Posted in Uncategorized

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்

நட்சத்திர தம்பதியான சரண்யா – பொன்வண்ணன் ஆகியோரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்


சரண்யா பொன்வண்ணன் மகளின் நிச்சயதார்த்த புகைப்படம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம்

செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

சரண்யா பொன்வண்ணன் மகளின் நிச்சயதார்த்த புகைப்படம்

இந்நிலையில், சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அண்மையில் உறவினர்கள்

மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சரண்யா

பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சரண்யா
நடிகை சரண்யா
Posted in சினிமா பிரித்தானிய செய்தி

பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி

பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரியா பவானி சங்கர்


மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை

, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அருண் விஜய் – பிரியா பவானி சங்கர்

இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க

இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் இதை உறுதி படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

நடிகர் அருண் விஜய்யும் பிரியா பவானி சங்கரும் ஏற்கனவே மாஃபியா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரசியா ,அமெரிக்கா அதிபர்கள் இடையில் முதலாவது பேச்சு

ரசியா ,அமெரிக்கா அதிபர்கள் இடையில் முதலாவது பேச்சு

ரசிய அதிபர் புட்டீன் மற்றும் அமெரிக்கா அதிபர் பைடனுக்கு

இடையில் தொலைபேசி மூலம் பேச்சுவாத்தை இடம் பெற்றுள்ளது

பைடன் பதவி ஏற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது

பேச்சுவார்த்தை இதுவாக இடம்பிடித்துள்ளது ,மேலும் நூறு நாள்

வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பட்ட விரைவான

வேலைத்திட்டங்களை பைடன் ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

டிக்டாக்’ நிறுவனம் இந்தியாவில் அடித்து பூட்டு

டிக்டாக்’ நிறுவனம் இந்தியாவில் அடித்து பூட்டு

டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.

அரசு தடை எதிரொலி : ‘டிக்டாக்’ நிறுவனம் இந்திய பிரிவை மூடியது

பாதுகாப்பு காரணங்களைக் கூறி, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடைவிதித்தது.

இந்நிலையில், டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தொடர் கட்டுப்பாடுகள்தான் இந்த முடிவுக்குக் காரணம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டிக்டாக்கின் உலக இடைக்காலத் தலைவர் வனேஸா பாப்பாஸ், துணைத் தலைவர் பிளேக் சாண்ட்லீ ஆகியோர் கூட்டாக தமது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை

அனுப்பியுள்ளனர். அதில், இந்திய பிரிவை மூடுவதை ஒட்டி இந்தியாவில் உள்ள 2 ஆயிரம் ஊழியர்களில் குறிப்பிடத்தக்க

எண்ணிக்கையிலானவர்களை குறைப்பதாகவும், அது இங்குள்ள தமது அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சட்டங்கள், விதிகளுக்கு உள்பட்டு தங்கள் நிறுவனம் நடந்தபோதும், அரசின் கட்டுப்பாடு தொடரும் நிலையில் தமது

இந்தியப் பிரிவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போது நிலையற்ற தன்மை நிலவினாலும், எதிர்காலத்தில் இந்தியாவில்

தங்கள் தொழிலை மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி

இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி

இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பான

விசாரணைக்கு இலங்கைக்கு உதவிட முடியாது என அமெரிக்கா

கையை விரித்துள்ளது

இலங்கையில் சீனா தொடர்ந்து அகல கால் பதித்துள்ள நிலையில் ,அதிக

உதவிகளை செய்து வருகிறது ,இதனால் இலங்கை ஆளும் அரசு

புரிந்த இனப்படுகொலையை இப்பொழுது கையில் எடுத்துள்ளது

வளைந்து கொடுக்க மறுத்த அமெரிக்காஇப்பொழுது பெரும் நெருக்கடியில்

சிக்கியுள்ளது ,அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கையை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

Posted in Uncategorized

துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது

துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது

இலங்கை பண்டுற பகுதியில் நபர் ஒருவரை சுட்டு கொன்ற கொலை குற்ற

சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக

காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து இது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது

Posted in Uncategorized

கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம்

கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் கொலை வெறி

தாக்குதலில் சிக்கி இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாக இலங்கை

அரசு அறிவித்துள்ளது

மேலும் பல பிரதேசங்கள் தொடர்ந்து தனிமை படுத்த பட்டுள்ளன

Posted in Uncategorized

ஐநாவில் இலங்கை இன்று குற்ற சாட்டுக்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு

ஐநாவில் இலங்கை இன்று குற்ற சாட்டுக்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு

இலங்கையில் மகிந்தவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலை

தொடர்பான நீதி விசாரணைகள் ஐநா மனித உரிமை பேரவையில் இடம்பெற்று வருகிறது

12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் பொறுப்பு கூறலில் இருந்து

விலகி இனவாதத்தை கக்கி வருகிறது ஆளும் அரசு ,

ஆதற்கு அப்படித்தால் போல ஐநா இலங்கையை சர்வதேச நீதிமன்றில்

நிறுத்த போவதாக அறிவித்த நிலையில் இப்பொழுது ஓடி திரிகிறது ,இன்று

அது தொடர்பான ஆவணங்களை ஐநாவில் இலங்கை சரம்பிக்க படவுள்ளதாக தெரிவித்துள்ளது

Posted in Uncategorized

கூட்டமைப்பே என்னை சிறையில் அடைத்தது – பிள்ளையான் அழுகை

எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு

வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட

அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில்

கேட்டறியும் மக்கள் சந்திப்பு கும்புறுமூலை பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று (26) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள

வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது

யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள் அழிவுகளை கடந்த காலத்தில் கண்டோம்.

இந்த கசப்பான அனுபவங்களை வைத்துதான் எமது கட்சி உருவானது. கிழக்கு மாகாணத்தில் உதித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அழித்து விட வேண்டும்

என்பதற்காகத்தான் என்னைக் கூட சிறையில் அடைத்தார்கள். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவிதமான

சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற

நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயா பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன வந்தால் என்னை சிறையில் அடைப்பதாக மேடையில் பேசினார். அதை நடாத்திக்

காட்டினார்கள். பரவாயில்லை. என்னை சிறையில் அடைத்ததை தவிர அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்றால் அவரது

கிராமமான புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலையை மூடுவதற்கான நிலைமைக்கு வைத்துள்ளார்.

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எங்களது கிராமத்தினை கட்டியெழுப்பாமல் போனால் ஏனைய கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவோம். இந்த கேள்வியை

அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டும். எங்களது மாகாணத்தினை நாங்களே நிர்ணயிக்க கூடிய மக்கள் கூட்டமாக

ஆவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி ஜெ.லோபன்ராஜ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கும்புறுமூலை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய நிருவாக சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Posted in உலக செய்திகள்

அமெரிகாவில் எகிறிய கொரனோ மரணம் -3,181 மற்றும் பிரிட்டனில் 1,631 பேர் பலி

அமெரிகாவில் எகிறிய கொரனோ மரணம் -3,181 மற்றும் பிரிட்டனில்

1,631 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,181

பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 120,201 பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 1,631 பேர் பலியாகியும் 20,089 பாதிக்க பட்டுள்ளனர்

,.கடந்த இரண்டு நாட்களில் பலி எண்ணிக்கை வீழ்ச்சி

அடைந்திருந்த நிலையில் தற்போது இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ மரணம்
கொரனோ மரணம்
Posted in சினிமா

பள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்

பள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்

பிரபல இந்தி நடிகர் வருண் தவான், தனது பள்ளிப்பருவ காதலியான நடாஷாவை திருமணம் செய்து கொண்டார்.

பள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர் வருண் தவான்
வருண் தவான், நடாஷா


இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் வருண் தவான். இவர் பிரபல

இந்தி பட இயக்குனர் டேவிட் தவானின் மகன். வருண் தவானும் ஆடை வடிவமைப்பாளர் நடாஷா தலாலும் காதலித்தனர்.

வருண் தவான் 6-வது வகுப்பு படித்தபோது முதல் முறை நடாஷாவை பார்த்தார்.

பள்ளியில் படித்தபோது நண்பர்களாக பழகினார்கள். அதன்பிறகு காதலிக்க தொடங்கினர்.

இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து

வருண் தவான், நடாஷா திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனாவால் தள்ளி

வைத்தனர். இந்த நிலையில் வருண் தவான், நடாஷா தலால் திருமணம் மராட்டிய மாநிலம் அலிபாக்கில் நடந்தது.

வருண் தவான், நடாஷா

திருமணத்தில் இந்தி திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினர். முன்னதாக

திருமணம் நடந்த இடத்துக்கு வருண்தவான் வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கி சேதமடைந்தது. வருண் தவானுக்கு காயம் ஏற்படவில்லை.

காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்
காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்
Posted in உலக செய்திகள்

பெற்ற மகள்களை அடித்து பலி கொடுத்த தம்பதிகள் – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

பெற்ற மகள்களை அடித்து பலி கொடுத்த தம்பதிகள் – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்
பேராசிரியர் தம்பதிகளுடன் மகள்களை படத்தில் காணலாம்
சித்தூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு இவரது மனை வி பத்மஜா . புருஷோத்தம் அரசு கல்லூரியில் வேதியியல் இணை

பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். எம்.எஸ்.சி கணிதத்தில் தங்கப்பதக்கம் வென்ற மனைவி பத்மஜா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

பலி கொடுத்த தம்பதிகள்
பலி கொடுத்த தம்பதிகள்

இவர்களது மகள்கள் அலெக்யா (27), சாய் திவ்யா (22) . அலெக்யா இந்திய வன முகாமைத்துவ நிறுவனத்தின் மாணவர், திவ்யா பிபிஏ பட்டதாரி ஆவார்.

ஊரடங்கால் வீட்டில் இருந்த இவர்கள், கடந்த சில மாதங்களாக வீட்டில் இவர்கள் பூஜைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த

நிலையில், நேற்று காலை தனது இரண்டு மகள்களை உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பிள்ஸ் மூலம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால்,

மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், சம்பவத்திற்கான் காரணத்தை போலீசாரால் தீர்மானிக்க முடியவில்லை.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது என்பது பற்றிய முழு விவரங்களும் எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் அங்கு சென்றதும் தம்பதிகள் சாதாரணமாக காணப்படவில்லை.

இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நாள் நேரம் கொடுக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அவர்களுடன் உரையாடிய பிறகு, அவர்கள் ஒரு மிரண்ட நிலையில் இருப்பதாக எங்களுக்குத் தோன்றியது இதனால் அவர்களை விசாரிக்க நாட்ளாகும் என கூறினர்.

Posted in உலக செய்திகள்

சசிகலா சிறை தண்டனை முடிவுற்று இன்று விடுதலை

சசிகலா சிறை தண்டனை முடிவுற்று இன்று விடுதலை

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா

இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைகிறது – சசிகலா இன்று விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது.

இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை

குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா

பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார்.

கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். இதற்கு கர்நாடக போலீஸ் துறை அனுமதி

வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை சந்திக்கிறார்கள். அவரிடம் விடுதலை செய்வதற்கான

ஆவணங்களில் கையெழுத்து பெறுகிறார்கள். அதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு, சசிகலாவை முறைப்படி சிறை நிர்வாகம் விடுதலை செய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு அவருக்கு சிறை சார்பில் அளிக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும். பிறகு அவரை குடும்பத்தினர் தங்களின் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். சசிகலாவுக்கு

தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிப்பதா? அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து

செல்வதா? என்பது குறித்து உறவினர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார். அவரது

உடல்நிலை நன்றாக தேறிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு நாளை (வியாழக்கிழமை) சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று

அறிக்கை வந்தால், அவரை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் 2 வார காலம் தனிமையில் இருக்க

வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அவர் பெங்களூருவிலேயே ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்பதால், சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் கண்காணிப்பு

கேமராக்களில் பதிவு செய்யப்படுகிறது. இளவரசியும் சசிகலா உள்ள அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்

Posted in உலக செய்திகள்

பங்கு சந்தையின் முதல்வியை -நிதி அமைச்சராக நியமித்த பைடன்

பங்கு சந்தையின் முதல்வியை -நிதி அமைச்சராக நியமித்த பைடன்

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது

தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு பொருளாதார பெண் வல்லுநரான ஜேனட் ஏலனை (வயது 74) ஜோ பைடன் நியமித்தார்.

இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். செனட் சபையில் தற்போது ஜனநாயக கட்சிக்கு 50 உறுப்பினர்கள் குடியரசுக் கட்சிக்கு 50 உறுப்பினர்கள்

என சரிசமமான நிலை உள்ளது. செனட் சபையின் தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சபையில் நடக்கும் ஓட்டெடுப்பில் ஜனநாயக கட்சியின் முடிவுக்கு ஆதரவாக தனது

வாழ்க்கையை அளிப்பார். இதனால் செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டுவரும் தீர்மானம், மசோதா உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் சிக்கலின்றி எளிதாக நிறைவேறும் சூழல் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க நிதி மந்திரியாக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் சபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. சபையின் தலைவரான துணை ஜனாதிபதி

கமலா ஹாரிஸ் தலைமையில் நடந்த இந்த வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நியமனத்துக்கு ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜேனட் ஏலனை அமெரிக்க நிதி மந்திரியாக நியமித்து செனட் சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம்

அமெரிக்க வரலாற்றிலேயே நிதி மந்திரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை ஜேனட் ஏலன் பெறுகிறார். அவர் விரைவில் முறைப்படி பதவி ஏற்பார்.

அமெரிக்காவின் பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகங்களில் பொருளாதார பட்டப்படிப்புகளை முடித்த ஜேனட் ஏலன், உலகின்

பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை,

பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.

அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997-ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க

ஜனாதிபதியாக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.

2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார்.

அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்ட ஜோ பைடனின் 3-வது மந்திரி சபை உறுப்பினர் ஜேனட் ஏலன் ஆவார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்சும், ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை மந்திரியாக டோனி பில்கினை நியமிப்பதற்கு செனட்சபை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது.

Posted in Uncategorized

வாலிபர் உயிர் குடித்த மரம் – கண்ணீரில் குடும்பம்

வாலிபர் உயிர் குடித்த மரம் – கண்ணீரில் குடும்பம்

இலங்கை கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில்

மணல் ஏற்றி பறிக்கும் லொறி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

மரத்துடன் மோதியது ,இதன் பொழுது மரத்தின் கிளைகள் தககியதில்

சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த

காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் குடும்பத்தினரை ஆறா துயரில் ஆழ்தியுள்ளது

உயிர் குடித்த மரம்
உயிர் குடித்த மரம்
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரசை பயங்கரவாதம்

மேற்கொண்ட தமிழ் இன படுகொலை தொடர்பான விசாரணைகள் ஐநாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் ,குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்கும் படி ஐநா உத்தரவிட்டது

அதற்குரிய கால அவகாசமும் தாராளமாக வழங்கியது ,ஆனால் அவை எவையும் பொருட்படுத்தாது

சிங்கள அரச இனவாதிகள் ஆடி மகிழ்ந்தன ,தற்போது சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்த முற்படும் அபாய ஒலி முழங்கும்

பொழுது ,இவர்களின் கொலைகளை நேரடியாக கண்ணுற்ற மக்கள் மற்றும்

சித்திரை வதைகளிற்கு உள்ளிட்டவர்கள் ,அதில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில்

தஞ்சம் கோரிய முக்கிய சாட்சிகளை கைது செய்தும் நகர்வில் சிங்கள உ ளவுத்துறை ஈடுபட்டுள்ளது

அவர்கள் ஆதாரம் திரட்டும் நகர்வில் தீவிரமாக செயல் பட்டு வருகிறது

,இவை தொடர்பான பல மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்வதுடன் காட்டி

கொடுப்பில் ஈடுபட்டுள்ள முகமூடிகள் கிழியும் நிலை ஏற்பாட போகிறது என்பது திண்ணம் .

Posted in Uncategorized

இலங்கைக்கு ஐந்து லட்சம் கொரனோ தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

இலங்கைக்கு ஐந்து லட்சம் கொரனோ தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

இலங்கையில் வைரஸ் நோயால் பாதிக்க பட்ட மக்களுக்கு

வழங்கும் முகாமாக ஐந்து லட்சம் தடுப்பு ஊசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

சீனாவுக்கு தலையும் ,இந்தியாவுக்கு வாலை காட்டும் இலங்கைக்கு

இந்தியா போராயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது

அனைத்தையும் பெற்று விட்டு தமிழக மீனவர்களை இலக்கு வைத்து

கொன்று குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்

கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்

இலங்கை புரிந்த தமிழ் இனப்படுகொலையை அடுத்து அந்த கொலையை

புரிந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதனை வழி நடத்திய இராணுவ தளபதிகள்

உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்திட முடியாத புதிய நெருக்கடி இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது

குற்றங்கள் புரிந்தவர்கள் பயணங்கள் மாற்று சொத்து உடைமைகள் என்பன

முடக்க படுவதுடன் அவர்களும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த சிக்கலை எதிர் நோக்கியுள்ளது

பொல்போர்ட் ஆட்சியில் இடம்பெற்ற கொலைக்கு 20 வருடம் கழித்தே தீர்வு

கிடைத்தது போல ,இலங்கைக்கும் ஆண்டு இருபதுக்குள் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது

ஏன் இப்போ புலிகளை அழித்தோம் என என்னும் நிலைக்கு சிங்களம்

செல்ல போகிறது ,வரும் காலம் இந்த விடயங்களை வலியோடு பகிரும் அதிரடி நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன

Posted in Uncategorized

ஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன ? video

ஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன ? video

எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு,

தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான

வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த ஐ.நா ஆணையாளரது அறிக்கை தொடர்பில் கருத்தினை வெளியிடும் போதே இதனை

தெரிவித்தள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற

அவரது பரிந்துரை உற்சாகத்தை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஐ.நா ஆணiயாளரு அறிக்கையில் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த

வேண்டும் என்ற பரிந்துரையே முதன்மையான தெரிவித்திருக்கின்றார். இதற்கு பின்னராகத்தான் பிற பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

‘சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென தமிழர்கள் பல ஆண்டுகளாக உழைத்து

வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டாக இதனை கோரியுள்ளதோடு,

காணாமலாக்கப்பட்ட உறிவினர்கள் பாதிக்கப்பட்ட மக்களும் கோரியியுள்ளனர் ‘ என அறிக்கையில் மனித உரிமைச்சபை ஆணையாளர் அதனை குறிப்பிட்டிருக்கின்றார்.தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டுக்காக தமிழர்கள் நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து வந்துள்ளோம்.


2015ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டி

மில்லியன் கையெழுத்து போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தது. அவ்வேளையில் தாயக மக்கள் உட்பட 1.5 மில்லியன் பேர்

கையொப்பமிட்டிருந்தார்கள். அதுவொரு முக்கியதொரு தொடக்கம். அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு சர்வதேச சட்டவாளர்கள் ஆணையம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்

நீதிமன்றத்தில சிறிலங்காவை பாரப்படுத்தச் சொல்லியிருந்தது. அடுத்து மனித உரிமைச்சபையின் முன்னாள ஆணையாளர்

உசேன், தனது அறிக்கையில் சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை

தமிழர்களில் ஒரு தரப்பிடம் வலுவாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்று ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரர் தனது பரிந்துரையாக நேரடியாகவே இதனை தெரிவித்துள்ளார். இது எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக

ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது

அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது

ஐ.நா மனித உரிமைச்சபை நாடுகளை நோக்கிய ஐ.நா ஆணையரது இந்த பரிந்துரையினை அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பது பூகோள அரசியலை சார்ந்து காணப்படுகின்றது.

ஆணையாளது பரிந்துரையினை அந்நாடுகள் நிராகரிக்க முடியாது என்றே நம்புகின்றேன். அதற்கான நாம் உழைக்க வேண்டும். அந்த

47 நாடுகளில் முக்கியமான நாடுகளை அடையாளங்கண்டு கடுமையாக தமிழர் தரப்பு உழைக்க வேண்டும்.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது பரிந்தரையினை மையப்படுத்தியே பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும்.

இதேவேளை ஆணையாளரது அறிக்கையில் நமக்கு முழுயைமான உடன்பாடு இல்லை. குறிப்பாக நடந்தேறிய பாரிய மனித உரிமைமீறல்கள் ‘மீளநிகழாமை’ தொடர்பில் அங்கத்துவ நாடுகள்

ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் பாதிக்கப்பட்டவர்கள்தான்

அந்த பொறிமுறையினை தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/u_8E6MxCwmQ
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்

லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்

லண்டன் குரைடன் பகுதியில் காதலனுடன் பயணித்த இளம் பெண் ஒருவரை

அங்கு வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியது ,இதில் காதலன் பலத்த

காயமடைந்த நிலையில் அந்த தாக்குதலை தடுக்க சென்ற காதலியை

தாக்கி அவரது முடியில் பிடித்து இழுத்து தரையில் தள்ளிய அகோரம் இடம்பெற்றுள்ளது

இது குறித்த தீவிர விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

,காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தற்போது வீடு சென்றுள்ளார்

குற்றவாளிகளை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்