சிதறிய 5 வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு வேகசாலையில் தொடராக மோதி சிதறிய 5 வாகனங்கள்

தெற்கு வேகசாலையில் தொடராக மோதி சிதறிய 5 வாகனங்கள்

இந்கு தெற்கு கடுகதி வேகாசாலியில் ஐந்து வாகனங்கள் தொடராக மோதி சிதறின

Kottawa முதல் Kahathuduwa பயணித்த நகங்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளன

    தீயில் எரிந்த
    Posted in இலங்கை செய்திகள்

    தீயில் எரிந்து சாம்பலான ஐந்து வீடுகள்

    தீயில் எரிந்து சாம்பலான ஐந்து வீடுகள்

    இலங்கை பொரளை பகுதியில் ஏற்பட்ட தி விபத்தில் சிக்கி ஐந்து வீடுகள் எரிந்துள்ளன


    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு இயந்திரங்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள்

    கொண்டு வந்த பொழுதும் வீடுகள் பலமான சேதங்களை உள்ளாகியுள்ளன

    குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      கூட்டமைப்பு எம்பி சாணக்கியனுக்கு கொரனோ

      கூட்டமைப்பு எம்பி சாணக்கியனுக்கு கொரனோ

      இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு கொரனோ


      நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
      இதனை அடுத்து தற்போது அவர் தனிமை படுத்த பட்டுள்ளார்

        கொரானா
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரனாவுக்கு 12 பேர் மரணம்

        இலங்கையில் கொரனாவுக்கு 12 பேர் மரணம்

        இலங்கையில் மூன்றாம் அலையாக


        பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 12 பேர் பலியாகியுள்ளதாக

        இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          மூவர் வெட்டி கொலை

          மூவர் வெட்டி கொலை

          வெலகெதர, கோனதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

          குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

          கொனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

          உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவரது கணவர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

          கொலையை செய்த சந்தேக நபரும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

          41 வயதுடைய இவர் கோனதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

          வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          இதேவேளை, மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ககேவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

          குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.

          24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

          கொலைச் சம்பவம் தொடர்பில் 23 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

          சந்தேக நபர் இன்று (20) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

            Posted in Uncategorized

            கோட்டாவால் தமிழ் மக்கள் அவமதிப்பு

            கோட்டாவால் தமிழ் மக்கள் அவமதிப்பு

            நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை

            செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார்.

            பாராளுமன்றத்தில், ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நேற்று (19) உரையாற்றிய போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

            இதன்போது அவர் மேலும் தெரிவித்ததானது,

            ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் நடத்த அதிக நேரம் வேண்டும் என இறுதியாக கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாம் வாதிட்டோம். ஜனாதிபதியின் உரை மீது

            அதிக நேரம் விவாதிக்க நேரிடும் என கருதினோம். ஆனால் ஜனாதிபதியின் உரையை கேட்ட பின்னர், நாம் அதிக நேரம் கேட்டு வாக்குவாதப்பட்டது வீணானது என்றே கருதுகின்றேன்.

            கொள்கை என ஒன்றுமே இல்லாத உரை என்றே அவரது உரையினை கூற வேண்டும். அவரது உரையில் பிரச்சினைகள் பற்றி கூறிய போதிலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என எதனையும் கூறவில்லை.

            அவரது உரையில் ஒரு சில விடயங்களை கூறினார், குறிப்பாக ‘ மிக மோசமான நாணய நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளோம், பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் நாம்

            உள்ளோம், இதற்கான தீர்வுகளை காண கடந்தகால அரசாங்கங்கள் தோல்விகண்டுள்ளதாக’ கூறினார். இறுதியாக இருந்த அரசாங்கத்தை மட்டுமல்ல அதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களையும் ஜனாதிபதி குறை கூறியுள்ளார்.

            இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களில் இரண்டு அரசாங்கங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக தலைமை தாங்கினார். ஆகவே இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு

            மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் காரணம் என்பதையும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளது என்பதையே ஜனாதிபதி கூறியுள்ளார்.

            பிரச்சினையை இனங்கண்டு அதனை மஹிந்த ராஜபக் ஷவின் தோளில் சுமத்திவிட்டுள்ளாரே தவிர இந்த நெருக்கடிக்கு தீர்வு என்ன, எந்த பாதையில் பயணித்து இந்த நெருக்கடிகளில் இருந்து மீளப்போகின்றோம் என்ற தீர்வுத்திட்டங்களையும் முன்வைக்க தவறியுள்ளார்.

            அவரது உரையினை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சில குறுஞ்செய்திகள் வெளிவந்தன, அதனை பார்க்கும்போது மேலும் 500 மில்லியன் டொலர்கள் எமது பிச்சை பாத்திரத்தில் போடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இதுவொரு நாளாந்த செயற்பாடாக மாறிவிட்டது.

            கையில் பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டு யாரும் பிச்சையிடுவார்களா என காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று எமது நிலையாக மாறியுள்ளது. அடுத்த கட்டத்தில் என்ன செய்யப்போகின்றோம் என்பது தெரியாத நிலைமை உருவாகியுள்ளது.

            அவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் உரையில் எதுவுமே இல்லாது ஒரு சில காரணிகளை கூறிச் சென்றுள்ளார்.

            அதேபோல் இந்த பாராளுமன்றத்தில் வெவ்வேறு மக்களின் பிரதிநிதிகள் வெவ்வேறு ஆணையுடன் உள்ளனர் என்பதை கூறியுள்ள போதிலும் வடக்கு கிழக்கு விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

            நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார்.

            எமது மக்கள் சுய நிர்ணயம், சுய ஆட்சி, ஆளுகையை பகிர்ந்துகொள்ளும் ஆட்சி என்பவற்றையே கேட்டு நிற்கின்றனர். ஆனால் வெறுமனே வசதிகளை மட்டும் எமது மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதனை செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுவதும், நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு எனவும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு இதுவென்பதையும் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

            வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தமது சித்தார்ந்தத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

            சித்தார்ந்தம் என்பது எமது கொள்கையாகும், அது எமது மக்கள் எமக்கு கொடுத்த ஆணையாகும், அதனை ஓரமாக வைத்துவிட்டு உங்களின் கருத்துக்கு செவிமடுக்க முடியாது. எமது மக்கள் எமக்கு கொடுத்த ஆணைக்குழு அமையவே எமது செயற்பாடுகள் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

            Posted in இலங்கை செய்திகள்

            பளை முகமாலையில் எலும்பு கூடுகள் மீட்பு

            பளை முகமாலையில் எலும்பு கூடுகள் மீட்பு

            பளை முகமாலை பகுதியில் மனித நேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் பணியின் போது மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

            கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனிதநேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டமை அடுத்து

            பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற

            நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று (19) வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தார்.

            இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று குறித்த பகுதியில் மேலும்

            அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

              Posted in இலங்கை செய்திகள்

              வெள்ளை வான் விவகார வழக்கு விசாரணை

              வெள்ளை வான் விவகார வழக்கு விசாரணை

              கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் ​பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த

              வௌ்ளைவான் விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

              இந்த வழக்கு, முன்னாள் சுகாதாரதுறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அந்த

              ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்துரைத்த மொஹமட் ரம்மி ஆகியோருக்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

              இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

                Posted in இலங்கை செய்திகள்

                யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

                யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

                யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று

                முன்தினம் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர்

                பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

                கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்தச் சேத விவரங்கள்

                பதிவாகியுள்ள அதேவேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                வெடி குண்டுடன் நபர் கைது

                வெடி குண்டுடன் நபர் கைது

                இலங்கை சுதர்சன மாவத்தை பகுதியில் வெடி குண்டுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

                கைதானவர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                Posted in இலங்கை செய்திகள்

                விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது

                விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது

                இலங்கை கல்கிசை காவல்துறை பகுதிக்குள் உடல் பயிற்சி நிலையம் என இயங்கி வந்த கட்டடம்

                ஒன்றுக்குள் இடம்பெற்று வந்த விபச்சாரம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

                இந்த சுற்றி வளைப்பின் பொழுது அங்கிருந்த ஏழு இளம் பெண்கள் கைது செய்ய பட்டு நீதிமன்றில்

                நிறுத்த பட்டு;ள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு

                  காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு

                  இலங்கை வாகரை பகுதி மீனவர்கள் காணாமல் போயினர்


                  இவ்விதம் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

                  தொடராக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் பீதியை

                  கிளப்பியுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இரு வெளிநாட்டவர் கைது

                  இரு வெளிநாட்டவர் கைது

                  இலங்கையில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்து இரு நையீரிய நாட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                  கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  தந்தை முன் நீரில் அடித்து செல்ல பட்ட மகன் – கண்ணீரில் குடும்பம்

                  தந்தை முன் நீரில் அடித்து செல்ல பட்ட மகன் – கண்ணீரில் குடும்பம்

                  இலங்கை பாணந்துறை பகுதியில் தந்தையுடன் நீராட சென்ற மகன் ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்ல பட்டுள்ளார்

                  நீரில் அடித்து செல்ல பட்ட இவரது சடலத்தை மீட்கும் பணியில் போலீசார் ,மற்றும் சுழியோடிகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

                  இதுவரை சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்

                    இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்

                    இலங்கையில் ஐந்தாவது கொரனோ அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரச அதிகாரிகள்

                    எச்சரித்துள்ளனர்

                    மேலும் இந்த நோயின் பரவலை தடுக்க மக்கள் சுகாதர விதிமுறைகளை பின்பற்றி செயல் பட வேண்டும் என வேண்ட பட்டுள்ளது

                    மக்கள் நடைமுறை விதிகளை மீறி அலட்சியமாக செயல் படுவதால் இம்முறை உயிரிழப்பு

                    அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                      மின்சார பணம் செலுத்தாத மக்கள்
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

                      இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

                      இலங்கை மின்சார சபை ஊழியர்கள் திட்டமிட்ட படி இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

                      சம்பள உயர்வு கோரி வந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

                      நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் இவ்வாறான

                      போராட்டங்களும் தொடராக
                      இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                      லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                      எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்

                      மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

                      விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி

                      மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

                      மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

                      இன்று இலங்கை பாராளுமன்றில் பிரதமர் மகிந்தவுடன் ஆளும்கட்சி எம்பிக்கள் விசேட சந்திப்பு

                      ஒன்றை நடத்துகின்றனர்

                      இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் விவாதிக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        கொட்டல் அறைகள்
                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு

                        இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு

                        இலங்கையில் கொட்டல் அறைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது

                        மூன்றாம் கொரனோ அலையின் பின்னர் இலங்கைக்கு நாள் தோறும் மூவாயிரம் உல்லாச

                        பயணிகள் வந்தடைகின்றனர் ,இதனால் இந்த கொட்டல் அறைகள் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது

                            பரவச மாத்திரைகள்
                            Posted in இலங்கை செய்திகள்

                            கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்

                            கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்

                            நெதர்லாந்து நாட்டில் இருந்து பொதி ஒன்றினுள் அடைத்தவாறு சுமார் 4000 பரவச மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது

                            இலங்கை சுங்க பிரிவினர் நடத்திய சோதனையில் மேற்படி மாத்திரைகள் சிக்கின ,இதன் மொத்த விலை சுமார் 26 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                            யாழில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்த பொதி வந்தடைந்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

                            வெள்ளவத்தையில் இருந்து சுங்க பிரிவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் குறித்த பொதியை பெற்றபோது அவர் கைது செய்ய பட்டுள்ளார்