Posted in Uncategorized

தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

உலக

தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

இலங்கை வட கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஆளும் அரசு சீனாவின் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது

இந்த ஊசியினை பெற்று கொண்ட பல மக்கள் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன ,

மேலும் உடல் வீக்கம் ஏற்படுவதாக குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது ,ஆனால் அரசோ இதனை ஏற்க மறுத்து ,இது வதந்தி என பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

    அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

    ஈராக் மாற்று குவைத் எல்லை பகுதியில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்கல் நடத்த பட்டுள்ளது

    தொடர்ச்சியாக ஈராக்கில் அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது ,மத்திய

    கிழக்கில் இருந்து முழுவதுமாக அமெரிக்கா இராணுவம் விலக வேண்டும் தவறின் தமது தாக்குதல்கள்


    தொடரும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      அரச உடைமைகள் ,ஆயுதங்களை ஒப்படைக்க தலிபான்கள் கெடு

      அரச உடைமைகள் ,ஆயுதங்களை ஒப்படைக்க தலிபான்கள் கெடு

      ஆப்கனவில் இருபது வருட போராட்த்தின் பின்னர் அந்த நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள தலிபான்கள் காபூலில் வசிக்கும் அரச ஆதரவு படைகள் மற்றும் அதிகாரிகள் பாவித்து வந்த அரச

      உடைமைகள் மற்றும் ஆயுதங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர்

      தமது கெடு முடிவதற்குள் இதனை செய்திட மறுத்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        Moderna ஊசி செலுத்த பட்ட இருவர் மரணம் – பீதியில் மக்கள்

        Moderna ஊசி செலுத்த பட்ட இருவர் மரணம் – பீதியில் மக்கள்

        ஜப்பானில் Moderna Vaccine செலுத்திய இருவர பலியாகியுள்ளனர்


        இரண்டாவதாக அதே ஊசி செலுத்த பட்டு சில நாட்களில் மரணமடைந்துள்ளனர்


        மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in Uncategorized

          வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு 13 இராணுவம் பலி -94 பேர் காயம்

          வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு 13 இராணுவம் பலி -94 பேர் காயம்

          கஜகஸ்தான் நாட்டின் இராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கு ஒன்று திடீரென வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பத்து இராணுவத்தினர் இதுவரை பலியாகியுள்ளனர்

          மேலும் 94 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

          இந்த குண்டு வெடிப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,
          இந்த குண்டு தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது

            Posted in மருத்துவம்

            முகப்பரு வந்தால் இதை பண்ணுங்க

            முகப்பரு வந்தால் இதை பண்ணுங்க

            சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.

            முகப்பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை
            முகப்பரு

            • நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும்.
            • ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும்.
            • முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.
            • ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும்.
            • பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.
            • வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.
            • வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும்.
            • கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன், தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும்.
            • சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
            • முகப்பரு வந்தால் இதை பண்ணுங்க
            • ஆலுவேரா சருமத்திற்கு மிகவும் உகந்தது. ஆலுவேரா ஜெல்லை நன்றாக மசித்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் இணைத்து முகத்தில் பேக் போடலாம்.
            • ஆலுவேராவில் உள்ள ஜெல் சருமத்தில் உள்ள எண்ணைத் தன்மையை இழுப்பதுடன், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
            • வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து இரண்டையும் அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதுவும் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
            • அதிகமாக பழம் மற்றும் பழச்சாறுகளை உணவாக எடுக்கலாம். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
            • சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும்.
            • எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.
              Posted in சினிமா

              16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்

              16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்

              பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா, தனது உடல்நிலை குறித்து உருக்கமாக கூறியிருக்கிறார்.

              16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
              அர்ச்சனா
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

              இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது.

              அர்ச்சனா

              16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். என் மகளும், சகோதரியும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஒரு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது’ என்றார்.

              Posted in இலங்கை செய்திகள்

              மட்டக்களப்பில் டெல்டா

              இலங்கை

              மட்டக்களப்பில் டெல்டா

              மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொற்றும் வீதம் அதிகமாகவும் மரண வீதம் அதிகமாக ஏற்படுத்தக்கூடியது எனவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

              மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

              இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

              மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 274 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

              மட்டக்களப்பு பகுதியில் 56 பேரும், களுவாஞ்சிகுடியில் 47 பேரும், செங்கலடியில் 48 பேரும், வவுணதீவில் 27பேரும், வெல்லாவெளியில் 28 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

              மரணமடைந்தவர்களில் மட்டக்களப்பில் மூவரும், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், வவுணதீவு, வெல்லாவெளி, ஆரையம்பதி பகுதிகளில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

              மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 211 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

              கடந்த வாரத்தில் 1982 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 36 பேர் மரணமடைந்துள்ளனர்.

              மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக 300 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் சராசரியாக ஐந்து மரணங்களும் நிகழ்கின்றன.

              நேற்று மருத்து ஆராய்ச்சி நிறுவகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி முதன்முறையாக டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

              அல்பா திரிபு மட்டுமே மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்டிருந்தது. அல்பா திரிபுடன் ஒப்பிடும்போது டெல்டா திரிபு தொற்றும் தன்மை அதிகமாகவும் மரண வீதம் அதிகமாகவும் காணப்படுகின்றது.

              பொதுமக்கள் வீட்டில் இருப்பதன் மூலமே கொவிட் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும். அத்துடன் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும்.

              தடுப்பூசியைப் பொறுத்தவரையில் முதல் தடுப்பூசி 270,000வரையில் ஏற்றப்பட்டுள்ளது.

              30வயதுக்கு மேற்பட்ட 92 வீதமானவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 30 வயதுக்கு மேற்பட்ட 108,000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. 37 சதவீதமான மக்களை உள்ளடங்குகின்றனர்.

              இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு 115,000 வரையான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. நாளை இன்னும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றார்.

              Posted in சினிமா

              தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

              தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

              முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் திரைப்படங்களை விட வெப் தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.

              வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்
              சமந்தா – அமலாபால்
              வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.

              வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.

              அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:-

              1. சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.

              ரெஜினா
              ரெஜினா

              1. ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
              2. அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக, ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். (அமலாபால், ஏற்கனவே மாமனாருடன் உறவு கொள்ளும் மருமகளாக ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து இருந்தார்.)

              இந்த மூன்று பேரும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

              Posted in இலங்கை செய்திகள்

              தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா

              தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா

              தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

              கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதமும், இரண்டாவது டோஸ் சுமார் 56 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த மாத இறுதிக்குள் கணிசமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

              30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதா அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதா அடுத்த முன்னுரிமை என்பதை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்குமாறு சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              கொரானாவுக்கு ஒரே நாளில் 202 பேர் பலி

              கொரானாவுக்கு ஒரே நாளில் 202 பேர் பலி

              கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 212 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

              109 ஆண்களும் 103 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 37 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குட்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.

              அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர்.

              நாட்டில் மேலும் 4,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 421,557 ஆக அதிகரித்துள்ளது.

              அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,203 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 355,394 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 57,580 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

                லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

                பிரான்ஸ் நடடிஉன் எல்லை கலை வழியாக லண்டனுக்குள் நுழையும் டோவர் பகுதியில் போலீசார்

                திடீர் சோதனைகளை மேற்கொண்டதினால் அவ்வழியால் பயணிக்கும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள்
                வீதி தொடராக நிரையில் நின்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

                எல்லையோரமாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் மற்றும் கடத்தல்கள் இடம்பெற்று வருவதால் இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  Posted in சினிமா

                  அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

                  அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

                  தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

                  நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு
                  வடிவேலு
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

                  புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                  வடிவேலு

                  இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டபோது, ‘மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான்.

                  என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். ஐந்து படங்களில் என்னை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

                  Posted in Uncategorized

                  பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா

                  பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா

                  பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                  பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா
                  வனிதா – பவர் ஸ்டார்
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் ‘பிக்கப்’. இப்படத்தில் இவர்களுடன் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

                  பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்கள்.

                  வனிதா – பவர் ஸ்டார்

                  இப்படம் குறித்து கூறும் பவர்ஸ்டார் சீனிவாசன், ‘இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட
                  டைட்டிலில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என்றார்.

                  Posted in Uncategorized

                  சில நாட்களுக்கு சேவைகள் முழுமையாக தடை படும் நன்றி

                  சில நாட்களுக்கு சேவைகள் முழுமையாக தடை படும் நன்றி 0044 7536707793

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  எப்படி சொல்வேன்

                  எப்படி சொல்வேன்

                  எழுதாத தாள் மேலே – உனை
                  எழுத வைத்த பேரழகே
                  தொலையாமல் இருக்குமா – மனம்
                  தொலைத்து விட்டேன் உன் மேலே

                  உடையாத பாறையாய்
                  உச்சி மலை இருந்தென்னை
                  கன்ன குழி சிரிப்பழகில்
                  கடைந்து விட்டாய் நீ என்னை

                  இடை பிடிக்கும் உன் விரலின்
                  இடையிலே என் விழிகள்
                  ஊடுருவி பார்க்குதடி
                  உடல் பரவசம் ஆகுதடி

                  வேர்க்காத உன் உதட்டில்
                  வேலை ஒன்று செய்திடவா ..?
                  சந்தனத்து உடல் அழகை
                  சாயும் காலம் மென்றிடவா ..?

                  இல்லாத மார்புக்கு
                  இடையில் என்ன சாளரமோ ..?
                  உடையாத பூவுக்குள்
                  உள்ளே என்ன எந்திரமோ ..?

                  எப்படி சொல்வேன்

                  மார்பு தடவும் கூந்தலின்
                  மல்லிகை வாசத்தை
                  முகர்ந்து பார்க்க துடிக்கிறதோ
                  முன்னுள்ள நுரையீரல் …?

                  வாலிபத்தை நோகடித்து
                  வாசல் வந்து நின்னவளே
                  நாள் ஒன்று வீனாகி
                  நலிந்து போனேன் என்னவளே

                  இச்சைக்கு வரி வைத்து
                  இயங்கும் உலகிலே
                  நீதி கேட்பீரா
                  நின்று பதில் சொல்வீரா …!

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 22-08-2021
                  http://ethirinews.com/

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    உன்னால் அழுகிறேன்

                    உன்னால் அழுகிறேன்

                    விழியின் ஓரமா -உன்
                    நினைவு துளிகளே
                    கடந்து போகுமா – அந்த
                    காதல் நினைவுகள் …?

                    ஆடும் காற்றிலே
                    அடி வாங்கும் அலைகளாய்
                    வாழ்வு நோகுதே – இந்த
                    வையம் வெறுக்குதே

                    மீனை போல துள்ள
                    எனக்கு தெரியவில்லை
                    புலி போல பாய
                    உனக்கு புரியவில்லை

                    இரு வேறா பிரிவதற்கா
                    இணைந்தோம் அன்று
                    என் உயிரே என் உயிரே
                    எனக்கு பதில் சொல் நன்று

                    விதி போட்ட சாலையிலே
                    வீழ்ந்தவர்கள் நூறு
                    இதில் நீயும் நானும்
                    இந்த நூறில் ஒன்று

                    அழுவதால் காயம் ஆறுமா
                    ஆறுதல் சொல்ல இங்கு யாரம்மா
                    படைத்தவனே பழியை ஏற்பானா
                    பகலவனே பதில் சொல்வானா …?

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் 17-08-2021
                    http://ethirinews.com/

                    வன்னி மைந்தன் கவிதைகள்

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      உயிரே பதில் சொல்லாயோ

                      உயிரே பதில் சொல்லாயோ

                      காட்சிகளாய் என் விழியில்
                      காலமெல்லாம் வீழ்பவளே – உன்
                      மூச்சு காற்று பட்டே
                      முழுதாக செயல் இழந்தேனே

                      தொடை தொட்டாடும்
                      தோகை கூந்தலை
                      வலை போட்டு நான் பிடிக்க
                      வாசலுக்கு வந்து விடு

                      செவந்த சட்டையில
                      செவப்பா நீ இருக்க
                      உன் உதட்டு பூவிதழை
                      உரிக்காம விடுவேனா ..?

                      கரை தேடும் அலைபோல
                      கண்ணால கதை சொல்ல
                      கறுத்த வான் மேகம்
                      கன மழை கொட்டுதடி

                      வீடு வந்த வெள்ளம் போல
                      விழி எல்லாம் நீ இருக்க
                      உன்னை மனம் மறந்திடுமோ
                      உயிரே பதில் சொல்லாயோ ..?

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் 16-08-2021
                      http://ethirinews.com/

                      வன்னி மைந்தன் கவிதைகள்

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        நித்தம் நீயே வா

                        நித்தம் நீயே வா

                        முரண்டு பிடிக்கும் உன் உடம்பை
                        முள்ளு மீசை கொண்டு குற்றவா ..?
                        என் எச்சி பட்டே உன் உடலை
                        எந் நாளும் நனைக்கவா ..?

                        இடையாட்டும் காற்றை பிடித்து
                        இன்று சிறை வைக்கவா ..?
                        நனையாமல் நீ செல்ல
                        நானும் குடை பிடிக்கவா ..?

                        தலையாட்டும் கூந்தலை
                        தாங்கமே தந்திட வா
                        தாலாட்டு நான் பாட
                        தங்கமே உறங்க வா

                        முன் பகலை இரவாக்கி
                        முழு நிலவில் தோய்க்கவா ..?
                        உன் சாமி நான் ஆனேன்
                        உயிரே நித்தம் வணங்க வா ….

                        ஆகாய சூரியனாய்
                        அன்றாடம் வருபவளே
                        நித்தம் என் உறக்கத்தை
                        நீயே கலைக்க வா …!

                        வன்னி மைந்தன்
                        ஆக்கம் 15-08-2021
                        http://ethirinews.com/

                        வன்னி மைந்தன் கவிதைகள்

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          இப்போ என்ன சொல்வாய்

                          இப்போ என்ன சொல்வாய்

                          உன் சிரிப்பை நான் கேட்டால்
                          உனக்கென்ன கோபமோ ..?
                          என் சிரிப்பை நான் தந்தால்
                          ஏன் எடுக்க வெட்கமோ …?

                          வங்கி என்றால் கடன் கொடு
                          வட்டி முதல் தந்திடுவேன்
                          வாங்கியதை தந்து விட்டால்
                          வழி வெட்டி என்னை விட்டு விடு

                          முத்தமிடும் மழைத்துளியை
                          முற்றம் ஏற்க மறுப்பதில்லை
                          பின்னிரவில் மனிதரெல்லாம்
                          பிள்ளை பெற்றும் உறைவதில்லை

                          இப்போ என்ன சொல்வாய்
                          இப்போ என்ன சொல்வாய்

                          அந்தி மட்டும் உறங்காவிடின்
                          அணைத்து பால் கதறுமடி
                          படைத்தவனை நினைத்து பார்
                          பகலிரவின் முழுமையடி

                          முழு நூல்கள் படித்து விட்டால்
                          முத்தி இன்று பெற்றிடுவாய்
                          இத் திரையில் நீ இருப்பாய்
                          இன்றே கடவுளாவாய் …!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 14-08-2021
                          http://ethirinews.com/

                          வன்னி மைந்தன் கவிதைகள்