Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடு புகுந்து வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வீடு புகுந்து வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

யாழ்.ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞர் குழு தாக்குவதை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தை நிறுத்திய அவர் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்துவைக்க முயற்சித்த நிலையில், சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும், அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த ஒரு குழுவினர் முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியால் சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறப்படும் நபர்களை கண்டதும் குழப்பம் விளைவித்த குழு அங்கிருந்து சென்றுள்ளது.

இந்த நிலையில் சமாதானம் பேசுவதற்கு சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் அங்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறிய நபர்கள் அழைத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுங்கள். என ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.

அதற்கமைய இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,

சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்ததாகவும் வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிய முடிகின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    கொவிட் தடுப்பூசியினால் பாலியல் பிரச்சினை

    கொவிட் தடுப்பூசியினால் பாலியல் பிரச்சினை

    கொவிட் தடுப்பூசியினால் பாலியல் பிரச்சினைகள் மற்றும் மலட்டுத் தன்மை என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

    இன்று உலக நாடுகள் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன. இலங்கையிலும் தற்போது மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

    கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதனால் அதன் பின் விளைவாக, பாலியல் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக வதந்திகளும் இடம்பெற்றுவருகின்றன.

    மக்கள் மத்தியில் அச்சமும் இடம்பெறுகின்றன. மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. கொவிட் தடுப்பூசியினால் இவ்வாறான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதற்கான எவ்வித தகவல்களும் இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் அவ்வாறான முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை.


    ஆனால். கொவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு பிற்காலத்தில் நோய் பின் விளைவு காரணமாக இந்த குறைபாடுகள், அதாவது பாலியல் பிரச்சினைகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


    எனவே, வதந்திகளை நம்பாது தமது ஆரோக்கியத்திற்காக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு பெறுமாறும் விசேட வைத்திய நிபுணர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.


    கொவிட் தொற்றினால் ஏற்படக்கூடிய மரணங்களை குறைத்துக் கொள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிகச் சிறந்தது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விசேட வைத்திய நிபுணருமான நீலிகா மல்லவிகே தெரிவித்துள்ளார்.


    பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் அவசியம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்இ நேற்று (13) இடம்பெற்ற
    இந்நிகழ்வில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…


    கொவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்க கூடியவர்களாக முதியவர்கள் காணப்படுகின்றார்கள். பொதுவாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நோய்களை கொண்டவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன்இ மரணங்களையும் சந்திக்கின்றனர்.


    இலங்கையில் கொவிட் டெல்டா வகை திருப்பினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஒமிக்ரோன் திரிபு நாட்டில் மிகவும் வேகமாக பரவும் நிலை காணப்படுகின்றது.
    டெல்டா வகை வைரஸ் திரிபுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் வைரஸ் திரிபு ஊடாக பாதிப்புக்கள் மற்றும் மரண வீதம் என்பன குறைவாக காணப்படுகின்ற போதிலும், இந்த ஒமிக்ரோன் வைரஸானது டெல்டா வகை திரிபை விட மிக வேகமாக பரவக்கூடியது.


    அமெரிக்காவில் நாளொன்றிற்கு ஒரு பில்லியன் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுகின்றது. அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. அத்துடன் நாளொன்றுக்கு சுமார் 1500 – 2000 பேர் வைரஸ் தொற்றினால் இறக்கின்றனர்.


    அதேபோன்று பிரித்தானியாவிலும் வைரஸ் தொற்றினால் நாளொன்றுக்கு சுமார் 300 மரணிக்கின்றனர். அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.
    அந்த நாடுகளில் தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்ட போதிலும், அதிகளவிலான நோயாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகின்றன. இதனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் ஊடாக என்ன பயன் காணப்போகின்றோம் என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவில் 12.5 வீதமானோர் அதாவது 85 மில்லியன் மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியைக் கூட பெற்றுக் கொள்ளாதவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் அங்கு நோய் தொற்று மிக விரைவாக பரவுகின்றது. வைத்தியசாலைகளில் அனுமதிக்க கூடிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.
    ஐரோப்பியா மற்றும் அனேகமான நாடுகளிலும் இந்த நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் தடுப்பூசியை எதிர்க்கின்றனர்.
    அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இலங்கை அதைவிட முன்னிலையில் இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
    மேலும், கொவிட் தொற்று ஏற்பட்டால் மிக விரைவில் மரணத்தை சந்திக்க கூடியவர்களாக முதியோர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்கள் காணப்படுகின்றனர். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொள்வதன் ஊடாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்க கூடியவர்களின் எண்ணிக்கையை 50% மாக குறைத்துக் கொள்ள முடியும் ஆனால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப் பட வேண்டிய நிலை 90 சத வீதத்தால் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    எனவே, மக்கள் வதந்திகளை நம்பி அச்சம் கொள்ளாது, தம் உடல் நலத்திற்காக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது என்றும், அதன் ஊடாக நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விசேட வைத்திய நிபுணருமான நீலிகா மல்லவிகே மேலும் தெரிவித்துள்ளார்.

    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in Uncategorized

    யாழில் வயிற்றிற்குள் துணியை வைத்து தைத்ததால் பெண் ஒருவர் பலி

    யாழில் வயிற்றிற்குள் துணியை வைத்து தைத்ததால் பெண் ஒருவர் பலி

    நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திர சிகிச்சை

    மேற்கொண்ட மருத்துவ குழு உள்ளிட்ட விவரம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

    பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்தார்.

    பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

    அதனால் நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10 ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

    இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.

    மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

    சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.

    அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் வழங்கப்பட்டது.

    சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், தனியார் மருத்துவமனை பணிப்பாளர், மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை இன்று மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

    பெண்ணின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவாவிடம் இன்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது.

    தொடர்ந்து இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்துக்குச் சென்ற நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.

    உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவை வரும் ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதிவான் மன்றில் முன்வைக்கவேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

      Posted in சினிமா

      ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்… ரஜினி

      ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்… ரஜினி

      பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

      ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்… ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
      ரஜினி


      பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து

      தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஆரோக்கியமான பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

      ரஜினியின் பதிவு

      தனது சமூக வலைத் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று

      நாளுக்கு நாள் அதிகமாகிட்டுருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா

      கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு

      மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் தின நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

        காயத்ரி
        Posted in சினிமா

        கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி

        கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி

        விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காயத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

        கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி… வைரலாகும் புகைப்படம்
        காயத்ரி


        சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

        காயத்ரி

        இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

        தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

          ஏவுகணை சோதனை
          Posted in Uncategorized

          வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

          வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

          வடகொரியா கடந்த இரு வாரத்தில் கடந்த தினத்துடன் மூன்று hypersonic ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ளது

          இந்த ஏவுகணைகள் தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது எனவும் இவற்றால் மிக பெரும்

          அழிவுகள் ஏற்படுத்தும் திறன் கொண்டவை என தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளது

          இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்காவும் உறுதி படுத்தியுள்ளது ,அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு


          உள்ளாகியுள்ள நிலையில் ,தமது தேசிய பாதுகாப்புக்கு என வடகொரியா அணுகுண்டுகளை காவி

          சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தொடராக சோதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

            நில நடுக்கம்
            Posted in Uncategorized

            இந்தோனேசியாவில், சுனாமி எச்சரிக்கை நில நடுக்கம்

            இந்தோனேசியாவில், சுனாமி எச்சரிக்கை நில நடுக்கம்

            இந்தோனேசியாவில் கடந்த தினம் 6.7-அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டுள்ளது
            இது சுனாமி எச்சரிக்கையாக இருந்துள்ளது

            எனினும் இங்கு சுனாமி ஏற்படவில்லை

            இந்த சம்பவத்தின் பின்னர் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

            யகட்டாவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

              அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

              அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
              கடந்த தினம் மட்டும் 2,129 பேர் பலியாகியுள்ளனர்


              மேலும் எட்டு லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

              இதே போல பிரிட்டனில் 270 பேர் பலியாகியும் 99,652 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                கைது
                Posted in Uncategorized உலக செய்திகள்

                லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                லண்டன் Chatham. பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் முற்றுகையின் பொழுது ஐந்து பேர் கைது செய்ய பட்டனர்


                கைதானவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது

                கைதானவர்க்ளிடம் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

                  ரணில் மைத்திரி
                  Posted in இலங்கை செய்திகள்

                  முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை

                  முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை

                  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்

                  அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில்

                  தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

                  தாக்குதலை தவிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தீவிரவாதிகளுக்கு எதிராக கனிவான நிலைப்பாட்டை பிரதமர் கொண்டிருந்தார் என அந்த

                  ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

                  எனவே தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.

                  தற்கொலை செய்து கொண்ட நபர், தமக்கு நீதி கிடைக்காததன் காரணமாக கடும் மன

                  அழுத்தத்துக்கு ஆளாகி, தமது பிள்ளைகளையும் தனித்துவிட்டு அவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டுள்ளதாக பேராயர் மேலும் குறிப்பிட்டார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

                    கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

                    வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின்

                    விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

                    இம்மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், அரச அல்லது தனியார்

                    காணிகளில் இடம்பெறும் நிர்மாணங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் விவரங்கள் திரட்டப்படும்.

                    தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    இந்த 3 நாட்களுக்குள் உங்களின் பிரதேசத்துக்கு வருகை தரும் பொலிஸ் அதிகாரிகள் வழங்கும் படிவத்தைப் பெற்று, தற்காலிகமாக உங்கள் வசிப்பிடத்தில் காணப்படும் நபர்களின்

                    விவரங்களைக் குறிப்பிட்டு அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அந்த அதிகாரிகளிடம்

                    ஒப்படைக்குமாறு அல்லது அருகாமையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் கொரானாவுக்கு 11 பேர் மரணம்

                      இலங்கையில் கொரானாவுக்கு 11 பேர் மரணம்

                      இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

                      தினம் 11 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        கொழும்பு நகரில் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை

                        கொழும்பு நகரில் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை

                        தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு கொழும்பு நகரில் இன்று (14) முதல் மூன்று

                        தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக

                        பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

                        தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, குற்றச்செயல்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தை

                        ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் தேசிய பாதுகாப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வர்த்தகர் நுவரெலியாவில் சடலமாக மீட்பு

                          வர்த்தகர் நுவரெலியாவில் சடலமாக மீட்பு

                          நுவரெலியா -பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட “டேப்பன்டைல்” வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று, (13) மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

                          இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நீர்கொழும்பு குணரத்தின மாவத்த 50 ஏக்கர் கிராமம் பகுதியை சேர்ந்த சத்துருவான் ஹப்புகாமி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இவர் வர்த்தகர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

                          பட்டிப்பொல நகரில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள உலக முடிவு பகுதிக்கு செல்லும் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

                          தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

                          சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோசணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு

                          செல்லப்படும் எனவும் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்த நபர் பயணித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.

                            ஏமான் இராணுவம்
                            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                            சவூதி மீது கடும் நடத்துவோம் – ஏமான் எச்சரிக்கை

                            சவூதி மீது கடும் நடத்துவோம் – ஏமான் எச்சரிக்கை

                            ஏமான் நாட்டில் சவுதி ஆதரவு படைகளினால் அபகரிக்க பட்டுள்ள தெற்கு மற்றும் Shabwa


                            மாகாணத்தை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் அது தவறின் சவூதி நாட்டுக்குள் ஆழ நுழைந்து

                            தொடர் தாக்குதலை நடத்துவோம் என ஏமான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது

                            ஈரானிய ஆதரவு பெற்றுள்ள குறித்த இராணுவ பிரிவு உளவு விமானம் மற்றும் ஏவுணைகள் மூலம் சவுதிக்குள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்

                            அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக சவூதி செயல் பட்டு வருவதால் கடும் கோபத்தில் ஈரான் உறைந்துள்ளது

                            இதனால் ஈரான் தற்போது தனது ஆதரவு படைகள் மூலம் தமது எதிரிகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                              குண்டு வெடிப்பு
                              Posted in Uncategorized

                              லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு -இஸ்ரேல் நாசகார வேலை

                              லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு -இஸ்ரேல் நாசகார வேலை

                              லெபனான் நாட்டுக்குள் மீளவும் இன்று மூன்று பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது ,இந்த

                              குண்டு தாக்குதல் பெரும் சத்தத்துடன் அதிர்ந்த வண்ணம் இருந்தது

                              இஸ்ரேல் உளவுத்துறையால நன்கு திட்டமிடப்பட்டு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                              இதனால ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                                ரஷியா இராணுவம்
                                Posted in Uncategorized

                                உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

                                உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

                                உக்கிரேன் எல்லையி, பத்து ஆயிரம் ரஷியா இராணுவத்தினர் அதி நவீன ஆயுதங்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்

                                மேற்படி இராணுவ ஒத்திகை பெரும் போர் பதற்றத்தை இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தியுள்ளது

                                நேட்டோ படையில் உக்கிரேன் இணையவுள்ளதாக அறிவிக்க பட்டு வரும் வேளையில் ரஷியா

                                இந்த திடீர் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதுடன் ,ஆயிர கணக்கில் துருப்புக்களை குவித்துள்ளது


                                பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

                                  கழுத்து வலி
                                  Posted in மருத்துவம்

                                  கழுத்து வலிக்கு காரணம்

                                  கழுத்து வலிக்கு காரணம்

                                  கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

                                  கழுத்து வலிக்கு முக்கிய காரணம்
                                  கழுத்து வலி
                                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                  ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ என்று அழைக்கப்படும் கழுத்து வலியானது, முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்தது.

                                  இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது. கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப்பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை

                                  அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது,

                                  நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்திருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

                                  கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

                                  பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது, இப்போது அதிமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

                                  கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயை புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியை சாதாரண வலி மாத்திரைகள்,

                                  களிம்புகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்து கொள்வது, பிசியோதெரபி போன்றவை பலன் தரும். நோயின்

                                  தன்மையை பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். எனவே எலும்பு நலச்சிறப்பு மருத்துவரையோ, நரம்பு நலச்சிறப்பு மருத்துவரையோ நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

                                  உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால் ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும்.

                                  புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.

                                    Posted in சினிமா

                                    காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் – பார்த்திபன் நெகிழ்ச்சி

                                    காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் – பார்த்திபன் நெகிழ்ச்சி

                                    இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவருடைய சமூக வலைத்தளத்தில் காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

                                    காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் – பார்த்திபன் நெகிழ்ச்சி
                                    பார்த்திபன்


                                    இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் “அழகி”. இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உட்பட பல நடிகர்கள்

                                    நடித்திருந்தார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்

                                    வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப்படத்திற்கான பல விருதுகளையும் குவித்தது.

                                    இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அழகி age 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா,

                                    தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க.. அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு. (எனக்கோ என்றும் காதல் தாண்டா

                                    கவிமனது!) எப்டி^ Bracket ^ பண்றதுங்கிறதை கத்துக்கிறதுதான் மைய(ல்) பகுதி of காதல்! சரி matterக்கு வருவோம்.. அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே

                                    சேரும். அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட

                                    காரணம், ஒப்பனையில்லா நிஜதன்மை நிறைந்த காதல். எல்லோர் வாழ்விலும் வந்துப் போன (அ) நொந்துப் போன காதல் வடு ‘அழகி’! தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி

                                    என்றளவில் இன்றளவும் இதயத்தை (20)வருட சண்முகத்தின் part 1, part 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால்,Part 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த

                                    முயற்சிக்கிறார் திரு தங்கர்.ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2 ! என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார்.

                                      Posted in சினிமா

                                      சமந்தாவை பிரிவு – மவுனம் கலைத்தார் நாக சைதன்யா

                                      சமந்தாவை பிரிவு – மவுனம் கலைத்தார் நாக சைதன்யா

                                      இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் அவள் சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

                                      சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதல்முறையாக மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
                                      நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா


                                      தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த

                                      2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத சடங்குகளின்படி அவர்களது திருமணம் இரண்டு முறை நடைபெற்றது.

                                      திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

                                      எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும். நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு, சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு

                                      செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில்

                                      எப்போதும் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார்.

                                      இந்நிலையில் தந்தை நாகர்ஜுனாவும் சேர்ந்து நடித்திருக்கும் பங்கராஜு திரைப்படம் தொடர்பாக பேட்டி அளித்த நாக சைதன்யா அதில் சமந்தாவை பிரிந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

                                      அந்த வீடியோவில், “பிரிந்திருப்பது பரவாயில்லை. அது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக

                                      எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. அவர் (சமந்தா) மகிழ்ச்சியாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். அது போன்ற சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவை

                                      பிரிந்தது தொடர்பாக முதன் முறையாக நடிகர் நாக சைதன்யா பேசியிருப்பது குறித்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.