மின்சார பணம் செலுத்தாத மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

இலங்கையில் தொடரும் மின்வெட்டுக்கு இடையில் அந்த மின்சாரத்தை பயன்படுத்தி வந்த மக்கள்

,பயனாளர்கள்,தமது பயன்பாட்டு மின்சார பணத்தை செலுத்தாமை உள்ளதாக மின்சார வாரியம்

தெரிவித்துள்ளது

இவ்விதம் 44 மில்லியன் ரூபாய்கள் செலுத்த படாது உள்ளதாகவும் விரைவில் இவற்றை பெற்றுவிட நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதிவேக சாலை
Posted in இலங்கை செய்திகள்

புதிய அதிவேக சாலை திறப்பு – குஷியில் மக்கள்

புதிய அதவேக சாலை திறப்பு – குஷியில் மக்கள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுப் போக்குவரத்திற்காக எதிர்வரும் 20ம் திகதி திறக்கப்படும்.

முதல் கட்டத்தில் கண்டி – கொழும்பு மற்றும் கொழும்பு – குருநாகல் பஸ் வண்டிகளுக்கு பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்


. இதேவேளை, நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து நேற்று நண்பகல் வரை குறித்த வீதியில் பயணித்த வாகனங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்படவில்லை.

    Posted in சினிமா

    மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி

    மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

    மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்
    ஐஸ்வர்யா – தனுஷ்


    தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு

    நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து

    இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.

    இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும்

    ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார்.

      விஜய் - பிரியங்கா சோப்ரா
      Posted in சினிமா

      விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை

      விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை

      முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபல நடிகை ஒருவர், அவரிடம் கற்றுக் கொண்ட பழக்கத்தை தற்போதும் பின்பற்றுவதாக கூறி இருக்கிறார்.

      விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
      விஜய்


      விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் சென்றவர் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டார். ஆனால்

      விஜய்யிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

      விஜய் – பிரியங்கா சோப்ரா

      இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, “தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்தாலும் கூட கேரவன் பக்கமே போகாமல்

      செட்டிலேயே அமர்ந்திருப்பார் விஜய். அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன். படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக

      நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு செல்வேன். மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதுபற்றியாவது தெரிந்து கொள்வதற்காக சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார்

        பிரிட்டன் கடற்படை
        Posted in Uncategorized

        பிரான்ஸ் கடல் எல்லையில் பிரிட்டன் கடற்படை விசேட ரோந்து

        பிரான்ஸ் கடல் எல்லையில் பிரிட்டன் கடற்படை விசேட ரோந்து

        பிரிட்டனுக்குள் பிரான்ஸ் கடல் வழியை பயன்படுத்தி படகு மூலம் அகதிகள் நுழைந்து வரும்

        நிலையில் அதனை தடுக்கும் முகமாக பிரிட்டன் கடற்படையினர் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளன

        பல நீரூந்து விசை படகுகள் இந்த விசேட பணியில் ஈடுபடுத்த படவுள்ளன

        இந்த படையினர் ஈடுபடுத்த பட்டாலும் இந்த அகதிகள் வரவை தடுத்து நிறுத்த முடியுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

        அகதிகள் விடயம் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ள நிலையில் இந்த நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன

          Posted in உலக செய்திகள்

          நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்

          நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்

          இன்று Afghanistan தெற்கு பகுதியில் இடம்பெற்ற திடீர் நில நடுக்கத்தில் சிக்கி இருபத்தி இரண்டு

          பேர் பலியாகியுள்ளனர்

          மேலேயும் உடைமைகள் பல சேதமடைந்துள்ளன

          பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            விமானங்கள் திடீர் இரத்து
            Posted in Uncategorized

            அமெரிக்காவில் 270 விமானங்கள் திடீர் இரத்து – பயணிகள் அவதி

            அமெரிக்காவில் 270 விமானங்கள் திடீர் இரத்து – பயணிகள் அவதி

            அமெரிக்காவில் இடம்பெற்று வரும் பாரிய பனிமழை புயல் காரணமாக 2700 பயணிகள்

            விமானங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன

            மேலும் 1500 விமானங்கள் தாமதமாக தரை இறக்க பட்டன

            தொடர்ந்து சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் மேலும் விமான பயணங்கள் தடை படலாம்

            என எதிர்பார்க்க படுகிறது

              விமானம் தாக்கி அழிப்பு
              Posted in Uncategorized

              புலிகள் பாணியில் இராணுவ சரக்கு விமானம் தாக்கி அழிப்பு

              புலிகள் பாணியில் இராணுவ சரக்கு விமானம் தாக்கி அழிப்பு

              ஏமன் நாட்டு இராணுவ படைகள் Shabwah விமான நிலையத்தில் தரித்து நின்ற ஐக்கிய அரபு

              எமிரேட்ஸ் விமானத்தை தாக்கி அழித்துள்ளதாக அறிவித்துள்ளது

              24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இரண்டாவது மிக பெரும் தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது

              ஏமன் நட்டு இராணுவத்தினரை அழிக்கும் முகமாக சவுதியுடன் இணைந்து ஆயுதங்களை கப்பல்

              மூலம் அனுப்பிய நிலையில் , இந்த பழிவாங்கும் இராணுவ தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன


              இந்த தாக்குதலானது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                லண்டன் Bromley போலீஸ்காரர்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை

                லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை

                லண்டன் Bromley பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை ஊழியர் ஒருவர்

                15 வயது சிறுவன் ஒருவருக்கு பாலியல் செய்திகளை அனுப்பியுள்ளார்

                இந்த விடயமானது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நீக்க பட்டுள்ள்ளார்

                நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தற்போது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
                எனினும் 33 வயதுடைய இவருக்கு எதிர் வரும் மாதம் தீர்ப்பு வழங்க படவுள்ளது ,அதில் இவர்

                சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  எரியும் விமான நிலையம்
                  Posted in உளவு செய்திகள்

                  அபுதாபி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – எரியும் விமான நிலையம் – காணொளி

                  அபுதாபி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – எரியும் விமான நிலையம் – காணொளி

                  சற்று முன்னர் அபுதாபி விமான நிலையம் மீது ஏமன் இராணுவத்தினர் உளவு விமானம் நடத்திய 10 ஏவுகணை தாக்குதலில்


                  மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,மேலுமாறு பேர் காயமடைந்துள்ளனர்

                  ஆறு எண்ணெய் கூதங்கள் பற்றி எறிந்த வண்ணம் உள்ளன ,குறித்த நாடுகள் மீது தமது

                  தாக்குதல்கள் தொடரும் என அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  இதில் அழுத்தி காணொளி பார்க்க

                    Posted in இலங்கை செய்திகள்

                    திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை

                    திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் மரணம்

                    திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

                    திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                    நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில்

                    உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                    உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                    சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                    சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                      ஆடு
                      Posted in இலங்கை செய்திகள்

                      தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

                      தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

                      ஆடு ஒன்று தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் காணொளி ஒன்று


                      வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

                      மேற்படி சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        வீதியில் மிதந்த மனித சடலம்

                        வீதியில் மிதந்த மனித சடலம்

                        ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17)

                        காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

                        குறித்த வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், இந்த சடலத்தைக் கண்டு,

                        ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

                        எனினும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

                          ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
                          Posted in இலங்கை செய்திகள்

                          மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை

                          மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை

                          இணையத்தள நிறுவனத்தில் கைக்கடிகாரம் ஒன்றையை பதிவு செய்த நபருக்கு ஆணுறைகள் இரண்டு வந்துள்ளது. இதனையால் அதிர்ச்சியடைந்த நபர், இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

                          இன்றைய நவீன உலகில் எல்லாமே நமது விரல் நுனியில் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவார்கள்.

                          இதற்காக தனியாக ஒரு நாளையே ஒதுக்குவார்கள். இந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது நாம் விரும்பிய பொருளை இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது.

                          எங்கு இருந்து என்ன பொருள் பதிவுசெய்தாலும், அந்த பொருள் நம்மை தேடி வந்து விடுகின்றன. இதற்காக எக்கச்சக்கமான இணையத்தள நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இப்படி

                          பொருட்களை முன்கூட்டியே செய்யும்போது ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் பொதிகளில் பொருட்களே இருக்காது. சில நேரம் நாம் பதிவு செய்யப்பட்ட பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வரும்.

                          இந்த நிலையில் கேரளாவில் இணையளத்தளத்தில் கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்யவிருந்த நபருக்கு வந்த பொதியில், ஆணுறைகள் இரண்டு இருந்துள்ளன.

                          கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் இணையளத்தளத்தில் கைக்கடிகாரம் ஒன்றை பதிவு செய்துவிட்டு, அதற்காக ரூ.2,400-ஐ

                          முன்கூட்டியே செலுத்தினார். 15 ஆம் திகதி அவரது கைக்கு கைக்கடிகாரம் வந்து சேருமென இணையளத்தள நிறுவனம் கூறி இருந்தது.

                          குறிப்பிட்ட நாளில் அந்த இணையத்தள நிறுவனத்தில் இருந்து ​ஒரு பொதி வந்துள்ளது. நமது புதிய கைக்கடிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் அந்த பொதியை ஆர்வமுடன் பார்த்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பொதியில் இருந்து சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள்(கொண்டம்) இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

                          தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாராண ஆணுறையாகவும் இருந்தது. அவற்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். ”நான் கைக்கடிகாரம் தானே,

                          முன்பதிவு செய்தேன். எப்படி இது வந்தது?” என்று அவர் பொதியைக் கொண்டு வந்த நபரிடம் கேட்டார்.

                          அதற்கு அந்த நபர் ” இதில் எப்படி ஆணுறை (கொண்டம்) வந்தது என்று எனக்குத் தெரியாது. பொதியைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தான் எனது வேலை” என்று கூறினார்.

                          இதனை தொடர்ந்து அனில்குமார், கைக்கடிகாரத்தை பதிவு செய்த அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர்கள் உரிய பதிலை

                          அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி ஆலுவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

                          முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பாரிய விபத்து மூவர் மரணம்

                            பாரிய விபத்து மூவர் மரணம்

                            இலங்கை அம்பாறை பகுதியில் காரும் லொறியும் மோதி விபத்தில் சிக்கியதில்


                            சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்


                            மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

                            குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?

                              இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?

                              இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                              தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட

                              ஆய்வில் 85 விதமானவை ஓமிக்ரோன் தொற்றாளர்கள் என்பது உறுதி செய்யப்ட்டிருப்பதாக தெரிவித்தார்.

                              இதேவேளை கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை மாவட்டங்களில் அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ‘கொரோனா

                              ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ்’ தொற்றாளர்கள் இருக்கலாமென்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

                              182 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 162 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார வழிமுறைகளை முறையாகப்

                              கடைப்பிடிக்குமிடத்து இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். கொழும்பு, காலி, மாத்தறை,

                              கம்பஹா, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

                                Posted in சீமான் பேச்சு

                                ஆளும் கட்சியாக மாறும் நாம் தமிழர்..! சீமான் கண் அசைவில் மாறும் காட்சிகள் video

                                ஆளும் கட்சியாக மாறும் நாம் தமிழர்..! சீமான் கண் அசைவில் மாறும் காட்சிகள் video

                                அருமையான கருத்து இப்படி தன் தம்பி தங்கைகிடம் (கட்சிகாரர்களிடம்) எந்த தலைவன்

                                கூறுவான்?? மனதில் உண்மை நேர்மை இருந்தால் தான் இப்படி வார்த்தைகள் வரமுடியும்.

                                சீமான் ஒரு நல்ல பேச்சாளர் நம்ம மோடி மாதிரி. கேட்டுட்டு சிரிச்சிட்டு போய்டணும்.ஆரம்பத்தில்

                                நல்ல கொள்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இப்போது சில சந்தர்ப்பவாத அரசியல்

                                செய்யும் நிலைக்கு வந்து விட்டது.தமிழக மக்கள் இனிமேல் உங்களை ஆதரிப்பது கொஞ்சம் கஷ்டம்

                                இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

                                சீமான் வீட்டில்
                                Posted in Uncategorized

                                சீமான் வீட்டில் உளவுத்துறை// சீமான் சிக்கியது எப்படி? video

                                சீமான் வீட்டில் உளவுத்துறை// சீமான் சிக்கியது எப்படி? video

                                இதில் அழுத்தி காணொளி பாருங்க

                                Posted in சினிமா

                                இனிமேல் நான் வில்லிதான் – வனிதா

                                இனிமேல் நான் வில்லிதான் – வனிதா

                                விஜய்க்கு ஜோடியாக படங்களில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும்

                                கவர்ந்தவர் வனிதா விஜயகுமார் இவர் சமிபத்தில் நடந்த விழாவில் பேசிய வீடியோ வைரலாக பரவிவருகிறது.

                                இனிமேல் நான் வில்லிதான் – வனிதா விஜயகுமார்
                                வனிதா விஜயகுமார்


                                பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் தில்லு இருந்தா

                                போராடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியது வைரலாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது,

                                சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன். இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன்

                                . இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து

                                பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது.

                                வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடம்.

                                இதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றார்கள். எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட ஒரு நண்பரிடம்

                                கற்றுக்கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன்.

                                இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேசினார்.

                                  பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்

                                  அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்

                                  பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பிரான்ஸ் வழியாக நுழைந்த வண்ணம் உள்ளனர்

                                  ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் படகுகள் மூலம் நுழையும் இவர்களை தடுத்து நிறுத்த

                                  அரச இராணுவத்தின் உதவியை பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் கோரியுள்ளார்

                                  புதிதாக நாட்டுக்குள் குவியும் அகதிகளினால் பல மில்லியன் பவுண்டுகள் செலவு செய்ய படுகிறது

                                  ,இதனை தடுக்கவே அம்மணி இந்த அழைப்பை விடுத்துள்ளாராம்

                                  இந்தியராக உள்ள அம்மணியின் இந்த கடும் போக்கு அவர் மீதான வெறுப்பு தன்மையை

                                  அதிகரித்து செல்வதாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்டவர்கள் கருத்துரைத்த வருகின்றமை குறிப்பிட தக்கது