இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 709 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது இலங்கை திணறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது ,மலை பகுதிகளை அண்மித்த வீடுகளுக்கு இதனால் பெரும் சேதங்கள்
ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மேற்படி அறிவிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது
புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு
புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு
ஆப்கானிஸ்தான Farah’s Bala Buluk இராணுவ முகமை கடந்த தினம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி கைப்பற்றிய
தாலிபான்கள் அங்கிருந்த இருபது இராணுவத்தினரை கொன்று ஆயுதங்களை அள்ளி
சென்றுள்ளதுடன் ,முகாமை முற்றாக துடைத்து அழித்துள்ளனர்
அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் ,தாலிபான்கள் புலிகள் பாணியில் பல ஊடறுப்பு தாக்குதலை
தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர் ,.இந்த போராளிகள் குழுவுக்கு ஈரான் பின்புலத்தில் உதவி வருவதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
கொரானா பாதிப்பு இலங்கையில் மீண்டும் மோசமடைந்து வரும் நிலையில் கொவிட் 19 நெருக்கடி நிலைமை தொடர்பாக
அரசாங்கமும் வைத்தியத்துறையும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை முன்வைக்கின்றன.
இந்த இரண்டு தரப்புக்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பாக ஒரு வைத்தியராக திரு.நாகநாதன் அவர்களின் கருத்துக்கள்
கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு
கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு
இலக்கை கடல்பகுதிகள் எங்கும் சிங்கள கடற்படையின் ரோந்து கண் காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது
இலங்கைக்குள் இந்தியாவில் இருந்து சட்டவிரோத அகதிகள் நுழைகின்றனர் என்ற குற்ற சாட்டை முன்வைத்து இந்த ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது
இலங்கை கடல் வழியை பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து அகதிகள்
செல்கின்றனர் என கூறி ஐந்து ரோந்து படகுகளை இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக 26 மில்லியன் ரூபாய்களை அமெரிக்காவில் இருந்து
பெற்று அதனை அரேபிய நாடு ஒன்றுக்கு கடத்தி செல்ல முற்பட்ட கிண்ணியாவை சேர்ந்த
ஒருவரை குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கை வருகிறார் சீனா வெளியுறவு மந்திரி
இலங்கை வருகிறார் சீனா வெளியுறவு மந்திரி
இலங்கைக்கு சீனாவின் பாதுகாப்பு மந்திரி வந்து சென்றதன் பின்னர் தற்போது எதிர்வரும் வாரம் அளவில்
சீனாவின் வெளியுறவு மந்திரி வருகை தரவுள்ளார்
தொடராக முக்கிய அதிகாரிகள் வருகை இலங்கையை சீனாவுக்கு ஆளும் சகோதர ஆட்சி விற்பதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
இவர்கள் செயல் பாடுகள் இந்தியாவை கொதிப்பில் ஆழத்தியுள்ளது
புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சமூக வலைத்தளம் ஊடக புலிகளை வளர்த்தார் என்ற குற்ற
சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவரது சமூக வலைத்தள பதிவுகளில் புலிகள் தொடர்பான விடயங்கள் காணப்பட்டதாகவும் அதன்
ஊடாக புலிகளை மீள் உருவாக்கும் நிலையில் செயல் பட்டார் என சிங்கள படைகள் தெரிவித்துள்ளன
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்
இலங்கையில் தொடரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதிகமாக பாதிக்க
பட்ட எட்டு கிராமங்கள் முற்றாக மக்கள் தொடர்புகள் இன்றி தூண்டிக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது
இந்த பகுதிக்குள் உள்வரவோ ,வெளி செல்லவோ எவராலும் முடியாத நிலை ,இராணுவம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
யாழில் ஆறு பேருக்கு கொரனோ
யாழில் ஆறு பேருக்கு கொரனோ
தமிழர் தியாகத்தின் கலாச்சார பட்டினமாகி விளங்கும் யாழ்ப்பாணத்தில் ,நிகழ் காலத்தில் பரவி
வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் ஏழு பேர் பாதிக்க பட்டுள்ளதாக
வடமாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 4857 பேர் இதுவரை கைது செய்ய
பட்டுள்ளனர்
இவர்களில் கடந்த தினம் மட்டும் 215 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர்
தெரிவித்துள்ளார்
ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய அருகில் உள்ள
அமெரிக்கா இராணுவ தளம் மீது இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
பத்து நாட்களின் பின்னர் மீளவும் அதே இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று நடத்த பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட்ட தக்கது
சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி
சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி
சவூதி நாட்டின் தெற்கு Najran பகுதி நோக்கி ஈரானிய ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய உளவு விமானங்கள்
மூலம் வீச பட்ட ஏவுகணைகளை சவுதி வான் காப்பு அணியின் இடையில் தடுத்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது
தற்போது என்றும் இல்லாதவாறு சவுதியை நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்கள்தீவிர படுத்த
பட்டுள்ளது சவுதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
லிபியாவில் கவிழ்ந்த அகதிகள் படகு 12 பேர் மரணம்
லிபியாவில் கவிழ்ந்த அகதிகள் படகு 12 பேர் மரணம்
அகதிகளை காவியபடி பயணித்த அகதிகள் படகு ஒன்று ;லிபியாவின் கடற்பரப்பில் திடீரென
கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்
மீட்பு படையினர் விரைந்து வந்து தத்தளித்து கொண்டிருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர் .ஐரோப்பாவுக்குள்
நுழையும் முகமாக மத்திய கிழக்கு ,ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கப்பல் மூலம் ,நுளையய
முயன்றவர்களில் 20 ஆயிரத்துக்கு மேலானவர்கள் கடலில் மூழ்கி பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்
வெங்காய தேநீர்
தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர்
பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க
கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.
வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும்
குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா
லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கொரோனா தடுப்பூசிக்கு நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார்.
லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. .
ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் 2வது அலையை எதிர்த்து போராட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஒரு கோடி ரூபாயை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கினார்.
இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார். கிவ் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்த பணியில் இறங்கி உள்ளார்.
பிரியங்கா சோப்ரா
கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி குவிந்துள்ளது. இந்த பணம் பெங்களூர் மற்றும் மும்பைக்கு ஆக்சிஜன் வாங்க பயன்படுத்தப்படும் என்று பிரியங்கா குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது.
நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? சிரிக்காதீங்க
நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? சிரிக்காதீங்க
தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய காமெடி நடிகர் மயில்சாமி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
காமெடி நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?
மயில் சாமி,
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது.
இதில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2வது இடத்தை வகித்து வருகிறது. இதனிடையே சுயேச்சை வேட்பாளராக நகைச்சுவை நடிகர் மயில்சாமி
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுளார். இந்நிலையில், இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி நடிகர் மயில்சாமி இதுவரை 50க்கும் குறைவான வாக்குகளே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
மயில் சாமி
இவருடன் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரபல திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை – மோசமான விளைவுகள் ஏற்படும்
அமெரிக்க அதிபர் ஜோபைடன்
அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய
அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது,
‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்கடந்த வாரம் அமெரிக்க பாராளு மன்றத்தில் அதிபர் ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வட கொரியா தரப்பில் கூறியதாவது:-
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராளு மன்றத்தில் பேசும்போது, வடகொரியா அவர்களது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறார்.
விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோச மான சூழ்நிலையை எதிர் கொள்ளும் என்று தெரிவித் துள்ளது.
இது குறித்து வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குவான்ஜாங்கன் கூறும்போது, அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா செய்ததை போல் வடகொரியா மீதான விரோத கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோபைடனின் பேச்சு தெளி வாக பிரதிபலிக்கிறது.
அமெரிக்க நாட்டின் அதிபர் ஒரு பெரிய தவறை செய்தார் என்பது உறுதி யாகி இருக்கிறது. தற்போது வட கொரியா மீதான அமெ ரிக்காவின் கொள்கையின் முக்கிய குறிப்பு தெளிவாகி விட்டதால் அதற்கான நட வடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம்.
காலப்போக்கில் அமெ ரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும்’ என்றார்.
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின்
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.
வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின் பேட்டி
கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி
மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
வெற்றி சான்றிதழைப் பெறும் முக ஸ்டாலின்
நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:
திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.
10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி தலைவரை முறையாக தேர்ந்தெடுப்போம். கொரோனா பரவல் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
ரம்யா க்கு அறுவை சிகிச்சை
ரம்யா க்கு அறுவை சிகிச்சை
குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை
ரம்யா பாண்டியன்
‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ரம்யா பாண்டியன் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ரம்யா பாண்டியன்
இதனை அடுத்து ரம்யா பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள்
வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







