Tag: ரணில் கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது ,நிதி முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அன்றிரவு நீதிமன்ற அறையில்
நடந்த சில நிகழ்வுகளை வீடியோ எடுத்த நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி
வழக்கு விசாரணையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சந்தேக
நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆகியோருடன் வழக்கு விசாரணையின் சார்பில் ஆஜரான மேலதிக
சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி வழக்கறிஞர் திலீப பீரிஸ், சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்த வந்த சில வழக்கறிஞர்கள்
தொடர்ந்து தடைகளை விதித்ததால் தனது வாதத்தை முன்வைக்க சிரமங்கள் ஏற்பட்டது என்றும், நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க தனக்கு
வாய்ப்பளிக்க நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தலையிட வேண்டியிருந்தது என்றும் நீதிமன்றத்திற்கு நினைவூட்டினார்.
ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்தபோது
சந்தேகநபர் ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்தபோது நீதிமன்ற அறையில் இருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்ப நடவடிக்கை எடுத்ததாகவும், நீதிமன்ற
அறையில் உள்ள இருக்கையில் சந்தேகநபர் அமர்ந்திருந்தபோது அவரை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பவும் நடவடிக்கை எடுத்ததாகவும்
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதியிடம், “வழக்கை விசாரித்த நீதிபதிகள்
‘பெலவத்தையிலிருந்து பெறப்பட்ட தீர்ப்புகள்’ என்று கூறினால் என்ன செய்வது? அதன் நிலை என்ன?” என்று கேட்டார்.
வழக்கு முடிவடைந்த பிறகு இரவு 11.00 மணி வரை தான் உட்பட விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற அறையில் இருக்க வேண்டியிருந்தால் சட்டப் பாதுகாப்பு எங்கே என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், வழக்கை
ஏனோதானோவென்று தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். சட்ட தேவதையின் கைகளில் தண்டனை வழங்க வாள்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், நீதி செயல்முறையைப் பாதுகாக்க அந்த வாளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்.
வழக்கு குறித்து வாய்வீச்சு அறிக்கைகளை வெளியிட்ட யூடியூபர்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில்
வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், , நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களை
உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
ரணில் கைது எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி
ரணில் கைது எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி
ரணில் கைது எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின்
முன்னாள் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தமது எக்ஸ் கணக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை
ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் அவர் கவலை வௌியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை.
அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில் அவை எந்தவொரு குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காது.
ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு
ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நான் முழு ஆதரவை வழங்குகிறேன்,
ஆனால் தயவுசெய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்று எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்
ரணில்கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்
ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் ,ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி
ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி இலங்கை மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வருவதாகவும், அதனால்
ஊழல்வாதிகளை அவர் கைது செய்து வருவதாக யட்டி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு பகுதியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் யட்டி அமைச்சர் வடக்கு தமிழருக்கு இதுவரை என்ன செய்தார் என்பது தொடர்பாக பதில் வழங்கவில்லை .
முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன
ஆளுகிற ஜனாதிபதி அவர்கள் தங்களுடைய தீர்வு தொடர்பாக முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இதுவரை கருத்து உரைக்கவில்லை .
புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தடைகளை விதித்து தமிழ்களை அடக்கி வருகிற பொழுது அது பற்றி பேச மறுக்கும் யட்டி அமைச்சர் தற்பொழுது மஹிந்த குடும்பம் ஆட்டம் கண்டுள்ளதாக அடித்து விட்டிருக்கிறார்.












