Tag: லண்டன்
லண்டன் Chatham பகுதியில் தீவிரவாதி மக்கள் மீது சூடு – வீடியோ
லண்டன் Chatham பகுதியில் இயந்திர துப்பாக்கியுடன் தீவிரவாதி கைது – தப்பிய மக்கள் வீடியோ
லண்டன் Dock Head Road, Chatham பகுதியில் வீட்டு பால்கனியில் இயந்திர துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் உலவியுள்ளார் ,இதனை
கண்ணுற்ற மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர் மடக்கி பிடிக்க பட்டார் .
மக்களை சுடுவதற்கு முன்பாக இந்த துப்பாக்கிகளை காண்பித்து காவல்துறையினருக்கு அழையுங்கள் என சத்தம் போட்டுள்ளார் .
விரைந்து செயல் பட்ட காவல்துறையினரால் இவர் மடக்கி பிடிக்க பட்டார் ,இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டன

பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 596 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை இங்கு இடம் பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 16,060 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 120,067 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
கடந்த சில தினங்களை விட இன்று இந்த நோயின் உயிர் பலி எண்ணிக்கை குறைவடைந்துள்ளது
ஸ்பெயின் மீளவும் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,410 ஆக பதிவாகியுள்ளது ,பாதிக்க பட்டவர்கள் 195,944 உயர்வடைந்துள்ளது
அதே போல பெல்ஜியம் 230 பலியாகியும் 38,496 பாதிக்க பட்டு உள்ளனர் இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியால பதிவுகள் என்பதை கவனத்தில் கொள்க

பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் வயோதிப மடங்களில் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில் வசித்து வந்த சுமார் 7,500
பேர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
3,084 வயோதிபர்கள் பராமரிப்பு நிலையங்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கின,
இதில் 214 நிலையங்கள் பலமாக பாதிக்க பட்டன ,கடந்த மாசி ஐந்தாம் திகதி வரையிலான புள்ளி விபரங்கள் இந்த பலி
எண்ணிக்கியாகும் ,அதன் பின்னர் இதே சரி தொகையில் இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் குறித்த நோயில் சிக்கி வயோதிபர்கள் பலியாகி வருகின்றனர் என்ற செய்தி கசிய விடப் பட்டதன் பின்புலத்தில் இந்த விடயம் மறைந்துள்ளதும் அவை இப்பொழுது வெளியிட பட்டுள்ளது
அரசு முன்னரே மக்கள் இறந்த விடயத்தை தெரிந்து வைத்து படிப்படியாக இப்பொழுது அதனை வெளியிட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன
எனினும் அரசு கூறும் இந்த தகவலை விட உயிர் பலிகள் இரட்டிப்பாக இருக்க கூடும் என்ற கருத்து வலுத்து வருகிறது
மருத்துவமனைகள் தொடர்ந்து நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,பிணங்கள் வைப்பதற்கும் இடம் இன்றி பிரிட்டனிலும்
அரசு தினறி வருகின்ற செய்திகள் தொடராக வெளியாகிய வண்ணம் உள்ளன ,
அது தொடர்பான காட்சி படங்கள் அங்கு பணிபுரியும் நபர்களினால் வெளியிட பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது
கடந்த தினம் பிரிட்டனில் 867 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது,மேலும் நாற்பதாயிரம் பேர் வரும் சில
தினங்களுக்குள் பலியாவர்கள் என பிரபல, தொற்று நோய் ஆராய்ச்சியாளார் தெரிவித்துள்ளார்

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கிய இளவரசர் கரி,மேகன் -video
வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கிய இளவரசர் கரி,மேகன் -video
பிரிட்டன் இளவரசர் கரி மற்றும் அவரது பாரியார் மேகனுடன் இனைந்து
லக் டவுன் செய்ய பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு வழங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன
இளவரசராக இருந்த பொழுதும் அதனை உதறி எறிந்த அவர் சாதாரண
மக்கள் வாழவிற்கு சென்று இவ்வாறு மக்களுக்கு உதவி புரிந்து வருவது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது
இளவரசி டயானாவின் அதே குணம் மகனின் உள்ளதை இந்த காட்சிகள்
வெளிப் படுத்துகின்றன ,டயானா மக்களின் செல்வாக்கு மிக்க அன்பையும் ,ஆதரவையும் பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது

லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
தெற்கு லண்டன் ,Croydon பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் போலியான கொரனோ சோதனை கருவிகளை விற்பனை புரிந்த
மருந்தகம் ஒன்று காவல்துறையினரால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டு அடித்து மூட பட்டுள்ளது
உரிய ஆதாரங்கள் ,அனுமதி இன்றி மேற்படி போலிக் கருவிகளை விற்று வந்த நிலையில் இந்த மருந்தகம் அடித்து பூட்ட பட்டுள்ளது .
மேலும் குறித்த கடையில் இருந்து இருபதாயிரம் பவுண்டுகளும் பணமும் மீட்க பட்டுள்ளது .
ஐரோபியா ,பிரிட்டன் ,மருத்துவ அனுமதி இன்றி இந்த கருவிகள் விற்பனை செய்ய பட்டுள்ளதாகவும் ,அவை போலியானை எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
சீனாவானது கள்ள சந்தையில் இவ்வாறான போலியான கருவிகளை தாராளமாக விற்று வருகிறது ,அவையே இப்பொழுது இவ்வாறான
மருந்தகங்கள் மூலமும் விற்பனை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
இதுவரை பல நாடுகளில் கொரனோ சோதனை கருவிகள் இல்லாது தவித்து வருவதும் ,போலியானவற்றை வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளதும் தெரிந்ததே ,


பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை
அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது
நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை
வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே
காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .

கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே
கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே
லண்டனில் வைரஸ் நோயின் காரணமாக வீதிகளில் மக்கள் தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
இவ்வாறான சூழலில் Chelmsford, Essex பகுதியில் வேகமாக பயணித்த
கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் வேலியுடன் மோதி சிதறியது
இதில் கார் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது ,சாரதி காயங்களுடன் மீட்க பட்டார் .
வீட்டின் வேலியும் உடைந்து சேதமாகியுள்ளது
இந்த வீட்டின் வேலிகளை சாரதியை திருத்தி கொடுக்க வேண்டிய செலவுகளை
ஏற்க வேண்டும் ,கொரனோ பீதியின் எதிரொலியே இந்த விபத்து என தெரிவிக்க படுகிறது


லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .
லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .
லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்
மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன
வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த
கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .
தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்
இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி
வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,
ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என
தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன
எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .
அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது
நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்
இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்
தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி
புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்
மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது
இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,
உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .
கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன
சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்
இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்
ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்
அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,
அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன
அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,
பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த
கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .
இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது
எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….
இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .

பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video
பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video
பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்ட தற்காலிக மாற்றம்
பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு அமைச்சினால் அகதிகள் தொடர்பில் மேற்கொள்ள பட்ட தற்காலிக மாற்றம் தொடர்பிலான விடயங்கள்
இது தொடர்பான விளக்கங்கள் இங்கே சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் அவர்கள் விளக்குகின்றார் ,மேலதிக தகவல் தேவை
படின் உங்கள் சட்ட தரணிகளையோ அல்லது இவருடன் தொடர்பு கொள்ளுங்கள்
வாசுகி முருகதாஸ் லண்டன்
0044 208 470 6655
mobile 0044 78 163 64753 – 0044 7960 899 219 full video here

பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்
பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்
ரசியாவின் RAF jets விமானங்களை ஆறு பிரிட்டன் ஸ்கொட்லாந்து வான் பார்ப்புக்குள் நுழைந்து பறந்து சென்றுள்ளன ,
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது
பிரிட்டன் வான் பரப்புக்குள் அது மீறி நுழைந்த மேற்படி விமானங்கள் உளவு தகவலை திரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
பிரிட்டனுக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ,மற்றும் விமானங்கள் மூலம் ரசியா தொடர்ந்து ஊடுருவி செல்வது வழமையான ஒன்றாக மாறியுள்ளது
தனது கடும் அதி திருப்தியை பிரிட்டன் வெளியிட்டும் அதனை ரசியா செவிமடுப்பதாக தெரியவில்லை ,இவ்வாறு அது மீறி
நுழையும் ரசியாவின் திட்டம் பிரிட்டன் மீது பெரும் தாக்குதல் ஒன்று மூண்டால் அவ்வேளை என்ன செய்ய போகிறது என்பதற்கு
இது ஒரு எடுத்து கட்டு நடவடிக்கையாக உள்ளது என கருத படுகிறது .
வல்லரசு நாடுகளின் உளவு விளையாட்டில் இவை எல்லாம் சாதாரண ஒன்றாக பார்க்க முடியாது என பிரிட்டன் கருதுகிறது

உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
நெஞ்சுக்குள் நெருக்கமாய் நின்றவரே
நெடுநாளாய் நெஞ்சுக்குரம் தந்தவரே ..
உன் ரேகை பார்த்து உளம் நொந்தேன் …
உன் வலியின் உயிர் அறிந்தேன் …
நேற்றைக்கும் இன்றைக்கும் நீ இருப்பாய்
நினைவிலே என்றும் நீ உதிப்பாய் …
பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையிலான்
பொழிவிலா உடலை ஏன் பறித்தான் …
கண்ணுக்குள் உலா வரும் உன் உடலை
கை தொழுதான் ஏன் பறித்தான் …?
என் செய்தி கேட்டு நீ வீழ்ந்தாய் …?
ஏன் இத்தனை வேகத்தில் நீ மறைந்தாய் ..?
உன்னிடம் கற்றதை சொல்லிடவா …?
உள்ளத்தில் வைத்ததை கொட்டிடவா ..?
மடியாத நம்பிக்கை நான் முகர்ந்தேன்
மணம் வீசும் காதலை யான் உணர்ந்தேன் …
கூணாத உழைப்பை நான் சுவைத்தேன்
குன்றாத வீரத்தை யான் படித்தேன் …
மன்றாட்டம் இல்லா பேச்சை கண்டேன்
மரியாதை பொழிகின்ற அகவை கண்டேன் …
விரைவாக பிடித்த மொழியை கண்டேன்
வீழாது எழுகின்ற வேகம் கண்டேன் …
முடியாது என்ற சொல்லை மறந்தேன் – உன்
முயற்சிகள் கண்டே யான் வியந்தேன் …
அகவையில் நீ வயதானாய்
அகத்திலே நீ உயர்வானாய் …
பிடித்ததை பேசும் பண்பானாய் – நூல்
பிடித்ததில் படைக்கும் படைப்பானாய் …
கண்டவை உன்னில் நூறெனலாம் – யான்
கற்றது தூசென சொல்லிடலாம் …
சொற்ப நேரத்தில் கண்ணுற்றதை
சொல்லிட நாள் ஒன்று போதாது …
ஒரு நாள் உன்னாலே நான் துடித்தேன்
ஒயாத உன் நினைவால் நான் துவண்டேன்..
உன்னரு ஓர் நாள் உட்கார்ந்து
உறவாடிய நாளது பொற்காலம் …..
பிள்ளைக்கு பிள்ளையார் பெயர் வைத்தவா
பிரியமாய் அவனை உளம் கொண்டவா ..
உன்னாலே தவிக்கிறோம் நீ காணாய்
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/07/2019
குறிப்பு –
ஐங்கரன் தந்தையார் துயர் அறிந்து ….
அவர் பாதம் இதனை நான் விரித்தேன் …
நெஞ்சுக்குள் நிற்கின்ற நினைவொன்றின்
நியமான தடத்தில் நான் படைத்தேன் …!







