Tag: வெல்வேன்
ஒரு நாள் வெல்வேன்
ஒரு நாள் வெல்வேன்
பிச்சைக்காரன் என்றென்னை
பிடரி அடித்தார் பிடரி விழும்
பிரளயம் அதிரும் செய்தி வரும்
பின் தங்கினார் மூளை விழும்
இத்தனை நாள் இழி நிலைகள்
இந்த ஆண்டு ஓடி விடும்
இத்தகை உயர்வு நிலை கண்டு
இழிந்த நா பதறி விடும்
அத்தகை வேலை நடக்கிறது
அகிலம் வியக்க முளைக்கிறது
எத்திசை மாந்தரும் எழுந்து வரும்
எப்படி என்றே எழுதி தள்ளும்
முத்தி இதுவென்று முன் பகரும்
முத்திய சாதனை இது வென்றும்
கத்திய வாய் எல்லாம் கதையளக்கும்
கத்தி கத்தியே செயல் இழக்கும்
எழுதி வைத்து எழுகின்றேன்
எழும் திங்கள் இதனை காட்டிடுவேன்
எழு கதிர் என்றே எனை உரைப்பேன்
எப்படி இப்படி என வியந்தேன் ..!
ஆக்கம் -25-06-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

என் உயிரே நான் வெல்வேன்
என் உயிரே நான் வெல்வேன்
இராத்திரியில் தூக்கத்தை
இராத்திரியில் பறிப்பவளே
இரா பகலா என்னையே
ரணகளம் ஆக்கியவளே
கவிதையில் எனை துளைத்து
கவிதை படைத்தாயோ
கவிதைக்கு சாதனையாய்
கவி புலமை தரித்தாயோ
விழிக்குள்ளே எனை வைத்து
விழியாலே கொல்கின்றாய்
விளையாட்டாய் பா குழைத்து
விளையாடல் செய்தாயோ
எது வந்து சொன்னாலும்
ஏற்களையே நான் தானே
என் மனதை வதை செய்து
ஏன் என்னை காயமிட்டாய்
உன் வலையில் நான் விழுந்து
உயிரை மாய்ப்பேனா
என் நிலவை நான் மறந்து
என் உயிரை எரிப்பேனா
விதி வந்து விளையாட
விதியிலே வீழ்வேனா
எதை வந்து செய்தாலும்
என் உயிரே நான் வெல்வேன் .
ஆக்கம் – 15-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

வெல்வேன் ஒரு நாள் ….!
வெல்வேன் ஒரு நாள் ….!
தேடி வந்து தோல்விகளோ
தோளின் மேலே ஏறுது …
நாடி வரும் உயர்வுகளோ
நடு வழியில் சாகுது …..
ஏறிவிட ஓடுகிறேன்
ஏனோ தூரம் கூடுது …?
எவர் வைத்த சாபமோ
என் வாழ்வு நோகுது …?
ஆடி வரும் தென்றலும்
அடி தந்தே போகுது …..
ஊன்றி வரும் கால்களும்
உரமேற கூடாதோ ….?
கழியும் தின பொழுதுகளில்
கற்றவைகள் ஏராளம் ….
கல்லறையில் சாயும் முன்னர்
கட்டி ஆள மாட்டேனோ ..?
பட்ட வலி தொட்டு தானே
பாதை தேடுறேன் – நாளை
நக்கல் இட்ட வாய்களும்
நம்மை கண்டு வாடுமே ….
குடை பிடிக்கும் வானத்திற்கு
கூலி தந்தார் யாரிங்கு ..?
நிழல் வாழும் மாந்தரின்
நிலையான தென்னவோ .?
ஆறாம் அறிவை தட்டி
ஆழம் பார்க்கிறேன் ….
அந்தோ வரும் நாளில்
ஆகாயத்தை முட்டுவேன் …..
அன்று எந்தன் ஆட்டம் பாரு
அருகில் வந்து முட்டி பாரு ….
வணிகத்தின் தந்திரத்தை -என்னில்
வந்து வாங்கி நீயும் ஓடு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/12/2018








