Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து வீட்டு உரிமையாளர் வெட்டியதில் திருடனுக்கும் காயம்

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து வீட்டு உரிமையாளர் வெட்டியதில் திருடனுக்கும் காயம்

வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் காயமடைந்த நிலையில் தப்பி ஓடியுள்ளனர்.

நேற்று (27.07) இரவு வீட்டில் மாரிமுத்து செல்வநாயகம் (58) அவரது மனைவி செ.செல்வராணி இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த நிலையில் திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து வீட்டு உரிமையாளர் வெட்டியதில் திருடனுக்கும் காயம்

இந் நிலையில் மா.செல்வநாயகம் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு (30.06) 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்துள்ளனர். அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து இரு வாள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரிக்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினரின் மனைவி மீது வாள்வெட்டு

உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினரின் மனைவி மீது வாள்வெட்டு

பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமித கவிரத்னவின் மனைவி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருவளை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்கு காரணம் என பேருவளை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

Error: View 9293b2au4w may not exist
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது

வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது

இலங்கை இருபாலை பகுதியில் வீடு புகுந்து கணவன் மனைவிக்கு வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது செய்யப் பட்டுள்ளார் .

பாத்து நாட்களாக ரகசிய இடம் ஒன்றில் மறந்திருந்த பொழுது ,காவல்துறையினரால் குறித்த நபர் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

இவரது கோழிக்கூட்டுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் ,வாள் ஒன்றும் மீட்க பட்டுள்ளது .

யாழ்ப்பாணத்தில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணபடுகிறது .

No posts found.
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

சுன்னாகத்தில் வாலிபர் மீது வாள்வெட்டு

சுன்னாகத்தில் வாலிபர் மீது வாள்வெட்டு

சுன்னாகத்தில் வாலிபர் ஒருவர் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

சிங்கள ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைந்த பின்னர் ,
இவ்விதமான சம்பவங்கள் ,அதிகம் அரேங்கேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு இருவர் காயம்

யாழில் வாள்வெட்டு இருவர் காயம்

யாழ்ப்பாணம் தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகில் வாள்வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது .

பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்ட இருவரும் ,தற்பொழுது யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த சம்பம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Posted in இலங்கை செய்திகள்

முல்லைதீவில் ரவுடி குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு

முல்லைதீவில் ரவுடி குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு

இலங்கை ,முல்லைத்தீவு – முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.

இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 வயதுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவர்

படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்ற போதும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கிராமத்தவர்கள்

தெரியப்படுத்தியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

கும்பஸ்தரின் சடலம், மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Posted in பிரித்தானிய செய்தி

    பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு

    பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு

    பிரித்தானிய புறநகர் பகுதியான பேர்மிங்கம் Washwood Heath Road and Hutton Road, Birmingham பகுதியில் ரவுடிகள் பட்ட பகலில் நடத்திய ஓட ஓட வாள்வெட்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    முகமூடி அணிந்த படி காரில் வருகை தந்த ரவுடிகள் கார் ஒன்றை இலக்கு வைத்து மோதி தாக்கி விட்டு நபர் சிலரை துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தும் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது .

    பிரித்தானிய பேமிங்கம் பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் ஆரம்பித்துள்ளனர் .

    பட்ட பகலில் நடந்த பதறவைக்கும் வாள்வெட்டு சம்பவம் ,சினிமா காட்சியில் வருகின்ற காட்சிகள் போல காணப்படுகிறது .


    பலத்த கமரா ஏமாற்றும் பொலிஸ் பாதுகாப்பபில் உள்ள பகுதியில் இவ்விதமான துணிகர தாக்குதல் எப்படி இது சத்தியம் என்பது மக்கள் கேள்வியாக உள்ளது .

    இதில் அழுத்தி வாள்வெட்டு காணொளி பார்க்கலாம்

      Posted in Uncategorized

      யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்

      யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்

      யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
      வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.

      இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.


      தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

      மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு

        யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு

        நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

        இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

        47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

        3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

        வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.

        கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

        சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ
        இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

          Posted in இலங்கை செய்திகள்

          யாழில் வீடு புகுந்து வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

          யாழில் வீடு புகுந்து வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

          யாழ்.ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.

          நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

          ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞர் குழு தாக்குவதை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்துள்ளார்.

          இதனையடுத்து வாகனத்தை நிறுத்திய அவர் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்துவைக்க முயற்சித்த நிலையில், சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும், அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த ஒரு குழுவினர் முயற்சித்துள்ளனர்.

          இதனையடுத்து அந்த பகுதியால் சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறப்படும் நபர்களை கண்டதும் குழப்பம் விளைவித்த குழு அங்கிருந்து சென்றுள்ளது.

          இந்த நிலையில் சமாதானம் பேசுவதற்கு சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் அங்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறிய நபர்கள் அழைத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுங்கள். என ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.

          அதற்கமைய இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,

          சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்ததாகவும் வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

          பின்னர் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிய முடிகின்றது.

            Posted in Uncategorized

            யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

            யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

            யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

            மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டது.

            தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து இருந்தனர்.

            இந்த நிலையில் , வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

            அதன் போது , வாள் வெட்டு சம்பவத்திற்கு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

            கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன் பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

            அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

            Posted in Uncategorized

            யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

            யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

            யாழ்ப்ப்பாணம் கொக்குவில் – கேணியடிப் பகுதியில் ஊந்துருளியில் வருகை தந்த மூவர்
            திடீரென வாலிபர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர்

            இதில் பலத்த காயமடைந்த வாலிபர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

            மகிந்த ஆட்சியில் உருவாக்க பட்ட வாள்வெட்டு குழுவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              பட்டப்பகலில் யாழில் இடம்பெற்ற பயங்கரம்!

              பட்டப்பகலில் யாழில் இடம்பெற்ற பயங்கரம்!

              கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்களையும் வாளினை காட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

              கோப்பாய் சந்தியில் இராணுவத்தினர் வீதிரோந்து காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சமூகவிரோத கும்பலே இந்த செயலலை செய்துள்ளது.

              கடந்த வாரம் பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ள நிலையிலும் வட மாகாணத்தில் புதிய ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

              தனிப்பட்ட வாய்த்தர்க்கத்தினை பழிவாங்க இளைஞன் ஒருவனால் ஆவா கைக்கூலிகளை அமர்த்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் குறித்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழக்கடை வியாபாரம் நிலையமும் சேதமாக்கப்பட்டுள்ளது

              பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டுக்கு அருகில் உள்ள இளைஞனுக்கு இடையில் சிறு வாய்த்தர்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவா எனப்படும் கைக்கூலிகளை அமர்த்தி இந்த வன்செயலை புரிய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

              இந்த சம்பவத்தில் வீட்டு ஜன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் வயது (58) என்ற முதியவர் வன்முறை கும்பலின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

              சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தினை மேற்கொண்ட குழுவினர் வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் கூரிய கண்ணாடி ஆயுதங்களுடன் வந்தவர்கள் வாள்வெட்டுகுழு உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

              Posted in Uncategorized

              மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டு


              மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டு

              மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது.

              சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா​ வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

              இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

              சம்பவத்தையடுத்து பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

              மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

              கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

              மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் தாக்குதலை நடத்தியுள்ளது.

              குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில் அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

                Posted in Uncategorized

                கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்

                கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்

                கிளிநொச்சி அக்கரையான் பகுதியில் சுய தொழில் வாய்ப்பை பெற்று நடத்தி வந்த வீட்டுக்குள் இரவு வேளை

                புகுந்த 15 க்கு மேற்பட்ட வாள்வெட்டு குழுக்கள் அங்கிருந்த வளர்ப்பு பன்றிகள் ,வான்கோழிகள்

                என்பனவற்றை வெட்டி வீழ்த்தியதுடன் ,அந்த வீட்டின் பெண்மணி மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்

                போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                பாதிக்க பட்ட பெண் கிளிநொச்சி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                  Posted in Uncategorized

                  மல்லாவியில் வீடு புகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – பீதியில் மக்கள்

                  மல்லாவியில் வீடு புகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – பீதியில் மக்கள்

                  முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் கடந்த தினம் ஊந்துருளியில் வருகை தந்த ரவுடி கும்பல் வீடு புகுந்து இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது

                  இதே வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் மீது இம்மாத முற்பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                  இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                  மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது

                    Posted in Uncategorized

                    மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்

                    மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்

                    வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில்

                    வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

                    சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                    நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

                    இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

                    வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

                      யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

                      சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபக் குடும்பத்தினர் மீது,

                      இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுக்கு தாக்குதலுக்கு இடம்பெற்றுள்ளது.

                      இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாளும் மீட்கப்பட்டுள்ளது

                      சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு

                      இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                      வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என ஆரம்ப கட்ட

                      விசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

                      அதேவேளை அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல்

                      யாழில் வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல்

                      இலங்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த

                      மர்ம வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த வயோதிபர் மீது வெட்டு தாக்குதலை மேற் கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது

                      உடல்களில் பல வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்

                      போதன வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                      மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்