Tag: srilanka
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த முடியும் – விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த முடியும் – விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும்
மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் நேற்று (30) ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி பதிலின் போது அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
கேள்வி :- இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை
எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் என்ற Global Rights Compliance LLR (GRC) சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துநருக்கு சமர்ப்பித்துள்ள ஆவணம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? இது சாத்தியமா?
பதில் :- இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது.
இந்த இனப்படுகொலை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எல்லா தமிழ் கட்சிகளுமே கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்துள்ளன. அத்துடன், இலங்கையை சர்வதேச
நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்றும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டாகக் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளன.
ஆகவே, இந்த பின்னணியில், Global Rights Compliance LLP (GRC) செய்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் சரியானதும் அத்தியாவசியமானதும் காலத்துக்குப் பொருத்தமானதும் ஆகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைத் ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பில் பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின்
அடிப்படையிலும் மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உரிய சட்டக் கொள்கைகள், கோட்பாடுகள், வாதங்களுடன் இந்த முதலாவது தொடர்பாடலுக்கான ஆவணத்தை முறையாக Global Rights Compliance LLP (GRP) சமர்ப்பித்துள்ளது என்று நான் நம்புகின்றேன்.
கேள்வி :- இந்த சமர்ப்பணத்தின் அடிப்படையில் அடுத்து என்ன நடைபெறும்?
பதில் :- இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் இந்த ஆவணத்தை பரிசீலித்து எடுக்கவிருக்கும் முடிவிலேயே அது தங்கி இருக்கின்றது. சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும்,
எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி :- இந்த சமர்ப்பணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் :- அவசியமாக செய்யப்பட வேண்டிய ஒரு விடயத்தை நல்ல முறையில் Global Rights Compliance LLP (GRP) செய்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆகவே, இந்த ஆவண சமர்ப்பணம் வலுவானதாக செய்யப்பட்டிருப்பதாகவே நான் உணர்கின்றேன்.மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் இந்தக் கால கட்டத்தில் அவசியமாகின்றன. இங்கு எமது வட கிழக்கு நிலங்கள் பறிபோகின்றன.
பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த வணக்கஸ்தலங்கள் பலாத்காரமாக நிர்மாணிக்கப்படுகின்றன. தொல்பொருளியலைத் திரிபுபடுத்தி தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களாக எடுத்துக் காட்டி பல ஏக்கர் காணிகளை
தொல்பொருள் திணைக்களமும் வேறு காரணங்களை முன்வைத்து மற்றும் அரசாங்க திணைக்களங்கள் பலவும் எமது காணிகளைக் கையேற்று வருகின்றன.
அங்கு வாழும் தமிழ் மக்கள் இராணுவ ஒத்துழைப்புடன் விரட்டி அடிக்கப்படுகின்றனர். சிங்கள குடியேற்றம் தமிழர் தாயகத்தில் துரிதமாக நடைபெறுகின்றன.
இனப்படுகொலையின் பல்வேறு பரிமாணங்கள் இவை. இவ்வாறான விசாரணைகளின் போது தற்போது இங்கு நடைபெறும் விடயங்களும் உண்மையை உலகம் உணர உதவி புரியும். நான் இந்த நடவடிக்கையை முற்றும் வரவேற்கின்றேன்.
மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்
மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்
இலங்கை வாழைச்சேனை காவல்துறை பகுதியில் குடும்ப தகராறு காரணாமாக மனைவியை
விட்டு பிரிந்த கணவன் ,பெண்ணின் தாயார் வீடு புகுந்து அவரது தந்து ,மற்றும் தாயை
கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்
மேற்படி செயல் அந்த கிராம பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
புதிய கொரனோ பரவல் – செயல் இழக்கும் தடுப்பூசிகள்
புதிய கொரனோ பரவல் – செயல் இழக்கும் தடுப்பூசிகள்
இலங்கை முதல் உலக நாடுகள் வரை தற்பொழுது கொரனோ நோயின் தடுப்பூசிகள் இயல் இழக்க வைக்கும் புதிய வைரஸ் பரவி வருகின்றமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
ஊசி செலுத்த பட்டவர்கள் உள் இந்த புதிய வைரஸ் தொற்றி கொண்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் நிலை ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதனால மக்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது
இன்று முதல் பஸ் ரயில் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணம்
இன்று முதல் பஸ் ரயில் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணம்
கொரனோ நோயின் பரவல் காரணமாக தடுக்க பட்ட பேரூந்து ரயில் சேவைகள் மீண்டும்
மாகாணங்களுக்கு இடையில் ஆரம்பிக்க பட்டுள்ளது
வரையறைக்கு உட்படுத்த பட்டு இந்த சேவைகள் ஆரம்பிக்க படும் எனவும் ,பின்னர் முழுமையாக
செயல் நடவடிக்கை எடுத்து செல்ல படும் என தெரிவிக்க படுகிறது
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நாள்!
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நாள்!
வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி
வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்று.
1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் பண்டாவன்னியன்
தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால்
உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது.
1803 ல் தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பண்டாரவன்னியன் அதற்குப் பிறகும்
சிலபோர்களை நடத்தி 1811ல் வீரமரணமடைந்தான் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்றும் உலாவுகின்றன.
பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கும்பல்
பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கும்பல்
இலங்கையில் வெளி நாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட ஐந்து பெண்களுக்கு இலங்கையில்
வேலைவாங்கி தருவதாக கூறி அழைக்க பட்டுள்ளனர் ,இலங்கை வந்தடைந்த அவர்களை
விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இவர்களது கடவு சீட்டு பறிக்க பட்டு அடைத்து வைக்க பட்டு இவ்வாறு சித்திர வதைகளிற்கு
உள்ளாக்க பட்டுள்ளதாக பாதிக்க பட்ட ஐந்து பெண்களும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்
படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்க
பட்டுள்ளனர்
நீதி விசாரணைகள் முடிவில் இவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா
பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா
இலங்கை தமிழ் இனப் படுகொலையாளி கோட்ட பாய இன்று பிரிட்டன் நாட்டுக்கு
வந்தடைந்துள்ளார் ,ஸ்கொட்லாந்தில்
நடைபெறவுள்ள கூட்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளார் ,இவ்வேளை தமிழர்கள் பாரிய
ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது
கனடாவில் பிறந்த தினம் – பளையில் போராளி குடும்போதிற்கு உதவிய நல் உள்ளம் – photo
கனடாவில் பிறந்த தினம் – பளையில் போராளி குடும்போதிற்கு உதவிய நல் உள்ளம் – photo
இப்படியும் நாள் உள்ளங்கள் உள்ளதை எண்ணி தமிழர் தேசம் பெரு கொள்கிறது ,
இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
கனடா நாட்டில் பிறந்த தினத்தை கொண்டாடும்
பெயர்குறிப்பிட விரும்பாத நல் உள்ளம் கொண்டவரின்
நிதிப்பங்களிப்பில் பளை கச்சார்வெளியை சேர்ந்த
தேசப்பற்றாளர்களான வீரவேங்கை போல் மற்றும் வீரவேங்கை நந்தகுமாரி ஆகியோரின் தாயாரான முருகையா
ஞானப்பிரகாசி அவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் சிறு தொகைப் பணமும் இன்றைய தினம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.




பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்
பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்
இலங்கை பளை இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரிக்கு வீட்டுக்கு சென்ற உறவினர்
ஒருவர் அங்கு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
இவரது மரணம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம்
உள்ளனர் ,இவர் இயற்கையில் மரணித்தாரா அல்லது படுகொலையா என்பது தொடர்பில்
விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளது
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் பாரிய மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது .
இதனால் வெள்ள பெருக்கு மற்றும் இடி மின்னல் ஏற்பட கூடிய அபாயம் உள்ளதல் மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது
நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்
நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்
இலங்கை காவல்துறையை சேர்ந்த அதிகாரி எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு
வழங்க படும் நீர் தாங்கியில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட பொழுது காணாமல் போயிருந்தார்
இந்த நிலையில் அந்த அ மருத்துவமனைக்கு வழங்க படும் நீரில் ஒருவித மணம் வீசுவதாக
தெரிவிக்க பட்ட நிலையில் ,அதனை சோதனை செய்த பொழுது சடலம் இருப்பது கண்டு பிடிக்க பட்டது
பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா
பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா
காலஞ்சென்ற களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின்
தலைவரும், அக்கமஹா பண்டிதர் கலாநிதி அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவுக்கு இன்று (29) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்,
விஹாரையில் கல்வி பயிலும் தேரர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி அவர்கள், அந்த ஏற்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், இறுதிக் கிரியை ஏற்பாட்டுக்கு குழுத் தேரர்களுடன் கலந்துரையாடினார்.
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும்
காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக
இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.
வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்
வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்
எட்டியாந்தோட்டை- மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமுஹேன பிரதேசத்திலுள்ள
காட்டுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் பழுதடைந்துள்ளதாகவும் எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த ருவன்வெல்ல பதில் நீதவான் நிமல் புஸ்பகுமார, மரண
விசாரணையை நடத்தியதுடன், நேற்றைய தினமே சடலம் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச்சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ்
ஊடகப்பேச்சாளர், 45 வயதுடைய மற்றுமொரு நபர் படுகாயமடைந்துள்ளாக கூறினார்.
படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுமந்திரன் உருவ பொம்மை எரிப்பு – யாழில் மக்கள் போராட்டம்
சுமந்திரன் உருவ பொம்மை எரிப்பு – யாழில் மக்கள் போராட்டம்
குருநகரில், இன்று (26), குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்களால், கறுப்புக் கொடி கட்டப்பட்டு, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளுர் இழுவை படகு மீன்பிடி தொழில் தடை செய்யப்பட
வேண்டும் என தெரிவித்த கருத்தை எதிர்த்தே, இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து, எதிர்ப்புப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர்
சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம்
கடற்றொழில் அமைச்சர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சாத்தியமான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளது.
அதனடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாளை
அம்பாறை மாவட்டத்தில் கள விஜயங்களை மேற்கொள்ள இருப்பதுடன், கடற்றொழில்சார் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
இவ்விரு மாவட்டங்களிலும் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை போன்றவற்றில் மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் மூன்று நாள் விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பெற்ற பெண்
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பெற்ற பெண்
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை ஒரே பிரசவத்தில் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், அவர்களில் மூவர் ஆண் குழந்தைகள், மூவர் பெண் குழந்தைகள் ஆவர்.
திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க மரவனாகொட தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரிப்பதற்காக சென்ற பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ
அவர்கள், நைன்வெல்ஸ் மருத்துவமனையின் சிரேஷ்ட செயல்பாட்டு முகாமையாளர் திரு.சுசந்த பீரிஸ் உள்ளிட்ட ஊழியர்களினால் வரவேற்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.
குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமரின் பாரியார், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் முகாமைத்துவ பணிப்பாளர் தியோ ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








