கொரனோ மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளர்களை கடித்து குதறிய விசர் நாய்
கொரனோ மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளர்களை கடித்து குதறிய விசர் நாய்
பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோலக்கல்லோலப்பட்டது.
மொரவக கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள்ளே புகுந்த, பைத்தியம் பிடித்த நாய், மூன்று பெண்களே கடித்துள்ளது.
நாய், வாட்டுக்குள் புகுந்ததையடுத்து, சில தொற்றாளர்கள் கட்டில்களுக்கு மேலே ஏறி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளனர்.
அந்த சிகிச்சை நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிப்பெண்கள் 18 பேர் உட்பட, 38 பேர் சிகிச்சைப்பெற்று வந்துள்ளனர்.
அதில் சிலர், தங்கியிருந்து சிகிச்சைகளை முடிந்துகொண்டு, வீடுகளுக்குச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.
எனினும், அங்கு கடமையிலிருந்த வைத்தியசாலை பணியாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில், அந்நாயை, வாட்டுக்குள்ளிருந்து விரட்டியடித்துள்ளனர்.
அங்கிருந்து வீதிக்கு நாய் ஓடியதை அடுத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்தே கொன்றுள்ளனர்.
பைத்தியம் பிடித்த அந்த நாள், வைத்தியசாலையின் வாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 நாட்டு மக்கள் இலங்கை வர முற்றாக தடை
5 நாட்டு மக்கள் இலங்கை வர முற்றாக தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஐந்து நாடுகளிலிருந்து பயணிகள் தரையிறங்குவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் திகதி 00.01க்கு ஆரம்பமாகும் இத்தடை, மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைட் ஆகிய
நாடுகளைச் சேர்ந்த பயணிகளே இலங்கையில், எந்தவொரு விமான நிலையங்களிலும் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு
புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு
பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.
குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும் வகையில் குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் இராணுவத்தினரால் சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 100 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக 12வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிர்மாண பணிகளில் 23
ஆவது கஜபா படைப்பிரிவு, மூன்றாவது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் 17வது பொறியியலாளர் சேவைகள் படையணி ஆகியவற்றின் படைவீரர்கள் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் தென்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர். சீஎல் குருகே, சுகாதார ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4
இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை எதிர்காலத்தில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ. கே ரணவக்க தெரிவிக்கையில் நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கமைய பயன்படுத்தப்படாத காணிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு
காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதற்கு இனிவரும் காலங்களில் 5,000 ரூபாயை அறவிடப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
25ஆம் திகதி நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய 15,000 ரூபாய் நோர்வூட் பிரதேச சபையால் அறிவிடப்பட்டு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகவும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தான் ஒரு மாத சிகிச்சையின் பின்னர், சபைக்கு திரும்பிய பின்னரே இது குறித்து அறிந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, இனிவரும் காலங்களில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய 5,000 ரூபாயை மாத்திரமே அறவிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாறிய சாப்பாட்டை விற்ற உணவகம் -முதல்ல இதை பாருங்க வீடியோ
நாறிய சாப்பாட்டை விற்ற உணவகம் -முதல்ல இதை பாருங்க வீடியோ
பிரபல சமையல் கலை நிபுணர் ஒருவர் திடீரென அமெரிக்காவில் உள்ள மெஸ்சிக்கன் உணவகம்
ஒன்றுக்குள் புகுந்தார் ,அங்கு வழங்க பட்ட உணவில் கலர்படம் உள்ளதையும் அந்த உணவு பழுதானதை அவர் கண்டு கொண்டார்
அதனை அடுத்து திடீரென அந்த உணவகத்திற்குள் அவர் புகுந்து நடத்திய அதிரடி சோதனையில் ஒரு மாத காலமாக நாறிய உணவுகள் சேமிக்க பட்டு மக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது அம்பலமானது
அதன் பின்னர் நடக்கின்ற சம்பவத்தில் 25 ஆயிரம் கார்கள் நாள் ஒன்றுக்கு இந்த உணவகத்திற்கு வருகை தருவதையும் ,அந்த பகுதி மேயர் அந்கு வந்துள்ளதையும் காணலாம்
பழையதை விற்று வியாபாரத்தை கெடுத்து ,தள்ளாடும் நம்ம தெமிழ் சோத்து கடை ,உள்ளிட்ட உணவகம் நடத்தும் பெருச்சாளிகள் இதை பார்க்கணும் ,குறிப்பாக , கனடா பிரான்ஸ்,லண்டன்
நாடுகளில் உள்ள சோத்து கடைகளிற்குள் இவர் புகுந்து தடலடி காட்டவேண்டும் அப்பொழுது பல நாற்றம் அம்பலமாகும்
இந்த காணொளியை முழுமையா பாருங்கள்
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
பிரிட்டன் இராணுவ இரகசியம்-பஸ் தரிப்பிடத்தில் மீட்பு – வெடித்தது சர்ச்சை
பிரிட்டன் இராணுவ இரகசியம்-பஸ் தரிப்பிடத்தில் மீட்பு – வெடித்தது சர்ச்சை
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் இராணுவம் எஎவ்வகையான நகர்வுகளை மேற்கொண்டது என்பது
தொடர்பிலான அனைத்து விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவணம் ஒன்று கென்ட் பகுதியில் உள்ள பேரூந்து நிலையம் ஒன்றிலிருந்து மீட்க பட்டுள்ளது
அந்த ஆவண குறிப்பில் மேற்படி பரம ரகசியம் அடங்கி இருந்தது
அவ்வகையான இந்த ஆவணம் தற்பொழுது கசிந்துள்ளதால் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு திகைத்து போயுள்ளது ,கடந்த இரு வாரத்திற்கு முன்னர் மிக முக்கிய ஆவணம் ஒன்று காணாமல்
போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது ,மேற்படி ஆவணம் முக்கிய ஊடகம் ஒன்றில் சிக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது
இது திட்டமிடப்பட்டு தொலைக்க பட்டதா , அல்லது தவறுதலாக தொலைக்க பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அவுஸ்ரேலியாவில் வேகமாக பரவும் கொரனோ – அடித்து பூட்டு ஆரம்பம்
அவுஸ்ரேலியாவில் வேகமாக பரவும் கொரனோ – அடித்து பூட்டு ஆரம்பம்
அவுஸ்ரேலியாவில் மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வருகிறது
இதனை அடுத்து தலைநகர் சிட்னி பகுதியில் பல்வேறு பட்ட பகுதிகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
மேலும் பல பகுதிகள் இவ்விதம் அடித்து பூட்டும் நிகழ்வு ஆரம்பிக்க படும் என தெரிவிக்க படுகிறது
தாலிபான்களிடம் வீழ்ந்த மூன்றாவது முக்கிய மாகாணம் – தப்பி ஓடும் அரச இராணுவம்
தாலிபான்களிடம் வீழ்ந்த மூன்றாவது முக்கிய மாகாணம் – தப்பி ஓடும் அரச இராணுவம்
ஆப் கானில் இருந்து அமெரிக்கா படைகள் விலகிய நிலையில் தற்பொழுது தாம் இழந்த
பகுதிகளை தலிபான்கள் மீட்ட வண்ணம் முன்னேறி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
ஒரு வாரத்தில் தற்போது மிக முக்கிய Takhar மாகாணத்தை மீட்டுள்ளனர் ,தலிபான்களின் இந்த
தீவிர தாக்குதலில் ஆளும் ஆப்கான் அரசு திணறிய வண்ணம் உள்ளது
பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க
பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க
பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.
பெண்கள் தங்களை கவனித்து கொள்வதில்லை என்ற குற்றாச்சட்டு இருக்கிறது. குடும்பம் வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்துகொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்கள்.
இன்றைய நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க
சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.
மனநிலை முக்கியம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான அமைதியான மனநிலை அவசியம். இந்த உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சனைகளை
கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதிதாக ஏதும் பிரச்சனை வந்தால் அட நாம் பார்க்காததா? என்று நினைத்து கொண்டு திடமா அவற்றை கடக்க முயற்சி செய்யுங்கள். இது
உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவை தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உடல் மேல் கவனம்
நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான் ஆகவே உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம், வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்ன சின்ன
உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். நிம்மதியானதூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடைய செய்யும்.
உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையை தக்க வைக்க உதவும்.
பொழுதுபோக்கு
டிவி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது
ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனநிலையின் மாற்றத்தை…
ஆரோக்கியமான உணவு
நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.
வீணாகப்போகிறது என்பதற்காக வயிற்றுக்குள் கொட்டினால் வீணாவது உங்கள் உடல்தான் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
நல்ல நட்பு
எப்போதுமே நம்மை சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மை பாதிக்கும். அதனால் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது.
நல்ல நண்பர்களே உங்களுக்கு பெரிய ஊக்க சக்தி
இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் எப்போதும் 20 தான்.
சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம்
சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம்
ஆட்சி அமைத்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படும் என திமுக தெரிவித்திருந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம்
சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் பக்கத்தில் ‘‘திமுகதான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து;
தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள்.
50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.
என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!
மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?’’ எனத் தெரிவித்துள்ளார்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து
முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து
முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.
முடி கருகருவென அடர்த்தியாக நீளமாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு
. சில பெண்களுக்கு இடுப்பு வரை கூந்தல் நீண்டு வளர்ந்திருக்கும். இதை கண்டு சிலர் புருவத்தை உயர்த்துவதுடன்
பொறாமைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீண்ட கூந்தலுடைய பெண் ஒருநாள் பாப் கட்டிங் செய்தாலோ அல்லது முடியின் அளவை குறைத்துக் கொண்டாலோ அது பற்றி ஊரே பேசும்.
அந்த அளவுக்கு முடி விஷயத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழககம், ரசாயனக்கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
பெண்களின் தலைமுடியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் பலரும் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.
உலகிலேயே வழுக்கை தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவது தான் அதற்கு
முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து
காரணம்என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுள்ளது. நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள்.
இன்னும் சிலர் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். கறிவேப்பிலையை தனியாகவோ, ஜூஸாவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.
இட்லி தோசை போன்ற காலை உணவுக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னிக்கு பதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம். இதுவும் முடி
வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதேபோல் முருங்கைக்கீரை,
பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம்.
கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.
தேங்காய் அல்லது தேங்காய்ப்பால், கேரட், பச்சை பட்டாணி போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து
பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும்.
உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.
கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும்.
வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த
பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது. இவை தவிர மீன், முட்டை, பாதாம் பருப்பு முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி
உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.
கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என
அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி
இயக்குனரானார். தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொடுத்து உதவி
உள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் 11 பாடல்கள் உள்ளதாம்.
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், அவர் அடுத்ததாக ‘பாட்டு’ எனும் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இசையமைக்க உள்ளார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும்.
இதன் தலைப்புக்கு ஏற்ப, படத்திலும் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப்
படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பாட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து டுவிட்
வைரமுத்து, ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்
ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து
வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன்.
அவர் குரலில் ஆரோக்கியம் – நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மனைவியை தீ வைத்து எரித்த கணவன் – நடந்த பயங்கரம்
மனைவியை தீ வைத்து எரித்த கணவன் – நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் மனைவியை தீ வைத்து எரித்த 39 வயதுடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார்
பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் மீட்க பட்ட பெண் அ மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
இவ்வேளை இவர் ஒரு கால் ,மற்றும் கையை இழந்த நிலையில் மீட்க பட்டுள்ளார் ,மேற்படி கொலைவெறி குற்ற செயலில் ஈடுபட்ட அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
தொடர்ந்து மனைவி ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
4 அமெரிக்கா இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல்
4 அமெரிக்கா இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியை அண்மித்த நகர் பகுதிகள் ஊடக பயணித்து கொண்டிருந்த
அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடர் அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அமெரிக்கா படைகளுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தாக்குதல் நடத்த படும் என தெரிவிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது
சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்
சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்
சவுதி நாட்டின் முக்கிய இலக்கு ஒன்றின் மீது விமான மூலம் ஏமன் இராணுவம் தாக்குதல்
நடத்தியுள்ளது ,இந்த வான்வாழி தாக்குதலில் குறித்த இலக்கு சிதறி அழிந்துள்ளதாக குறித்த
இராணுவம் தெரிவித்துள்ளதுடன் ,இவ்வாறான தாக்குதல் ஒன்று நிகழ்த்த பட்டுள்ளதாக சவுதியும் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
மின்சார கம்பியில் சிக்கிய பரசூட் – ஐவர் மரணம்
மின்சார கம்பியில் சிக்கிய பரசூட் – ஐவர் மரணம்
புதிய மெஸ்சிக்கோ பகுதியில் பறந்து கொண்டிருந்த பரசூட் பலூன்களில் ஒன்று அதி உயர்
மின்சார கம்பியில் சிக்கி வெடித்து சிதறியதில் அதில் பயணித்த ஐவர் பலியாகியுள்ளனர்
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக
தெரிவிக்க படுகிறது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

















