Posted in இலங்கை செய்திகள்

வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது

வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது

செட்டிகுளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கேத்கம பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட கல் குவாரி ஒன்றில் குறித்த வெடி

பொருட்களுக்கான அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில் வைத்திருந்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வெடி மருந்து 3 கிலோ, வோட்டர் ஜெல் 49, சாதாரண டெட்னேட்டர் 11, அமேனியம் நைட்ரேட் 149 கிலோ உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Posted in Uncategorized

கையை உடைத்துக் கொண்ட ஜெனிலியா..

கையை உடைத்துக் கொண்ட ஜெனிலியா..

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து

நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

எப்போதும் குடும்பம், குழந்தைகள், திரைப்பட விழாக்கள் என இன்றைக்கும் தனக்கே உரிய குறும்பு தனங்களோடு வலம் வரும் ஜெனிலியா தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக்

கொண்டு இருக்கிறார். தான் கற்றுக்கொண்ட ஸ்கேட்டிங் திறமையை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில்

வெளியிடலாம் என எண்ணியிருக்கிறார். அப்போது ஸ்கேட்டிங் செய்யும்போது நிலை தடுமாறி கிழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது.

ஜெனிலியா

ஆனால் தனக்கு ஏற்பட்ட இந்த வலியையும் பொருட்படுத்தாத ஜெனிலியா எப்போதும் போல அதே குறும்பு சிரிப்புடன் இந்த வெற்றிக் கதை தோல்வியில் முடிந்து விட்டது. ஆனால் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்வேன் எனக் கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார்.

Posted in Uncategorized

வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்

வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக கூறியிருக்கிறார்.

வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்
அனிகா சுரேந்திரன்


அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா

சுரேந்திரன். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அனிகா சுரேந்திரன்

இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில் ’நான் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் என்னிடம் பலர் கூறுவது என்னவென்றால் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும்

நான் வளர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

தாலிபான்கள் வெறியாட்டம் -30 பேர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து

வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத

தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில்

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான்

பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்‌.

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நன்றி உனக்கு

நன்றி உனக்கு

நேற்றெந்தன் அகவையில
நேர் வந்த இளங்கிளியே
நீயுரைத்த வாழ்த்தொன்றால்
நிமிடங்கள் பேசுதடி

நாள் தோறும் அகவையில
நீ வந்து வாழ்த்திவிடு
நான் வாழ நீ தானே
நலமுடனே வாழ்த்து இடு

உன்போல உறவொன்றை
உயிரே நான் காணவில்லை
உள்ளத்தில் நீ இருக்க
ஊந்துகணை பயமில்லை

கரை பதிந்த அலை தடத்தை
காற்றே அழித்திடுமோ ..?
காயா நினைவலையை
கறையான் புற்று அரித்திடுமோ …?

ஓயாத அலை ஒன்றாய்
ஒலிக்கின்றாய் நெஞ்சுக்குள்
வரலாற்று சமரதுவாய்
வாழ்கின்றாய் நெஞ்சுக்குள்

குடாரப்பு தரையிறக்கம்
குழி தோண்டிய முற்றுகையாய்
வெறி கொண்ட வெற்றி ஒன்றாய்
வெளிச்சத்தை நீ தந்தாய் …!

  • வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம்-11-03-2021
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

    இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

    இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

    இந்தியாவில் கோவிஷீல்டு, கொவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

    தடுப்பூசி திட்டத்தின் 52ஆவது நாளான நேற்று முன்தினம் (08) ஒரே நாளில் 2,019,723 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதுதான் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இவர்களில் 1,715,380 பேர், 28,884 அமர்வுகள் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தப்பெற்றனர்.

    மேலும் 304,343 சுகாதார பணியாளர்களும், முன்கள பணியாளர்களும் தடுப்பூசியின் 2ஆவது டோஸ்களை

    பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரையில் 2,308,733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

    தொழில் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

    சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்;பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாவாகவும்,

    வரவு செலவு திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இத்தீர்மானம் கடந்த 5 ஆம் திகதி முதல் செல்லபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in Uncategorized

    லண்டனில் அம்பிகா உணாவிரதம் – கண்டுகொள்ளதா அரசு -கதறும் தமிழர்கள்

    லண்டனில் ஈழ விடுதலை போருக்கு ஆதரவாக செயல் பட்டு வந்த குடும்பத்தில் இருந்து உதயமானவரும் ,தொன்று தொட்டு புலிகளின் ஆதரவாளராகவும் ,பணியாளர்களாகவும் பணியாற்றி வந்த

    ஆதரவாளர்கள் ஒருவராக விளங்கும் அம்பிகா அவர்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

    இவரால் முன் வைக்க பட்ட கோரிக்கைகள் நிராகரிக்க பட்ட நிலையில், பிரிட்டன் அரசு பயணிக்கிறது ,


    இவரது உயிரை காப்பற்ற வேண்டும் என தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்

    ஊடகங்கள் தம்மை கண்டு கொள்வதில்லை என்ற வாதங்களும் முன் வைக்க படுகிறது ,

    ஆனால் ஊடகங்களுக்கு இவர்களினாலே எவ்வித செய்திகளும் வழங்க படுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

    அவர்களது மின் அஞ்சல்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்க படுவதில்லை என்ற வாதம் வலுப்பெறுகிறது ,

    பரப்புரை அல்லது கவனத்தை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ள முயல்பவர்கள் ஊடக தொடர்புகள் சீரற்ற சம நிலையில் இல்லாது உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ

    மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ

    ஆளும் இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து சீமானுக்கு விடப்பட்ட தூது ,அதில் என்ன நடந்தது உடைக்கிறார் அந்த மர்மங்களை

    இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இறந்தால் உன்னை மறப்பேன் …!

    இறந்தால் உன்னை மறப்பேன் …!

    நினைத்து நினைத்து உருகிடத்தான்
    நீ வந்து போகிறாய்- உன்
    நினைவுகளை தந்து விட்டு
    நிதம் ஏனோ மறைகின்றாய்..?

    ஆழ் மனதில் நீயிருக்க
    அன்பே உனை மறப்பேனா
    அடியே உனை மறந்தால்
    ஆவி உடல் தங்குமா ?

    நீயெடுத்த முடிவொன்றால்
    நிகழ் காலம் இதுவாச்சு
    ஏதெடுத்து உனை மொழிவேன்
    எப்படி உனை உமிழ்வேன்

    காதோரம் செய்திகளை
    காதலியே சொல்லிட வா— நான்
    காணாமல் போகு முன்னே
    கதை ஒண்ணு சொல்லிட வா

    உருமாறும் அகவையில
    உள்ளத்தை மாற்றிட வா
    உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
    உண்மையை ஏற்றிடவா

    எதை உரைத்தும் இன்றென்ன
    எனக்கில்லை நீதானே
    எதை விதைத்தும் இன்றென்ன
    எல்லாமே வீன்தானே

    இருவருக்கும் இடையிலின்று
    இடையே ஒர் வேலியிட்டாய்
    இரு வேறாய் பிரிவதற்கா
    இடையில் ஒரு பதி வைத்தாய்?

    இதயத்தை சலவை செய்ய
    இன்றென்னால் முடியாது
    இறந்தால் உனை தொடரேன்
    இதயமே வருந்தாதே …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் -10-03-2021

      Posted in Uncategorized

      சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ

      சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ

      சிரியாவின் ஆளும் அசாத் மற்றும் அவரது மனைவி கஸ்மா ஆகியோருக்கு

      நடத்த பட்ட கொரனோ சோதனையில் இருவருக்கும் கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

      Posted in Uncategorized

      போராளி குழுக்களை வேட்டையாடும் துருக்கி

      போராளி குழுக்களை வேட்டையாடும் துருக்கி

      துருக்கிய ஆளும் அதிபர் இலங்கையின் மகிந்தா ,கோட்டாவை போன்ற சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார் ,இவரது அடச்சியில் போராளி குழுக்கள் அடக்க பட்டு நசுக்க பட்டு வருகிறது .

      அவர்களது தார்மீக கொள்கைகள் ஏற்க மறுத்து முற்றாக அந்த அமைப்புக்கள் இல்லாது அழிக்கும் நகர்வில் துருக்கி ஈடுபட்டுள்ளது

      இவ்விதம் தற்போது Fetullah Terrorist Organization (FETO)சி 2 முக்கியய நபர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      தங்கம் அள்ளி சென்ற மக்கள்

      மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது

      இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர்.

      அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு

      எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற

      பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

      இதனிடையே இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

      இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

      Posted in சினிமா

      சூர்யா – ஜோதிகா’ பாணியை பின்பற்றும் ‘ஆர்யா – சாயிஷா

      சூர்யா – ஜோதிகா’ பாணியை பின்பற்றும் ‘ஆர்யா – சாயிஷா

      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

      . திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

      தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை சூர்யா தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

      ஆர்யா, சாயிஷா

      இந்நிலையில், நடிகர் ஆர்யாவும் அதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கும் ஜோதிகா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

      அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்க ஆர்யா முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில இளம் இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம்.

      ஆர்யாவின் மனைவி சாயிஷா, வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

      தற்போது ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 12-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது.

      Posted in சினிமா

      விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் – நடிகை கங்கனா

      விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் – நடிகை கங்கனா

      மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா

      வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

      இப்படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

      வருகிறது. இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

      கங்கனா ரணாவத், ஏ.எல்.விஜய்

      அதில் “அன்புள்ள விஜய் சார், ‘தலைவி’ படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. ஒரு நடிகையாக நான்

      நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததே இல்லை.

      உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. விஜய், நீங்கள் மனிதரே அல்ல, கடவுள்.

      உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் உங்களை மிஸ் பண்றேன்”. இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

      Posted in சினிமா

      நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

      நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

      மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

      . இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான

      நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

      பூஜா, சாய் பல்லவி

      இந்நிலையில், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் நடிகையாக அறிமுகமாக உள்ளாராம். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக

      #அறிமுகமாகும் படத்தில் பூஜா நடிக்கிறாராம். இதில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக அவர் நடிக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு

      கோவையில் நடந்து வருகிறது. சாய் பல்லவியின் தங்கை பூஜா, ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      கடலுக்குள் பாய்ந்த வண்டி – காப்பாற்றிய இராணுவம்

      கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு பயணித்த மஹீந்திரா ஜீப் ரக வாகனம் ஒன்று நாயாறு களப்புக்குள் குடைச்சாய்தமையால் தண்ணீருக்குள் மூழ்கவிருந்த மூவருடைய உயிர்கள் படையினரால் காப்பாற்றப்பட்டன.

      இவ்விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் சேவையாற்றிக் கொண்டிருந்த படையினர் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கவிருந்த

      மூவரையும் காப்பாற்றியதுடன், அவர்களுடைய வாகனத்தையும் மீட்டெடுத்தனர்.

      அதனையடுத்து இவ்வாறு விபத்தில் சிக்கியவர்கள் இராணுவ வாகனமொன்றில் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

      படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து களப்பிற்குள் இருந்து வாகனத்தை கரைச்சேர்த்தனர்.

      மீட்கப்பட்ட சிவிலியன்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு அவர்களுடைய வாகனம் படையினரால் மீட்கப்பட்டது.

      Posted in Uncategorized

      ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை

      முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

      கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

      பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

      இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      எனினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஹிருணிகா, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

      இந்த வழக்கு விசாரணைகள் ஜுன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன..

      Posted in Uncategorized

      மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு

      மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு

      அண்மையில், ரயிலில மோதுண்டு உயிரிழந்த மீன் சந்தையில் பணிபுரியும் நபருக்கு கொரோனா தொற்று

      உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மன்னார் நககரில் அமைந்துள்ள மீன் சந்தை தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளது.

      மேலும் குறித்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

      இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி

      அலுவலகம் இணைந்து இன்று (9) பல்வேறு பகுதிகளில் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன், கொரோனா பரவல் உள்ள

      இடங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்

      Posted in Uncategorized

      கடலில் மிதந்த சடலம்

      கடலில் மிதந்த சடலம்

      திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர், இன்று (09) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

      இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

      கரைவலையை இழுத்துக் கொண்டிருந்தபோது இவர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

      சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன, சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன்,

      இம்மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது