தலை முடி ஆடம்பரமாக வெட்டினால் சிறை -தலிபான்கள் அதிரடி அறிவிப்பு
தலை முடி ஆடம்பரமாக வெட்டினால் சிறை -தலிபான்கள் அதிரடி அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு, அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
அந்த வகையில் அந்த நாட்டில் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை வெட்டுவதற்கோ, மழிப்பதற்கோ முடிதிருத்தம் செய்யும் தொழிலாளிகளுக்குத் தடை விதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதேபோல வித வித வடிவிலான சிகை அலங்காரம் செய்து கொள்வதையும் தலிபான்கள், ஹெல்மண்ட் மாகாணத்தில் தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், சலூன்களில் பாட்டு மற்றும் இசை சார்ந்து எதையும் ஒலிக்கச் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து
செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முடி திருத்தம் செய்வதிலும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன..
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா
பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா
நவ்ஜோத் சிங் சித்து
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
பஞ்சாப்:
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ஒரு மனிதன் எப்போது சமரசங்கள் செய்து கொள்கிறானோ அப்போது அவனது நன்மதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகும். நான் பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப்பின் நலனில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.
காங்கிரஸ்
எனவே, பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரஸுக்கு தொண்டாற்றுவேன்.
இவ்வாறு அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதன்
காரணமாகவே அமரீந்தர் சிங், தன் முதல்வர் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது சித்துவும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
மகளை கொன்ற தந்தை
மகளை கொன்ற தந்தை
புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் நேற்று (27) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளது.
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தம் தொடர்பில் இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் 7,000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
இலங்கையில் 7,000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் இதுவரை 90 சதவீதமான கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
இதுவரை 55 கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ள நிலையில், அனைத்து மரணங்களும் இந்த வருடம் மே மாதத்தின் பின்னரே இடம்பெற்றுள்ள என்றார். அத்துடன் இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணிகளும் எவ்வித தடுப்பூசியையும்
பெறாதவர்கள் என்பதுடன், வரலாற்றின் முதற்தடவை அதிகளவு கர்ப்பிணிகள்
உயிரிழந்துள்ளனர் என்றார்.
மேலும் சிறுவர்களுக்கு கொரோனா ஒழிப்பு தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் தொற்றா நோய் தொடர்பான குழு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சிறுவர்களிடையே
தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் குறித்து ஆராய்ந்த போது, பல நாள் நோய்
வாய்ப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமையவே பல்வேறு நோய்தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த தீர்மானித்தோம் என்றார்.
யாழ்ப்பாணம் வருகிறார் மகிந்த
யாழ்ப்பாணம் வருகிறார் மகிந்த
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி – பளை ஆகிய பகுதிகளில், 60,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒக்டோபர் 6ஆம் திகதி யன்று, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, இது தாழையடியில் கட்டப்படும் மற்றும் இது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் இப்போது 5,000 பயனாளிகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும்.
மேலும், யாழ்ப்பாண நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். இதில் 1 இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP இன் ( Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project) கீழ் 284 கிலோ மீற்றர் நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும்.
யாழ்ப்பாண நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, 2023க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம் பயனாளிகளுக்கு சுத்தமான நீர் வழங்கப்படும்.
Zoom இல் கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு
Zoom இல் கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அரசடி, பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்றிரவு (27) கிடைத்த தகவல்களை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி Zoom ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது Zoom கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தனது உயிரை மாய்த்துள்ள நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
ஆலயத்தில் திருடியவர் கைது
ஆலயத்தில் திருடியவர் கைது
இரத்தினபுரி- மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம்
பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய, குறித்த நகைகள் நகை அடகு பிடிக்கும்
நிலையமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோவிலிலுள்ள காளி சிலையிலிருந்து நகைகள் காணாமல் போயுள்ளதாக இந்த மாதம் 17ஆம்
திகதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கமைய, சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த கைரேகைகள் மற்றும் ஏனைய சாட்சிகளைக் கொண்டு 3 பிரிவுகளாகப் பிரிந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன பிரதேசத்தைச் சேர்ந்த நபர்
ஒருவர், நிவித்திகல நகரிலுள்ள அடகு நிலையத்தில் சில தங்க ஆபரணங்களை அடகு
வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இரண்டு பிள்ளைகளின்
தந்தையான 39 வயதுடைய முடி திருத்துனராக தொழில் செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
கொரோனா தொற்றால் தமக்கு தொழில் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான்
தொடர்ச்சியாக நிவித்திகல பிரதேசத்திலுள்ள 7 கோவில்களிலுள்ள சிலைகளின் தங்க
ஆபரணங்களை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த முடி திருத்துனர்
தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு
நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு அளித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திர சேகர் – விஜய்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், விஜய் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு
நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எஸ்.ஏ.சந்திர சேகர் – விஜய்
இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க
நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனுவை எஸ்.ஏ.சந்திரசேகர் தாக்கல் செய்திருக்கிறார். அதில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது.
கடந்த பிப்ரவரியில் நடந்த பொது கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 29க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பிரபல நடிகை
30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பிரபல நடிகை
அமலா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு,
வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
1991-ல் கற்பூர முல்லை படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போது கணம் என்ற தமிழ் படத்தில் அமலா மீண்டும்
நடிக்கிறார். இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார்.
அமலா
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ்
திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார்.
ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம், சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கியது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ.
ஆகாஷ் பிரைம் ஏவுகணை
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் ஏவுகணையை தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் இருந்து பரிசோதித்தது. அப்போது குறிப்பிட்ட
இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நிலையில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆகாஷ் பிரைம் ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க உள்ளது டி.ஆர்.டி.ஓ.
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்
உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகர் ஒருவருடன் சண்டை போட தயாராகி இருக்கிறார்.
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்… ஹீரோ யார் தெரியுமா?
மைக் டைசன்
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு
ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.
இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.
இப்படத்தில் அயர்ன் மைக் என்ற வேடத்தில் மைக் டைசன் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷனாக உருவாகும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம்”. இந்திய திரையுலகில் முதன்முறையாக, லிகர் படத்தில்
இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், மைக் டைசனை இந்திய
திரையுலகிற்கு வரவேற்கிறோம். இன்னும் சில நாட்களுக்கு, உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். இந்த படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மின்னல் தாக்குதலில் 6 பேர் பரிதாப மரணம்
மின்னல் தாக்குதலில் 6 பேர் பரிதாப மரணம்
இந்திய மத்திய பிரதேச பகுதியில் கடும் மழை பொலிந்து வருகிறது ,இவ்வேளை இடி மின்னல்
தாக்குதல். அதிகரித்து காணப்படுகிறது
இவ்வேளை மின்னல் தாக்குதலில் சிக்கி ஆறு அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் ,இத்த
சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்
பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்
பளையில் மாற்றுத் திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக அழிக்கப்பட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார்!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணிபகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதாரதொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு(25) விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் முறை 800 கன்றுகள் மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை,
விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில்கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இன்று(27) குறித்த பகுதிக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிடுங்கி எறியப்பட்ட மிளகாய் கன்றுகளை பார்வையிட்டும் மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.
தொடரச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுக்க தாம் உயர் மட்டம் வரை சென்று இதற்கான தீர்வை பெற்று தருவதாக தெரிவித்திருந்தார்.



இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்
இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்
இலங்கையில் உள்ள முஸ்லீம் தீவிரவாத போக்குடையவர்கள் உலக மகா கொடிய பயங்கரவாத இயக்கமாக விளங்கி வரும்
ஐ எஸ் குழுவுடன் இணைந்து செயல் பட்டு வந்த நிலையில் அவர்களை மடக்கி பிடிக்கும் நகர்வில் இலங்கை உளவுத்துறை ஈடுபட்டுள்ளது
இவர்கள் இயக்கி வந்த வாட்சாப் குழுவை தேடி தற்போது வேட்டை ஆரம்பமாகியுள்ளது ,விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என நம்ப படுகிறது
யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீடுகள் தீவைத்து எரிப்பு
யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீடுகள் தீவைத்து எரிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று திடீரென வீடொன்றுக்குள்
புகுந்து அங்குள்ள உடமைகளை அடித்து சேத படுத்தியதுடன் ,அந்த வீட்டுக்கு தீவைத்து தப்பி சென்றுள்ளது
இதில் வெட்டுகுமார் என்ற தெரு ரவுடி கைது செய்ய பட்டுள்ளான்
மேலும் அவனது கூட்டாளிகள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் ,விரைவில் அவர்களு கைது செய்ய படுவார்கள் என சிங்கள கூலி காவல்துறை தெரிவித்துள்ளது
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
இலங்கையின் சிறைச்சாலை அமைச்சர் ரோகன் ரத்வத்த அனுராதபுரம் சிறை சாலைக்கு சென்ற
பொழுது அங்கு தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகள் மூலம் அவரது கால் சப்பாத்து நக்கி சுத்த படுத்த பட்டது
இவ்வாறான கீழ்த்தரமான செயலில் செயல் பட்ட அவருக்கு எதிராக மக்கள் ,மற்றும் தமிழ் எம்பிக்கள் சிலர் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்
மேற்படி சம்பவம் சர்வதேச அரங்கிற்கும் எடுத்து செல்ல பட்டுள்ளது
தாடி அகற்ற தலிபான்கள் தடை – கடுப்பில் ஆண்கள்
தாடி அகற்ற தலிபான்கள் தடை – கடுப்பில் ஆண்கள்
ஆப்கான் நாட்டில் ஆண்கள் அனைவரும் தாடி வளர்க்க வேண்டும் என தலிபான்கள்
அறிவித்துள்ளனர்
தாடியை முகத்தில் இருந்து நீக்கம் செய்தல் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க படும் என்ற
அறிவிப்பு ஆண்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 35 வயதுடைய இளம் மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ,கொலையில் முடிவடைந்துள்ளது ,கணவர் கொலை
குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
காவல்துறை அதிகாரிகள் கையை கடித்த குற்றவாளி
காவல்துறை அதிகாரிகள் கையை கடித்த குற்றவாளி
இலங்கை மாத்தறை பகுதியில் காவல்துறை அதிகாரி இருவரது கைகளை கடித்து விட்டு தப்பி ஒட
முயன்ற குற்றவாளி கைது செய்ய பட்டு நீதவான் நீதிமன்றில் ஆயராக்க பட்டார்
இவரை தடுத்து வைத்து விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ,இவர் புரிந்த மேற்படி
குற்றத்திற்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கை வந்தடைந்த ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள்
இலங்கை வந்தடைந்த ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து அதனை தடுத்திட பைசர் தடுப்பூசிகள் ஒரு தொடுத்தி வந்தடைந்துள்ளன
இந்த ஊசிகள் கட்டம் கட்டமாக மக்களுக்கு செலுத்த படும் என அறிவிக்க பட்டுள்ளது







