Tag: srilanka
மனைவியை கத்தியால் குத்திய கணவன்
மனைவியை கத்தியால் குத்திய கணவன்
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.
கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,
தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது
போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டில் 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 81,353 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 நுழையும் மற்றும்
வெளியேறும் சோதனைச் சாவடிகளில் பயணித்த 2,244 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்துடன், மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 272 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சாப்பாட்டு பாசலுக்குள் பல்லி – உணவகத்திற்கு சீல்
சாப்பாட்டு பாசலுக்குள் பல்லி – உணவகத்திற்கு சீல்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த
நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது தொடர்பில் இன்றைய தினம் போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றுண்டிச்சாலையினை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவினை விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் போராட்டம் – அடிபணியுமா அரசு ..?
ஆசிரியர்கள் போராட்டம் – அடிபணியுமா அரசு ..?
இலங்கையில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இவை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவர்களுக்கு ஆதரவாக பளை
கல்விக் கோட்ட அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது
இந்த ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று ஆளும் அரசு அடிபணியுமா என்பதே இன்றய பிரதான
செல்வராஜா கஜேந்திரன் எம்பிக்கு கொரனோ
செல்வராஜா கஜேந்திரன் எம்பிக்கு கொரனோ
தமிழர் அரசியல் பிரமுகர் செல்வராஜா கஜேந்திரனுக்கு தற்போது பரவி வரும் கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனால இவர் தற்போது தனிமை படுத்த பட்டுள்ளதுடன் ,மேலும் இவருடன் பழகியவர்களும் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு – மக்கள் அவதி
இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு – மக்கள் அவதி
இலங்கையில் மீளவும் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது ,தற்போது கிலோ ஒன்று 160 துக்கு மேலாக விற்பனையாகிறது
சீனி வியாபாரத்தில் கோட்டாபய ஈடுபட்டுள்ளதால் ,திட்டமிடப்பட்டு இந்த தட்டு பாட்டை இவர் ஏற்படுத்தியுள்ளதாக கூற படுகிறது
கிராமத்தில் நடமாடும் புலி – அச்சத்தில் மக்கள்
கிராமத்தில் நடமாடும் புலி – அச்சத்தில் மக்கள்
இலங்கை ஹட்டன்- குடாகம பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக ஊர்மக்கள் கண்டுள்ளனர்,இதனை அடுத்து மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,இவர்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளை இந்த புலி வேட்டையாட கூடும் என பீதியில் உறைந்துள்ளனர்
இதனால் இரவில் மணி ஒலிகளை எழுப்பியவாறு மக்கள் உள்ளனர்
விபத்தில் சிக்கி மூவர் மரணம்
விபத்தில் சிக்கி மூவர் மரணம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர் என்ற புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கை காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது
காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறான இடங்களில் ஒன்றுக் கூடுவதை, கூடியளவு தவிர்த்துக்கொள்ளுவது அவசியம் என்றார்.
மேலும் புதிய தொற்று நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு, சுகாதார அமைச்சு பாரிய அவதானத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு அப்பாற்பட்ட தொற்று பிரழ்வு , நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதென்றார்.
காரில் சென்று திருடி வந்த திருடன் கைது
காரில் சென்று திருடி வந்த திருடன் கைது
இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு
ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு
பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தெற்கு கெபில்லவெல- பண்டாரவளை என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இச்சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன
மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்
மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்
நாளை முதல் மாகாணங்களுக்குள்ளான ரெயில் சேவைகளுக்காக 133 ரெயில்களை ஈடுபடுத்த ரெயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் ,நாளை முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரெயில் பயணிகளுக்கு மாத்திரமே ரெயில் சேவைகள் இடம்பெறும் என்று ரெயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.;
நாளை கொழும்புக்கு வரும் ரெயில் அளுத்கம, அவிசாவளை ,அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ,பயணத் தடை காரணமாக கடந்த சில மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரெயில் சேவை மாகாணங்களுக்குள் நாளை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை இடம்பெறாது. மாகாணங்களுக்கு இடையிலான ரெயில்
சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறினார்.
தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
கிரான்பாஸ், கஜீமா தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.பி.அன்பர், நேற்று (20) உத்தரவிட்டார்.
கிண்ணியா,பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவையாற்றிய இவர், முறையான அங்கிகாரத்துடன் இராணுவ சேவையில் இருந்து விலகிவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கணவரான முன்னாள் இராணுவ வீரர், தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை கைக்குண்டுடன் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.
வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்
கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு
அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு
பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை, மீண்டும் உயர்த்தியுள்ளனர்.
அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்சம்பா அரிசி 155 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்
பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்
பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியில் வைத்து பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்து பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
பேருந்தில் இருந்து தனது சிறிய மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்து முன்னோக்கி சென்றுள்ளது.
இதன்போது குறித்த பெண் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைபடுத்து அங்கிருந்த சிலர் குறித்த பெண்ணை தூக்கிவிட்டு பேருந்து ஓட்டுனர் மீது தாக்கல் நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்
நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்
நெடுந்தீவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில், இந்திய மீனவர்களின் படகு சேதமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்ட போது, இந்திய மீனவர்களின் படகை கடற்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது , இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் படகை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினரின் ரோந்து கப்பல் முட்டியதில், இந்திய மீனவரின் படகு சேதமடைந்துள்ளது. இதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள், தமிழ்நாடு – புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது
- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை
- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்
- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (19) மீட்கப்பட்டடுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று (18) இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும். யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துவருகின்றதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












