அமெரிக்கா இராணுவம்
Posted in Uncategorized

ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடராக நாள் தோறும் தாக்குதல்கள் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளன

ஈரானிய ஆதரவு குழுக்கள் இந்த தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

Basra மாகாணத்தின் வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ அணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில்


கவச வண்டிகள் தாக்கி அழிக்க ,பட்டுள்ளன ,இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட உரிய இழப்பு தொகை வெளியிட படவில்லை

    உலக வங்கி
    Posted in Uncategorized

    ஈரான் பொருளாதாரம் 3.1% அசுரர் வளர்ச்சி – உலக வங்கி பாராட்டு – கொதிக்கும் அமெரிக்கா

    ஈரான் பொருளாதாரம் 3.1% அசுரர் வளர்ச்சி – உலக வங்கி பாராட்டு – கொதிக்கும் அமெரிக்கா

    ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை வித்திள்ளது ,அவ்வாறு விதித்தும் அந்த

    நாடு நெருக்கடிக்கு மத்தியில் இருந்து தமது நாட்டை 3.1% வீதம் பொருளாதாரத்தில் உயர்த்தி சென்றுள்ளது

    இந்த முன்னோக்கி பாய்தல் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப்படை நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    முக்கிய தலைவர்களை கொலை செய்தால் அந்த நாடு உலக வரை [படத்தில் இருந்து காணமல்

    போய்விடும் என கனவு கண்டா அமெரிக்கா இஸ்ரேலுக்கு இந்த தகவலானது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

      வடகொரியா ஏவுகணை
      Posted in Uncategorized

      வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

      வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

      வடகொரியா உலக சண்டியர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து

      வருகிறது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவ்வகையான ஏவுகணைகள் முக்கியமானவை

      என்பதால் தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறதது

      இவ்விதம் சில நாட்களுக்கு முன்னர் சோதிக்க பட்ட கைபிரோனிக் வகையை சேந்த

      ஏவுகணையானது ஏனைய ஏவுகணைகளை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டதாகக் வடிவமைக்க பட்டுள்ளது

      இதன் வேகமானது நிமிடம் ஒன்றுக்கு 3850 மைல் வேகத்தில் பறந்து சென்றும் தாக்கும் திறன்

      கொண்டதாகவும் ,இதன் தாக்குதல் எல்லை ஆயிரம் மைல்கள் ஆக உள்ளது ,இதுவே தான்

      அமெரிக்கா ,ஜப்பானை,தென்கொரியாவை மிரள வைத்துள்ளது ,இந்த சோதனையை அடுத்து

      வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முனைந்து வருகிறது

        Posted in Uncategorized

        லாட்டரியில் கேரள தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு

        லாட்டரியில் கேரள தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு


        அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, விற்பனையாளரிடம் இருந்து அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

        புத்தாண்டு பம்பர் லாட்டரியில் கேரள தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு
        லாட்டரி சீட்டில் ரூ.12 கோடி பரிசு வென்ற சதானந்தன்

        கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது அய்மனானம் கிராமம். இங்கு வசிக்கும் பெயின்டிங் தொழிலாளி சதானந்தன். நேற்று காலை ஒரு விற்பனையாளரிடம் இருந்து

        கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி உள்ளார். சில மணி நேரங்கள்

        கழித்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கலில் சதானந்தன் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி பரிசு கிடைத்தது.

        சதானந்தன் இது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

        கடந்த 50 ஆண்டுகளாக பெயின்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஞாயிற்றுக் கிழமை காலை

        இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றேன். செல்வனிடம் (லாட்டரி

        விற்பனையாளர்) பரிசு பெற்ற சீட்டை வாங்கினேன். இந்தத் பரிசுத் தொகையை குழந்தைகளின்

        வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த பயன்படுத்துவேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

          ராஜு ஜெயமோகன்
          Posted in Uncategorized சினிமா

          பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?

          பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?

          நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

          பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
          ராஜு ஜெயமோகன்


          தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதன் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற

          ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

          சின்னத்திரையில் களம் இறங்கி பெரிய ரசிகர்களை கவர்ந்த ராஜு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் அந்த வீட்டின் டப் காம்பட்டீட்டராக இருந்து வந்தார். இந்த சீசனில் வெற்றி

          பெற்றது ராஜு என்று கூறப்படுகிறது. தொகுப்பாளராக பணியாற்றி பெரிய ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா 2வது இடத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

          3வது இடத்தை பாவனியும், 4வது இடத்தை அமீரும், 5வது இடத்தை நிரூப் பிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

            Posted in Uncategorized

            பிரிட்டனில் கொரானாவுக்கு 287 பேர் பலி

            பிரிட்டனில் கொரானாவுக்கு 287 பேர் பலி

            பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 287 பேர்

            பலியாகியுள்ளனர்
            மேலும் 81 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

            இதே போல அமெரிக்காவில் 886 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 404 ஆயிரம் பேர் பாதிக்க

            பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

              ஆயுதங்கள்
              Posted in உலக செய்திகள்

              ஆயுத கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஆயுதங்கள்

              ஆயுத கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஆயுதங்கள்

              ஈராக் இராணுவத்தினர் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு கடத்தி செல்லப்பட்ட நவீனரக ஆயுதங்களை
              தடுத்து மீட்டுள்ளனர்

              ஈராக்கின் Takfiri ஆளுகை பகுதியில் இடம்பெற்ற இந்த பெரும் ஆயுத கடத்தல் முறியடிக்க

              பட்டுள்ளதுடன் ,அந்த ஆயுதங்கள் யாவும் இராணுவத்தால் மீட்க பட்டுள்ளது

              தொடர்ந்து தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன

                தற்கொலை குண்டு தாக்குதல்
                Posted in Uncategorized

                அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்

                அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்

                சோமாலிய அரச பேச்சாளர் இல்லம் அருகில் ,அவரை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை

                குண்டு தாக்குதலில் சிக்கி அவர் பலத்த காயமடைந்துள்ளார்

                தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

                இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

                  வெடித்த குண்டு
                  Posted in Uncategorized

                  வெடித்த குண்டு பலர் மரணம்

                  வெடித்த குண்டு பலர் மரணம்

                  ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் வெடித்து சிதறிய கூண்டில் இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும்

                  மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                  தலிபான்கள் ஆட்சியில் தொடராக அதன் தலைநகரில் குண்டுகள் வெடித்து வருகின்றமை

                  அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                    மாடியிலிருந்து பாய்ந்
                    Posted in இலங்கை செய்திகள்

                    மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்

                    மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்

                    வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடியொன்றின் 7ஆம் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                    குறித்த நபர் 7ஆம் மாடியிலிருந்து கீழ் நோக்கி பாய்ந்துள்ளதாகவும் இதன்போது பலத்த காயமடைந்த நிலையில், களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக வௌ்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

                    இவ்வாறு உயிரிழந்தவர் வௌ்ளவத்தையைச் சேர்ந்த 87 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், குறித்த முதியவர் உளநல பாதிப்பால் இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

                      யானை
                      Posted in இலங்கை செய்திகள்

                      வீதியால் சென்றவரை தாக்கிய யானை

                      வீதியால் சென்றவரை தாக்கிய யானை

                      வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் இன்று (16)

                      யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

                      கொண்டயன்கேணியில் இருந்து இன்று அதிகாலை இருவர் காயான்கேணி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.

                      இதன்போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர் தப்பியோடியுள்ளார். அவர்கள் பயணித்த சைக்கிளையும் யானை சேதப்படுத்தியுள்ளது.

                      வாழைச்சேனை, கொண்டயன்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே.தஸீஸ்கரன் (வயது 25) என்பவரே யானையால் தாக்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்

                      அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                      யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படும் இப்பிரதேசத்தில் யானை வேலி அமைக்காவிட்டாலும் வீதி மின் விளக்குகளைப் பொருத்தியாவது தமது பாதுகாப்பை

                      உறுதிப்படுத்துமாறு, வாழைச்சேனை பிரதேச சபையிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்கள் கண்டுபிடிப்பு

                        இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்கள் கண்டுபிடிப்பு

                        இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன

                        தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளது.

                        இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து

                        கொள்வனவுசெய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                        காஸ் சிலிண்டர்
                        Posted in இலங்கை செய்திகள்

                        சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி

                        சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி

                        காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

                        நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான காஸ் சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை. இதேவேளை, சிறிய அளவிலான

                        வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி காஸ் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருக்கின்றது. கடந்த காலங்களில் நாளாந்த காஸ்

                        சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு லட்சமாகக் காணப்பட்டது.

                        எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் காஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது.

                        எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட காஸ் சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வாக்குறுதிகளை 3 வருடத்தில் நிறைவேற்றுவோம் கோட்டா உறுதி

                          வாக்குறுதிகளை 3 வருடத்தில் நிறைவேற்றுவோம் கோட்டா உறுதி

                          மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

                          இது தொடர்பான நிகழ்வு நேற்று (15) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் குருணாகல் – யக்கபிட்டியவில் நடைபெற்றது.

                          சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி 41 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இது ஐந்து இடைமாறல் பகுதிகளைக் கொண்டது. மீரிகம, நாக்கலாகமுவ. தம்பொக்க, குருணாகல், யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

                          நான்கு ஒழுங்கைகளைக் கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

                          ஆட்சிக்கு வந்து 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த சகல விடயங்களையும் எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்நிகழ்வின் போது உறுதியளித்தார். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவை. மக்களுக்காக சேவையாற்றுவதற்கே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

                          நாட்டின் அபிவிருத்திக்கு முறையான போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும். இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளையும் கிராமிய வீதிகளையும் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த நிகழ்வின் போது கூறினார்.

                          அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் போது விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. எனினும்இ தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிவேக நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பொறுப்புடன் பணியாற்றுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

                          கிரண்
                          Posted in சினிமா

                          பிகினி உடையில் வலம் வரும் கிரண்

                          பிகினி உடையில் வலம் வரும் கிரண்

                          ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

                          பிகினி உடையில் வலம் வரும் கிரண்… வைரலாகும் வீடியோ
                          கிரண்


                          ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன்

                          ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

                          குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது.

                          இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

                          தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

                          இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வின்னர் படம் நியாபகம் வருகிறது என்றும், வயதானாலும் இளமை குறையவில்லை என்றும் பதிவு செய்து வருகிறார்கள்.

                            மனித தலை
                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆற்றில் மிதந்து வந்த மனித தலை – அதிர்ச்சியில் பொலிஸ்

                            ஆற்றில் மிதந்து வந்த மனித தலை – அதிர்ச்சியில் பொலிஸ்

                            வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று 3 மணியளவில் சடலமொன்றில் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய

                            தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

                            ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ள நிலையில், கிரான் பகுதியில் ஆற்றில்

                            காணாமல் போன மாணவர்ளின் சடலமோ என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

                            இந்த நிலையில் குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

                            ஆற்றில் மிதந்தது சடலமா, அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என பொலிஸார் மற்றும்

                            சுழியோடிகள் சந்தேகத்தோடு ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடிக் கொண்டிருப்பதை காண

                            முடிவதுடன், இதனை கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

                            யானைகள்
                            Posted in இலங்கை செய்திகள்

                            பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறந்த 20 யானைகள்

                            பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறந்த 20 யானைகள்

                            இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை பள்ளக்காடு என்ற பகுதியில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக்

                            கழிவுகளை உண்ட யானைகள் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            கடந்த எட்டு ஆண்டுகளில் இதே பகுதியில் 20 யானைகள்பலியாகியுள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது


                            அரசினதும் ,மக்களினதும் அலட்சிய போக்கின் காரணமாகவே இந்த அசம்பாவிதங்கள்

                            இடம்பெற்றுள்ளதக தெரிவிக்க படுகின்றமை குறிப்பிடத்தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              தமிழர்களுக்கு இந்த ஆண்டு தீர்வு கிடைக்குமாம் – வாய்வீரர் சாணக்கியன்

                              தமிழர்களுக்கு இந்த ஆண்டு தீர்வு கிடைக்குமாம் – வாய்வீரர் சாணக்கியன்

                              தமிழர்களுக்கு சிறந்த தீர்வு ஒன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என தமிழ்த்

                              தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

                              களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் நேற்று (14) பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

                              குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

                              நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

                              இதேவேளை, குறித்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்

                                இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்

                                நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                                கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                இதன் காரணமாக மீண்டும் கொரோனா அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                ஒமிக்ரோன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது. அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பொங்கல் வேளை வெடித்த அடுப்பு

                                  பொங்கல் வேளை வெடித்த அடுப்பு

                                  கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்தூர நவஜனப்பதய பிரதேசத்தில், ஒரு வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது.

                                  பொங்கல் தினமான நேற்று, காலை உணவை சமைத்துக் கொண்டு இருந்த போது திடீரென அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

                                  சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

                                  கம்பளை மாவத்தூர நகரில் இருக்கும் எரிவாயு சிலிண்டர் வியாபார நிலையத்திற்கு புதிதாக 60 சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

                                  நேற்று முன்தினம் அந்த கடையில் வாங்கிய புதிய சிலிண்டராலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்