Posted in Uncategorized

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டு


மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டு

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா​ வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில் அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள்

    இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள்

    எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

    8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக விஷேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

    இதுவரையில் இலங்கைக்கு 22 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

      கொரனோவுக்கு 215 பேர் மரணம்

      கொரனோவுக்கு 215 பேர் மரணம்


      கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

      115 ஆண்களும் 100 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 167 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 46 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.

      அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

      நாட்டில் மேலும் 3,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,060 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 376,216 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 58,729 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைது

        தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைது

        நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        நேற்று(01) காலை 06 மணிமுதல் இன்று(02) காலை 06 மணி வரையான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

          கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

          மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளப்பகுதியில் கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (31) பொலிஸார் முற்றுகையிட்ட சந்தர்ப்பத்தில் கசிப்பு

          உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பி ஓடியுள்ளதுடன் 70 லீற்றர் கசிப்பு மற்றும் கோடா, கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

          அதேவேளை அப்பகுதில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

          மாவட்ட விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனையில், வவுணதீவு பொலிஸ் நிலையப்

          பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமியின் தலைமையிலான பொலிஸார் குறித்த குளப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

          இதன்போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரை கண்டு காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளனர். இந்த நிலையில் 70 லீற்றர் கசிப்பு 6 பெரல்கள், கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பற்றை மீட்டனர்.

          இதேவேளை கண்டியனாறு குளத்தை அண்டிய பகுதியில் இளைஞர் ஒருவரை உள்ளூர் தயாரிப்பான கட்டுத் துப்பாக்கியுடனும், 3,750 மில்லி லீற்றர் கசிப்புடனுடம் கைதுசெய்தனர்.

          இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

            Posted in இலங்கை செய்திகள்

            மட்டக்களப்பு சின்ன ஊறணியில் -ஊரடங்கு வேளையில் நகை கொள்ளை

            மட்டக்களப்பு சின்ன ஊறணியில் -ஊரடங்கு வேளையில் நகை கொள்ளை

            மட்டக்களப்பு சின்ன ஊறணியில் பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையுடன் இணைந்த நகைக்கடை ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து அங்கிருந்த 5 அரை பவுண் தங்க ஆபரணங்கள்

            மற்றும் 85 அயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று (31) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

            குறித்த கடையில் ஒரு பகுதியில் பலசரக்கு வியாபாரமும், ஒருபகுதியில் நகை அடகு பிடிக்கும் கடை வியாபாரமும் இடம் பெற்று வந்த நிலையில் ஊரடங்கு சட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

            இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று காலையில் கடையின் உரிமையாளர் கடைக்கு சென்ற நிலையில் கடையின் பின்பகுதி கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்கள்

            மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன் குறித்த கொள்ளையன் முகத்தை

            மறைத்தபடி சூட்சகமாக கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

              Posted in Uncategorized

              கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் மீட்பு

              கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் மீட்பு

              அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

              குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

              தொடர்ந்து இராணுவத்தினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

              குறித்த கைக்குண்டுகளை பாதுகாப்பாக அடையாளப்படுத்திய பொலிசார், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

              Posted in Uncategorized

              நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்- முழங்கிய கூலிக்காரன்

              நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்- முழங்கிய கூலிக்காரன்

              நாட்டில் பிரப்பிக்கப்பட்டிருக்கும் அவசரகால நிலைமையின் ஊடாக ஜனாதிபதி ​ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான்விரும்பிய படி அவசரகால விதிமுறை​களை வகுக்கமுடியும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அவற்றையெல்லாம் சட்டமாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
              சென்றடையும் என்றார்.

              ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன், நாடு பூராவும் அவசரகால
              நிலைமையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் கருத்துரைக்கும் போதே, தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

              அந்த வீ​டியோ பதிவில் ​மேலும் தெரிவித்துள்ள அவர், உணவு விநியோகத்துக்கும் அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் நேற்று முதல் (நேற்று முன்தினம் 30ஆம் திகதி) அவசரகால நிலைமை நாடு முழு​வது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

              “நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால், அல்லது அதனோடிணைந்த சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும்“ என்றார்.
              இதனால்தான், பொதுமக்கள் பொதுபாதுகாப்பு சுகாதார அவசரகால
              நிலைமைகள் சட்டத்தை உருவாக்குமாறு நான் கோரியியிருந்தேன்.

              தனிநபர் பிரேரணையாக அதற்கான யோசனைகளை சமர்ப்பித்துள்ளேன். அதனை
              ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும்,
              அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

              இதனூடாக ஆபத்து உள்ளது. அதாவது ஜனாதிபதி ஆட்சியே நாட்டில் நடைபெறும். அவசரகால விதிமுறைகளை விரும்பியபடி வகுக்க முடியும் சட்டமாக்கவும் முடியும். ஆகையால், இச்செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

              Posted in Uncategorized

              நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்

              நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்

              நெல் பறிமுதல் என்ற போர்வையில், அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள்
              வடக்கு,கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கான நடவடிக்கை
              என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
              உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

              மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், நேற்று
              (31) அவரை சந்தித்து, தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.

              இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில், நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில், இன்று அந்த நெல்லை பறிமுதல் செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துவருவதால் தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

              அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத காரணத்தாலும் அடுத்த விவசாய செய்கைக்குத் தேவையான முளை நெல்லுக்காகவும் நெல் சேமித்துவைக்கப்படுவதாகவும் உரிய காலத்தில் நல்ல விலை கிடைக்கும்போது, அவை விற்பனை செய்யவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

              ஆனால், இன்று அவ்வாறு நெல்லை வைக்கமுடியாது என விவசாயிகளின்
              களஞ்சியங்களை முற்றுகையிடும் நுகர்வோர் அதிகார சபையினரால் அவை சீல்
              வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

              இதனையடுத்து கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, பாரியளவிலான
              நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள்
              சேமித்துவைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம்
              முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்தார்.

              “மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் விவசாயத்தை நம்பி வாழும்
              மக்கள். ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குள் அந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் வரும்.

              “தற்போதைய அரசாங்கம் தனது நிர்வாகத்தை சரியான முறையில் செய்யாமல்,
              தனது வேலைத்திட்டங்களை பொறுப்பற்ற வகையில் செய்து, இலங்கை
              பொருளாதாரத்தை முற்றாக அழித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில்,
              மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும்
              அழிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

              “அரசியின் விலையை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால், இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் நெல்லை பறிமுதல் செய்யுங்கள்.

              அதனைவிடுத்து, வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி
              விவசாயிகளின் நெல்லை பறிக்கின்றீர்கள்.“இந்தச் செயற்பாடு, வட, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்” என்றா

              ர்.

                Posted in Uncategorized

                பறக்கும் படை வேட்டை – 650 பேர் கைது – முடங்கிய நாடு

                பறக்கும் படை வேட்டை – 650 பேர் கைது – முடங்கிய நாடு

                இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்


                இதனால் பலத்த தடைகள் விதிக்க பட்டுள்ளது ,ஊரடங்கு உத்தரவு மீறி வெளியில் நடமாடிய சுமா

                650 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                  Posted in Uncategorized

                  பாகிஸ்தானில் 11 ஐஸ் தீவிரவாதிகள் படுகொலை

                  பாகிஸ்தானில் 11 ஐஸ் தீவிரவாதிகள் படுகொலை

                  பாகிஸ்தான் நாட்டில் ஐஸ் எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி 11 தீவிரவாதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                  தொடர்ந்து அழித்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது ,


                  தாலிபான்கள் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது தாமே என ஐ எஸ் தெரிவித்த நிலையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    குருநகர் இளைஞன் கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்

                    குருநகர் இளைஞன் கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்

                    குருநகர் இளைஞன் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

                    குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்தார்.

                    அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

                    சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

                    சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான பாசையூர் ரெமியின் சகோதரர்களைத் தேடி தீவகம் உட்பட பல இடங்களில் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.

                    இந்த 9 நாள்களின் பின்னர் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர் இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

                    விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

                    இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

                    கொல்லப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

                    Posted in இலங்கை செய்திகள்

                    2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

                    2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

                    2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

                    அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

                    இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை செலுத்து நடவடிக்கையின்,

                    ன்னேற்றம் குறித்து உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்தவுடன் ZOOM தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடினார்.

                    இந்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் செலுத்தி முடிக்குமாறு இராஜாங்க அமைச்சர் மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

                    18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இராணுவத் தளபதியின் அறிவிப்பு

                    இராணுவத் தளபதியின் அறிவிப்பு

                    கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுடைய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மாத்திரம்

                    அதனை பெற்றுக் கொள்ளுமாறு கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

                    ஒவ்வொரு பிரதேசத்திற்கும், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

                    அண்மையில் பல தடுப்பூசி நிலையங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

                    கொழும்பு மாவட்டத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் தியத உயனவில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில்

                    தங்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    ரசியா ஊசிகள் இலங்கை வந்தன

                    ரசியா ஊசிகள் இலங்கை வந்தன

                    ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் 15,000, இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

                    Posted in இலங்கை செய்திகள்

                    திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் தனிமை படுத்தல்

                    திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் தனிமை படுத்தல்

                    கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல்

                    ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                    நேற்றைய தினம் (30) இத்திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 119 என்ற பொலிஸ்

                    அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த 15 பேரும் எச்சரிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மரணச்சடங்கில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா

                    மரணச்சடங்கில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா

                    வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில்

                    கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                    இம்மாதம் 24ஆம் திகதி, ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில், மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு

                    சுகவீனம் ஏற்பட்டதையடுத்து, புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

                    இதையடுத்து, வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரண சடங்கில் கலந்துகொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு, இன்றைய தினம் (30) அன்டிஜன் பரிசோதனை

                    மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

                    இதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதோடு, சுகாதார

                    பிரிவினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

                    Posted in Uncategorized

                    இலங்கையில் பெரும் பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கிறார் வெடிகுண்டு அமைச்சர்

                    இலங்கையில் பெரும் பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கிறார் வெடிகுண்டு அமைச்சர்

                    உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கொடுக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று (30) தெரிவித்தார்.

                    92 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு கிலோ சீனியை 220 ரூபாய்க்கு விற்க அனுமதித்ததற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

                    இராஜினாமா செய்யாமல், பொய்யான அறிக்கைகளைத் தொடர்ந்தால், அமைச்சர் அந்த மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

                    கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.

                    ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாய்க்கு மேல் இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகர்கள், வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

                    அரசாங்கத்தின் தவறான நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சம்பிக்க எம்.பி தெரிவித்தார்.

                      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                      ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்

                      ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்


                      மதுரங்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய

                      மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

                      ஊரடங்கு உத்தரவின் போது, ​​மதுரங்குளிய – கனமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஊரடங்கு திருமணம் நடைபெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

                      அந்த தகவலின் படி, பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு

                      குழுவினர் தப்பி ஓடியுள்ளனர். அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்களை அந்த வீட்டில் தனிமைப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        காவல்துறை வேட்டையில் 581 பேர் கைது

                        காவல்துறை வேட்டையில் 581 பேர் கைது

                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                        இதனால் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடுக்க பட்டுள்ளதுடன் ,நடமாடும் சுதந்திரம் முடக்க பட்டுள்ளது

                        இந்த விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 581 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்