NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு ,ரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாத சம்பளத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக கட்சி நிதிக்கு திருப்பி விடுவதாகக் கூறி பிவிதுரு ஹெல உறுமய தலைவர் .

உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான

உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார்.

முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள்

விருப்பப்படி தங்கள் கொடுப்பனவுகளைச் செலவிட முடியாது என்றார்.

உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான

“159 உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பானகூட்டாக ரூ. 30 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற்று, அரசியல் நோக்கங்களுக்காக கட்சி நிதியில் வரவு

வைப்பது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும்” என்று அவர் கூறினார்.

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, தொலைபேசி பில்கள், எரிபொருள் மற்றும் அலுவலக பராமரிப்பு உள்ளிட்ட

கட்சி தொடர்பான செலவுகளைச் செலுத்த இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக கம்மன்பில மேலும் கூறினார்.

“இது 159 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியும் சேர்ந்து மாதத்திற்கு ரூ. 30 மில்லியனுக்கும் அதிகமான தொகையை தவறாகப்

பயன்படுத்துவதற்குச் சமம்” என்று அவர் மேலும் கூறினார், இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு ,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 06 முறைப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறியது தொடர்பில் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

மாத்தளையில் மூன்று முறைப்பாடுகளும் கெபிதிகொல்லாவ,மொனராகலை மற்றும் பொலன்னறுவையில் இருந்து மூன்று முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு

அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு

அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.

மேலும் சுயேட்சை எம்.பி அங்கு நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு ,அமைதியான முறையில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் இந்த காலப்பகுதியில், சமூக ஊடகங்கள் ஊடாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் 1,388 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதியில், 747 சமூக ஊடக இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், ஒக்டோபர் 11 முதல் இதுவரையில் மொத்தமாக 2,033 சமூக ஊடகங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள், இனம், மதம், ஆளுமை மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில், 385 பதிவாகியுள்ளன.

மேலும், வெறுப்பு பேச்சு தொடர்பாக 203 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு ,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும்

வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பாக பிர்தௌஸ் நளீமியினால் செவ்வாய்க்கிழமை(12) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவை தயாரித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்கள், பகிர்ந்தவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில்,


தனது சட்டத்தரணிகள் ஊடாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிர்தௌஸ் நளீமி தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு ,நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர்

பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார்.

அப்பெண் மேலும் தெரிவிக்கையில் ,

“சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர்

எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய

பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.”

அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் மன்னார்

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியிருந்தார் .

இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை

தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய

போது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன்.

அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக் கொண்டதாகவும்

சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும் அது முற்றிலும் பொய் என்றும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக, உளவியல் ரீதியாக

கட்சியோடு பயணிப்பதா? இல்லையா ? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும், அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும்

இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு

பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன்.

அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன்.

அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை. அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரச்சாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே.

அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன்.

அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது.

என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்ட துடன் சுமந்திரன் தலைவராக வர முடியாமைக்கு நான் பெறும் பங்காற்றி இருந்தேன். அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்.

இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலமை காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கு தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தீர்மானித்திருந்தேன்.

சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது.

என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபட வேண்டும்.

ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

ஆனால் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புகளும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்.

அதே நேரம் சுமந்திரனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன். நான் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை.

எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் அவருடைய கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும்

எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன்.

சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுதெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

“செப்டம்பர் மாதம் வரை, இணைத்தளங்கள் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் தொடர்பானவையாகும்.

அதில் சுமார் 20% முறைப்பாடுகள் இணையத்தள மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வந்தவை.

இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் பேங்கிங் பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

ஒன்லைன் வங்கி மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பலர் தமது வங்கி தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாததால் அடிக்கடி இந்த மோசடிகளில் சிக்கியுள்ளனர்” என்றார் .

பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு

பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு


பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
நாடளாவிய ரீதியில் கடந்த 14 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் 8 ஆம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில்

அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில்

ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமானதும நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட நிறைவேற்று பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது.

இதுவரை கபே அமைப்புக்கு 934 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றது தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது.

2015, 2019 நடைபெற்ற தேர்தல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சுமுமான களநிலவரம் காணப்பட்டாலும் கடந்த 8 ம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் அரச சொத்து துஸ்பிரயோகம்,

போன்ற முறைபாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்துள்ளது.

அத்துடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரச்சாரங்களை வீடியோ பதிவுகள் போலி

முகநூல் மற்றும் வட்சாப் ஊடாகவும் பதிவுகள் இடப்பட்டுள்ளது இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.

தேர்தல் ஒன்று வரும் போது சமாதானமான தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு

கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர்,

ஒட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்தபோதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறைகள் இடம்பெறவில்லை.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் எல்லா பிரதேசங்களிலும் சிவில் அமைப்புக்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை பெற்றுவருகின்றனர்.

அதேவேளை கபே அமைப்பு தேர்தல் தினத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடவுள்ளனர்.

இருந்தபோதும் அரசியல்கட்சியின் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் வேண்டிக்கொள்ளுவது இதுவரை

காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை எவ்வாறு ஈடுபட்டுவந்தீர்களே, அதே

போன்று தேர்தல் தினத்திலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள் சமாதானமான தேர்தலுக்காக ஒன்றுபடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் ,2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி ,முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய முகவரி
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவல்களும் நீதிக்கான தேடலுக்கு உதவி செய்யும்.

கீழே உள்ள முகவரிக்கு உங்கள் ஆதங்கம் ,கருத்துக்கள் என்பனவற்றை அனுப்பி வைக்கும் படி வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .


Dr Ramanathan Archchuna
28/1 Buthgamuwa Road
Kalapaluwewa
Rajagiriya
T.p
0094 772249924
0094 775456126

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள் ,ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் பெவரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆடை குழுவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 631 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை 36 நாள் முதல் 18 வரையிலான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆடை குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் இடம்பெறுகின்ற காலங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறுகின்ற சம்பவங்கள் யாவும் போலீசார் அனுமதியுடன் பதிவு செய்யப்படுகின்றன .

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விடயங்களிலேயே இவை உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளது எ,

ன்ற தேர்தலில் பலத்த வன்முறைகள் கலவரங்கள் ஈடுபட எதிர்பார்க்கப்படுகின்ற வேளையிலேயே இந்த பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பலர் சுற்றப்படுகொலை செய்யப்படும் துப்பாக்கி சூடு தாக்குதலும் இடம் பெற்றிருந்தன .

அவ்வாறான ஒரு தேர்தலை இடம் பெறலாம் எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டமும் பீதியும் காணப்படுகின்றது.

எப்படியாவது இந்த தேர்தலில் வந்து விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கின்ற காட்சிகள் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை நடத்தவும் தயாராகிக் கொண்டிருப்பதை அண்மைய கால சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

நானுஓயா பிரதான நகரில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

நானுஓயாவில் முறைசாரா மற்றும் சட்டவிரோத பசுக்கொலை மற்றும் மாட்டிறைச்சி வியாபாரம் நடைபெறுவதாக உரிய ஆதாரங்களுடன் கூடிய புகைப்படங்கள் நானுஓயா பிரதேசவாசிகள் குழுவொன்றும் இதில் அதிகம்

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் இணைந்து எழுத்து மூலம் அடங்கிய கையொப்பங்கள் மற்றும் உரிய தீர்வை வழங்குமாறு கோரி ஜனாதிபதி

சுகாதார அதிகாரிகள், பௌத்த விவகார அமைச்சர், நீதி அமைச்சர், மத்திய மாகாண ஆளுநர் மற்றும் தலைமை மாநகர சுகாதார பரிசோதகர் உட்பட 19 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அடிக்கடி இப்பகுதியில் சட்டவிரோத மாடு வெட்டும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

வீடியோ

முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் , யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு பொதுமகன்கள் ஆகியோர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , தூபியை அமைக்க பெறப்பட்ட , செலவழிக்கப்பட்ட நிதி

விபரங்கள் , தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களுடன் வியாழக்கிழமை 919) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 2020 ஜனவரி 08ஆம் திகதி இரவு இடித்து அழிக்கப்பட்டது.

அதனை அடுத்து , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து துணைவேந்தர்

சிறிசற்குணராஜாவினால் மீண்டும் 10ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு புதிய தூபி நிர்மாணிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வருடந்தோறும், “மே 18 ” முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் குறித்த தூபியிலையே இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தூபிக்கு உரிய அனுமதிகள் பெறப்படவில்லை என்றும், அவ்வாறு அனுமதி பெறப்படாத தூபியை உடைச்சு அகற்றுமாறும் கோரியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்

இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்

இலங்கை காவல்துறைக்கு எதிராக மக்களினால் 9000 முறைப் பாடுகள் வழங்க பட்டுள்ளன .

தவறான கைது ,லஞ்சம் ,மிரடடல் ,துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகம் போன்ற குற்ற சாட்டுக்கள் முதண்மையாக முன் வைக்க பட்டுள்ளது .

காவல்துறை என்ற மமதையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளது நிரூபணமாகியுள்ளது .

ஒரு வருடத்தில் இலங்கை காவல்துறைக்கு எதிராக, பெருமளவு
முறைப்பாடுகள் பதிவாகியுள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.