குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.

கேகாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைமைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பஸ் வண்டியுடன் மோதியதிலே பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதுடைய அசங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 59 பேர் பாதிப்பு
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு

வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு

சூடானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 89 ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்.

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தினால் அழிந்துள்ளது .
வீடுகளுக்குள் வெள்ளம் அடித்து புகுந்ததினால் , வீட்டின் பொருட்கள் யாவும் வெள்ளத்துடன் அடித்து செல்ல பட்டுள்ளது.

சூடானில் வெள்ளத்தினால் , பாதிக்க பட்ட மக்களுக்கு ,ஆளும் அரசு உரிய உதவிகளை வழங்கவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது.

சூடானில் பாதிக்க பட்ட மக்களுக்கு, தாம் உதவிட தயராக உள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளதுடன் ,கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, உதவிட மறுத்துள்ள சூடான்
அரசின் ,தட்டி கழிப்பு செயல்பாடுகள் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in உலக செய்திகள்

    ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளனர் என முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன .

    மேலும் இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இரண்டாயிரம் பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் .

    கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .


    இதுவரை வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது.

    மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவ உலங்குவானூர்திகளும் பயன் படுத்த பட்ட வண்னம் உள்ளது .

    தலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது பெரும் நில நடுக்க பேரழிவு காட்சியாக இது அமைய பெற்றுள்ளது .

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மக்களுக்கு அடக்குமுறையை பிரயோகித்து வருவதால் உலக நாடுகள் பல உதவிட பின்னடித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

      Posted in உலக செய்திகள்

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

      ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

      மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்

      எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன

      அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்


      இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

      ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,

      அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்


      ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

      அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

      இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது

      ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in உலக செய்திகள்

        மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

        மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

        நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

        இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்

        காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
        தெரிவித்துள்ளன

        நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்

        சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

        இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
        என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

        அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்

        மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

        அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது

        எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்

        தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது

        டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது

        எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது

        மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்

        அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!

          Posted in உலக செய்திகள்

          மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி

          மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன

          மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்


          இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

          மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்

          சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

          நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்

          இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது

          அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்

          எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்


          ,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்

          உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது

          மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது

          மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,

          அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
          இடம்பெற்றுள்ளது

          ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்

          சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை

          வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்

          மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

            Posted in Uncategorized

            குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

            குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

            உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.

            வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

            இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

            இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .

            அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .


            கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

              பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

              மன்னம் பிட்டிய பகுதியில் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ மோதி விபத்தில் சிக்கியதில்


              மூவர் சம்பவ இடத்தில பலியாகினர்

              பலியானவர்களில் இரு பெண்கள் என தெரிவிக்க படுகிறது


              இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது.

                Posted in Uncategorized

                மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

                மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

                வடக்கு ஆப்கான் Kunduz பகுதியில் உள்ள மசூதியில் குண்டு ஒன்று


                வெடித்து சிதறியதால் அங்கு தொழுகையில் ஈடுபட்ட முப்பத்தி மூன்று பேர் பலியாகியுள்ளனர்

                மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                தலிபான்கள் ஆட்சியில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற

                வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

                  வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

                  இலங்கை Thanamalwila பகுதியில் ஆட்டோ மற்றும் டபிள் கப்


                  இரண்டு மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்

                  மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


                  இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்தில் சிக்கி ஆறுக்கு மேற்பட்டவர்கள்

                  பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    சிறுவன் பள்ளத்தில் விழுந்து பலி

                    .சிறுவன் பள்ளத்தில் விழுந்து பலி

                    கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற தந்தையின் பின்னால் வந்த மூன்று

                    யது சிறுவன், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    கஹட்டகஸ்திகிலிய, கைப்பிட்டிய, இஹலகம பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                    சிறுவனின் தந்தை வழமை போன்று கால்நடைகளை வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதையடுத்து தந்தையை சிறுவன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

                    எனினும், சிறுவன் தனது பின்னால் வந்ததை தந்தை பார்க்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

                    இதன்போது, சிறுவன் நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

                    பின்னர் சிறுவனை தேடிய போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                    லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                    எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்

                    மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

                    விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி

                    மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                    Posted in உலக செய்திகள்

                    வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்

                    வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்

                    சிரியாவில் திடீரென கடை தொகுதி ஒன்றுக்கு முன்னாள் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது

                    ,இதன் பொழுது சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

                    ,காயமடைந்தவர்களில் சிறார்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த குண்டு

                    தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் பேருந்து மோதி பெண் பலி

                      யாழில் பேருந்து மோதி பெண் பலி

                      யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

                      யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.

                      விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

                      வைத்தியசாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

                      பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

                      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                      துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

                      துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

                      மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                      60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

                      மூவர் குறித்த பகுதியால் நடந்து சென்ற சந்தர்பத்தில் இருவர் மீது துப்பாக்கி சுடப்பட்டுள்ளது.

                      இதனை ஊர்மக்களுக்கு அறியத்தருவதற்காக ஓடி சென்ற மூன்றாவது நபர் மீது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்து அவரும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

                      இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

                      இலங்கையில் நேற்றைய தினம் (15) மேலும் 41 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

                      சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

                      திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                        Posted in Uncategorized

                        இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி

                        இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி

                        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
                        கடந்த தினம் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர்

                        இலங்கையில் இடம் பெற்ற மரணங்களில் இதுவே அதிக எண்ணிகையிலாக பதிவாகியுள்ளது

                        இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,405 ஆக பதிவாகியுள்ளது

                          Posted in Uncategorized

                          ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

                          ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

                          எமன் நட்டு இராணுவத்தினர் நடத்தி வரும் கடும் போரில் சவுதியை இராணுவம் ,மற்றும் , ஆதரவு படைகள் வசம் இருந்த மிக முக்கிய பத்து பகுதிகள் மீட்க பட்டுள்ளன

                          இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலையும் அடங்கும் என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                          தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகிறது ,இதில் 80 சவுதியை படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                            ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                            இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

                            இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1.298 என தெரிவிக்க பட்டுள்ளது

                              Posted in Uncategorized

                              இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ

                              இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ

                              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

                              இருபத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                              மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது