Posted in Uncategorized

இருவரை சிலுவையில் அறைந்து ஆணி அடித்த நபர் – நடந்த கொடூரம்

இருவரை சிலுவையில் அறைந்து ஆணி அடித்த நபர் – நடந்த கொடூரம்

கண்டி பகுதியில் முகநூலில் அவதூறு பிரச்சாரம் செய்தனர் என்ற குற்ற சாட்டில் கொதிப்படைந்த நபர் ஒருவர் தனது இரு நண்பர்களை கடத்தி சென்று சிலுவையில் ஆணியால் அறைந்து கொடூர சித்திர வதைகளிற்கு உட்படுத்தியுள்ள சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குறித்த இருவரும் பலமான சித்திர வதைகளிற்கு உள்ளன நிலையில் கண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

தலைமறைவான பிரதான சந்தேக நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

    வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

    இலங்கை இரத்தினபுரி மற்றும் கல்முகவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் ,மாற்று வெடிகுண்டுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

    கைதான அனைவரும் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

      Posted in Uncategorized

      13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

      13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

      இலங்கை கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடிய திருடர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

      இவ்வாறு கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

      மேலும் அவர்கள் திருடிய நகைகளும் மீட்க பட்டுள்ளன

        Posted in இலங்கை செய்திகள்

        வுனியா- பொது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நீக்கம்

        வுனியா- பொது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நீக்கம்

        கொவிட் – 19 பரவலை தடுக்கும் வகையில் இராணுவத்தினரால் வவுனியா பிரதேசத்தில் பொது

        மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

        இதற்கமைய வவுனியா நகரத்தில் உள்ள பஸ் நிலையம், புகையிரத நிலையம்| நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், விற்பனை நிலையங்கள் பொது வைத்தியசாலை

        வளாகம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டி கருப்பு கரிப்பு நிலையங்கள் என்பன படையினரால் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

        வன்னி பாதுகாப்பு படை தலைமையாக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹேமந்த் பண்டார

        வின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இந்த தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் 17வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்கள் 8வது கள பொறியியலாளர் படை வீரர்ஸ் சுகாதார

        பரிசோதகர்கள் மற்ற நகரசபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட 11 கிராமங்கள்

        மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட 11 கிராமங்கள்

        கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில கிராம சேவகர் பிரிவுகள்

        இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய

        செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        வேட்டி கட்டி – தலதா மளிகைக்கு சென்று வழிபட்ட கோட்டா

        வேட்டி கட்டி – தலதா மளிகைக்கு சென்று வழிபட்ட கோட்டா

        இலங்கை ஆளும் ஜனாதிபத்தியும் தமிழ் இன படு கொலை யாழியுமான கோட்டபாய தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்

        நோயானது இலங்கையை ஆக்கிரமித்து மிரளவைத்து கொண்டுள்ள நிலையில் இவர் இந்த அமைதி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in சினிமா

          விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

          விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

          சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.

          விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
          பூஜா ஹெக்டே


          விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

          இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

          பூஜா ஹெக்டே
          பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

          இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன்

          நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்

            Posted in சினிமா

            கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்

            கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்

            இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் வருகிற ஜூன் 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம்.

            கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
            மகள் ஐஸ்வர்யா, மனைவி ஈஸ்வரியுடன் இயக்குனர் ஷங்கர்


            ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

            இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின்

            கேப்டனான ரோகித்தை தான் ஐஸ்வர்யா மணக்க இருக்கிறாராம். 29 வயதாகும் ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன் ஆவார்.

            கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார்.

            ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வருகிற ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளதாம். கொரோனா

            ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

              Posted in சினிமா

              6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா

              6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா

              தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, ரசிகர்களுக்கு ஆறு மொழியில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

              6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா
              ரம்பா


              தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார்.

              முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

              இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

              அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் நன்றி கூறியிருக்கிறார்.

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

                சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

                இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த நாட்டின்

                சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும்

                சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் இருந்த சமயத்தில் மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில்

                பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.

                இதனை தொடர்ந்து சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இதையடுத்து மாட்

                ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார மந்திரி மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

                இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

                  Posted in சினிமா

                  மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்

                  மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்

                  பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து அதில் கிடைத்த மாம்பழங்களை விற்பனை செய்து இருக்கிறார்.

                  மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
                  மாம்பழம் விற்கும் நடிகர் நரேஷ்


                  தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் நரேஷ். தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல நடிகர்கள்

                  வைத்துள்ளதைப் போன்று இவரும் விவசாயப் பண்ணை வைத்துள்ளார். கடந்த வருட லாக்டவுனின் போதே விவசாயம் செய்வதில் இறங்கினார். இந்த லாக்டவுனில் மாம்பழம், நாவல்பழம் விற்பதிலும் இறங்கியுள்ளார்.

                  நரேஷ்
                  நடிகர் நரேஷ்

                  இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், “நரேஷ் என்கிற விவசாயி அவரது கையால் பறிக்கப்பட்ட மாம்பழம், நாவல் பழங்கள் ஆகியவற்றை, கிலோ 50 ரூபாய்க்கு விற்றார். அதன்

                  மூலம் 3600 ரூபாய் சம்பாதித்தார். ஒரு நடிகராக அதிகபட்ச சம்பளம் வாங்கியதை விட இது மகிழ்ச்சியானது. விவசாயம் செய்து உண்மையான மகிழ்ச்சியை உணருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

                    Posted in Uncategorized

                    தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

                    தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

                    இலங்கை பேருவளை பகுதியில் அறுபது வயதுடைய தந்தையை இரும்பு கம்பியால் அடித்து இருபத்தி ஒன்பது வயதுடைய மகன் படுகொலை செய்துள்ளார்

                    இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது

                    கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார்

                      Posted in Uncategorized

                      இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

                      இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

                      இலங்கை இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி பயணித்து கொண்டிருந்த

                      கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் திடீரென தீ பிடித்து கொண்டது ,இந்த தீ பரவலினால் அந்த கப்பல் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது

                      இலங்கை கடற்பரப்பில் மூன்றாவது கப்பல் இவ்வாறு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,இது

                      சதிகளின் நவடிக்கையாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in Uncategorized

                        கவிழ்ந்த இராணுவ வண்டி -இருவர் மரணம்

                        கவிழ்ந்த இராணுவ வண்டி -இருவர் மரணம்

                        மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பயணித்து கொண்டிருந்த இராணுவத்தினரின் வண்டி ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் பலியாகினர்

                        இராணுவத்தினரின் வண்டிகள் இவ்விதம் தொடராக விபத்துக்களில் சிக்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          பரவும் நோய் -4 கிராமங்கள் தனிமை படுத்தல்

                          பரவும் நோய் -4 கிராமங்கள் தனிமை படுத்தல்

                          கேகாலை மாவட்ட பிரிவில் உள்ள நன்கு கிராமங்கள் தபோது தனிமை படுத்த பட்டுள்ளன

                          ,வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து இந்த தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது

                            Posted in Uncategorized

                            நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்

                            நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்

                            இலங்கை அம்பலந்தொட திலகபுர ஜலடெங்கிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணித்துள்ளார்


                            இவருக்கு கொரானா நோயானது ஏற்பட்டுள்ளதும் எனவும் அதானல் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை

                              323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை

                              இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி வீதிகளில் உலாவிய குற்ற சாட்டில் 323 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                              இவ்வாறு கைதானவர்கள் முகமூடி மற்றும் மாகாண எல்லைகளை தாண்டினர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

                                Posted in Uncategorized

                                அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த 12 மாடி -159 பேரை காணவில்லை

                                அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த 12 மாடி -159 பேரை காணவில்லை

                                அமெரிக்கா மியாமி – புளோரிடா பகுதியில் அமைந்திருந்த 12 மாடி கட்டடம் ஒன்று திடீரென

                                இடிந்து வீழ்ந்தது ,இதன் பொழுது அந்த கட்டடத்துக்குள்,வசித்து வந்த மக்களில் 159 பேர் காணாமல் போயுள்ளனர்

                                இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,அனைவரும் பலியாகி இருக்க

                                கூடும் என அஞ்ச படுகிறது ,இதுவரை நான்கு பேர் மட்டும் இறந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                  Posted in உலக செய்திகள்

                                  அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை

                                  அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை

                                  அமெரிக்காவில் இனவெறி பிடித்த காவல்துறை சிப்பபாய் ஒருவர் கறுப்பினத்தவர் , ஒருவரை கழுத்தில் நெரித்து படுகொலை செய்தார்

                                  ,இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி செயலினால் நாடே கொந்தளித்தது ,அந்த கொலை வழக்கு விசாரணைகள்

                                  முடிவு அறிவிக்க பட்டுள்ளது ,அதன் பிரகாரம் இவருக்கு இருபத்தி இரண்டரை வருடம் சிறை

                                  தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,அனால் மரண தண்டனை வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

                                    ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

                                    ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்

                                    இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்

                                    மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
                                    இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

                                    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது