ஒட்டுசுட்டானில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள்

Spread the love

ஒட்டுசுட்டானில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் மற்றும் கிரவல் அகழ்வுகளை தடுத்தல் மற்றும் குறித்த

விடயங்களை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்காக முறையான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுடனான

கலந்துரையாடலொன்று இன்று (27) செவ்வாய்க்கிழமை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், சம்பந்தப்பட்ட

திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் குறித்த கடமைகளின் பொறுப்புடைய உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *