முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் , யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு பொதுமகன்கள் ஆகியோர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , தூபியை அமைக்க பெறப்பட்ட , செலவழிக்கப்பட்ட நிதி
விபரங்கள் , தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களுடன் வியாழக்கிழமை 919) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 2020 ஜனவரி 08ஆம் திகதி இரவு இடித்து அழிக்கப்பட்டது.
அதனை அடுத்து , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து துணைவேந்தர்
சிறிசற்குணராஜாவினால் மீண்டும் 10ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு புதிய தூபி நிர்மாணிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வருடந்தோறும், “மே 18 ” முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் குறித்த தூபியிலையே இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தூபிக்கு உரிய அனுமதிகள் பெறப்படவில்லை என்றும், அவ்வாறு அனுமதி பெறப்படாத தூபியை உடைச்சு அகற்றுமாறும் கோரியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது
- தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் ஷிராந்தி ராஜபக்ச அனுமதி
- இலஞ்ச ஆணைக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது
- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது
- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்

















