Tag: உன்னால் அழுகிறேன்
உன்னால் அழுகிறேன் நான் ஒரு பெண்ணால் அழுகிறேன் |I cry because of a woman|584
உன்னால் அழுகிறேன் நான் ஒரு பெண்ணால் அழுகிறேன் |I cry because of a woman|584
உன்னால் அழுகிறேன் நானே என்னை மறந்தாய் ஏனோ நீயோ என வன்னியின் மைந்தன் இந்த பாடலில் காதலின் சோக உணர்வின் வலியை எடுத்து பாடியுள்ளார் .
நான் நானாக வாழ முடியல
நான் நானாக வாழ முடியல ,உன்னால எல்லாம் போச்சு .காதல் தோல்வி பாடல்
SAD ,SADSONG
பாடல் பெயர் உன்னால் அழுகிறேன் நான் ஒரு பெண்ணால் அழுகிறேன்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

உன்னால் அழுகிறேன்
உன்னால் அழுகிறேன் ..
உன்னை பாட தான்
உயிராய் நினைக்கிறேன்
உள்ளம் அழுவதால்
உயிரோடே வாடுகிறேன்
நினைவுகளை தந்து விட்டு
நீ எங்கே போனாய்
நான் மட்டும் அழுவதற்காய்
நாட்களை ஏன் படைத்தாய்
ஒன்றான நாட்களில்
ஒருமையான காலங்கள்
இன்று நினைத்தாலும்
இதயம் கனக்கிறதே
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று
ஏன் எனை எறிந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்
கடந்த நாள் ஒன்றில் – உன்
கடப்பை கடக்கையில
தேம்பி தேம்பி அழுதேனே
தெருவெல்லாம் நனைத்தேனே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2023
உன்னால் அழுகிறேன்
உன்னால் அழுகிறேன்
விழியின் ஓரமா -உன்
நினைவு துளிகளே
கடந்து போகுமா – அந்த
காதல் நினைவுகள் …?
ஆடும் காற்றிலே
அடி வாங்கும் அலைகளாய்
வாழ்வு நோகுதே – இந்த
வையம் வெறுக்குதே
மீனை போல துள்ள
எனக்கு தெரியவில்லை
புலி போல பாய
உனக்கு புரியவில்லை
இரு வேறா பிரிவதற்கா
இணைந்தோம் அன்று
என் உயிரே என் உயிரே
எனக்கு பதில் சொல் நன்று
விதி போட்ட சாலையிலே
வீழ்ந்தவர்கள் நூறு
இதில் நீயும் நானும்
இந்த நூறில் ஒன்று
அழுவதால் காயம் ஆறுமா
ஆறுதல் சொல்ல இங்கு யாரம்மா
படைத்தவனே பழியை ஏற்பானா
பகலவனே பதில் சொல்வானா …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 17-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னால் அழுகிறேன் …..!
உன்னால் அழுகிறேன் …..!
கரு நுழைந்து உருவெடுத்து
கண் திறந்த குழந்தாய் ….
முழு உடலும் உருவெடுத்து
முன்னே வர மறைந்தாய் …..
சதி வந்து பதி வைக்க
சா தங்கி மறைந்தாய் ….
வலியெடுக்க விழி கதற
வந்து வழி சென்றாய் ….
நிலையெடுத்து உயிர் கொடுக்க
நின்றவளும் மறந்தாள் ….?
முலை கொடுத்து மடி தரவோ
முளையிலே எறிந்தாள் ..?
எதுவந்து இவள் தடுக்க
என்னுயிரை புதைத்தாள் ..?
எதுவந்து நீ கூறி
என் வலியை துடைப்பாய் ….?
உடை கழற்றி உடல் காட்டி
உறவாடையில புரியலையா …?
உயிரணுவை சிதைக்கையிலே
உன் நெஞ்சு பதறலையோ ….?
தாயாவாள் பெண்னெண்று
தரணி இன்று சொன்னது ….
தப்பாகி போனதென்று
தனயனுக்கு புரிந்தது ……
உப்பில்லா பண்டமாய்
உள மகிழ்வு குலைந்தது ….
உள்ளிருந்து அழுகிறேன்
உயிர் அனுவிற்கு புரியுமோ …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -13/06/2019




























