ரஷியா எல்லையில் ஏவுகணைகளை,இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரஷியா எல்லையில் ஏவுகணைகளை,இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரஷியா எல்லை பகுதியில் நேட்டோ கூட்டு படைகள் ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினரை குவித்து வருகின்றனர்
ரசியாவானது ஐரோப்பா மீது பாரிய இராணுவ படை இடுப்பை மேற்கொள்ள கூடும் என்ற
நிலையில் இந்த ஆயுத குவிப்புக்கள் இடம்பெற்று வருகிறது
ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சமீப காலங்களாக ஐரோப்பாவின் பல கடல் பகுதிக்குள் நுழைந்து
உளவு பணியில் ஈடுபட்டு சென்றுள்ளதும் ,பிரிட்டனுக்குள் அதிக ஊடுருவலை மேற்கொண்டு வந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு
பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு
கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு
தமிழ் சினிமாவில் சங்க நடிகருடன் ரிப்பன் கட்டி வந்த நடிகைக்கு, தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தேடி வந்ததாம். நடிகையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தாராம். தான் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், திடீரென்று சம்பளத்தை உயர்த்தினாராம்.
நடிகை சம்பளத்தை உயர்த்திய நேரம், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம். இதனால் ஓரிரு படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தாராம். தற்போது பல இளம்
நடிகைகள் குறைந்த சம்பளத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகையும் தனது சம்பளத்தை
குறைக்க முடிவு செய்து இருக்கிறாராம். இனிமேலாவது நடிகைக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று பொருத்து இருந்துதான் பார்க்கணும்.
பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை பாலிவுட்டில் தடம் பதிக்க தயாராகவுள்ளார்.
பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
அமலா பால்
மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அமலாபால். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில்
ஒருவராக உருவெடுத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியுலகில் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக இணைந்து அனைவரின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
பிறகு மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்தார்.
தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள ’அதோ அந்த பறவை போல’ மற்றும் ’கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
அமலா பால்
இதனைதொடர்ந்து முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. 1980களில் பிரபலமான பாலிவுட்
நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.
மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில்
உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் தற்காலிகமாக மூடல்
நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும்.
உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே
வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் தற்காலிகமாக மூடல்:
அபுஜா / நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
பிராங்பேர்ட் / ஜேர்மனியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்,
நிக்கோசியா / சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்
தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத
உயர்ஸ்தானிகராலயங்கள் / தூதரகங்களால் மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள
உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.
இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும். நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார். வெளிநாட்டு அமைச்சு சைப்ரஸில் உள்ள மாறுதல் செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும் மேலதிக தீர்வுகளை எதிர்காலத்தில் வழங்கும்.
செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், வெளிநாட்டு அமைச்சு அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை உகந்த அளவில் பராமரிக்கவும், ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருளாதார இராஜதந்திரத்தில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை நிறைவேற்றவும் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கான அவர்களது நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் நலன் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அதிக கவனம் செலுத்துகின்றது. இலக்குகளை அடைவதற்கான தூதரகங்கள் / பணிமனைகளின் பிந்தைய தேவைகளின் தொடர்ச்சியான மதிப்பீடனது, வெளிநாட்டு அமைச்சினால் வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரக / பணிமனைத் தலைவர்கள், நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சுக்கள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளக மற்றும் வெளியக ஆலோசனை செயன்முறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்பட்டு, தேவையானதாக கருதப்படும் சம்பந்தப்பட்ட வதிவிடத் தூதரகங்கள் / பணிமனைகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலணை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வெளிநாட்டு அமைச்சு,
இலங்கை வங்கிகளுக்கு வரி – கொஞ்சம் இதை பாருங்க
இலங்கை வங்கிகளுக்கு வரி – கொஞ்சம் இதை பாருங்க

கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை
கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை
கிளிநொச்சி பூநகாி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு
குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த இளைஞா் ஒருவா் கூாிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.
இதேபோல் குருநகாில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறிய நிலையில்
ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சோ்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன்
கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிாிழந்துள்ளாா்.
சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நத்தார் தினத்தில் வாலிபர் வெட்டி கொலை
நத்தார் தினத்தில் வாலிபர் வெட்டி கொலை
இலங்கை மட்டக்குளி, பொக்குனுவத்த பகுதியில் இடம்பெற்ற நத்தார் பண்டிகையில் கலந்து கொண்ட
வாலிபர் ஒருவர் வெட்டி படு கொலை செய்ய பட்டுள்ளார்
சடலம் மீட்க பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சீனாவிடம் இருந்து 1.5 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
சீனாவிடம் இருந்து 1.5 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
சீனா அரசிடம் இருந்து இலங்கை 1,5 பில்லியன் அமெரிக்கா டொலரை கடனாக பெறுகிறது
நாடு பலத்த கடன் சுமையில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் மீளவும் கடனை பெற்று
வருகின்றமை குறிப்பிட தக்கது
புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு
புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.
குறித்த நபர், நேற்று (26) காலை 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
கொரனோவால் 19 பேர் மரணம்
கொரனோவால் 19 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 19 பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,உயிர் இழப்பை மேலும் அதிகரிக்கலாம் என
அஞ்ச படுகிறது .
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவிட்டுக்கான
மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி,இதற்கான விதி முறை
அமுலாக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்குள், அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர
வண்டிகளுக்கு கட்டணங்களை அறவிடுவதற்கான மீட்டரை பொருத்துதல் கட்டாயமாக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்
பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த தந்தை 2 மகன்கள்
பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த தந்தை 2 மகன்கள்
அமெரிக்கா Quakertown பகுதியில் நத்தார் தினத்தன்று வீடொன்று திடீரென தீப்பற்றி கொண்ட
து ,இதில் அந்த தீயில் சிக்கி இரு மகன்கள் மற்றும் தந்தை உள்ளிட்டோர் உயிரோடு எரிந்து பலியாகினர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை
வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை
பிரிட்டன் வட கடல் பகுதி வழியாக ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் ஊடுருவி வேவு பார்ப்பதில்
தீவிரம் காட்டி வருகின்றன ,மேற்படி ரசிய கப்பல்கள் ஊடுருவலை தடுக்கும் முகமாக தற்போது
பிரிட்டன் போர் கப்பல்கள் ரோந்து பணியை அதிகரித்துள்ளன
மேலும் ரசியாவின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன,இதனால்
நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து காண படுகிறது
மசூதிக்குள் புகுந்து மக்களை குத்திய நபர் – ஐவர் காயம்
மசூதிக்குள் புகுந்து மக்களை குத்திய நபர் – ஐவர் காயம்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றுக்குள் கத்தியுடன் நுழைந்த நபர்
ஒருவர் அங்கிருந்த மக்களை மீது சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்
இதன் பொழுது ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் தொடர்
சிகிச்சை பெற்றுள்ளனர் ,இந்த தாக்குதலை ஐ எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை
சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை
சன்னி லியோன் நடனம் ஆடிய பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்குள் பாடலை நீக்கவில்லை என்றால்…சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை
சன்னி லியோன்
கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை
சன்னி லியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நடனம்
இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
நரோட்டம் மிஸ்ரா
இதையடுத்து அந்த பாடலை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளது.
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்
திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்
பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்
பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்.
2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம்
தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட
பாடல்களையும் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது
குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது
பிரிட்டன் ராணி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும்
மருமகள் கமீலாவுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் கோட்டைக்குள் மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன்
அத்துமீறி நுழைய முயற்சித்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்
- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது
- அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு
பிக்பாஸ் தாமரை செக்ஸ் பேச்சு – இணையத்தில் கலக்கும் VIDEO
பிக்பாஸ் தாமரை செக்ஸ் பேச்சு – இணையத்தில் கலக்கும் VIDEO
பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு அக்க போடு போடும் தாமரையின் மேடை நிகழ்வில்
ஆபாசமாக பேசுகிறார்
அந்த பேச்சு இப்பொழுது
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை

அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
இலங்கை யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள்
மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்
இதில் 27 வயது வாலிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் ,வண்டியை நிறுத்த முற்பட்ட பொழுதும்
நிறுத்தாமல் சென்ற நிலையில் இந்த சூடு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது
பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது
இலங்கை பொலனறுவை பகுதியில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள காவல்துறை
அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்










