Posted in Uncategorized

மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள்

மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டார் விமான சேவை, எமிரேட்ஸ் – துருக்கி விமான சேவை, குவைட் விமான சேவை, உக்ரைன் விமான நிறுவனம், ஓமான் விமான நிறுவனம் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் 2019 – 2020 காலப்பகுதியில் 35 விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Posted in Uncategorized

    வீதி விபத்துக்களில் 12 பேர் மரணம்

    வீதி விபத்துக்களில் 12 பேர் மரணம்

    மீண்டும் நாட்டில் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

    நேற்று (08) மாத்திரம் விபத்துகளால் 13 மரணங்கள் நாட்டில் பதிவானதாக கூறிய அவர், அதில் 7 மரணங்கள் 24 மணித்தியாலங்களில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

    ஏனைய 6 மரணங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களால் காயமடைந்த நிலையில் நேற்று சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

    இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் பாதசாரிகள் என்றும், 4 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், சாரதிகள் இருவர் மற்றும் பயணி ஒருவர் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

      Posted in Uncategorized

      புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது

      புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது

      தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்

      யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

      மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றிரவு எட்டு மணிக்கு மணிவண்ணன், சபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்திருந்தனர்.

      இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், இன்று அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மணியைக்

      கைது செய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக என வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

      அதேவேளை, பார்த்திபனிடம் சுமார் எட்டு மணி நேர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.

        Posted in Uncategorized

        வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த-மூன்று மீனவர்களை காணவில்லை

        மூன்று மீனவர்களை காணவில்லை

        கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

        நேற்று (09) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் இன்று காலை 8 மணிக்கு கரை திரும்ப

        வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம்

        (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது

          98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது

          98 கடவுச்சீட்டுக்களை தன்னகத்தே வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          கடவுச்சீட்டுக்கு உரிமையானவர் களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி

          வைப்பதற்கு குறித்த நபர்கள் முயன்று உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

          மேலும் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

            தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

            பிரிட்டன் – வட அயர்லாந்து பகுதியில் கலகக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தொடர்

            வன்முறைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கலவரத்தில் பேரூந்து ஒன்றை மடக்கி பிடித்த கலக காரர்கள் அதனை தீ வைத்து எரித்தனர்

            இதனால் அந்த பேரூந்து முற்றாக எரிந்து அழிந்தது ,அருகில் உள்ள கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன

            இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

            எரிக்க பட்ட பேரூந்து
            எரிக்க பட்ட பேரூந்து
              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

              பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

              சற்று முன்னர் லண்டன் பகுதியில் அமைய பெற்றுள்ள Ohio என்ற பெயிண்ட் தயாரிக்கும்

              தொழில்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது .

              இந்த வெடிப்பு சம்பவத்தில் அந்த நிறுவனம் பற்றி எகிறது .

              மேற்படி வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இதனால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை

              மேற்படி சம்பவம் தொடர்ப்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

              வெடித்து சிதறிய பக்டரி

              வெடித்து சிதறிய பக்டரி
                Posted in Uncategorized

                வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்

                வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்

                வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரால் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

                வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

                மக்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

                சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன்,

                பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போதும் நேற்று (07) வரை எவரும் கைது செய்யப்படவில்லை.

                இந்நிலையில் நேற்று இரவு குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து வவுனியா பொலிசாரால் குறித்த சம்பவம்

                தொடர்பில் இருவர் இன்று (08 ) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

                வாள்வெட்டு
                வாள்வெட்டு
                  Posted in Uncategorized

                  யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?

                  யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?

                  யாழ்ப்பாணத்தில் திடீரென கொரனோ நோயானது அதிகரித்துள்ளதாக வடமாகாண சுகாதார அதிகாரி அறிவித்துள்ளார்

                  சீனாவுக்கு வடக்கின் மூன்று தீவுகளை வழங்கிய பின்னர் இவ்விதமான விடயங்களை சமீப

                  நாட்களில் சிங்கள பவுத்த அடக்குமுறை அரசு பரப்பி வருகிறது

                  மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in Uncategorized

                    136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

                    136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

                    இலங்கை இரத்தமாலானை பகுதியில் வங்கியில் 136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பில்

                    வைத்திருந்த வாலிபன் ஒருவர் சிங்கள காவல்துறையால கைது செய்ய பட்டுள்ளார்

                    இவ்விதம் பெரும்தொகைப் பணம் இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது தொடர்பில்

                    விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                      Posted in Uncategorized

                      பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

                      பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

                      தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்தை கைபேசியில் வைத்திருந்த வாலிபன் ஒருவ

                      ர் யாழில் கைது செய்யப் பட்டுளளார்

                      இவ்வாறு கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார் ,


                      மேற்படி வாலிபனை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

                        Posted in Uncategorized

                        மகிந்த விமான நிலையத்தால் 445.3 மில்லியன் இலாபமாம்

                        மகிந்த விமான நிலையத்தால் 445.3 மில்லியன் இலாபமாம்

                        மகிந்தவின் ஆட்சியில் நிறுவப்பட்ட மகிந்தவின் பெயர் கொண்ட விமான நிலையத்தால் கடந்த

                        வருடம் மட்டும் சுமார் 453 மில்லியன் ரூபாய்கள் இலாபம் கிடைத்துள்ளதாக உல்லாசத்துறை

                        அமைச்சர் ,உல்லாசமாக தெரிவித்துள்ளார்

                        மைத்திரியின் ஆட்சியில் குறித்த விமான நிலையத்தால் வருமானம் இல்லை என கூறி அதனை

                        மூடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?

                          தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?

                          இலங்கை புறக்கோட்டை பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை புரியும் கடையில் திடீரென தீ பரவல்

                          ஏற்பட்டுள்ளது ,இதனால அந்தக் கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது

                          இந்த தீ பரவுக்குக்குரிய காரணம் உடனடியாகா தெரியவாவில்லை விசாரணைகள் தொடர்ந்து

                          இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            Posted in Uncategorized

                            சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்

                            சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்

                            சிரியாவின் தலைநகர் டமஸ்கத் பகுதியில் இஸ்ரேல் இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி நால்வர் பாடுகாயமடைந்துள்ளனர்

                            மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளதுடன் ,அதே போன்ற

                            தாக்குதல்களை ஈரானுக்குள்ளும் இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                              சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                              சூடான் Darfur பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை சுமார் 87 ஆக அதிகரித்துள்ளது

                              மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 200 க்கு மேலாக அதிகரித்துள்ளது

                              கட்டுக் கடங்காது பரவி வரும் இந்த வன்முறை சம்பவம் பெரும் கொலைக்களமாக மாறும்

                              அபாயம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

                              உலக
                              உலக
                                Posted in மருத்துவம்

                                பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்

                                பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்

                                பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.

                                பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்…அலட்சியம் வேண்டாம்….
                                வெள்ளைப்படுதல்
                                இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும்.

                                பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும்

                                சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

                                பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

                                தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும்.

                                பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்

                                அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம்.

                                இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

                                தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால்

                                இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.

                                சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.

                                மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை

                                சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

                                சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

                                உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.

                                தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.

                                வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலும் கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை மருத்துவபரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்

                                  .

                                  Posted in சினிமா

                                  பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள்

                                  பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள்

                                  பூனம் பாஜ்வா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சேவல் படத்தின் மூலம்

                                  தமிழில் அறிமுகமான இவர் அதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசின் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்திருந்தார்.

                                  பூனம் பாஜ்வா

                                  அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியாக

                                  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பூனம் தற்போது வெளியிட்டுள்ள

                                  கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இந்த போட்டோஷூட்டிற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருகின்றன.

                                    Posted in Uncategorized

                                    நீங்க செக்ஸ் நடிகை – கடுப்பான அந்த பிரபலம்

                                    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட

                                    பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.

                                    கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள்,

                                    குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அபிராமியின் உடல் அமைப்பு குறித்து ட்ரோல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

                                    அபிராமி

                                    “நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான்

                                    . உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.”

                                    “இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்.” என்று அபிராமி கூறி உள்ளார்.

                                      Posted in Uncategorized

                                      கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா

                                      கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா

                                      உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா,

                                      கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது.

                                      ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா கூறுகிறது.

                                      சுகாதாரப்பணி

                                      இந்த நிலையில் இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

                                      இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா

                                      பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை

                                      செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்றார்.

                                      இதனிடையே தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால்

                                      ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக கவலை தெரிவித்தார்.‌

                                        Posted in Uncategorized

                                        புயலில் சிக்கிய HOLLAND சரக்கு கப்பல் – கடலில் குதித்த மாலுமிகள் – வீடியோ

                                        புயலில் சிக்கிய HOLLAND சரக்கு கப்பல் – கடலில் குதித்த மாலுமிகள் – வீடியோ

                                        நோர்வே நாட்டின் வட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த டச்சு சரக்கு கப்பல் ஒன்று புயலில் சிக்கியது ,இதனால் கப்பலில் பணியாற்றிய 12 மாலுமிகளில் பலர் கடலில் குதித்தனர்

                                        மீட்பு குழுவிற்கு அறிவித்ததை அடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் அனைவரையும் மீட்டனர்

                                        இந்த சம்பவத்தில் உலங்குவானூர்தி பயன்படுத்த பட்டதாக மீட்பு குழுவினர் ,தெரிவித்துள்ளனர்

                                        மேலும் குறித்த கடற்கரை பகுதியில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளன

                                        CLICK HERE FULL VIDEO

                                        https://www.youtube.com/watch?v=RQH8XBCYBjo