Posted in Uncategorized

பீச்சில் துப்பாக்கி தாரியை சுட்டு கொன்ற பொலிஸ்

பீச்சில் துப்பாக்கி தாரியை சுட்டு கொன்ற பொலிஸ்

அமெரிக்கா Huntington பீச்சின் மண் பிட்டியில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஆயுத தாரி ஒருவரை காவல்துறை நபர் சுட்டு கொன்றுள்ளார்

போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வந்த நிலையில் அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு தாம் சுட்டு கொன்றிருக்க விட்டால் அவர் மக்களை வேட்டையாடி இருப்பார் என காவல்துறை கதை பேசி வருகின்றமை கவனிக்க தக்கது

    Posted in Uncategorized

    ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு

    ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு

    ரசிய வான் பரப்புக்குள் அமெரிக்கா நாட்டின் மூன்று விமானங்கள் நுழைந்தன

    இதனை கண்ணுற்ற ரசியா விமானங்கள் அதனை துரத்தி சென்றன

    இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது

    ரசியாவுக்குள் சமீபகாலமாக அமெரிக்கா திடீர் நுளைவுகளை மேற் கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      ஆயுத கிடங்கு மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரியும் களஞ்சியம்

      ஆயுத கிடங்கு மீட்டது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரியும் களஞ்சியம்

      சவுதி ஆதரவு குழுவிற்கு ஆயுதங்களை வழங்கி போரை தொடுத்து வருகிறது


      ஏமன் நாட்டின் Ma’rib மாகாணத்தில் உள்ள சவுதியை ஆதரவு படைகளின் ஆயுத களஞ்சியம் மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன

      இந்த ஏவுகணைகள் தாக்குதலை அடுத்து அந்த களஞ்சியம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

        Posted in Uncategorized

        பாகிஸ்தானில் வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

        பாகிஸ்தானில் வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

        பாகிஸ்தான் Balochistan மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தியா வெடிகுண்டு ததாக்குதலில் சிக்கி


        நால்வர் பலியாகினர் மேலும் .இரண்டுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்


        தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவியதன் பின்னர் தொடர் குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in மருத்துவம்

          பெண்களுக்கு ஏற்படும் அந்த பிரச்சனைகள்..

          பெண்களுக்கு ஏற்படும் அந்த பிரச்சனைகள்..

          ஒற்றைத்தலைவலியால் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அவதிப்படுகிறார்கள். ஒற்றைத்தலைவலி 25 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.


          பெண்களின் உடல்நலம் சார்ந்த தகவல் தொகுப்பை இங்கே பார்க்கலாம்

          • ஒற்றைத்தலைவலியால் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அவதிப்படுகிறார்கள். ஒற்றைத்தலைவலி 25 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.

          இவர்கள் யாரை சந்திப்பது – (நியூராலாஜிஸ்ட் )நரம்பியல் நோய் நிபுணர்

          • 71 சதவீத பெண்கள் மன அழுத்தத்திற்கு எந்த சிகிச்சையும் நாடுவதில்லை

          அப்டி யாரை சந்திப்பது – மனநல மருத்துவர்

          • 3-ல் 1 நபருக்கு ஈறு சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களை ஒப்பிடும் போது பெண்கள் அதிக அளவில் பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

          இதற்கு யாரை சந்திப்பது – பல் மருத்துவர்

          • சுவாச நோய்கள்

          ஆஸ்துமா, சைனஸ், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு 47 சதவீத பெண்கள் ஆளாகிறார்கள்.

          பெண்களுக்கு ஏற்படும் அந்த பிரச்சனைகள்..

          யாரை சந்திப்பது – நுரையீரல் நிபுணர்

          திருமணமான பெண்கள் பெரும்பாலும் 25 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். 32 சதவீதம் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்கிறது.

          சந்திப்பது – மகப்பேறு நிபுணர்

          • வருடத்திற்கு சுமார் 7 லட்சம் பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். வாழ்நாளில் 29 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோய் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார். 42 சதவீத பெண்கள் பொருத்தமில்லாத காலணிகளை அணிகிறார்கள். 73 சதவீத பேர் காலணிகளுடன் தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
          • 3 பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கிறார்.

          யாரை சந்திப்பது – ஊட்டச்சத்து நிபுணர்

          • 4-ல் 1 பெண் இதயநோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைகிறார்கள்.

          யாரை சந்திப்பது – இதய நோய் நிபுணர்

          பெண்களுக்கு ஏற்படும் அந்த பிரச்சனைகள்..

          ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் மூட்டு வலி சார்ந்த பிரச்சனைக்காக மருத்துவரை நாடுகிறார்கள். இடுப்பு அளவு அதிகரிப்பு, ஈஸ்ட்ரோஜன் சீரற்ற தன்மை போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது.

          • கீல்வாதம்

          65 வயதை கடக்கும் பெண்களில் 59 சதவீதம் பேர் கீழ்வாதம் எனப்படும் மூட்டு தேய்மானம், மூட்டு பிறழ்வு பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

          யாரை சந்திப்பது – எலும்பியல் நிபுணர்

            Posted in சினிமா

            தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா

            தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா


            தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

            தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?
            அனுஷ்கா


            ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம்

            குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த

            பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

            தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை

            காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இதையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். “எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என்றார்.

            அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு

            இயக்குனர் ஒருவரை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது பரவி வருகிறது.

              Posted in சினிமா

              பிகினி உடையில் அமலாபால்

              பிகினி உடையில் அமலாபால் – வைரலாகும் புகைப்படங்கள்
              அமலாபால்


              தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை

              அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

              அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர்

              விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

              சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பிகினி உடையில்

              போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

                Posted in சினிமா

                ஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்.

                ஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்.

                நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.

                ஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்
                சரஸ்வதி, ராஜீவ் மேனன்


                வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின்

                மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகா, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் கதாநாயகிகளாகி உள்ளனர்.

                இந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.

                தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ்

                மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.

                  Posted in சினிமா

                  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு

                  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு

                  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                  வலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு
                  வம்சி பைடி பல்லி, தில் ராஜு, விஜய்


                  நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத்

                  இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                  இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை

                  பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.

                  ‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

                  வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் முன் அறிவிப்போடு தான் வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக அந்த டிரெண்ட் மாறி உள்ளது. அஜித்தின் வலிமை

                  குறித்த அறிவிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டன. அதேபோல் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ அப்டேட்டும் அவ்வாறே வெளியிடப்பட்டு உள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை

                    இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை

                    இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது ,நாடு முழுதாக முடக்க

                    பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில் வாய்ப்பு இன்றி உள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    விரைந்து வரும் நாட்களில் இந்த நிலைகளை அவதானிக்க முடியும் என எதிர்வு கூற பட்டுள்ளது ,ஆனால் அரசோ அவ்வாறு ஏற்படாது என அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட்ட தக்கது

                      Posted in Uncategorized

                      இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு

                      இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு

                      இலங்கையில் ஆளும் அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்

                      ஆண்டு தோறும் இலங்கைக்கு வழங்க படும் ஜிஎஸ்பி+ வரி சலுகை நிறுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                      நாளை இலங்கை வரும் ஐரோப்பிய தூது குழுவினர் இது தொடர்பாக ஆராயவுள்ளனர்

                      இவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வு நடவடிக்கையின் பின்னரே இலங்கைக்கு ஆப்பு வைக்க படும் ஆட்டம் ஆரம்பிக்க படுமா என்பதை அறிய முடியும் ,இதில் இலங்கைக்கு கடிவாளம் வழங்க

                      பட்டால் ,போர் குற்ற விசாரணைகள் துரித படுத்த படும் நிலை ஏற்படும் என்பதை அடித்து கூறலாம்

                        Posted in Uncategorized

                        இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்

                        இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்

                        இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் இரவு பத்து மணி முதல்

                        அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமூல் படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

                        எதிர்வரும் மதம் முதலாம் திகதி முதல் இவை நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in Uncategorized

                          யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு

                          யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு

                          யாழ்ப்பாணம் தொண்டமனாரு பகுதியில் கோயிலுக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் அந்த நீரேரியில் குளிக்க முயன்ற பொழுது நீரில் அடித்து செல்ல பட்டு இறந்துள்ளார்

                          மீன் பிடிக்க வந்தவர்கள் சடலத்தை கண்ணுற்று காவல்துறைக்கு தெரிவித்த நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது

                          மேற்படி சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

                            ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

                            மட்டக்களப்பட்டு ஏறாவூர் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது

                            இவர் படுகொலை செய்ய பட்டு ஆற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது

                            சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                            இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!

                              கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!

                              தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய

                              தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகி திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

                              தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

                              எமது உணர்வு! எமது உரிமை!

                              திலீபனின்
                              திலீபனின்
                                Posted in மருத்துவம்

                                சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                                சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                                சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

                                சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் பாதாம் செலரி சூப்
                                பாதாம் செலரி சூப்
                                தேவையான பொருட்கள் :

                                பாதாம் – 50 கிராம்,

                                வெங்காயம் – ஒன்று,
                                செலரி, பாஸில் இலை – சிறிதளவு,
                                காய்கறி வேகவைத்த தண்ணீர் – அரை லிட்டர்,
                                பால் – ஒரு கப்,
                                பாதாம் – சிறிதளவு (அலங்கரிக்க),
                                மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

                                செய்முறை:

                                பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.

                                அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                                செலரி, பாஸில் இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

                                சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                                வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                                ஒரு பாத்திரத்தில், பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.

                                வெந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

                                அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

                                கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.

                                இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்துப் பரிமாறவும்.

                                சத்தான பாதாம் செலரி சூப் ரெடி.

                                  Posted in சினிமா

                                  காமெடி நடிகருடன் நடிக்க மறுக்கும் நடிகை

                                  காமெடி நடிகருடன் நடிக்க மறுக்கும் நடிகை

                                  முன்னணி நடிகை ஒருவர், பிரபல காமெடி நடிகருடன் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்களாம்.

                                  காமெடி நடிகருடன் நடிக்க மறுக்கும் நடிகை

                                  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வாரிசு நடிகை ஒருவர் வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறதாம்.

                                  இந்நிலையில் நடிகையிடம் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்களாம்.

                                  நடிகை, கதை கேட்கிறேன் என்று சொல்லி, படக்குழுவினரை அலைய வைத்து வருகிறாராம். காமெடி நடிகருடன் ஜோடி என்பதால் நடிக்க மறுத்து வருவதாக பலரும் பேசி வருகிறார்களாம்

                                    Posted in சினிமா

                                    கவர்ச்சி ஆட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்ட நடிகை

                                    கவர்ச்சி ஆட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்ட நடிகை


                                    தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வரும் நடிகை ஒருவர், பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ரூ.1 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.

                                    கவர்ச்சி ஆட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்ட நடிகை

                                    பல மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகை ஒருவர், தற்போது தமிழ்

                                    மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். மேலும் தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காண்பித்து வருகிறார்களாம்.

                                    தற்போது நடிகையிடம் ஒரு படக்குழுவினர் அணுகி தங்களுடைய படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் படி கேட்டார்களாம். நடிகை கதை கேட்டு பாடலுக்கு நடனம் ஆட ஓகே

                                    சொல்லி விட்டாராம். மேலும் சம்பளமாக ஒரு கோடி கேட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறாராம்.

                                      Posted in சினிமா

                                      விஜய்யின் ஜாலி வாக்… வைரலாகும் வீடியோ

                                      விஜய்யின் ஜாலி வாக்… வைரலாகும் வீடியோ

                                      பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

                                      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                      விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி

                                      வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

                                      இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு

                                      முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

                                      விஜய்

                                      இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ

                                      வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக விஜய் வலம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                        Posted in உலக செய்திகள்

                                        ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் – நாராயணசாமி தாக்கு

                                        ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் – நாராயணசாமி தாக்கு

                                        எல்லாவற்றையும் பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டு முதலமைச்சர் ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

                                        ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் – நாராயணசாமி கடும் தாக்கு

                                        வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் கருப்புக் கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

                                        இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

                                        மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில், அதாவது 19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடந்துள்ளது.

                                        கடந்த 9 மாதமாக வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி பிரதமர் மோடி கவலைப்படவில்லை. அவர் அம்பானி, அதானியின் நலனைப் பார்க்கிறார். விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

                                        முதலமைச்சர் ரங்கசாமி

                                        கொரோனா காரணமாக 20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

                                        இதையெல்லாம் எதிர்த்து புதுவையில் ஞாயிற்றுக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. புதுவையில் பா.ஜ.க.வின் பினாமி அரசான என்.ஆர்.காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் ரங்கசாமி எல்லாவற்றையும் பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டு அடிமை ஆட்சி நடத்துகிறார். மத்திய அரசின் திட்டங்களை முன்பு எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது அதை ஆதரிக்கும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் சரணாகதி அடைந்துள்ள அவர்கள் மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறார்கள் என தெரிவித்தார்.