Tag: கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது ,நிதி முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அன்றிரவு நீதிமன்ற அறையில்
நடந்த சில நிகழ்வுகளை வீடியோ எடுத்த நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி
வழக்கு விசாரணையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சந்தேக
நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆகியோருடன் வழக்கு விசாரணையின் சார்பில் ஆஜரான மேலதிக
சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி வழக்கறிஞர் திலீப பீரிஸ், சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்த வந்த சில வழக்கறிஞர்கள்
தொடர்ந்து தடைகளை விதித்ததால் தனது வாதத்தை முன்வைக்க சிரமங்கள் ஏற்பட்டது என்றும், நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க தனக்கு
வாய்ப்பளிக்க நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தலையிட வேண்டியிருந்தது என்றும் நீதிமன்றத்திற்கு நினைவூட்டினார்.
ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்தபோது
சந்தேகநபர் ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்தபோது நீதிமன்ற அறையில் இருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்ப நடவடிக்கை எடுத்ததாகவும், நீதிமன்ற
அறையில் உள்ள இருக்கையில் சந்தேகநபர் அமர்ந்திருந்தபோது அவரை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பவும் நடவடிக்கை எடுத்ததாகவும்
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதியிடம், “வழக்கை விசாரித்த நீதிபதிகள்
‘பெலவத்தையிலிருந்து பெறப்பட்ட தீர்ப்புகள்’ என்று கூறினால் என்ன செய்வது? அதன் நிலை என்ன?” என்று கேட்டார்.
வழக்கு முடிவடைந்த பிறகு இரவு 11.00 மணி வரை தான் உட்பட விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற அறையில் இருக்க வேண்டியிருந்தால் சட்டப் பாதுகாப்பு எங்கே என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், வழக்கை
ஏனோதானோவென்று தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். சட்ட தேவதையின் கைகளில் தண்டனை வழங்க வாள்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், நீதி செயல்முறையைப் பாதுகாக்க அந்த வாளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்.
வழக்கு குறித்து வாய்வீச்சு அறிக்கைகளை வெளியிட்ட யூடியூபர்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில்
வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், , நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களை
உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர்
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய்
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய் பெறுமதியான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது கஹவத்தை துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இரத்தினபுரி பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவின் யாயின்ன பகுதியில் ஒருவரை சுட்டுக் கொல்ல உதவிய சந்தேக நபர் நேற்று (26) பெல்வாடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு முயற்சிக்கு உதவிய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் ரயில் நிலைய வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒருவரைச் சுட்டுக்
கொல்ல முயன்ற குற்றம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று காலை பொரலஸ்கமுவ பகுதியில் 12 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக
குற்றத்திற்கு உதவிய பெண்
நபர் கைது செய்யப்பட்ட, அதே நேரத்தில் குற்றத்திற்கு உதவிய பெண் சந்தேகநபர், தெல்கஹாவத்தை – ஹல்பிட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதானவருடன், பெண் சந்தேக நபர் கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு இருவர் கைது
துப்பாக்கிச் சூடு இருவர் கைது
துப்பாக்கிச் சூடு இருவர் கைது பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொரளை பொலிஸார்
சந்தேக நபர்களை பொரளை பொலிஸார் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் ஊடகச் சந்திப்பை மேற்கொண்டு தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு மக்கள் ஓட்டுக்கள் இன்றி இலங்கையின் ஜனாதிபதியாக மாற்றம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கா கைது
செய்யப்பட்டதை கண்டித்து, ஊடகவியல்களை சந்தித்து எதிர்க்கட்சியினர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஒன்று கூடிய தமிழ் சிங்கள கட்சிகள் இணைந்து தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்த கண்டனத்தில் மனோ கணேசன் மற்றும் றவு கக்கீம் இணைந்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .
மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி
தமிழருக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி அடித்து ரணில் ரொம்ப நல்லவர் அவர் கைது செய்தது தவறு என நாடகமாடி இருக்கிறார்.
இவர்களெல்லாம் கூலி குலுக்கல் தான் என்பதை இந்த சம்பவங்கள் எடுத்து காண்பித்துள்ளது.
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது ,மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது
பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை
அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள்
முறைப்பாடு செய்ததற்கு அமைய முன்னெடுத்த விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.
தங்க ஆபரண விற்பனை நிலையம்
இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை
ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன்,
ஏனைய பணத்தில் உடைகளை வாங்கியுள்ள அதேநேரத்தில், உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன என்பது தொடர்பாக இந்த காணொளி வாயிலாக நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
இன்றைய இலங்கை அரசியல்
இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் ,கொழும்பில் நடத்துகிற இந்த அரசியல் கபட நாடகமும் ,தமிழுக்கு மட்டுமல்லாது சிங்கள மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது.
அரசியல் சதுரங்க ஆட்டத்தில்
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சாணக்கிய அரசியல்வாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற முன்னாள் ஜனாதிபதிகள் இந்நாள்
ஜனாதிபதிகள் என்பன தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஒன்றாக பார்க்க படுகிறது .
தொடராக மேற்கொண்டு வருகின்ற சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே ரனில் விக்கிரமசிங்காவின் காகிதம் மருத்துவ சிகிச்சைக்காக அவர்
சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட வேண்டிய தேவை என்கின்ற, கோட்பாடும் அதற்கு நீதிமன்றம் அதற்கு அனுமதி அளிக்கிற நடவடிக்கையும் காணப்படுகிறது.
இந்த விடயங்களை கூட்டி கழுத்து பெருக்கி பார்த்தால் எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒற்றுமை காணப்படுவதையும் பின்னால் இருக்கிற பல்வேறுபட்ட முடிச்சுகள் அவிழ்க்க படுவதையும் காணப்படுகிறது.
ஆகவே இந்த காணொளியில் முழுமையான விடயங்களை காணொளியில் பாருங்கள்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது
மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது
மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேரடியாக தொடர்புடைய
குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, பகிரங்க பிடியாணை பிறப்பட்டிருந்த 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது
அத்துடன் மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3,635 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடமிருந்து மூன்று மன்னா கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18, 21, 25, 27, மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள்
சந்தேக நபர்கள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 12 அன்று இரவு, ஈரியகஹலிந்த பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக சீதுவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயது நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சீதுவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது
பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது
பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக இங்கிலாந்து போலீசார் 150 பேரை கைது செய்தனர், காசாவில்
பாலஸ்தீன நடவடிக்கை குழுவை
பாலஸ்தீன நடவடிக்கை குழுவை தடை செய்வதற்கான பிரிட்டனின் முடிவுக்கு எதிரான போராட்டத்தில் 150 பேரை கைது செய்ததாக லண்டன் பெருநகர
காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது, மேலும் அது மேலும் கைதுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சதுக்கத்தில் குழுவிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் பதாகைகளை அசைத்து, கூட்டத்தினர் கூடியதை அடுத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக படை X இல் தெரிவித்துள்ளது.
கருப்பு மற்றும் வெள்ளை
கருப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன ஸ்கார்ஃப்களை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், சிலர் “உங்களுக்கு அவமானம்” மற்றும் “காசாவை விட்டு வெளியேறு” என்று கோஷமிட்டனர், மேலும் “இனப்படுகொலையை நான்
எதிர்க்கிறேன். பாலஸ்தீன நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்” போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர், சம்பவ இடத்தில் ராய்ட்டர்ஸ் எடுத்த வீடியோ காட்டியது.
இந்தத் தடை குழுவில் உறுப்பினராக இருப்பது குற்றமாகும், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
பாலஸ்தீன நடவடிக்கையின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி கடந்த வாரம் தடைக்கு எதிராக சட்டப்பூர்வ சவாலை முன்வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார்.
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடி படகு
அவர்களுடன் ஒரு மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற கடற்படையினர், அவர்களை மேலதிக சட்ட
நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி
முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது செய்துள்ளது.
கடற்படை, பொலிஸார்
கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
திருகோணமலையின் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரின் கக்கரதீவு
ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது ,பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய
பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள்
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இது
தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும்
தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒருவர் கைது துப்பாக்கியுடன்
ஒருவர் கைது துப்பாக்கியுடன்
ஒருவர் கைது துப்பாக்கியுடன் ,கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரடியனாறு பொலிஸ் அதிகாரி
கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) இரவு முன்னெடுத்த விசேட
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய 34பேர் கைது
லஞ்சம் வாங்கிய 34பேர் கைது
லஞ்சம் வாங்கிய 34பேர் கைது ,இந்த ஆண்டின் முதல் பாதியில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் கேட்ட சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 புகார்கள் பெறப்பட்டதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகள், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகள், சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து வாரியத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகவும் கூறப்பட்டது.
கூடுதலாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டதாக CIABOC தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கடந்த காலத்தில், இலஞ்ச சம்பவங்கள் தொடர்பாக 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மேலும், குறித்த காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இலஞ்சம் தொடர்பான 273 வழக்குகள் தீவு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 29 வரை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 122,913 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது
குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது
குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது ,சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (29) நடத்தப்பட்ட
குற்றச் செயலில் ஈடுபட்ட தலைவர்
சோதனையில், கொழும்பு ஒருங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபட்ட தலைவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சோதனையின்போது குற்றக் கும்பலின் தலைவர் வீட்டில் இருந்து தப்பியோடியதாகவும், பின்னர் சிலாபம் பஸ் நிலையம் நோக்கி முச்சக்கர
பொலிஸாரால் கைது
வண்டியில் சென்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் கைது ,கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும்
விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் மருந்தக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரை
சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொரலஸ்கமுவ, பெல்லன்வில, ஜய மாவத்தைப் பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் இந்தக் கான்ஸ்டபிளின் வீட்டில், 150 மி.கி. போதை மாத்திரைகள்
கொண்ட 21 பெட்டிகள் மற்றும் 300 மி.கி. போதை மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டி என மொத்தம் 1,330,420 மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கொஹுவல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இந்தக் கான்ஸ்டபிள்
விசாரணைகளில், 14 ஆண்டுகளாக கொஹுவல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இந்தக் கான்ஸ்டபிள், மருந்தக உரிமையாளரால்
வழங்கப்பட்ட போதை மாத்திரைகளை தனது வீட்டில் களஞ்சியப்படுத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும், போதைப்பொருள் வைத்திருத்தல், கடத்தல், மற்றும் குற்றத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கான்ஸ்டபிளும் அவரது மனைவியும் 35 வயதுடையவர்கள், மருந்தக உரிமையாளர் 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணின் கையை பிடித்தவர் கைது
பெண்ணின் கையை பிடித்தவர் கைது
பெண்ணின் கையை பிடித்தவர் கைது ,காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது
திருமணச் சேவை
செய்யப்பட்ட திருமணச் சேவை தரகரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (25) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண தரகர், ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்து
அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்து வந்துள்ள
நிலையில், வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக நுழைந்து வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெறித்துவிட்டு சென்றுள்ளார்.
திருமண தரகரின் இந்த செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில், குறித்த திருமண தரகர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) பகல்
தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்த ஆசாமி
பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதையடுத்து,
அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையில்
நேற்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இளம்பெண் உட்பட 21பேர் கைது
இளம்பெண் உட்பட 21பேர் கைது
இளம்பெண் உட்பட 21பேர் கைது ,கடுவலை – வெலிவிட்ட பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, இளம்
போதைப்பொருட்களுடன் கைது
பெண்ணொருவர் உட்பட 21 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போதே இந்தக் குழு
கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை
அவர்களிடம் கஞ்சா, வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இன்று (27) கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
விசேட சோதனை 13பெண்கள் கைது
விசேட சோதனை 13பெண்கள் கைது
விசேட சோதனை 13பெண்கள் கைது ,காலி நகரின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மஹாமோதர பகுதியில் சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 13 பெண்களையும் கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனை
நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட இந்த விசோட சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
போக்குவரத்து விதி மீறல்
இதன்போது போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவருக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் சில சாரதிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது












































