இலங்கை இந்திய திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்தியாவுக்கு இடையில் திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கரை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சில் ஈடுபட்டார் .

இலங்கைக்கு தேவை படும் அவசர உதவிகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதாகவும் ,அவர்கள் விடுக்க பட்ட அந்த உதவிகள் விரைவில் இலங்கைக்கு கிடைக்க பெற வழி வகை செய்து கொடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்
Posted in இலங்கை செய்திகள்

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஜோர்டானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்திய முதலீட்டாளர்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தாயகம் திரும்பியிருந்தனர்.

இந்த ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் குழு எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இது தவிர, தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன், தூதுவர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய கெடட் படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக 19 விமானங்களும் விமானப்படையின் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளும் அணிவகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்

அதேநேரம் 76வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 05.00 மணி முதல் காலை 9.00 மணி வரை கரையோர மார்க்கத்தில் பொதுச்

செயலாளர், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாமல் இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை தற்போது செல்லும் பாதை சரியானது என முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், இந்தப் பாதையில் தொடர்ந்து

சென்று செழிப்பை மீண்டும் பெற சுதந்திர தினத்தன்று தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்

தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாம் கடினமான எல்லைகளைக் கடந்து வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணிப்பது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதில் 803 பேர் கைது செய்யப்பட்டனர் .விசேட பொலிஸ் நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .

யுக்திய நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த கைது நடவடிக்கை என பொலிசார் தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் பலர் தேட படும் குற்றவாளிகளாக காணப்பட்டனர் .

யாவரும் நீதிமன்றில் பரப்படுத்த சிறை தணடனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

போதைவஸ்து ஒழிப்பு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .

செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்


செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்|ஹவுதிகள் கடும் தாக்குதல்

செங்கடலில் பயணித்த எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் கப்பல் எரிகிறது ,செங்கடலில் பயணித்த இந்த கப்பலில் இலங்கை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் .

செங்கடலில் எரியும் இந்த கப்பலில் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
சிக்கியுள்ளனர் .

ஹவுதிகள் கடும் தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து பட்டுள்ளது .

வீடியோ

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி

கடந்த 12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது..

இதனால் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

காரைதீவு – அக்கரைப்பற்று வீதி காரைதீவு – அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது.

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்

ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் வரவுள்ளார்.

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதியமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்

2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த பணம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன

வீடியோ

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

டிசம்பர் 17-23 வரையான வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகரிப்பாகும் என வௌிநாட்டு ஊடங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வீடியோ

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்


இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை யாரா நீங்கள் உடனே இதனை செய்து கொள்ளுங்கள் ,
இதை தெரியாது இதை செய்தல் உங்களுக்கு ஆபத்து .


இலங்கை வரி விதிப்பு உடனே இதை தெரிந்து மேற்கொள்ளுங்கள் ,
சட்டத்தை மதிக்க தவறினால் சிறை ,தண்டம்

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

லங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்கெடுப்பின் படி இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் 60.5 வீதத்தால் குறைந்துள்ளதுடன், குடும்பங்களின் மாதாந்த செலவுகள் 91 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

தற்போது 3.4 வீதமான குடும்பங்களின் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், 36.6 வீதமான குடும்பங்களின் வருமானம் மாறாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமானம் குறைந்த குடும்பங்கள் கடன் வாங்குதல், பொருட்களை அடமானம் வைப்பது, பிறரிடம் உணவு மற்றும் பணம் கேட்பது போன்ற உண்மைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் 22 வீதமான குடும்பங்கள் கடனினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

வீடியோ

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு
Posted in இலங்கை செய்திகள்

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு

சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார்.

அத்துடன், நீர்வழங்கல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு

இதன்போது நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகள் பற்றி தூதுவருக்கு அமைச்சர் விளக்கமளித்தார். அதற்கு அவுஸ்திரேலியாவின் உதவியும், அனுபவ பகிர்வும் அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும், அதற்கு அவுஸ்திரேலியாவும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையில் நேற்று (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பளை அட்கல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

இதற்கிடையில், நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா

போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால், ஜே.என்.1 – ஒமிக்ரோன் வகை துணை வைரஸ் சமூகத்தில் காணப்படலாம் என்று சமீபத்தில் கூறினார்.

கொவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு அமைதியான காலகட்டம் நிலவி வந்த நிலையில் இந்தச் சம்பவமானது மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மியான்மாரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக வௌிவிவகார அமைச்சகம் மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை மியான்மார் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடியோ

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் வான் கதவுகள் திறப்பு .

பருவகால மலை காரணமாக குங்கள் நிரம்பி வழிவதால் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கின்றன .

இந்த வெள்ளம் காரணமாக பல்லாயிரம் மக்கள் அகதிகளாக பாடசலைகள் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உதவிகளை வழங்கி வருகிறது .

வீடியோ

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் சட்டம் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் சரணடையப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

வீடியோ

உலக வங்கி
Posted in இலங்கை செய்திகள்

உலக வங்கியால் இலங்கைக்கு 34 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியால் இலங்கைக்கு 34 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியால் மேலும் 34 மில்லியன் அமெரிக்கா டொலர் இலங்கைக்கு கடன் உதவியாக வழங்க பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மத்தியில் அதன் பொருளாதரத்தை உயர்த்தும் முகமாக இவ்விதமான உதவிகளை வழங்கி வருகிறது .

பெற்ற கடனை திருப்பி வழங்க வேண்டும் என்கின்ற நிலை உள்ளது ,அதனால் கவனத்தில் அதனை இலங்கை செயல்படுகிறதா என்பதே கேள்வியாக உள்ளது .

வீடியோ

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்நாயக்க, அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தார்.

“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன. கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்,” என்றார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க, அவ்வாறான மின்வெட்டை தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் 2022 ஆம் ஆண்டு PUCSL தலைவர் என்ற வகையில் தான், வர்த்தமானி வெளியிட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமைச்சர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியுள்ளதாகவும், இதன் காரணமாக

அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 5 மணித்தியாலங்களுக்குள் கூட அரசாங்கத்தினால் மின்சாரத்தை மீளமைக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அவருக்கு எதிராக பிரேரணை ஒன்று

சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில் ஜனக்க ரத்நாயக்க PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு தரங்களை சேர்ந்த 1877 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ப்ரியந்த பெரேராவின் பரிந்துரைக்கமைய, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு நேற்று கொண்டாடப்பட்டது

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை இலங்கை இன்று கஞ்சா தேசமாக மாற்றம் .

இலங்கை மக்களுக்கு எதிரியாகும் போதை பாவனை அதிகரிப்பும் அதனால் எழும் குற்ற செயல்களும் காணப்படுகின்றன

கைது எதிரொலி

இந்த வருடம் 123. 000 பேர் கைது எதிரொலி ,இலங்கை கஞ்சா தேசமாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

இதே கஞ்சா பாவனையை அதிகரித்து ,எதிரியானவன் தமிழருக்க்குள் போராடும் திறனை மழுங்கடித்து ,புதிய கலாச்சாரத்தை உருவாக்கி அதன் ஊடாக ,திருட்டு சமூகமாக அல்லது குற்றவியல் சமுகமாக தமிழர் தேசத்தை மாற்றி செல்கிறது .

எதிரிகளின் சூழ்ச்சியில் தமிழர் தேசம்

எதிரிகளின் இந்த சூழ்ச்சியில் இருந்து தமிழர் தேசம் மீண்டெழுந்து சென்றிட என்ன வழி என்பதே கேள்வியாக உள்ளது .

எதிர் வரும் எதிரிகள் சூழ்ச்சிகளை இனம் கண்டு தமிழர்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

தமிழருக்கு எதிரியாகும் இந்த கஞ்சா ,போதைவஸ்தை அடியோடு அழிக்க மீளவும் புலிகள் தேவை படுகின்றனர் என தமிழ் மக்கள் பேசி கொள்கின்றனர் .