Posted in உலக செய்திகள்

டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்

டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்

அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸகிராம்

கணக்குகள் பதிவுகள் பதிவு செய்ய முடியாதபடி பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது

இவரது தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த தடை

நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

தானே அடுத்த ஜனாதிபதி என தெரிவித்து பதிவு பகிரப்பட்ட

நிலையில் இந்த தடை ஏற்படுத்த பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

பிரிட்டனில் நான்காயிரம் solo-regulated firms நிறுவனங்கள் தமது

நிறுவனம் நட்டத்தில் செல்வதாக கூறி பணம் பெற்றது கண்டு பிடிக்க பட்டது

குறித்த நிறுவனங்கள் மீது நடத்த பட்ட விசாரணைகளில் இந்த

விடயம் கண்டு பிடிக்க்க பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக FC A கடும் தண்ட பணம் அறவிட பட்டுள்ளது

தொடர்ந்து மேலும் சில நிறுவனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

பிரிட்டன் Salford. பகுதியில் ஆன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக

மீட்க பட்டுள்ளார் .
மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட

வண்ணம் உள்ளனர்
இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

ஜாமெக்காவில் இருந்து லண்டனுக்குள் போதைவஸ்து கடந்த

முயன்ற மூன்று கறுப்பின பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

லண்டன் காட்வீக் விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்கள் போதிக்குள்

மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சுமார் ஒரு கிலோ நிறையுடைய போதைவஸ்து கண்டு பிடிக்க பட்டது

சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டது

தற்போது மூவரும் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்

பெண்கள் கைது
பெண்கள் கைது
Posted in சினிமா

ஹீரோவாக நடிக்கும் செந்தில்

ஹீரோவாக நடிக்கும் செந்தில்

கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில்
செந்தில்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள்

பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். நடிகர் கவுண்டமணி கூட சில

படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் செந்தில் இதுவரை ஹீரோவாக நடித்ததில்லை.

செந்தில்

இந்நிலையில், செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கிடாயின் கருணை மனு படத்தை

இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் செந்தில் ஆயுள்

தண்டனை கைதியாக நடிக்க உள்ளாராம். மேலும் இதில் செந்திலுக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in சினிமா

எளிமையாக நடைபெற்ற கயல் ஆனந்தி திருமணம்

எளிமையாக நடைபெற்ற கயல் ஆனந்தி திருமணம்

கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.

எளிமையாக நடைபெற்ற கயல் ஆனந்தி திருமணம்
ஆனந்தி திருமணம்
தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு

சாலமன் இயக்கிய கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார்.

இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம்

நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஆனந்தி திருமணம் இன்று இரவு எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே

அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

ஆனந்தி திருமணம்
ஆனந்தி திருமணம்
Posted in உலக செய்திகள்

சீனாவை மிரட்டும் அமெரிக்கா – அடங்குமா சீனா ..? தடை விதிக்க படும் என எச்சரிக்கை

சீனாவை மிரட்டும் அமெரிக்கா – அடங்குமா சீனா ..? தடை விதிக்க படும் என எச்சரிக்கை

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீனா மீது

கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சினை.

அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கியது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கொரோனா வைரஸ் இரு நாடுகளுக்கு தீரா பகையை உருவாக்கியுள்ளது. இதனால்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் ஹாங்காங் விவகாரமும் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.

இந்த சட்டம் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என அமெரிக்கா முதல் நாடாக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அடங்குவார்.

இந்த கைது நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹாங்காங் மற்றும் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தநிலையில் ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீன அரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ கூறுகையில் ‘‘இந்த அடக்குமுறை சீன கம்யூனிஸ்டு கட்சி தனது சொந்த மக்கள் மற்றும் சட்டத்தை அவமதிப்பு செய்வதை நினைவூட்டுகிறது. ஹாங்காங் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டுள்ள சீன அரசு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை அமெரிக்கா பரிசீலிக்கும்” என்றார்.

மேலும் அவர் ‘‘அரசியல் அடக்குமுறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒரு அமெரிக்க குடிமகன் கைது செய்யப்பட்ட செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது துன்புறுத்துவதையோ அமெரிக்கா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’’ எனவும் கூறினார்.

இதேபோல் கைது செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆர்வலர்களை விடுவிக்காவிட்டால் சீனா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

வௌிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக

எதிர்வரும் வாரம் முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது.

டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை

எனவும் வருகை தரும் அனைவருக்கும் அரசாங்கத்தினால்

தனிமைப்படுத்தல் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவி

கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவி

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை

தலைமையகத்தினால் அப்பகுதியில் வசிக்கும் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வாசிப்பு உசாத்துணை நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் மற்றும் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் ஆகிய சிறுவர் இல்லங்களை சேர்ந்த

மாணவர்களுக்கே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் மற்றும் உசாத்துணை வாசிப்பு நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக நன்கொடையாளர்

ஒருவரினால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி அளித்தனர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி, இலங்கை பீரங்கிப்படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி,

நன்கொடையாளர்கள், அதிதிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்றின் காரணமாக பொது மக்களின் சுகாதார நலன் கருதி காத்தான்குடி நகரம் கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த நாட்களாக பிரதேசத்தில் எடுக்கப்படுகின்ற ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் படி தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது மிகப் பெரும் கவலையை

ஏற்படுத்தியுள்ளது. இது மிக அவசியமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

உஎனவேதான் இவ்வாறான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலையினை முறையாக பின்பற்றப்படாமையினை எல்லோராலும் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டதுடன் இது சம்மந்தமாக இன்றைய மாவட்ட செயலக கூட்டத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனால் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சில இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை மாவட்ட கொரோனா

தடுப்பு செயலணியினர் எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

இதனால் இன்று இரவிலிருந்து மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியேறல், தேவையற்ற நடமாட்டம் என்பன கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டின் பிற மாவட்டங்களில் இவ்வாறான நிலை

காணப்பட்டதனாலேயே பிரதேச முடக்கம் வாரங்கள் கடந்து மாதங்களாக நீண்டமையை நாமறிவோம்.

எனவே அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள் வீட்டுக்கு வெளியே வருகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

. அத்தோடு அனுமதியின்றி வெளியில் வாகனங்களில் நடமாடுகின்றவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும்.

அனுமதியின்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இன்று இரவிலிருந்து முழுமையான இராணுவ பாதுகாப்பு நடைமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இவ் நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் வருகின்ற வாரங்களில் கூட எமது பிரதேசத்தில் சாதாரண வியாபார

நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது துரதிர்ஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

எனவே எமது பிரதேசத்தின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டும் எமது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது முடக்கத்துக்கு

பூரணமான ஒத்துழைப்பினை தருமாறு மிகவும் பணிவன்புடன் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர் கேட்டுக்கொள்கின்றேன்.

சமூகப் பொறுப்பு சகலருக்கும் உண்டு என்பதனையும், நாம் தொற்றுக்குள்ளாகாமலும் பிறரையும் தொற்றுக்குள்ளாக்காமலும்

செயற்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்வோம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும்

ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளிக்கும்

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டமா அதிபருக்கு உரிய தகவல்கள் கிடைத்ததும், உரியவர்களுக்கு

எதிராக குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு சீருடை- கல்வி அமைச்சர்

மாணவர்களுக்கு சீருடை- கல்வி அமைச்சர்

பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம் வாய்மூல பதிலை எதிர்பார்த்து கேள்வியொன்றை சமர்ப்பித்த

போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடைக்கேள்வி ஒன்றை கேட்டார். மாணவர்களுக்கு புது வருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், சீருடைத் துணி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

பாடசாலைகளை தொடங்காமல், சீருடையை விநியோகிப்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

தரம் ஒன்று முதல் தரம் 11 வரையான வகுப்புக்களுக்குரிய பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ

இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆரம்பமானவுடன், புதிய புத்தகங்கள்

மாணவர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Posted in சினிமா

சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை

சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கால்ஸ் பட டீசர் சாதனை படைத்துள்ளது.

மறைந்த சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை
சித்ரா
சின்னத்திரையில் நாயகியாக ஜொலித்தவர் சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார்

விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார்

விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன்

டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர்

நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

சித்ரா

டிசம்பர் 13-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு டிசம்பர் 31-ம் தேதி டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டீசர்

வீடியோ தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சபரிஷ் கூறுகையில்

“நம்மிடையே விஜே சித்து தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள்

தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Posted in சினிமா

நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்

நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்

பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்
வனிதா கராத்


பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கபீர் சிங். இந்த படத்தில், வீட்டில் வேலை செய்யும்

பணிப்பெண்ணாக நடித்து, பாராட்டுகளை பெற்றவர் மராத்திய நடிகை வனிதா கராத்.

இவர், பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். உடல்

பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற

சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வனிதா கராத்

அதனுடன் நான் எனது திறமையை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும், எனது ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலைப்

பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகள் பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்

அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்

அமெரிக்கா தலைநகரில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில்

சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் காயமடைந்தவர்களில்

இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

தானே தேர்தலிலவென்றதாக கூறி இதே பகுதியில் டிரம்பின்

ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்

எதிர்வரும் இருவாரத்தில் பதவியை விட்டு விலக உள்ள நிலையில் டிரம்

பைடனுக்கு எதிராக பல போராட்டங்களை தூண்டிய வண்ணம் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்

ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்

சிரியாவின் Al-Dour village in Al-Suwaidaa c பகுதியில் உள்ள ஈரான் மற்றும்

ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணை தகத்தலை நடத்தியது ,

இதில் அங்கு வைக்க பட்டிருந்த ராடார் திரைகள் மற்றும் ஏவுகணைகள்

என்பன அழிக்க பட்டுள்ளதாகவும் ,இவ்வேளை அங்கு பெரும், வெடி சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை சேர்ந்த இராணுவத்தினர் பலர்

பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க பட்டுள்ளது

எதிரிகள் தாக்குதலுக்கு முந்திட முன்னர் இஸ்ரேல் தொடர் வலிந்து

தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

Sungai Liang பகுதியில் கார் ஒன்று திருடர்களினால் திருட பட்டுள்ளது ,அவ்வேளை

அந்த காருக்குள் மூன்று சிறார்கள் இருந்துள்ளனர் ,மேற்படி சம்பவம் தொடர்பாக

பொலிசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் காரும் ,சிறார்களும் மீட்க பட்டுள்ளனர்

இந்த கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்ய

பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்

விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்

ஆப்பிரிக்காவின் Tambo விமான நிலையத்தில் பெரும் பொதி ஒன்றுக்குள்

மறைத்து எடுத்து வரப்பட்ட நிலையில் சுமார் 73.5 கிலோ தாக்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

இதன் மொத்த அமெரிக்கா டொலர் பெறுமதி சுமார் நான்கு மில்லியன்

டொலர்கள் என கணக்கிட பட்டுள்ளது ,இந்த மாபெரும் கடத்தலில்

ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

தங்கம்
தங்கம்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பொருளாதரத்தில்

பெரும் இடி வீழ்ந்துள்ளது ,இவ்வேளை கடந்த முப்பது வருடங்களின்

பின்னர் கடந்த வருடம் காரின் விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது

2019 ஆண்டு மட்டும் 16 லட்சம் கார்கள் விற்பனை செய்ய பட்டன ,ஆனல்

அதுவே கடந்த ஆண்டு மிக கீழ் நிலை விற்பனையில் பாரிய சரிவை சந்தித்துள்ளது

இதனை சீர் செய்திட வேண்டுமெனின் மக்கள் ,வழமை போன்ற

செயலுக்கு திரும்ப வேண்டும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொன்றானோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,276 பேர் பலியாகியுள்ளனர்,

மேலும் இதே நாளில் புதிதாக 214,567 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,தொடர்ந்து 29,813 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதுபோலவே பிரிட்டனில் அதி உச்சமாக 1.041 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 62,322 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 2,645 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

எதிர் வரும் நாள் ஒன்றுக்கு 5000 பேர் பலியாகும் நிலை ஏற்படலாம்

என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது