Tag: சினிமா
பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா
பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது கணவருடன் பைக்கில் ஊர் சுற்றி இருக்கிறார்.
பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா
நடிகை சமந்தா
சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து
அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருந்த சமந்தா, அவரது
கணவர் நாகசைதன்யாவுடன் பைக்கில் வெளியில் சென்றதை புகைப்படம்
எடுத்து பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை 15 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்திருப்பது ஆச்சரியம்.

மீனாவை கிண்டலடித்த ரஜினி
மீனாவை கிண்டலடித்த ரஜினி
அன்புள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்தது குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிண்டலடித்த ரஜினி…. புன்னகையுடன் பகிர்ந்த மீனா
மீனா, ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தப் படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகை மீனா ரோசி என்ற
கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதில் தான் அவர் அறிமுகம். 1984-ம் ஆண்டு வெளியான இப்படத்தை
நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை மீனாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த மீனா, இந்த படத்தின் போது
தனக்கு கிடைத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் பாடியிருந்த கடவுள் உள்ளமே என்ற பாடலையும்
தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் தனது அறிமுக காட்சியையும் பகிர்ந்துள்ளார்.
மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை நடிகை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளை பகிர்ந்து கொடுமையான சிறுமி என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினிகாந்த் தனக்கு
சாக்லேட் வழங்கும் காட்சியையும் அதனை அவர் துப்புவதையும் பகிர்ந்தார் மீனா. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மீனா, தான்
நடித்ததிலேயே இதுதான் மிகவும் கடினமான காட்சி, ஏனெனில் எனக்கு சாக்லேட்,இனிப்புகள் ரொம்ப பிடிக்கும் என கூறியிருக்கிறார்.
தொடர்ந்து முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் பகிர்ந்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும்
கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.
சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு
சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரனின் தற்போது வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு
நடிகை சிம்ரன்
தமிழில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில்
கால்பதித்தவர் சிம்ரன். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பெருமை இவரை சேரும்.
நேருக்குநேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.
ஊரடங்கு என்பதால் பிரபலங்கள் தங்கள் டிக்டாக், போட்டோக்கள், வீடியோக்கள் என பலவற்றை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது சிம்ரன் டிக்டாக் வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் அழகான ரியாக்சனுடன் சாப்பிடுவதை பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா என்று ரசித்து பகிர்ந்து வருகின்றனர்

- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
பைக் ரேஸரான அஜித், ஒரு டிரிப்பின் போது ஏழை ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடிசை வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார்.
500 கி.மீ. பைக் டிரிப்…. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
ரசிகருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம்
நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள்
என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல்
சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர்.
அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர்.
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித்
அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல்
தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை
பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, தற்போது
குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறாராம். தற்போது
படப்பிடிப்பு இல்லாததால் நடிகை மிகவும் வருத்தத்துடன் இருந்தாராம்.
இதை அறிந்த ஆப் நிறுவனம் ஒன்று நடிகையை அணுகி எங்களுடைய
ஆப்- பில் நீங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்களாம்.
முதலில் மறுத்த நடிகை பின்னர் நிறைய பணம் தருகிறோம் என்று சொன்னதும் உடனே அதில் கலந்து கொண்டாராம்

ரசிகர் மீது கோபப்பட்ட பிரபல பட நடிகை
ரசிகர் மீது கோபப்பட்ட பிரபல பட நடிகை
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர் மீது கோபப்பட்டிருக்கிறார்.
ரசிகர் மீது கோபப்பட்ட மாஸ்டர் பட நடிகை
மாளவிகா மோகனன்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில் ‘மாஸ்டர்’ குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் மாளவிகா
மோகனன் மட்டும் சமைப்பது போன்றும் மற்றவர்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் ஈடுபட்டிருந்தது போன்றும் வடிவமைத்திருந்தார்.
இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு “ஒரு கற்பனையான
பாத்திரம் வீட்டில் இருந்தால் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா? என்று
கேள்வி எழுப்பியிருந்தார். இந்த டுவிட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாளவிகா அந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
விஜய் ரசிகர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்.
இதையடுத்து மீண்டும் விஜய் ரசிகர் கிட்டத்தட்ட அதேபோன்ற பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதில்
மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதில் புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த படத்தை பார்த்த மாளவிகா
மோகனன், ‘நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். இதனை நான் மிகவும் விரும்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
வரனே அவஷ்யமுண்டு என்ற மலையாள படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர்
சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து
அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும்
பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
உண்மையில் அது எந்தவித உள்நோக்கத்துடனும் வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள திரைப்படமான பட்டண பிரவேசம்
படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது, மேலும் அது கேரளாவில் பயன்படுத்தப்படும் பொதுவான மீம் .
பிரபாகரன் என்பது கேரளாவில் ஒரு பொதுவான பெயர். எனவே, படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அது யார் மனதையும் துன்புறுத்துவதற்காக அல்ல. இதனை எதிர்க்கும் பலரும் படத்தைப்
பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குனர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக்
கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.
இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும்
காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களை மட்டுமல்லாமல் எங்களது குடும்பத்தையும் சேர்த்து வன்மத்துடன் திட்டி, மிரட்டி,
அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். இவ்வாறு துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.
சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.
படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்
சூர்யா
ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி
நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை
காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில்
தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான
ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்
தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ உள்பட பல படங்களை தயாரித்த பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில்,
“படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம். முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா? என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது
நியாயம் அல்ல. தயாரிப்பாளரை மிரட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்

.
அதை செய்யாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது – திரிஷா
அதை செய்யாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது – திரிஷா
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடிக்காமல் இருப்பதே வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
நடிக்காமல் இருப்பது வருத்தம் – திரிஷா
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர்
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா.
இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை
அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.
இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன்.
ஆனால் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார் திரிஷா.
ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு
ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு
சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜோதிகா கருத்துக்கு இந்து தலைவர்கள் கண்டனம்
நடிகை ஜோதிகா
முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்
சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது
சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.ஜோதிகா பேசியதாவது:-
நடிகை ஜோதிகா
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான்
பார்த்துள்ளேன். அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர்.
ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை.
இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.
கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி
மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல
முடியவில்லை’ என பேசி உள்ளார்.ஜோதிகாவின் இந்த கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீ ரெட்டி தற்போது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீ ரெட்டி
சினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார்.
மேலும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் “இது என் உடல்..
நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்” என கேட்டுள்ளார்.
“எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்.”
“இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள்
என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும்,
வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்,” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் சினேகன், ரெனிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை சந்தித்து உதவி செய்துள்ளார்.
தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்து பேசிய சினேகன்.
ரெனிகுண்டா படத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார்.
அதில் தனது குடும்பத்துக்கு உதவி தேவைப்படுவதாகவும், இது அஜித்துக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்றும்
வீடியோவில் பேசினார். இதையடுத்து நடிகர் லாரன்ஸ், அஜித்திடம் இதை கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும், அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின்
சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை
வழங்கியதோடு, அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல்
கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

டிக் டாக் வீடியோவில் போதையில் ஆடும் நடிகை திரிஷா
டிக் டாக் வீடியோவில் போதையில் ஆடும் நடிகை திரிஷா
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை திரிஷா, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் திரிஷா
நடிகை திரிஷா
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வந்த நடிகை திரிஷா, கேமரா
முன் நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
டிக் டாக் வீடியோவில் நடிகை திரிஷா
திரிஷா இந்த நேரத்தில் வெளியே போக முடியாததால், டிக் டாக் அக்கவுண்ட் தொடங்கி ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக
டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்திலும் டிக் டாக் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்

அமெரிக்காவில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
அமெரிக்காவில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
அமெரிக்காவில் சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சரியான தங்குமிடம் இல்லை…. நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
சவுந்தர்யா சர்மா
அனுபம் கெர் தயாரித்த ராஞ்சி டைரிஸ் படம் மூலம் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா. இந்த படத்துக்காக சில பட
விழாக்களில் அறிமுக நடிகை விருதை வாங்கினார். பல் மருத்துவரான இவர், நடிப்பு ஆர்வம் காரணமாக, தேசிய
நாடகப்பள்ளியில் பயின்றார். சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இவர் தனது அடுத்த பட வேலைகளுக்காக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம்
அகாடமியில் நடக்கும் ஒர்க்ஷாப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ளார்.
சவுந்தர்யா சர்மா
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் சிக்கியுள்ள சவுந்தர்யா,
மாணவர்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ‘சுமார் 400 மாணவர்கள் இங்கு
சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம்.
சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்திய தூதரகம் அவர்களுக்கு எந்த
உதவியையும் செய்யவில்லை. அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்
கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்
கொரோனா நமக்கு பாடத்தை உணர்த்தி இருக்கிறது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.
கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான
வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை
என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும்
என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது
வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான்
நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால்
மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை
அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை
சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த நடிகை கோபப்பட்டு இருக்கிறார்.
அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை – கோபப்பட்ட நடிகை
நடிகர்கள் விஜய், அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது மாற்றி மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #மே1அஜித்குபாடைகட்டு,
June22BlackdayForVijay, June22VijayDeathDay போன்ற டேக்குகளை அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
நடிகை கஸ்தூரியின் ட்விட்
இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மே 1 அஜித் பிறந்தநாள், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அதை
கொண்டாட அவர்களின் ரசிகர்கள் தயாராகி வரும் இந்த சூழலில் தான் இப்படி ஒரு மோதல் நடந்துள்ளது.
இந்த மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, “அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும்.
இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட
இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு” என ட்விட் செய்துள்ளார்

சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
அஜித், விஜய்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம்
தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின.
இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
சஞ்சய், விஜய்
‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை.
சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது
வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளன

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
நயன்தாரா
நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.
10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த
பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.
லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு
பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார்
என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.
ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன்
அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.
நயன்தாரா
அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது
அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.
நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.
தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து
பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்
என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை
அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை
96, பிகில் படத்தில் நடித்து பிரபலமான வர்ஷா பொல்லம்மா, பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் என்று கூறியிருக்கிறார்.
பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் – வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா
விஜய் சேதுபதியின் 96 படத்தில் மற்றும் விஜயின் பிகில் படத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
வர்ஷா பொல்லம்மா பென்சிலில் வரைந்த ஜெர்சி மாடல்
இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விராட் கோலியின் மீது கிரஸ் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை
வெளியிட்டுள்ளார். பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் இருந்ததாகவும், அவருக்காக பென்சிலில் ஜெர்சி மாடல் வரைந்து வைத்ததாகவும் பதிவு செய்து இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் திருமணமானவர் மீது ஈர்ப்பா என அவரை கலாய்த்து வருகின்றனர்.

கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை
கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஊரடங்கால் தன்னுடைய வீட்டை ஜிம்மாக மாற்றி இருக்கிறார்.
வீட்டை ஜிம்மாக மாற்றிய ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல்பிரீத் சிங்
கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் வீட்டிலேயே உடற்பயிற்சிகள், யோகா செய்து தேகத்தை கட்டுக்கோப்பாக
வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகை ரகுல்பிரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் காட்சி
நடிகை ரகுல்பிரீத் சிங்கும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விதம் விதமாக உடற்பயிற்சிகள் செய்யும்
புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
இப்போது ஜிம்முக்கு செல்லும் நிலைமை இல்லாததால் வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி இருக்கிறார்.
வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் உதவியோடு உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்கிறார்.
வீட்டுக்குள்ளேயே அந்தரத்தில் தொங்குவது, ஓடுவது, குதிப்பது என்றெல்லாம் உடற்பயிற்சிகள் செய்கிறார்.
ஊரடங்கு நமது ஆரோக்கியத்துக்கு தடையாக இருக்க கூடாது. கலோரிகளை
கரைக்க ஜிம்முக்குதான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்றார்.







