Posted in இலங்கை செய்திகள்

சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இன்று காலை தொடக்கம் ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ள மேலும் சில கிராம உத்தியோகத்தர்

பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும்

தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

Posted in Uncategorized

யாழில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை

யாழில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் நேற்றைய தினம் (26) யாழ்ப்பாணம், கைதடி, சாவகச்சேரி, கோப்பாய், கல்வியங்காடு, திருநெல்வேலி ஆகிய

பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர்

அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. மேலும்

வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக வர்த்தக நிலையங்களிற்கு எரிவாயுவின் விலை தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

அத்தோடு Online மூலமான இறக்குமதியாளர் விபரம் குறிப்பிடப்படாத சருமப்பூச்சு வகைகளை

காட்சிப்படுத்தி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு

கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 30 வயதிற்கு மேற்பட்ட

பொது மக்களுக்கு வாழைச்சேனை பிறைந்துறைச்சேளை அஸ்கர் மகா வித்தியாலயத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் நேற்று (26) ஏற்றப்பட்டன.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதுக்கு

மேற்பட்ட பொது மக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டானில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள்

ஒட்டுசுட்டானில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் மற்றும் கிரவல் அகழ்வுகளை தடுத்தல் மற்றும் குறித்த

விடயங்களை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்காக முறையான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுடனான

கலந்துரையாடலொன்று இன்று (27) செவ்வாய்க்கிழமை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், சம்பந்தப்பட்ட

திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் குறித்த கடமைகளின் பொறுப்புடைய உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் – ஐ.நா

இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் – ஐ.நா

சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும்..

ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு…

எதிர்காலச் சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக, சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என்று தான் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கான தளத்தை அமைக்கும் வகையில், இத்தாலியின் ரோம் நகரில் நேற்றைய தினம் (26), ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டின் முன் அமர்வு நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது, காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தலைமையில் நடைபெறும் இந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில், 2030க்குள் எதிர்பார்க்கப்படும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உணவு முறைகளின் தாக்கம் குறித்துக் கலந்துரையாடப்படும். இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட பல துறைகளின் பிரதிநிதிகள், புதிய அணுகுமுறையுடன் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

உணவுக்கான உரிமை என்பது, ஓர் அடிப்படை மனித உரிமையாகும். தங்கள் மக்களுக்காக இந்த உரிமையைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும், உலகளாவிய உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய அவர்களின் புரிதலை அவர்கள் விரிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையானது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, ஒரு பண்டைய நீரியல் நாகரிகத்துடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் வளமான விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். சேதன விவசாயம் என்பது, எமது நாட்டுக்குப் புதிதல்ல. புதிய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களுடன் இதில் புத்துயிர்ப்புப் பெற முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

உணவு முறைமையை மாற்றுவது, மனிதகுலத்தையும் நாம் வாழும் உலகையும் நிலைப்படுத்த நாம் கைகொள்ள வேண்டிய விடயங்களின் இன்றியமையாத பகுதியாகும். தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையானது, நாம் அனைவரும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற எமது விழிப்புணர்வைப் பெரிதும் அதிகரித்துள்ளது.

மனிதகுலமானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் அனைத்தும் உலகளாவியவை ஆகும். இவற்றைத் தனியாக எதிர்கொள்ள முடியாது. இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமானால், கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உயிர்ப் பல்வகைமை இழப்பை எதிர்த்துப் போராடுதல் போன்ற விடயங்கள் குறித்து, நேற்றைய மாநாட்டில் உரையாற்றிய அரச தலைவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.

ரோம் நகரில் நடைபெறும் ஐ.நா உணவு முறைமைகள் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை பின்வருமாறு:

இன்றைய தினம் இடம்பெறும் ஐ.நா உணவு முறைமைகள் உச்சி மாநாட்டின் ஆரம்ப மெய்நிகர் அமர்வில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
உணவுக்கான உரிமை என்பது, ஓர் அடிப்படை மனித உரிமையாகும். தங்கள் மக்களுக்காக இந்த உரிமையைப் பாதுகாக்க, அரசாங்கங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும், உலகளாவிய உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய அவர்களின் புரிதலை அவர்கள் விரிவுபடுத்த வேண்டும்.

இந்த முறைமையை மாற்றுவது, மனிதகுலத்தையும் நாம் வாழும் உலகையும் நிலைப்படுத்த நாம் கைகொள்ள வேண்டிய விடயங்களின் இன்றியமையாத பகுதியாகும். தற்போதைய கொவிட் 19 தொற்றுப் பரவல் நிலைமையானது, நாம் அனைவரும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற எமது விழிப்புணர்வைப் பெரிதும் அதிகரித்துள்ளது. மனிதகுலமானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் அனைத்தும் உலகளாவியவை ஆகும்.

இவற்றைத் தனிப்பட்ட நாடுகளால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமானால், கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும்.

உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், உயிர்ப் பல்வகைமை இழப்பை எதிர்த்துப் போராடுவதற்கும், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிலைபேறான முறையில் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், தீர்க்கமானதும் அவசரமானதுமான பல்தரப்பு நடவடிக்கை தேவையாகும். எமக்கு முன்னால் உள்ள சவால்கள் அச்சுறுத்தலானவை. எவ்வாறாயினும், அவற்றை வெற்றிகொள்வதற்கான தீர்மானத்தில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இறக்குமதியை இலங்கை தடை செய்தது. இந்தத் தீர்மானமானது, பரந்துபட்ட சுற்றுச்சூழல் கரிசனைகளையும் தெளிவான மற்றும் தற்போதைய பொதுச் சுகாதார கரிசனைகளையும் கருத்திற்கொண் எடுக்கப்பட்டதாகும். பல தசாப்தங்களாக, இலங்கை அதன் விளைபொருட்களுக்காகச் செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களையே அதிகமாக நம்பியிருந்தது.

பல தசாப்தங்களாக, மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் விவசாய இரசாயனங்கள் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி, நிலத்தடி நீரும் மாசடைவதற்கு வழிவகுத்தது. இது, சுற்றுச்சூழல் அழிவு, நீர் மாசடைதல் ஆகியவற்றை மேலும் மோசமாக்கியதுடன், பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தையும் அதிகரித்தது. இது இந்த நாட்டின் விவசாய மையப்பகுதியில், பரவலான நாட்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்ததுடன், பொதுமக்களிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கும் பங்களித்தது.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, இந்த கடுமையான பிரச்சினைகளுக்குப் பதிலளிப்பதற்கானதாகும். குறுகிய காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சில பிரச்சினைகள் இருந்தபோதிலும், இந்தத் தீர்மானமானது, நீண்ட காலத்தில் சேதன விவசாயத்தின் மூலமான ஆரோக்கியமான, அதிக சுற்றுச்சூழல் நன்மைகொண்ட மிகவும் தேவையான ஒரு தேசிய மாற்றத்துக்கு உதவும்.

இந்த மாற்றம் நடைபெறுவதால், எனது அரசாங்கமானது, எமது விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த வர்த்தகங்களுக்கும் உதவும். இந்த முயற்சியில், சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். இலங்கையானது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, ஒரு பண்டைய நீரியல் நாகரிகத்துடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் வளமான விவசாய பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும்.

சேதன விவசாயம் எங்களுக்குப் புதிதல்ல. ஆனால், எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து, புதிய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களுடன் புத்துயிர்ப் பெற முனைவது ஒரு வரலாற்று நடைமுறையாகும். அறிவுப் பகிர்வு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் முதலீடு என்பவற்றின் ஊடாக, சேதன உரங்கள், விவசாயம் மற்றும் ஏற்றுமதியின் உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்த உதவுமாறு பல்தரப்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள், காலநிலை நிதியங்கள், தொழில்நுட்ப அமைப்புகள், வல்லுநர்கள் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்த மேம்பாடுகளின் மூலம், இலங்கை தனது உணவு முறையை நிலையான முறையில் மாற்றியமைக்க முடியும் என்பதுடன், எமது மக்களுக்கான உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

பேண்தகு விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு ஆகியவை, 2030ஆம் ஆண்டுக்கான ஐ.நாவின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு முக்கியமானதாகும்.

கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு முன்பு கூட, இந்த இலக்குகள் சரியான நேரத்தில் அடையப்பெற வாய்ப்பில்லை என்பது மிகுந்த கரிசனைக்குரிய ஒன்றாக இருந்தது. இந்தச் சூழலில், இந்த முக்கியமான விடயங்களில் உலகளாவிய கொள்கை ஒருங்கிணைப்பை மேற்கொள்வதில் உலக உணவுப் பாதுகாப்பு குழுவின் முக்கிய பணி மிகவும் பாராட்டத்தக்கதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதுமாகும். முடிவாக, எமது எதிர்காலச் சந்ததியினருக்காக உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதி செய்வதற்காக, உலக உணவு முறையை நிலையான முறையில் மாற்றுவதற்குத் தேவையான தைரியமான நடவடிக்கைகளை எடுக்க, இலங்கையின் உதாரணம், மேலும் பல நாடுகளுக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

Posted in Uncategorized

தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது

தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது

விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்
யாஷிகா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே வேகமாக கார் ஓட்டிச் சென்றதில், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரின்

தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த

விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது தாயார் சோனல் ஆனந்த் கூறியிருப்பதாவது: “யாஷிகா தற்போது நலமுடன் உள்ளார். கால், இடுப்பு, மற்றும் வயிற்றுப்

பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில்

அவரது தோழி இறந்த செய்தி, அவருக்கு தெரியாது. ஆனால், பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டர்-ல வச்சிருக்காங்கனு சொல்லியிருக்கோம்.

மருத்துவர்கள் இதுகுறித்த யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். சிகிச்சைக்கு

பின் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், 2 மாதம் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வெள்ளத்தில் மிதக்கும் london – வீடியோ

வெள்ளத்தில் மிதக்கும் london – வீடியோ

லண்டனில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் லண்டன் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
இதனால இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

கீழே காணொளி பாருங்கள்

    Posted in Uncategorized

    நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

    நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

    வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய

    இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில்

    மூன்றுமுறிப்பு (வவுனியா வரவேற்பு வழைவுக்கு அருகே) பகுதியில் ஏ9 வீதியூடாக வாகனங்களில் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருகின்றமையினை அடுத்து அதனை எமது மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம் , அலுலக தேவை

    போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும்

    வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

      Posted in Uncategorized

      வெள்ளத்தில் மிதக்கும் கொழும்பு – மக்கள் அவதி

      வெள்ளத்தில் மிதக்கும் கொழும்பு – மக்கள் அவதி

      தற்போது கொழும்பு பகுதியில் பெய்து வரும் கடும் மழையால் கொழும்பு ,பொரளை கின்ஸி வீதி,தும்முள்ள சந்தி,ஆமார் வீதி என்பன மூழ்கியுள்ளன

      இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணை

        பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணை

        கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல்

        கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி நக்டா தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதாகாரசபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

        இதேநேரம் பூநகரி, வலைப்பாடு கடற்றொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில், கடலட்டை பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக சென்ற

        அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்குப்பிட்டி பாலத்தின் ஓரத்தில் இறால் அறுவடை செய்யும் தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

        அத்துடன் பூநகரி, சங்குப்பிட்டி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

        கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

          Posted in Uncategorized

          கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

          கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

          ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) காலை நடைபெறவுள்ளது.

          இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

          கலந்துரையாடல் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றும், கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14

          பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

          இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

          கட்சியின் தலைவர், சிரேஷ்ட உப தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பொருளாளர்

          மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோருடன் தானும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

            தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

            இலங்கையில் நிகழ்கால விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் 151 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

              Posted in Uncategorized

              30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

              30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

              எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

              செலுத்தி முடிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

              புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

              இவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதை அடுத்து நாட்டை முழுமையாக திறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

                Posted in Uncategorized

                ஐர்லாந் கடல் கரையில் சுறா

                ஐர்லாந் கடல் கரையில் சுறா

                ஐர்லாந் கடல் கரையில் திடீரென சுறாக்கள் ஊடுருவிய நிலையில் அங்கு கூடி நின்ற மக்கள் சிதறி ஓடினர்


                தொடந்து ,அந்த பகுதியில் மக்கள் உலவிட தடை விதிக்க படுகிறது

                மேலும் படகுகப்பபு பல்படுத்தியஹா பட்டுள்ளது

                இந்த சுறாக்கள் எவ்விதம் இங்கு திடீரென நுழைந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                  Posted in உலக செய்திகள்

                  வெடித்த குண்டு – ஐவர் உடல் சிதறி மரணம்

                  வெடித்த குண்டு – ஐவர் உடல் சிதறி மரணம்

                  ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் திடீரென நடந்த குண்டு தாக்குதலில் சிக்கி ஐவர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்

                  அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறிய நிலையில் தலிபான்கள் தமது நிலம்

                  மீட்பை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    இந்தியா வெள்ளம் 135 மரணம் – தொடரும் அவலம்

                    இந்தியா வெள்ளம் 135 மரணம் – தொடரும் அவலம்

                    இந்தியா மகாராஸ்திரா வெள்ளத்தில் சிக்கி தற்போது 135 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் இந்த

                    உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

                    பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                      Posted in Uncategorized

                      கடத்திய மாணவர்கள் 28 பேர் விடுதலை -பொக்காகராம் சாதனை


                      கடத்திய மாணவர்கள் 28 பேர் விடுதலை -பொக்காகராம் சாதனை

                      நையீரியாவில் பொக்கோ கராம் அமைப்பினர் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து 121 ,மாணவர்களை

                      கடத்தி சென்றனர் , அவ்விதம் கடத்த பட்ட மாணவர்களில் 28 பேரை தற்போது விடுதலை செய்துள்ளனர்

                      ஏனையவர்களும் விரைவில் விடுதலை செய்ய படுவார்கள் என பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்ணீரோடு காத்துள்ளனர்


                      அரசை தமது பிடிக்குள் சிக்க வைக்கும் முகமாக இந்த கடத்தலில் குறித்த அமைப்பினர் ஈடு பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in மருத்துவம்

                        சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

                        சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

                        கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கின்றன.

                        கவனச்சிதறல் என்பது, எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் விஷயம். அது, செய்து கொண்டிருக்கும் செயல்களில் சிக்கலை ஏற்படுத்திவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அதனை

                        செய்து கொண்டிருக்கும்போது மனதை ஒருநிலைப்படுத்த வேண்டியது முக்கியம். அப்படி முழு கவனத்தையும் செலுத்தி செய்துமுடிக்கும் காரியம்தான் நிறைவினைத் தரும். கவனச் சிதறலோடு செய்யப்படும் எந்த காரியமும் முழுமையான பலனைத்தராது. அதில் திருப்தியும் ஏற்படாது.

                        நாம் என்ன செய்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதில் எப்போதும் கவனம் தேவை. அப்படி கவனம் செலுத்துவது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வசப்பட்டு விடாது.

                        கவனத்தை சிதறவிடாமல் ஒன்றின் மீது முழு கவனத்தையும் குவிப்பதற்கு படிப்படியாக பயிற்சி செய்ய வேண்டும். கார் ஓட்டுவதாக வைத்துக்கொண்டால் முழு கவனமும் சாலை மீதும், கார் மீதும்

                        பதிய வேண்டும். அப்போது கவனம் சிதறினால், விபத்து ஏற்பட்டு விடும். கண நேர கவனச் சிதறல்களே மிகப்பெரிய ஆபத்துகளை உருவாக்குகின்றன.

                        செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் அதில் கவனத்தை ஒருங்கிணைக்க பழகிக் கொள்ளுங்கள். அதிகம் பேசுபவர்களும் கவனச்சிதறலுக்கு ஆளாகலாம். முக்கியமான வேலையில் ஈடுபடும்போது

                        சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

                        தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குறைத்துக்கொள்வது நல்லது. கவனம் என்பது நம் அறிவின் ஆற்றல். இதனை தியானத்தின் மூலம் பெறலாம். கண்களை மூடி அமைதியாக தியானம்

                        செய்வதற்கு பழகுவதன் மூலம் கவனத்தை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கலாம். கண்கள் திறந்திருந்தாலும் அதேபோன்ற கவன ஒருங்கிணைப்புக்கு மனம் பழக்கப்பட்டுவிடும்.

                        மூளையின் கட்டளைப்படிதான் நம் செயல்கள் அமையும். நாம் ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது இடையில் மூளை வேறு எதையோ சிந்திக்க அனுமதித்தால் அந்த

                        வேலையில் தடுமாற்றம் ஏற்படும். அதனால் ஏற்படும் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்பது வேலையின் முக்கியத்துவத்தை பொறுத்தது. விமான ஓட்டிக்கு கவனச்சிதறல் ஏற்படுமானால்

                        பயணிகளின் உயிருக்கு பங்கம் நேர்ந்துவிடும். ஒரு கணம் சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

                        கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல

                        விஷயங்கள் கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கின்றன. மனித வாழ்க்கையில் இதெல்லாம் இயல்பான உணர்வுகள்தான். ஆனால் நாம் செய்யும் செயல்கள் எவ்வளவு முக்கியத்துவம்

                        வாய்ந்தவை என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். முக்கியத்துவத்தை உணர்ந்தால் மூளை முழு கவனத்தைக்காட்டும். வேலையை ஆரம்பிக்கும்போது முழு கவனத்தையும் அதன் மீது செலுத்தினால், மூளையும் அதற்குதக்கபடி ஒத்துழைக்கும்.

                        சிறுவயதில் ஏற்படும் விபரீதமான நிகழ்வுகள்கூட கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கலாம் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. சிறு வயதில் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்

                        மனதை வெகுவாக பாதித்து விட்டால் அந்த நினைவுகள் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கும். அப்போது மனம் தன்னை மறந்து விடும். பழைய நினைவுகளில் மூழ்கி

                        விடும். இதுபோன்ற கவனச் சிதறல்களை சரி செய்வது கொஞ்சம் சிரமம். ஒரே மனிதன் இருவேறு நினைவுகளில் வாழ்வது விபரீதமானது. இது போன்ற மனநிலையை மனச்சிதைவு என்று குறிப்பிடு கிறார்கள். அதற்கு மனோரீதியான மருத்துவம் தான் சரியான தீர்வாக அமையும்.

                        சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

                        மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் கசப்பான எண்ணங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘ஹிப்னாடிசம்’ என்னும் ஆழ்ந்த மயக்க நிலைக்கு அவரை கொண்டுசென்று ஆழ் மனதை வருடும்

                        அன்பான வார்த்தைகளை பேசும் போது மனதில் புதைந்திருக்கும் பழைய பதிவுகள் வெளிப்படும். அதே நிலையில் பேசி உண்மைகளை எடுத்துச் சொல்லி மனதை தெளிவு படுத்த வேண்டும்.

                        பழைய நினைவுகளை அப்புறப்படுத்திவிட்டு இன்றைய வாழ்க்கைக்கு மூளையை திசை திருப்பவேண்டும். இல்லை என்றால் இன்றைய வாழ்க்கை சிக்கலாகிவிடும். இந்த அற்புதத்தை ஆழ்மனதின் மூலம்தான் நிகழ்த்தவேண்டும்.

                        கவனம் என்பது இறந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் சம்பந்தம் இல்லாதது. நிகழ்காலத்திற்கு மட்டுமே அது சாத்தியமானது. இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதிலே முழு

                        கவனத்தையும் செலுத்தி, அதை 100 சதவீத வெற்றிக்கு சாத்தியப்படுத்தவேண்டும். முழு கவனத்தோடு செய்யும் காரியங்களால் ஆபத்துகள் தவிர்க்கப்படும். கவனம் என்பது நம்

                        வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்று என்பதை உணர்ந்து எடுத்த காரியத்தை கவனச்சிதறல் இல்லாமல் செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சியை கொஞ்சம்

                        கொஞ்சமாக மூளைக்கு கொடுத்து கவனத்தை வசப்படுத்திக்கொள்ள வேண்டும். கவனத்தோடு செய்யும் செயல்கள்தான் அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்.

                          Posted in சினிமா

                          4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்.

                          4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்.

                          நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 4 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                          4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்
                          சூர்யா


                          தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவரின் 39-வது படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ

                          வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

                          நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்படி ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் சூர்யா,

                          பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்தது.

                          இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு,

                          கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியிடப்படும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

                            Posted in சினிமா

                            ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்

                            ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்

                            நடிகர் ஆர்யா நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

                            ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்
                            ஆர்யா


                            அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார்.

                            இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

                            எனிமி, அரண்மனை 3 படத்தின் போஸ்டர்கள்
                            எனிமி, அரண்மனை 3 படங்களின் போஸ்டர்கள்

                            எனிமி படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா

                            நடித்துள்ள ‘அரண்மனை 3’ படமும் அதே மாதத்தில் ரிலீசாக உள்ளது. ஒரே மாதத்தில் ஆர்யாவின்

                            இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது