கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை
கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை
கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொறோனா வைரஸினால் பாதிககப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ பிரதமரின்
இந்து விவகாரம் தொடர்பான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர்இ பாதிக்கப்பட்டிருக்கின்ற
சிவாச்சாரியர்களுக்கான உணவு நடைமுறை மற்றும் ஆகமக் கடமைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தினார்.
இதன்போதுஇ சிவாச்சாரியர்களுக்கு தேவையான சைவ உணவுகள் ஆச்சார முறைப்படி பரிமாறப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேவேளைஇ வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனிமைப்படுத்தல் பராமரிப்பு நிலையத்தில்
தற்போது மூன்று சிவாச்சாரியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்
வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன்இ தேவையேற்படின் சிவாச்சாரியர்களுக்கான தனியான
தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் காவல் துறையினரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் முகக்கவசம் அணியாது சென்றவர்கள் என
தெரிவிக்க படுகிறது
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 38 பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 1.089 பேர் மரணமாகியுள்ளனர் .பல்வேறு பட்ட
நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,குறித்த நோயினைன் கட்டு படுத்த
முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் ஆயிரம் சிறுவர்கள்
பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவ்வாறு பாதிக்க பட்ட சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்திட இலங்கை அரசு முயன்று
வருகின்றமை குறிப்பிட தக்கது
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக இன்று (22) அதிகாலை 2 மணியளவில் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் வண்டி சென்றுள்ளதுடன் இதன்போது மாடியில் இருந்து விழுந்ததாக
கூறப்பட்ட நபருக்கு எவ்வித காயங்களும் இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த சிலர் ஓட்டுனர் மற்றும் உதவியாளரான பெண்ணின் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன
கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்
கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பாதித்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது.
அதீத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், Steroid medicine எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் புதுவையிலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தொடங்கியுள்ளது. புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 5 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் கண் பார்வையை இழந்துள்ளனர்.
நாள்தோறும் புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தெரிவிக்கையில்:-
கொரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதுவரை 14 நோயாளிகள் வந்துள்ளனர். நோயின் தாக்கம் அதிகரித்து சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்கு பார்வையில்லை.
கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியே, கண்ணில் பரவி ரத்தக்குழாய்களை சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது.
ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது. சிகிச்சைக்காக புதுவையை சேர்ந்தவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.
தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பலர் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகம்-புதுவையில் இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வது கஷ்டம். கண்ணை சுற்றி வீக்கம், வாய், மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று எண்டாஸ் கோப் பார்த்தால் நோயின் தாக்கம் தெரியும். எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் கரும்பூஞ்சை தொற்று வராது.
சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களை பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
என்று தெரிவித்தார்..
நீண்டகால நோய்களுடன் உள்ளவர்களுக்கு புதுவை சுகாதாரத்துறை சார்பில் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொடர் நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தவறாமல் மருந்தை உட் கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இருதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் வைத்துள்ளவர்கள் தவறாமல் ஆஸ்பிரின் மற்றும் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் தாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண் டும்.
இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை போன்ற உயிர் கொல்லி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் இதனை உணர்ந்து தடுப்பூசியை உடனே போட்டுக் கொண்டு தங்களையும் தங்கள் பாசத்துக்கு உரிவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தேவை இல்லா பயணங்களை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்
நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பயணிகள் ரயில்கள்; எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் ரயில்கள் மாத்திரம் இக்காலப்பகுதயில்
சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறாது.கடந்த காலத்தில் இடம் பெற்றது போன்று அத்தியாசிய
சேவைகளுக்காக செல்லும் பொது மக்களுக்காக மாத்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் யு.ர்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்தார்
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
இன்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவிருக்கிறது.
பயணக்கட்டுப்பாடு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து
வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லையென பொலிசார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண ,அரசாங்க
தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய
மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனை பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும்.
அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும். குறிப்பாக பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப்பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன
விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண கூறினார்.
இஸ்ரேல் மீதான கமாஸ் தாக்குதலை கொண்டாடும் பால்ஸ்தீனம் – ஒன்றிணைந்த முஸ்லீம் நாடுகள்
இஸ்ரேல் மீதான கமாஸ் தாக்குதலை கொண்டாடும் பால்ஸ்தீனம் – ஒன்றிணைந்த முஸ்லீம் நாடுகள்
இஸ்ரேல்; மீதான கமாஸ் போராளிகளின் வீரம் செறிந்த வரலாற்று சிறப்பு மிகு தாக்குதல் அந்த அமைப்பினை இரண்டு மடங்கு பலத்துடன் மக்கள் கொண்டாடி வருகின்றனர் .மேலும் வாலிபர்கள்
அந்த அமைப்பில் வேகமாக புதிதாக இணைந்த வண்ணம் உள்ளனர் ,அது தவிர மக்கள் நிதி வளங்களும் அதிகரித்துள்ளது
தவிர ,ஈரான்,துருக்கி ,உள்ளிட்ட ஐந்து நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கிட முன் வந்துள்ளமை இஸ்ரேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
தாமே உலகில் முதலாவது வல்லமை பெற்ற உளவாளிகள் என வலம் வந்த இஸ்ரேலுக்கு
,அவர்களது வீட்டுக்குள் புகுந்து ,உளவு தகவலை திரட்டி ,அதனை வைத்து அவர்களுக்கே சாட்டை அடி வழங்கியது கமாஸ் புலனாய்வு துறை
லேசர் ,மற்றும் இரோம் டோம் ஏவுகணை வான் மறிப்பு சாதனங்கள் செயல் இழக்க வைக்க பட்டமை ,இஸ்ரேலுக்கு மிக பெரும் தோல்வியாக கருத படுகிது
சர்வதேச புலனாய்வு இதழ்கள் இதனையே முதன்மையாக கோடிட்டு காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன ,
சொல்ல போனால் இஸ்ரேலின் உள்ளக பாதுகாப்பு கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது
நான்காயிரம் ரொக்கட் தாக்குதலுடன் வல்லரசாக வலம் வந்த இஸ்ரேல் சுருண்டு போனது வரலாற்றின் எழுச்சி பெற்ற தோல்வியாக இது பார்க்க படுகிறது
சிதறி கிடந்த முஸ்லீம் நாடுகளை கமாஸ் நடத்திய இந்த தாக்குதலுடன் ஒன்று சேர வைத்துள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது
மேலும் மிக முக்கிய தாக்குதல் ஒன்றுக்கு கமாஸ் தயராகி வருவதாகவும் ,இஸ்ரேல் தொடுக்க
போகும் அந்த வலிந்து தாக்குதலுக்கு கமாஸ் காத்திருக்கும் என நம்பலாம் ,அந்த வழமையான சீண்டலுடன் பெரும் தாக்குதலுக்கு கமாஸ் தயாராகும் எனவும்
இனி தொடுக்க போகும் அந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என நம்பலாம்
தற்போது ஈரான் ,துருக்கியிடம் இருந்து வெளியாகி வரும் நேரடி கருத்துக்கள் இதனை மெய்ப்பட வைக்கின்றன
மிக பெரும் பொறிக்குள் இஸ்ரேல் சிக்கியுள்ளது என்பதும் ,ஒருங்கிணைந்த முஸ்லீம்கள் பலம் இனி உலகை மிரள வைக்க போகிறது என்பதையும் இந்த தாக்குதல் உணர்த்தியுள்ளது
ஆயுத போர் மற்றும் அது சார்ந்து மாற்றம் பெற்றுள்ள அரசியல் போரும் கமாஸ் விடுதலை புலிகள் போன்ற எழுச்சியை மீள பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
வன்னி மைந்தன் –
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
இஸ்ரேல் பயங்கரவாதத்தை உலக புரிந்திருக்கும் – துருக்கிய அதிபர் பேச்சு
இஸ்ரேல் பயங்கரவாதத்தை உலக புரிந்திருக்கும் – துருக்கிய அதிபர் பேச்சு
உலகில் இஸ்ரேல் மிக பெரும் பயங்கரவாத நாடு என்பதை நடந்து முடிந்த பாலஸ்தீனம் ,இஸ்ரேல்
12 நாள் போரில் உலக மக்கள் கண்டு கொண்டிருப்பார்கள் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார்
அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,மிக மோசமான குண்டு தாக்குதலை
நடத்தியது ,மேலும் ஊடக நிறுவனங்களை தகக்கியது என அதன் போர்க்குற்ற இனவழிப்பை கண்டு கொள்ள முடியும்
இஸ்ரேல் மிக பெரும் பயங்கரவாதம் கொண்ட நாடு என்பதை உலகம் உணர்ந்து கொண்டிருக்கும்
என துருக்கியை , தொடர்ந்து மேலும் சில நாடுகள் கடும் கண்டன குரல்வளை எழுப்பி வருவது இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள்து
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்பு
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்பு
பலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடாத்தி வந்த அகோர தாக்குதலில்
சிக்கி பல அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் சிதைக்க பட்டன
இதுவரை 250 பேர் பலியாகியும் மேலு 1600 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தற்போது சமாதான நடவடிக்கை இடம் பெற்று வரும் நிலையில் கட்டட இடிபாடுகள் அகற்ற பட்டு வருகின்றன ,மேற்படி சிதைவுக்குள் இருந்த மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன
கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி.. பொன்னம்பலம் உருக்கம்
கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி.. பொன்னம்பலம் உருக்கம்
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலம், தனது கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்
ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.
இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல் உள்ளிட்ட பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர்.
இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின்
கிட்னியை மாற்ற உதவி செய்திருக்கிறார். இதற்கு நடிகர் பொன்னம்பலம் வீடியோ வெளியீடு சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சீமான் எதிர்ப்பு… சமந்தாவின் பதிவு…
சீமான் எதிர்ப்பு… சமந்தாவின் பதிவு…
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
சீமான் எதிர்ப்பு… சமந்தாவின் பதிவு…
சீமான் – சமந்தா
சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு
நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும்
தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ என்பதையும் பதிவு செய்துள்ளார்.
பூகான்வீல் நாட்டு சபாநாயகர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
பூகான்வீல் நாட்டு சபாநாயகர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு அதிதியாக பங்கெடுக்க இருக்கின்ற பூகான்வீல் நாட்டு சபாநாயகர் சிமொன் பெனானு ( Speaker of
BougainvilleHouse of Representatives ) அவர்கள் ‘இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனி,ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற நடைபெற இருக்கின்ற அரசவை அமர்வில், பல்வேறு சர்வதேச வள அறிஞர்கள் பங்கெடுக்க இருக்கின்றனர்.
பசுபிக் பெருங்கடல் தீவின் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல் கட்ட பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் பப்புவாக்கினாயாவில்
இருந்து பிரிந்து சுதந்திர நாடாக தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய தேசம் ‘பூகான்வீல்’.
சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய விரைவில் முறையான இரண்டாம் கட்ட பொதுவாக்கெடுப்பினை பூகான்வீல் தேசம் எதிர்கொண்டுள்ள நிலையில்;, அத்தேசத்தின்
சபாநாயகர், பொதுவாக்கெடுப்பு நோக்கிய தமது அரசியல் செயல்வழிப்பாதையினை பகிர்ந்து கொள்ளும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் பங்கெடுக்க இருக்கின்றார்.
இதுதவிர ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும் Self Determination and Remedial Secession’ – ‘இந்தியப் பெருங்கடல் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும் அதனை
தடுப்பதற்கான பொறிமுறையும் Growing Chinese influence in the Indian Ocean specially in Sri Lanka and measures to counter it. ‘ எனும் தலைப்புக்களிலும் பலவள அறிஞர்கள் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.
இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட அரசவை அமர்வின் கூட்டமர்வில் வளஅறிஞர்கள், அரசவை உறுப்பினர்கள், மேற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் பகிரும் வகையில்
‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் கருப்பொருளில் கலந்தாய்வு இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வுகளை மே22ம் நாள் சனிக்கிழமை, நியு யோர்க் நேரம் காலை 9 மணி முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்
முகம் எப்படி சரியானது – ரைசா விளக்கம்
முகம் எப்படி சரியானது – ரைசா விளக்கம்
சில நாட்களுக்கு முன் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரைசா, அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
முகம் எப்படி சரியானது – ரைசா விளக்கம்
ரைசா வில்சன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பலருடைய கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார்.
இவர் கடந்த மாதம் சிகிச்சைக்கு தோல் மருத்துவரிடம் சென்றதாகவும் அதனால் தனது முகத்தில் ஏற்பட்ட காயம் குறித்தும்
பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் நடந்தன. சில நாட்களுக்கு முன் மீண்டும் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ரைசா.
இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்
இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ ,வன்கொடுமை
தாக்குதல் இஸ்ரேலிய அரசாங்கம் புரிந்த போர் குற்றம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
மேற்படி குற்ற சட்டு தொடர்பான கடிதம் ஒன்றையும் உத்தியோக பூர்வமாக இஸ்ரேலுக்கு அனுப்பி
வைத்துள்ளது ,மேற்படி இனப் படுகொலை ,மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க படவுள்ளன எ
இங்கு இஸ்ரேல் புரிந்த குற்றங்கள் ஆதார பூர்வமாக நிருபிக்க பட்டுள்ளதால் ,இஸ்ரேல் அதிபர் இனப்படு கொலை புரிந்த குற்ற சாட்டில் சிறை செல்லும் அபாயம்
உள்ளது
அவருடன் ,பாதுகாப்பபு அமைச்சர்,இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களும் சிறை செல்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய – ஈரான் கிளர்ச்சி படைகள்
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய – ஈரான் கிளர்ச்சி படைகள்
சவூதி நாட்டின் தலைநகரில் இருந்த து சுமார் 522 மைல்களுக்கு அப்பால் , ஏமான் பகுதியில் பறந்து
கொண்டிருந்த உளவு விமானம் ஒன்றை ஈரானிய கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன ,
மேற்படி கிளார்ச்சி படைகளிற்கு ஈரான் ஆயுதங்கள் ,மற்றும் நிதி உதவி அளித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம் – விமானி மரணம்
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம் – விமானி மரணம்
இந்தியாவில் ,அரச இராணுவத்துக்கு சொந்தமான மிக் MiG-21 ரக விமானம் வீழ்ந்து
நொறுங்கியுள்ளது
இந்த விமானத்தை செலுத்தி சென்ற விமானி பலியாகியுள்ளார் இயந்திர கோளாறு காரணமாக
விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள் – அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள்- அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரனோ தொற்றிய நபர் ஒருவரால் அந்த நோயினை 400 பேருக்கு பரப்பிட
முடியும் எனவும் ,அவ்விதம் இலங்கையில் இடம் பெற்றுள்ளதக தெரிவிக்க படுகிறது
எனவே தான் மக்களை முகக் கவசம் அணிந்து கொள்ளும் மாறும் ,சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான சிலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி 14 நாட்களுக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது
எனவே மக்களே விழிப்பாக இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்
இலங்கையில் நடமாட இன்று முதல் தடை – முக்கிய அறிவிப்பு
இலங்கையில் நடமாட இன்று முதல் தடை – முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை எதிர்வரும் இரண்டு
வாரங்களுக்கு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
இது ஊரடங்கு சட்டம் போன்றது ,அத்துமீறி சென்றால் அவர்கள் கைது செய்ய பட்டு தனிமை
படுத்த படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
நோயின் பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது
















