சாரதி செய்த செயலால் -பள்ளத்தில் விழுந்த பேரூந்து- 27 பேர் மரணம்
சாரதி செய்த செயலால் -பள்ளத்தில் விழுந்த பேரூந்து- 27 பேர் மரணம்
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இரவு நேரத்தில் பஸ், சுமேதாங் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விட்டது. பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த கோர விபத்தில் 27 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்துக்கு காரணம் பஸ்சில் ‘பிரேக்’ செயல்படாதது தான் என விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் சாலைகள் மோசமாக இருப்பதால்
விபத்துக்கள் நடப்பது சாதாரணமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு அங்கு ஒரு பஸ் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது
அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது- எடப்பாடி
இந்தியா டுடே பத்திரிகை ‘அடுத்த 5 ஆண்டில் தமிழகம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியதுசென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தியா டுடே பத்திரிகை சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது.
அப்போது அவரது அரசியல் பயணம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
1974-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். அப்போது நான் வளர்ந்து கொண்டு இருந்தேன்.
அந்த காலகட்டத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை எதிர்த்து கட்சி நடத்தி கொண்டு இருந்தார். அதில் இருந்து நான் கட்சியில் தீவிரமாக பணியாற்றினேன்.
எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்தேன். யாரிடமும் எந்த சிபாரிசுக்கும் சென்றது இல்லை.
எனது சொந்த உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். 1989-ல் அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது அம்மா தலைமையிலான அணியை ஏற்று அதில் போட்டியிட்டேன்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனேன். அதிலிருந்து கட்சியில் பல பொறுப்புகளை வகித்தேன். பல வாரியங்களுக்கு தலைவராகவும் பணியாற்றினேன். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் வெற்றி பெற்றேன்.
2011- ஆண்டு அம்மா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றேன். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். அப்போது கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டது. அனைத்து பணியையும் நான் சிறப்பாக செய்து வந்தேன்.
அம்மா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் சேவையை செய்வதுதான் எனது பிரதான பணியாகும். மக்கள் பிரச்சனைகளை நான் முழுமையாக அறிந்துள்ளேன்.
சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்ததால் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவன்.
மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள், அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து வந்துள்ளேன்.
அதனால்தான் மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறேன். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.
தமிழகம் இன்று பல துறைகளில் சாதனை படைத்து பல்வேறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தியதால் மக்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு சோதனைகளை சவாலாக எடுத்து தற்போது சாதித்து உள்ளேன்.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், அரசியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் புரட்சித்தலைவி அம்மா எனக்கு பயிற்சியை தந்துள்ளார். நான் எனது சொந்த உழைப்பு முயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளேன்.
இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. அரசு தொடர மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்து அதற்கேற்ப பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.
அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணைவதாக கூறுவது தவறு. அவ்வாறு வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.
அ.தி.மு.க.வை எதிரிகளால் வீழ்த்த முடியாது. எதிரிகளின் கனவு பலிக்காது.
அ.தி.மு.க. மூலம் பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைவதாக கூறுவது சரியல்ல. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மாநில திட்டங்கள் நிறைவேறும் என்பதால், மத்திய அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.
அதனால் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்துள்ளன. இதனால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி- குளங்கள் நிரம்பி உள்ளன. இந்த திட்டத்தை மக்கள் அனைவரும் வரவேற்று உள்ளனர்.
உயர்கல்வி படிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிபெற்று தொடங்கி உள்ளோம்.
நாங்கள் போடும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். எங்களிடம் இருந்து கசியும் திட்டங்களை அவரது திட்டங்கள் போல சொல்கிறார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் என்னோடு விவாதிக்க தயாரா?
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் நான் கவனம் செலுத்தியதால் எனக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நான் பயணித்த காலம் மிகவும் கடினமானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடனும் நான் அரசியல் பணி செய்துள்ளேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 நபர்கள் கைது
கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 நபர்கள் கைது
கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று ( 11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் கல்பிட்டி களப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி வண்டியொன்று சோதனை செய்யப்பட்டதுடன் லாரி வண்டிக்குள் இருந்
த சந்தேக நபர்களிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது குறித்த லாரி வண்டி சாரதியுடன் 24 நபர்கள் இலங்கையிலிருந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரத் தயாராகி கல்பிட்டி களப்பு பகுதியில் இருந்து ஒரு படகு வரும் வரை காத்திருப்பது தெரியவந்ததால், அந்தக் குழுவும் லாரி வண்டியும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 நபர்களின் 20 ஆண்கள், ஒரு பெண் (01), இரண்டு பெண் குழந்தைகள் (02) மற்றும் ஒரு சிறுவன் (01) உள்ளனர். இவர்களில் 09 பேர் மட்டக்களப்பு பகுதியிலும்
, 6 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 05 பேர் முல்லைதீவு பகுதியிலும், 03 பேர் திருகோணமலை பகுதியிலும், லாரியின் சாரதி புத்தலம் பகுதியிலும் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கடத்தலைத் திட்டமிட்ட நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகப்படுகிறது.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அவர்களது லாரி வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், கடலில் இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வு முயற்சிகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
நீராடச் சென்ற மாணவன் மாயம்- தேடும் பொலிஸ்
நீராடச் சென்ற மாணவன் மாயம்- தேடும் பொலிஸ்
மஹவெல பொலிஸ் பிரிவில் அங்கந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நேற்று (11) முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் உயிர்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
16 வயதுடைய மாணவன் மற்றும் 26 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், அவர்கள் தலுபோத்தகம பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்
யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.
அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை
16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை
இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர்.
தீ விபத்தையடுத்து, பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.
இத்தீவிபத்தால் பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த இராகலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.
விறகு சேகரிக்கச்சென்ற வாலிபனை காணவில்லை
விறகு சேகரிக்கச்சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ குயினா மேல்பிரிவை சேர்ந்த 26 வயதுடைய திருச்செல்வம் பிரபாகரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு சேகரிப்பிற்காக போபத்தலாவ வனப்பகுதிக்குள் சென்றவர் திரும்பி வரவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் உறவினர்களால் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொது மக்களும் பொலிஸாரும் இரண்டு நாட்களாக போபத்தலாவ காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப்பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொது மக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.
சீரற்ற வானிலைக்கு மத்தியில் காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுவரையில் குறித்த இளைஞனை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை காணாமல் போன இளைஞன் தனது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையெனவும் பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண் வருகின்றமை குறிப்பிடதக்கது.
ஹன்சிகாவுக்கு திருமணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஹன்சிகாவுக்கு திருமணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ்
திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அண்ணனுடன் ஹன்சிகா
இந்நிலையில் நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகிறதாம். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். அங்கு திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளதாம்.
ஐ.நாவில்-தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம்
தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் – நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு
தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
சிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான
வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது.
தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.
இன்று வியாழக்கிழமை ( 11-03-2021) , வாக்கெடுப்பு நோக்கிய தமது தீர்மான வரைவினை பிரித்தானியா தலைமையிலான கூட்டு
நாடுகள் சமர்ப்பித்திருந்தன. எதிர்வரும் 22,23ம் தேதிகளில் வாக்கெடுப்புக்கு வரலாம் என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவுக்கு மேலும் ஓர் காலநீடிப்பினை வழங்குவதாகவே
தீர்மான வரைவு அமைந்துள்ளதோடு, பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும் அமைகின்றது. இதனை முற்றாக
நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது.
அரசுகள் தாம் ஓர் தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் இது உணர்த்துகின்றது.
எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதோடு, ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு
முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை photo
இன்றைய சிவராத்திரி (11) தினத்தில் மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை
இன்றைய சிவராத்திரி (11) தினத்தில்
வெற்றிலையூர் (புலத்கோபிட்டிய) எதுராபொல தோட்டம் 2 ஆம் பிரிவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்தினி அம்மன் தேவஸ்தான
வளாகத்தில் நேற்று (10) சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று (11) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்


இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு
இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு
Virtual Statement I 46th Session I UN Human Rights Council I Ministry of International Affairs TGTE
Virtual Statement for the 46th Session of the UN Human Rights Council (HRC) by Minister Manicka Vasagar ( International Affairs – Transnational Government…
youtu.be
உலகெங்கும் போரினாலும், இனப்படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினை பெற்றுக் கொள்வதில், ஐ.நாவின் தேவை தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில்,
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், தனது கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நாவுக்கு தற்போது ஓர் வாய்ப்பு கிட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஐ.நா மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும், முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா அங்கத்துவ
நாடுகளுக்கு அனைத்துலக தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் காணொளி வாயிலாக முன்வைத்திருந்தார்.
அவர் தனதுரையில், கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது, மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில்
தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டு பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது.
உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு, சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.
உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐ.நா மனித உரிமைப்பேரவையின் தேவை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதின் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும், கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கும்,
முன்னேறுவதற்கும் ஐ.நா மனித உரிமைப்பேரவைக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
On behalf of The Transnational Government of Tamil Eelam (TGTE), and the victims of the Mulliavaikkal War, appeal to the Council, that after 12 years, we are still waiting for justice and accountability.
As you all are aware, the war has resulted in more than 70 000 dead including women, and children, 89 000 widows, about 40 000 disabled, 60 000 IDPs, and 146 000 are still unaccounted for, either dead or missing.
The continued non-compliance, by the Government of Sri Lanka on the UN HRC resolutions, and delaying the establishment of transitional justice mechanisms, including a special court to prosecute alleged war crimes, is an attempt to avoid delivering on the truth and justice, for the thousands of victims of the country’s civil war.
It has become very clear, and repeated and reiterated by the GoSL, that a home-grown mechanism to implement any resolution will never ever be possible, to build any trust for an environment for reconciliation, justice, or accountability.
Your current draft is only to continue to victimise and suppress the victims with more pain and sufferings, and to reward a rogue state and the perpetrators to buy more time.
The relevancy of the Council for the victims of war, around the world, has now come into question, who are continued to be subjected to structural Genocide, War Crimes and Crimes Against Humanity.
Here, it’s an opportunity for the Council to show leadership, to correct past mistakes and to move forward, by referring Sri Lanka to the ICC.
Thank You.
திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது
திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது
அமெரிக்காவில் Oklahoma பகுதியில் பதின் ஐந்து வயது திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் குற்றவாளியை கைது செய்வதற்கு முன்பாக சுட்டு கொன்றனர்
என்றதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலையில் உள்ளனர்
காவல்துறையினர் தமக்கு வழங்க பட்டுள்ள அதிகாரத்திற்கு மேலாக சென்று
மக்களை துன்புறுத்தி வருகின்ற நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா போர் கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா
அமெரிக்கா போர்கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் மிக முக்கிய நாசகார கப்பல்களின் வடிவமைப்பை காப்பியடித்து ஈரான் தற்போது புதிய
கப்பல்களை வடிவமைத்து பயன்பாட்டில் விட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
ராணுவத்தினரின் கணணிகளுக்குள் நுழைந்து கப்பல் ஆதாரங்களை திருடி அதன் ஊடாக இந்த வடிவமைப்பை ஈரான் புரிந்துள்ளது
இதுவரை சுமார் ஒரு லட்சம் டன் பெறுமதியான கப்பல்களை ஈரான் காப்பி அடித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
அமெரிக்காவையும் நேரடியாக ஈரான் மோதிட தாயாராக உள்ளது என்பது ,அவர்களது ஆயுத உபகரணங்களை காப்பி அடித்து
,அதனையே உருவாக்காகி நிற்பது தான் காரணம் என்பது இப்போது புரிந்து போனது
லண்டனில் போலீசார் வேட்டை – பணம் – போதைவஸ்து மீட்பு – வீடியோ
லண்டனில் போலீசார் வேட்டை – பணம் – போதைவஸ்து மீட்பு – வீடியோ
கிழக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின் பொழுது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த குழு ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது
அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற இந்த முற்றுகையில் சுமார் 13 ஆயிரம் பவுண்டுகள் மற்றும் பலவகையான போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன
கொரனோ காலத்தில் பெருமளவில் இவ்வாறான நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை 259 பேர் கைது செய்ய பட்டுள்ளதாகவும் அதில் 30 க்கு மேற்பட்டவர்கள் கடூழிய சிறை தணடனை கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
லண்டனில் ஆள்கடத்தல் – 225 லாரிகள் தீவிர சோதனை
லண்டனில் ஆள்கடத்தல் – 225 லாரிகள் தீவிர சோதனை
லண்டனுக்குள் பிரான்சில் இருந்து கடல்வழியாக அகதிகள் நுழைந்து வருகின்றனர் ,அது தவிர தரை வழியாகவும் ,லொறிக்குள் பதுங்கி நுழைந்து வருகின்றன
இவ்வாறான மனித கடத்தலை தடுக்கும் முகமாக போலீசார் திடீர் சோதனையை நடத்தினர்
இதில் சுமார் 225 லாரிகள் சோதனைக்கு உட்படுத்த பட்டது எனினும்
அதற்குள் இருந்து எவரும் மீட்க படவிலை என்பதே ஏமாற்றமாக அமைந்துள்ளது
காவல்துறை அதிகாரியை இடித்து கொன்ற இராணுவ வண்டி
காவல்துறை அதிகாரியை இடித்து கொன்ற இராணுவ வண்டி
ஹபரண – பொலன்னறுவ வீதியின் மின்னேரியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பயணித்த மோட்டார் சைக்கிள் இராணுவ வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபரண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராணுவ வாகனத்தை செலுத்தி வந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம்
தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
கொஹுவல, ஆசிரி மாவத்தையில் எரியுண்ட காரில் இருந்து 33 வயதான வர்த்தகரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
களுபோவில, ஹாதியா மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தடம்புரண்ட ரயில் – போக்குவரத்து பாதிப்பு
தடம்புரண்ட ரயில் – போக்குவரத்து பாதிப்பு
கண்டி – நாவலப்பிட்டிக்கு இடையிலான பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
142 ஆம் இலக்க பயணிகள் ரயில் நாவலப்பிட்டி ஜயசுந்த ஓவிட்ட பகுதியில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாக
நாவலப்பிட்ட ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது பயணத்தை ஆரம்பிக்கவிருத்த குறித்த ரயில் எஞ்சின் பகுதி திருப்ப முற்பட்ட போதே இன்று (11) மதியம் 12.30 மணியளவில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது.
நாவலப்பிட்டி ரயில்வே ஊழியகர் திருத்தப்பணியின் ஈடுபட்டு வருவதுடன் பணி நிறைவடைந்தவுடன் மீண்டும் வழமை போல சேவை இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என,
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று நிறைவடைந்தது. பரீட்சார்த்திக்குப் பதிலாக பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில்
நேற்றைய தினம் , 21 வயதுடைய இளைஞன் பலாங்கொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழில் 141 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
யாழில் 141 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ் கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடம் இருந்த 42 மில்லியன் ரூபா பெறுமதியான 141
கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது







