Posted in இலங்கை செய்திகள்

யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று

முன்தினம் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர்

பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்தச் சேத விவரங்கள்

பதிவாகியுள்ள அதேவேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வெடி குண்டுடன் நபர் கைது

வெடி குண்டுடன் நபர் கைது

இலங்கை சுதர்சன மாவத்தை பகுதியில் வெடி குண்டுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

கைதானவர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது

விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது

இலங்கை கல்கிசை காவல்துறை பகுதிக்குள் உடல் பயிற்சி நிலையம் என இயங்கி வந்த கட்டடம்

ஒன்றுக்குள் இடம்பெற்று வந்த விபச்சாரம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

இந்த சுற்றி வளைப்பின் பொழுது அங்கிருந்த ஏழு இளம் பெண்கள் கைது செய்ய பட்டு நீதிமன்றில்

நிறுத்த பட்டு;ள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு

    காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு

    இலங்கை வாகரை பகுதி மீனவர்கள் காணாமல் போயினர்


    இவ்விதம் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

    தொடராக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் பீதியை

    கிளப்பியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    இரு வெளிநாட்டவர் கைது

    இரு வெளிநாட்டவர் கைது

    இலங்கையில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்து இரு நையீரிய நாட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

    கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டா உரை வெறும் குப்பை: பெசிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்

    கோட்டா உரை வெறும் குப்பை: பெசிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறியிருக்கிறார் சம்பந்தன்

    9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.

    இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

    “ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதையொட்டி இன்று பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து பாராளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். அதற்காக எழுந்தார். எனினும், யோசித்தவர், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

    ஆனால், பாராளுமன்றை விட்டு வெளியே வரும்போது ‘லொபி’யில் தமக்கு முன்னால் எதிர்ப்பட்ட நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் தமது கோபத்தை சம்பந்தன் ஐயா காட்டினார்.

    ‘ஜனாதிபதியின் இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப் போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன்.

    இந்தப் பேச்சு வெறும் குப்பை தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் கூறினேன் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை.

    இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது. உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சம்பந்தன் ஐயா சீற்றத்துடன் கூறினார்.

    இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பெசில் ராஜபக்ச விடயத்தைச் சமாளித்து, ‘தாங்க்யூ, தாங்க்யூ…!’ என்று கூறி அங்கிருந்து அகன்றார்” – என்று தகவல் வெளியிட்டார் சுமந்திரன் எம்.பி.

    Posted in இலங்கை செய்திகள்

    தந்தை முன் நீரில் அடித்து செல்ல பட்ட மகன் – கண்ணீரில் குடும்பம்

    தந்தை முன் நீரில் அடித்து செல்ல பட்ட மகன் – கண்ணீரில் குடும்பம்

    இலங்கை பாணந்துறை பகுதியில் தந்தையுடன் நீராட சென்ற மகன் ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்ல பட்டுள்ளார்

    நீரில் அடித்து செல்ல பட்ட இவரது சடலத்தை மீட்கும் பணியில் போலீசார் ,மற்றும் சுழியோடிகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

    இதுவரை சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்

      இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்

      இலங்கையில் ஐந்தாவது கொரனோ அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரச அதிகாரிகள்

      எச்சரித்துள்ளனர்

      மேலும் இந்த நோயின் பரவலை தடுக்க மக்கள் சுகாதர விதிமுறைகளை பின்பற்றி செயல் பட வேண்டும் என வேண்ட பட்டுள்ளது

      மக்கள் நடைமுறை விதிகளை மீறி அலட்சியமாக செயல் படுவதால் இம்முறை உயிரிழப்பு

      அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

        மின்சார பணம் செலுத்தாத மக்கள்
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

        இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

        இலங்கை மின்சார சபை ஊழியர்கள் திட்டமிட்ட படி இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

        சம்பள உயர்வு கோரி வந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

        நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் இவ்வாறான

        போராட்டங்களும் தொடராக
        இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

        லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

        எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்

        மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

        விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி

        மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

        மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

        இன்று இலங்கை பாராளுமன்றில் பிரதமர் மகிந்தவுடன் ஆளும்கட்சி எம்பிக்கள் விசேட சந்திப்பு

        ஒன்றை நடத்துகின்றனர்

        இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் விவாதிக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          கொட்டல் அறைகள்
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு

          இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு

          இலங்கையில் கொட்டல் அறைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது

          மூன்றாம் கொரனோ அலையின் பின்னர் இலங்கைக்கு நாள் தோறும் மூவாயிரம் உல்லாச

          பயணிகள் வந்தடைகின்றனர் ,இதனால் இந்த கொட்டல் அறைகள் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது

              பரவச மாத்திரைகள்
              Posted in இலங்கை செய்திகள்

              கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்

              கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்

              நெதர்லாந்து நாட்டில் இருந்து பொதி ஒன்றினுள் அடைத்தவாறு சுமார் 4000 பரவச மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது

              இலங்கை சுங்க பிரிவினர் நடத்திய சோதனையில் மேற்படி மாத்திரைகள் சிக்கின ,இதன் மொத்த விலை சுமார் 26 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

              யாழில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்த பொதி வந்தடைந்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

              வெள்ளவத்தையில் இருந்து சுங்க பிரிவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் குறித்த பொதியை பெற்றபோது அவர் கைது செய்ய பட்டுள்ளார்

                மின்சார பணம் செலுத்தாத மக்கள்
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

                இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

                இலங்கையில் தொடரும் மின்வெட்டுக்கு இடையில் அந்த மின்சாரத்தை பயன்படுத்தி வந்த மக்கள்

                ,பயனாளர்கள்,தமது பயன்பாட்டு மின்சார பணத்தை செலுத்தாமை உள்ளதாக மின்சார வாரியம்

                தெரிவித்துள்ளது

                இவ்விதம் 44 மில்லியன் ரூபாய்கள் செலுத்த படாது உள்ளதாகவும் விரைவில் இவற்றை பெற்றுவிட நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை

                திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் மரணம்

                திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

                திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில்

                உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                  ஆடு
                  Posted in இலங்கை செய்திகள்

                  தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

                  தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

                  ஆடு ஒன்று தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் காணொளி ஒன்று


                  வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

                  மேற்படி சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                    Posted in இலங்கை செய்திகள்

                    வீதியில் மிதந்த மனித சடலம்

                    வீதியில் மிதந்த மனித சடலம்

                    ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17)

                    காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

                    குறித்த வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், இந்த சடலத்தைக் கண்டு,

                    ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

                    எனினும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

                      ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
                      Posted in இலங்கை செய்திகள்

                      மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை

                      மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை

                      இணையத்தள நிறுவனத்தில் கைக்கடிகாரம் ஒன்றையை பதிவு செய்த நபருக்கு ஆணுறைகள் இரண்டு வந்துள்ளது. இதனையால் அதிர்ச்சியடைந்த நபர், இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

                      இன்றைய நவீன உலகில் எல்லாமே நமது விரல் நுனியில் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவார்கள்.

                      இதற்காக தனியாக ஒரு நாளையே ஒதுக்குவார்கள். இந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது நாம் விரும்பிய பொருளை இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது.

                      எங்கு இருந்து என்ன பொருள் பதிவுசெய்தாலும், அந்த பொருள் நம்மை தேடி வந்து விடுகின்றன. இதற்காக எக்கச்சக்கமான இணையத்தள நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இப்படி

                      பொருட்களை முன்கூட்டியே செய்யும்போது ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் பொதிகளில் பொருட்களே இருக்காது. சில நேரம் நாம் பதிவு செய்யப்பட்ட பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வரும்.

                      இந்த நிலையில் கேரளாவில் இணையளத்தளத்தில் கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்யவிருந்த நபருக்கு வந்த பொதியில், ஆணுறைகள் இரண்டு இருந்துள்ளன.

                      கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் இணையளத்தளத்தில் கைக்கடிகாரம் ஒன்றை பதிவு செய்துவிட்டு, அதற்காக ரூ.2,400-ஐ

                      முன்கூட்டியே செலுத்தினார். 15 ஆம் திகதி அவரது கைக்கு கைக்கடிகாரம் வந்து சேருமென இணையளத்தள நிறுவனம் கூறி இருந்தது.

                      குறிப்பிட்ட நாளில் அந்த இணையத்தள நிறுவனத்தில் இருந்து ​ஒரு பொதி வந்துள்ளது. நமது புதிய கைக்கடிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் அந்த பொதியை ஆர்வமுடன் பார்த்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பொதியில் இருந்து சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள்(கொண்டம்) இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

                      தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாராண ஆணுறையாகவும் இருந்தது. அவற்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். ”நான் கைக்கடிகாரம் தானே,

                      முன்பதிவு செய்தேன். எப்படி இது வந்தது?” என்று அவர் பொதியைக் கொண்டு வந்த நபரிடம் கேட்டார்.

                      அதற்கு அந்த நபர் ” இதில் எப்படி ஆணுறை (கொண்டம்) வந்தது என்று எனக்குத் தெரியாது. பொதியைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தான் எனது வேலை” என்று கூறினார்.

                      இதனை தொடர்ந்து அனில்குமார், கைக்கடிகாரத்தை பதிவு செய்த அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர்கள் உரிய பதிலை

                      அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி ஆலுவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

                      முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        பாரிய விபத்து மூவர் மரணம்

                        பாரிய விபத்து மூவர் மரணம்

                        இலங்கை அம்பாறை பகுதியில் காரும் லொறியும் மோதி விபத்தில் சிக்கியதில்


                        சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்


                        மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

                        குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?

                          இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?

                          இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                          தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட

                          ஆய்வில் 85 விதமானவை ஓமிக்ரோன் தொற்றாளர்கள் என்பது உறுதி செய்யப்ட்டிருப்பதாக தெரிவித்தார்.

                          இதேவேளை கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை மாவட்டங்களில் அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ‘கொரோனா

                          ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ்’ தொற்றாளர்கள் இருக்கலாமென்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

                          182 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 162 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார வழிமுறைகளை முறையாகப்

                          கடைப்பிடிக்குமிடத்து இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். கொழும்பு, காலி, மாத்தறை,

                          கம்பஹா, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்