசி வரை பூட்டு

பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்

தாக்குதல் அதிகரிப்பட்ட நிலையில் நாடு தழுவிய நிலையில் அடித்து

பூட்டு பிறப்பிக்க பட்டுள்ளது ,இது மாசி மாதம் வரை நீடிக்கும் என தெரிவிக்க

பட்ட நிலையில் தற்பொழுது பங்குனி வரை நீடிக்கும் என தெரிவிக்க படுகிறது

மேலும் பார்கள் வைகாசி வரை தொடர்ந்து பூட்ட படும் நிலை

உருவாகும் என பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி கசிவுகள் வெளியாகியுள்ளன

இவ்வாறு அடித்து பூட்டுதல் நீண்டு சென்றால் அதனால் பெரும்

பாதிப்பை வியாபரிகள் சந்திக்க நேரிடும் என சுட்டி காட்ட படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்

பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்

பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மனையளவில் தனது உணவகத்தில் இருந்து உணவினை எடுத்து

வாடிக்கையாளருக்கு விநியோகிக்க சென்ற முஸ்லீம் உணவாக உரிமையாளராது காரினை 14 வயது திருடன் ஒருவரின் திருடி சென்றான் ,

அந்த காரை தூரத்தி சென்று நிறுத்த முற்பட்ட பொழுது ,இவரை

காரல் இடித்து காய படுத்தியுள்ளான் ,அதில் பலத்த காயமடைந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணமானார் .

இவரது காரினை திருட முற்பட்ட சிறுவன் கைது செய்யப்

பட்டுள்ளன ,அந்த மக்கள் மதியியல் மிகவும் பரிட்சய பட்ட நபர் இவர் என தெரிவிக்க பட்டுள்ளது

இந்த சம்பவம் Romiley, Stockportபகுதியில் இடம்பெற்றுள்ளது

உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
Posted in உலக செய்திகள்

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 1,792 மற்றும் பிரிட்டனில் 563 பேர் பலி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 1,792 மற்றும் பிரிட்டனில் 563 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,792 பேர் பலியாகியும் 213,453 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடும் பொழுது மரண எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது

அது போலவே பிரிட்டனில் 563 பேர் பலியாகியும் 54,940 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் -அலாரிய பொலிஸ்

இங்கிலாந்தில் மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் -அலாரிய பொலிஸ்

இங்கிலாந்தில் சேற்று மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் விரல் தோற்றத்தில் இருந்ததால் ஒரு பெண் போலீசாருக்கு தகவல்

கொடுத்துள்ளார். அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தியதில் அங்கு என்ன இருந்தது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சேறு நிறைந்த பகுதியில் பாதி புதைந்த நிலையில் மனித கால் விரல்? போலீசாரை அழைத்த பெண் – அதிர்ந்துபோன போலீசார்
வயல்வெளியில் கால் விரல் தோற்றம்
லண்டன்:

இங்கிலாந்தின் கேட்ஷீட் நகரம் வின்லெடன் பகுதியை சேர்ந்த பெண் தனது செல்லப்பிராணியான நாயுடன் கடந்த

வியாழக்கிழமை தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சேறு நிறைந்த ஒரு பகுதியில் மனிதனின் காலின் பெருவிரல்

ஒன்று சேறு நிறைந்த மண்ணில் புதைந்தவாறு இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக தனது செல்போனில் அந்த கால் விரலை புகைப்படம் எடுத்த அந்த பெண் தனது வீட்டிற்கு வேகமாக வந்து அந்த

புகைப்படத்தை போலீசாருக்கு அனுப்பி நடத்த விவரத்தை கூறினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் யாரேனும் ஒருவரை கொன்று சேற்று மண்ணில் யாரேனும் புதைத்துவிட்டு

சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பல போலீஸ் அதிகாரிகள், மோப்பநாய்கள் உதவியுடன் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று மணிக்கணக்கில் தேடுதல்

வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நேரத்திலும் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. சேறு நிறைந்த இடம் என்பதால் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் மனிதனின் கால் பெருவிரல் புதைந்த நிலையில் இருந்த இடத்தை போலீசார்

கண்டுபிடித்தனர். ஒரு நபரை யாரோ கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.

இதனால், அந்த கால் பெருவிரலை சேற்றில் இருந்து எடுத்தனர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சேற்றில் புதைந்திருந்தது மனிதனின் கால் விரல் அல்ல… அது உருளைக்கிழங்கு…. சேறு நிறைந்த பகுதியில் உருளைக்கிழங்கு கிடந்துள்ளது.

வயல்வெளியில் கால் விரல் தோற்றம்

அந்த உருளைக்கிழங்கின் மேற்பரப்பை சுற்றி புஞ்சை காளான் முளைத்துள்ளது. இதனால் அந்த உருளைக்கிழங்கு தத்ரூபமாக

மனிதனின் கால் பெரு விரல் போன்று தோற்றமளித்துள்ளது. இதை உணர்ந்த போலீசார் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

பல மணி நேர தேடுதல் வேட்டை வீணாகியும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சேற்று மண்ணில் மனிதனின் கால் விரல்

போன்று தோற்றத்தில் புதைந்திருந்ததால் அந்த பெண் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரின் விழிப்புணர்வு பாராட்டிற்கு உரியது என இங்கிலாந்து போலீசார் தெரித்துள்ளனர்.

மனிதனின் கால் விரல் போன்று தோற்றமளித்துள்ள அந்த உருளைக்கிழங்கு புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மண்ணில் புதைந்த நிலையில் மனித கால்
Posted in மருத்துவம்

இதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

இதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை

மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

இதய நோய் வராமல் தடுக்கும் புளி ஜூஸ்
புளி ஜூஸ்
உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதிலும் புளியின்

பங்களிப்பு முக்கியமானது. தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை

தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

தேவையான பொருட்கள்

புளிச் சாறு – அரை கப்
நாட்டு சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு
எலும்பிச்சை துண்டுகள் – 1
தண்ணீர் – விருப்பத்திற்கு ஏற்ப

இதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

செய்முறை

புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.

தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.

Posted in சினிமா

ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி… பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி… பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது.

ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி… பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
மீரான், மேகனா


தமிழ் சினிமாவில் சில படங்கள் போஸ்டரிலேயே பரபரப்பை ஏற்படுத்தும். அப்படி நாயகன் – நாயகி இருவரும் ஒரே சட்டைக்குள் இருக்கும் படம் வெளியாகி அது சமூகவலைதளங்களில்

பரபரப்பாகி உள்ளது. பழகிய நாட்கள் என்ற படத்தின் போஸ்டர் அது.

மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா,

சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல்

அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை இந்த படம்.

மீரான், மேகனா

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் – ஷேக் மீரா இசையமைத்துள்ள

இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே சட்டைக்குள்

இருவரும் இருக்கும் படத்தை பார்த்த ரசிகர்கள் ‘யார் அந்த தையல்காரர்?’ என்று கேட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
Posted in சினிமா

சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? – அரவிந்த்சாமி

சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? – அரவிந்த்சாமி

டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது

எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை என நடிகர் அரவிந்த் சாமி டுவிட் செய்துள்ளார்.

சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? – அரவிந்த்சாமி டுவிட்
அரவிந்த்சாமி


விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு,

பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில்,

வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.

டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.

Posted in சினிமா

மம்முட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்

மம்முட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்

ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டு இருக்கும் நிலையில் நடிகர் மோகன்லால், மம்முட்டியை நேரில் சந்தித்து இருக்கிறார்.

மம்முட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்
மோகன்லால் – மம்முட்டி


மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக

வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக் கொள்வது உண்டு. மோகன்லால் படங்கள் ரிலீசாகும்போது மம்முட்டி ரசிகர்களும், மம்முட்டி படங்க

வரும்போது மோகன்லால் ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக தயாரான படத்தில் முதல் பாதியில் வரும் மம்முட்டிக்கு முக்கியத்துவம்

அளித்துள்ளதாகவும், இடைவேளைக்கு பிறகு முக்கியத்துவம் இல்லாத காட்சியில் மோகன்லாலை நடிக்க வைத்து

அவமதித்துவிட்டதாகவும் மோகன்லால் ரசிகர்கள் பொங்கினர். அந்த படத்தை புறக்கணிப்பதாக அறிவித்தும் பரபரப்பு ஏற்படுத்தினர்.

மம்மூட்டி – மோகன்லால்

ஆனால் மம்முட்டி, மோகன்லால் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கொச்சியில்

மம்முட்டி புதிதாக கட்டி உள்ள வீட்டுக்கு மோகன்லால் திடீரென்று சென்று

அவரை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.

மோகன்லால்
மோகன்லால்
Posted in சினிமா

திடீர் திருமணம் ஏன்? – நடிகை விளக்கம்

திடீர் திருமணம் ஏன்? – நடிகை விளக்கம்

சினிமா உதவி இயக்குனரை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து நடிகை ஆனந்தி விளக்கம் அளித்துள்ளார்.

திடீர் திருமணம் ஏன்? – நடிகை ஆனந்தி விளக்கம்
சாக்ரடீஸ், ஆனந்தி


உதவி இயக்குனர் சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு

எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.

ஆனந்தி

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக

மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன்

பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.’’ இவ்வாறு ஆனந்தி கூறினார்.

Posted in உலக செய்திகள்

கொலண்ட் Amsterdam மில் அந்த நாட்டவர்கள் மட்டும் கடைகளில் கஞ்சா புகைக்க அனுமதி

கொலண்ட் Amsterdam மில் அந்த நாட்டவர்கள் மட்டும் கடைகளில் கஞ்சா புகைக்க அனுமதி

நெதர்லாந்து நாட்டின் தலைநகராக விளங்கும் அம்ஸடர்டாமில்

உள்ள காப்பி உணவகங்களில் உல்லாச பயணிகள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது


மேலும் இதே கடைகளில் அந்த நட்டு மக்கள் மட்டும் புகைக்க ,வாங்கிட அனுமதிக்க படுகிறது

இந்த தடை செயல் உல்லாச பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

future they only want Dutch residents to have access to the shops to buy and smoke cannabis.

Posted in உலக செய்திகள்

லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

அவுஸ்ரேலியா குயின்லாந்தில் வசிக்கும் 54 வயதுடைய பெண் மணி

ஒருவர் இரண்டு மில்லியன் பெறுமதியான லொத்தரியில் வெற்றி பெற்றார்

இவர் வெற்றி பெற்ற டீக்கட்டை அவர் தொலைத்து விட்டார்

,இதனால் தற்போது உச்ச நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுப் வருகிறது

அதில் நீதிபதியின் தீர்ப்பின் மூலம் அவரது வெற்றி என்ன என்பது தீர்மானிக்க படும் ,

லொத்தரியின் காப்பி மற்றும் ,கொள்முதல் செய்த ஆதாரங்கள்

வைத்துள்ளதாக பெண்மணி தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் வாலிபர் சுட்டுக்கொலை

அவுஸ்ரேலியாவில் வாலிபர் சுட்டுக்கொலை

மேற்கு அவுஸ்ரேலியா பகுதியில் 34 வயதுடைய வாலிபர் ஒருவர்

மர்ம நபர்களினால் விரட்டி சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார்

இவரது இந்த படு கொலைக்கான காரணம் தெரியவரவிலை

,தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

சுட்டுக்கொலை
சுட்டுக்கொலை
Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் அமெரிக்காவில் 3,235 மற்றும் பிரிட்டனில் 1,035 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் அமெரிக்காவில் 3,235 மற்றும் பிரிட்டனில் 1,035 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோய் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில் கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் 3,235 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 249,519 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 1,035 பேர் பலியாகியும் 59,937 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

எதிர்வரும் சில வாரங்களில் மரண எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

யாழில் நினைவுத்தூபி அழிப்பு – கோட்டா அரசுக்கு எச்சரிக்கை கண்டனம்

யாழில் நினைவுத்தூபி அழிப்பு – கோட்டா அரசுக்கு எச்சரிக்கை கண்டனம்

எச்சரிக்கை
எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அமைச்சருடன் பழகிய 118 பேருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய

118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள

அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள

சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேக செயலாளருக்கும்

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

கிழக்கு மாகாணத்தில் 6 பிரதேசங்கள், கொரோனா சிவப்பு வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என கிழக்கு

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, மட்டக்களப்பு – திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய

6 சுகாதார பிரிவுகளே, இவ்வாறு சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி

ஆகிய கிராமங்களில் இதுவரை 87 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், 02 மரணங்கள்

நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அப்பிரிவின் வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை

பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார்.

Posted in இலங்கை செய்திகள்

ஹக்கீமுக்கு கொரோனா

ஹக்கீமுக்கு கொரோனா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற

உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது

டுவிட்டரில் பதிவொன்றை இட்டு இன்று(10) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 10 நாள்களில் தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் தேவையான

சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.