முல்லை மாந்தையில் வீடு வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி முல்லை தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் ,இலங்கை தமிழர் கட்சி நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . மூன்றாம் இடத்தில் சைக்கிள் கட்சி காணப்படுகிறது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெட்டி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள் .

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இலங்கை தமிழரசு கட்சியை இந்த வெற்றியை உலகத் தமிழர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நாங்களும் பண்ணும் டிக் டாக் நேரலையில் இப்போது இந்த தேர்தல் வெற்றி பெறவில்லை அறிவித்துக் கொண்டிருக்கிற வேலைகள் பார்க்க எமது வன்னி மைந்தன் பகுதியில் பார்க்கலாம் .

Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் மீனவர்கள் போராட்டம் – இராணுவம் குவிப்பு

மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுத் தரக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள், இன்று (26) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து காலை 10.30க்கு பேரணியை ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகம் உடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை அவர்கள் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்க்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், போராட்டக்காரர்களை உள்ளே அழைத்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்றுக்கொண்டார்.

“சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் மீனவர்களுக்கும்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.

“இருந்த போதிலும் இவ் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருளானது எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை. கடந்த 08.05.2022 தொடக்கம் குறித்த

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வரவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “அத்துடன், விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

“எனவே, தயவுசெய்து எமது மீனவ மக்களின் இந்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு, மீனவர்கள்

சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்துத் தொரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற

கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.

“எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் கதைத்துள்ளோம். இன்று இரண்டு லோட் மண்ணெண்ணெய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.

“மாவட்ட மீனவர்களின் கோரிக்கைறை கடற்றொழில் அமைச்சுக்கும் எரி சத்தி அமைச்சுக்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம்” என்றார்.

குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது, சம்பவ இடத்துக்கு வருகைதந்த இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன்

கலந்துரையாடி போராட்டத்தை நிறுத்த முயற்சித்திருந்தனர். இருப்பினும்,
மீனவர்கள் அதற்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு

    தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு

    முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் மீட்க பட்ட சடலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

      முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

      இலங்கை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆளும்

      கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

      நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழர்கள் உரிமையை மைய படுத்தி இந்த


      போராட்டம் முன்னெடுக்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு

        முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு

        முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் பெற்றவர்கள் இருவரையும் இழந்து

        வசித்து வந்த இளம் வாலிபர் ஒருவர் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

        தாயின் ,தாயாருடன் வசித்து வந்த மாணவன் அவர் தங்கி இருந்த வீட்டு கிணற்றில்

        இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் ,நீர் எடுத்துவர சென்ற இவரை காணவில்லை என தேடிய பொழுது ,எங்கும் கிடைக்கவில்லை

          கிணற்றுக்குள் நீர் அள்ளிட சென்ற பொழுது ,அங்கு அவர் சடலமாக மிதந்துள்ளார் ,

          இவர் எவ்வாறு இந்த கிணற்றில் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

          இதைப்போலவே வவுனியா செட்டி குளம் பகுதியில் கிணறு ஒன்றில் பெண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார்

          இவருடன் கடந்த ஒருவாரத்தில் பத்து பேர் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,தமிழர் பகுதியில் தொடரும் இவ்வாறான மர்ம கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்

              முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்

              இலங்கை முல்லைதீவிவு பகுதியில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் தமிழீழ

              விடுதலை புலிகளினால் மறைத்து வைக்க பட்ட இரண்டு கைகுண்டுகள் ,

              02 RPG எறிகணைகள் , 05 60mm mortar குண்டுகள் , and 02 81mm மோட்டார் குண்டுகள்

              என்பனவற்றை விசேட இராணுவ அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது

              தேர்தல் நெருங்குவதை அடுத்து புலி பீதியை சிங்களவர்கள் மத்தியில்

              கிளப்பிட இப்பொழுது இராணுவம் ஆரம்பித்துள்ளதை இந்த ஆயுத மீட்பு விடயங்கள் காண்பிக்கின்றன

              முல்லைத்தீவில் புலிகளின்
              முல்லைத்தீவில் புலிகளின்
              Posted in இலங்கை செய்திகள்

              முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்

              முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்

              இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியில் புதிதாக அமைக்க பட்ட நீராவியடி

              விகாரையில் வசித்து வந்த நபர் ஒருவர் திடிரென மரணமாகியுள்ளார்

              இவருக்கு கொரனோவா அல்லது மாரடைப்பா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

              போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர்
              முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர்
              Posted in இலங்கை செய்திகள்

              முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

              முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

              இறுதி போர் உக்கிரம் இடம்பெற்ற முல்லைதீவு வட்டு வாகல் பகுதியில் ஊந்துருளியில் சென்ற நபர்களை

              இலக்கு வைத்து இராணுவத்தின் கடற்படை வாகனம் மோதி தள்ளியது .

              இதில் 28 வயதுடைய வாலிபர் சம்பவ இடத்தில பலியானார் .

              மேலும் மனைவி படுகாயமடைந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,


              மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்