Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்

கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்

கனடாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கை கூலியாகவும் கோட்டாவின் செல்ல

பிள்ளையாகவும் வலம் வரும் தேச துரோகி சுமந்திரன் பயணம் செய்தார் ,அங்கு

மக்களை சந்தித்து பேசிட கூட்டம் ஒன்று அவரது வால்களினால் ஒழுங்கு செய்ய பட்டிருந்தது ,

அங்கு அவரை சுற்றிவளைத்த மக்கள் துரோகி சுமந்திரன் இங்கு இருந்து தப்பி ஓடு ,


கூட்டி குடு என்ற கெட்ட வார்த்தைகளும் பயன் படுத்த பட்டது, இது மக்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக அங்கு ஒலித்துள்ளது

மேலும் கனடாவிற்கு வராதே என கூறும் காட்சி வைரலாகி வருகிறது

இலங்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை ,சட்டத்தரணி என்ற கோதாவில் மிரட்டுவது

போல வெளி நாடுகளில் உள்ள புலி தமிழர்களை மிரட்டலாம் என கனவு கண்டு வந்த சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி வழங்கியுள்ளனர்

கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்

அடுத்து வரும் தேர்தலில் சுமந்திரன் தோற்கடிக்க படுவார் ,இதில் இருந்து கூட்டமைப்பிற்கு மக்கள்

செல்வாக்கு குறைந்து வருவதனையும் ,மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கூட்டமைப்பு சந்தித்து

வருவதும் கிழட்டு சம்பந்தர்
தலைமை பதவியில் இருந்து விலகி ஓடும் நாட்களும் வரும் தேர்தலில் இடம்பெற போவதற்கான

முன் அறிவிப்பாக இதனை அவதானிக்க முடிகிறது

இது தாண்டா துரோகி சுமந்திரன் ,தமிழர் ஒற்றுமை ,போய் கோட்டாவிடம் சொல்லு என்ற

வாசகங்களும் முழங்கின ,சுமந்திரா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா .?

வெட்கம்,மான ,ரோசம், ஏதும் இருந்தால் திருந்துவர என்ற கோஷமும் அங்கு ஒலித்ததாம்

தமிழ் தேசிய அரசியல் பேசிய படி தமிழ் மக்களின் முதுகில் குத்தும் நாரதர் வேலைகளை சுமந்திரன் புரிந்து வருகிறார்

சுமந்திரனின் இந்த செயலானது இலங்கை அரசுகளை காப்பாற்றும் நகர்வாக அமைகிறது

அதனை நன்கு புரிந்து கொண்ட ஈழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூலியாக செயல் படும் சுமந்திரன் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

தமது எதிர்ப்பை வலிமையாக காண்பித்துள்ளார் – வன்னி மைந்தன்.

    Posted in உலக செய்திகள்

    லண்டனில் 173 கணித கேள்விகளுக்கு ஒரு நிமிடத்தில் பதில் அளித்து அசத்திய சிறுமி

    லண்டனில் 173 கணித கேள்விகளுக்கு ஒரு நிமிடத்தில் பதில் அளித்து அசத்திய சிறுமி

    லண்டன் கென்ட் பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் சுமார் 173 கணித கேள்விகளுக்கு

    ஒருமிடத்தில்


    பதில் அளித்துள்ளார் ,இதில் 172 கேள்விகளுக்கு சரியான பதில்களையும், ஒன்றுக்கு தவறாக பதில்

    வழங்கி அசத்தியுள்ளார்


    இவரது இந்த சாதனை தற்போது பிரிட்டனில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது

      Posted in Uncategorized

      ஐத்து சீனத்தவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு

      ஐத்து சீனத்தவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு

      கொங்கோ நாட்டில் தங்க அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்த ஐந்து சீன நாட்டவர்களை கொங்கோ ஆயுத படைகள் கடத்தி சென்றுள்ளனர்

      இவ்வாறு கடத்த பட்டவர்களை விடுவிக்க குறித்த ஆயுத குழு பலமில்லியன் டொலர்களை சீன அரசிடம் பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in Uncategorized

        அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை – 4 பேர் மரணம் 18 பேர் காயம்

        அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை – 4 பேர் மரணம் 18 பேர் காயம்

        அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,சம்பவ

        தினம் நால்வர் பலியாகினர் ,மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்

        காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது


        ,அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிக சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவது

        கவலைதருகிறது

          Posted in Uncategorized

          தலிபான்கள் நாட்டுக்குள் தரை இறங்கிய ஈரான் உணவு விமானம்


          தலிபான்கள் நாட்டுக்குள் தரை இறங்கிய ஈரான் உணவு விமானம்

          ஈரான் நாட்டுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று 13 தொன் எடையுள்ள உணவுகளை


          காவி சென்று தலிபான்கள் வசிக்கும் நாட்டில் மக்களுக்கு வழங்கியுள்ளது

          முதல்தர அவசர உதவியாக இவை வழங்க பட்டுள்ளது ,மேற்படி நகர்வு முன்னைய

          ஆட்சியாளர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

            Posted in மருத்துவம்

            அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

            அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

            மாதவிடாய் வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள் சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.

            அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்…
            மாதவிடாய் வலி


            பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களில் உடல் சார்ந்த சிரமங்களை மட்டுமில்லாமல் மன ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், சோகம், அழுகை, மகிழ்ச்சி

            போன்ற மனநலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன.

            மாதவிடாய் சுழற்சி தொடங்குவது முதல் கருவுறுதல், மகப்பேறு மற்றும் மாதவிடாய் சுழற்சி நிற்பது வரையிலான காலகட்டங்களில் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்களின் சுரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் உருவாகக்கூடும். அவை குறித்து இங்கே பார்க்கலாம்.

            மாதவிடாய் சார்ந்த மன அழுத்தம்.

            பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மாதவிடாய் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை பி.எம்.எஸ் என குறிப்பிடுகிறோம். இதன் அறிகுறிகள் மாதவிடாய்

            தொடங்குவதற்கு முன்பாக தொடங்கி ரத்தப்போக்கு தொடங்கிய பின் படிப்படியாக குறையும். வயது அதிகரிக்கும் போது இதன் தன்மை மாறுபடும்.

            உணவுப்பழக்கங்களும், வாழ்க்கை முறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் பருமன், ஒரே இடத்தில்

            நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போதிய தூக்கமின்மை அதிக மனஅழுத்தம் ஆகியவை பி. எம்.எஸ் வீரியத்தை அதிகரிக்கும். இதை தவிர்ப்பதற்காக சீரான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி,

            அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

            ஆரோக்கியமான உணவுமுறை, மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு சீராகும்.

            ஒழுங்கற்ற மாதவிடாய்

            உடல்பருமன், தைராய்டு குறைபாடு, நேரம் தவறி உண்ணுதல், அதிக அளவு உடற்பயிற்சி போன்ற காரணங்களால் மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படும். இதனால் குழந்தைப்பேறு

            தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இந்த பிரச்சனையை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் தக்க சிகிச்சைகளை மேற்கொண்டால் மாதவிடாய் சுழற்சியை சீராக்க முடியும்.

            அதிக வயிற்று வலி

            மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பாக ஆரம்பித்து மாதவிடாய் முடிந்த சில நாட்கள் வரை சிலருக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படலாம். வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள்

            சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.

            அதைத் தடுப்பதற்கு நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள

            வேண்டும். மாதுளம் பழம் துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

            அதிக ரத்தப்போக்கு

            மாதவிடாய் காலத்தில் சிலருக்கு 7 முதல் 10 நாட்கள் வரை ரத்தப்போக்கு நீடிக்கும். இதனால் உடல் மிகவும் சோர்ந்து போகும். எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள்

            உள்ள பெண்கள், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.

              Posted in சினிமா

              கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை

              கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை

              சினிமாவை விட்டு பல வருடங்கள் விலகி இருந்த நடிகை மீண்டும் கதாநாயகி வேடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.

              கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை

              தமிழ் சினிமாவில் போ என்று சொல்லி பிரபலமான நடிகை, குறுகிய காலத்திலேயே பல

              படங்களில் நடிக்க ஒப்பந்தமானாராம். அதன்பின் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து மிகவும்

              பிரபலமானதால், தான் பெரிய நடிகையாகிவிட்டோம் என்று தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாராம்.

              இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். நடிகையும் கொஞ்சம் கொஞ்சமாக

              சினிமாவை விட்டு விலகினாராம். தற்போது மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்து

              வருகிறாராம். ஆனால், பட வாய்ப்பு கேட்பவர்களிடம் கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று

              கேட்கிறாராம். நடிகையின் பேச்சை கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும்

              நடிகைக்கு வாய்ப்புகள் எங்கு கிடைக்கபோகுது என்று பேசிக்கொள்கிறார்களாம்

                Posted in சினிமா

                நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை

                நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை

                பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவரிடம் நடிகை ஒருவர் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

                நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை

                நடிப்பிலும், நடனத்திலும் ‘ராசா’வான மூன்றெழுத்து நடிகர், அவர். சமீபகாலமாக அவர் நடித்த

                படங்கள் அனைத்தும் அதிரிபுதிரியாக ஓடி அமோக வெற்றி பெற்று வருகின்றன. அவருடைய

                நட்சத்திர அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம்.

                நடிகருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த ஒரு நடிகை கைவசம் தற்போது படமே இல்லையாம்.

                அதனால் அந்த நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். ‘‘ஒரு பாட்டு என்றாலும் பரவாயில்லை…

                உங்களுடன் சேர்ந்து ஆடினால் போதும்…’’ என்றாராம். வட இந்திய பெயரை கொண்ட அந்த

                நடிகைக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், நடிகர்

                  Posted in சினிமா

                  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?

                  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?

                  இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.

                  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
                  பிக்பாஸ் 5


                  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்

                  கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.

                  பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர்

                  வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்

                  படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

                  இசைவாணி

                  இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த

                  தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                    Posted in சினிமா

                    ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர்

                    ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர்

                    ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்.

                    ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர் ஞானவேல்
                    ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல்

                    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி

                    கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின்

                    பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.

                    இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர்.

                    ஜெய்பீம்

                    இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

                    ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு

                    காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.

                    ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.


                    மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

                    இவ்வாறு அவர் கூறினார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு

                      மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு

                      யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நாளை (22) நடைபெறவுள்ளது.

                      பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை

                      ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை (19), மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி, விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

                      இன்று 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை, இந்த தடை உத்தரவு வழங்குமாறு, பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

                      குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்று தெரிவித்த பொலிஸார், இதனை தடை செய்யுமாறும் கோரியுள்ளனர்.

                      அத்துடன், நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

                      இந்த விண்ணப்பங்கள், வெள்ளிக்கிழமை (19), இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டோர் மன்றில் முன்னிலையாகவில்லை.

                      இதனைத் தொடர்ந்து, அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை (22) நடைபெறும் எனவும் அதன் பின்னர் கட்டளை பிறப்பிப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன.

                      இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்,
                      தடை உத்தரவு கட்டளையை நேற்று முன்தினம் (19) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு

                        சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு

                        சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

                        கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

                        நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதிவரை மாவீரர் தினம். அதேபோல மே 18ம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு முதல்நாள் சடுதியாக அந்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்ப்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள்.

                        முல்லைத்தீவு வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால் ஒரு கிழமை, முன்றுநாள், ஐந்து நாள் என்று சென்ற நிலையில் உடினடியாக அதன் முடிவுகளை சொல்லி கொத்தணி உருவாகுவது புால் மாஜையை காட்டினார்கள்.

                        எங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபொழுது, கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரள்வளையை நெரிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்த வருகின்றார்கள்.

                        கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இந்த தடையை பொலிசார் கொண்டுவர விரும்பினால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

                        அது கொண்டுவர வேண்டுமாக இருந்தால் பாராளுமன்ற கெசட் நோட்டிபிக்கேசன் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லாமல், வெறுமன இன்ன இன்ன தொகுதியை அல்லது மாவட்டத்தை மையப்படுத்தி தடைகளை எடுத்து வருகின்றார்கள்.

                        இந்த விடயத்தை சவாலுக்குட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்கவேண்டிய வேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும். நினைவுகூரல் என்பது மனித உரிமைக்குரிய ஓர் நிகழ்வு.

                        அந்த நினைவுகூரலுக்கு கடந்த அரசாங்கமும் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கண்டும் காணாதும் இருந்தார்கள். அதனை எமது மக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அதற்கு அனுமதிக்காத வகையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது.

                        தடுப்பதற்கான முயற்சிகள் கடந்தவாரமே எடுக்கப்பட்டிருக்கின்றது. வழமையாக எந்த கடும் தேசிய தமிழ்க்கட்சிகளாக இருந்தாலும் பூட்டிய அறைக்குள் அல்லது தமது வளவிற்குள் நினைவேந்தலைசெய்து படங்களை பிரசுரிப்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

                        உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை. ஏனைய தமிழ் கட்சிகளினுடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனுடைய கட்சியாக இருக்கட்டும் எல்லோருமே ஒன்றுபட்டு இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது பேசப்பட வேண்டும்.

                        வெளுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல. நாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள். ஆனால், உலகிற்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும். சகல கட்சிகளிலும் சட்டத்தரணிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.

                        இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிற்குள் பேசி எவ்வாறு இந்த எவ்வாறு இவ்விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

                          கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

                          அனுராத புரம் பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் வசித்து வந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்க

                          பட்டுள்ளார் ,இவர் எவ்விதம் இங்கு இறந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆம்பிக்க

                          பட்டுள்ளன

                          சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            வெடி பொருட்களுடன் இருவர் கைது

                            வெடி பொருட்களுடன் இருவர் கைது

                            இந்தியாவில் இருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்டு வீடொன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த

                            பெருமளவான


                            வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

                            கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

                              Posted in Uncategorized

                              இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு

                              இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு

                              மன்னார் இராணுவ முகாம் அருகில் உள்ள கடல் பகுதியில் தொலை தொடர்பு கருவி ஒன்று கண்டு

                              பிடிக்க பட்டுள்ளது ,மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து மேற்படி தொலைத்தொடர்பு பெட்டி

                              கண்டு பிடிக்க பட்டுள்ளது

                              இதன் ஊடாக குறித்த இராணுவ முகாமின் உரையாடல்கள் ஒட்டு கேட்க பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                              இராணுவ விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேற்படி கருவி அமெரிக்கா தயாரிப்பு என
                              கன்டு பிடிக்க பட்டுள்ளது

                                Posted in உலக செய்திகள்

                                வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள்

                                வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள்

                                அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் இரு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் ஒரு விமானி
                                பலியாகியுள்ளார்
                                மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

                                குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்

                                  70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்

                                  சூடானில் ஆளும் அரச இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் ,
                                  இந்த மக்கள் போராடத்திற்கு எதிராக இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது

                                  இராணுவம் நடத்திய சூட்டு தாக்குதலில் சிக்கி இதுவரை எழுபது பேர் பலியாகியுள்ளனர்

                                  மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                                  Posted in Uncategorized

                                  வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்

                                  உலக

                                  வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்

                                  சோமாலிய நாட்டின் Berdale,பகுதியில் உள்ள சந்தை பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

                                  சிக்கி எட்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் பதின்மூன்று பேர்

                                  படுகாயமடைந்துள்ளனர்

                                  குண்டு தாக்குதலை அடுத்து மேலதிக இராணுவம் வரவழைக்க பட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு

                                  மற்றும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிட பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துளளது

                                    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                    பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்

                                    பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்

                                    பாரசீக வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றினை ஈரான்

                                    கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்

                                    சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு கப்பல் ஒன்றையே தாம் சிறை

                                    பிடித்துள்ளதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது

                                    இவ்வாறு சிறை பிடிக்க பட்ட கப்பலானது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என நம்ப படுகிறது .

                                      Posted in மருத்துவம்

                                      தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                                      தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                                      பெண்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.

                                      பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்…
                                      பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை


                                      பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது

                                      பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும்

                                      செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது.

                                      மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில்

                                      தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                                      ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும்.

                                      கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற

                                      மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை

                                      நீடிக்கும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.

                                      தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                                      பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும்

                                      என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல்

                                      தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்