Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக்கில் தேச துரோகி சுமந்திரனை வறுத்தெடுக்கும் மக்கள் – பார்த்து சிரிங்க

பேஸ்புக்கில் தேச துரோகி சுமந்திரனைவறுத்தெடுக்கும் மக்கள் – பார்த்து சிரிங்க

இலங்கையில் புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளாராக விளங்கும் சுமந்திரனின்

நரித்தனமும் ,சிங்கள தேசியவாத கொள்கைக்குள் தன்னை முன்னிலை படுத்தி தமிழினத்தை ,அதன் விடுதலையை கொச்சை

படுத்தி நகரும் இவரது இந்த செயல் பாடுகள் மக்கள் மத்தியில் உலகலாவிய ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

இவரது இந்த செயல் பாடுகள் சரி எனவே பொறுப்புணவு அற்று சுமந்திரனுக்கு

வக்காளத்து வழங்கி அவரை காப்பாற்றியுள்ள சம்பந்தர் மீதும் தமிழர்கள் அதிகம் கோபம் கொண்டுள்னனர் .

இறுதி போர் முடிவடைந்து இன்று 11 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று தந்த தீர்வு என்ன ..?

இந்த பத்து ஆண்டுகளில் சிங்கள அரசுகளை காப்பாற்றி கரை சேர்ந்துள்ளன .எனவே இம்முறை சம்பந்தர் ,சுமந்திரனை மக்கள்

தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,விக்கினேஸ்வரன் போன்ற மாற்று காட்சிகளுக்கு தமது வாக்குகளை அளித்து தமது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்

அவ்வாறு செய்திட தவறின் தமிழினத்தை யாராலும் காப்பற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்றாக மாறும்

எனவே மானமுள்ள தமிழர்களே கூட்டைமைப்பிற்கு வாக்களிப்பதை தவிர்ப்பம் ,சிறந்த சரியான பாடத்தினை கூட்டமைப்பிற்கு மக்கள்

வழங்க வேண்டும் என்பதே நமது அவா .ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் .

சிங்கள பால் குடி சுமந்திரனுக்கு மக்கள் வழங்கிய செருப்படியை பாருங்கள் .இதுக்கு பிறகுமா சுமந்திரன் உயிருடன் இருப்பான் ..?

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ்ப்பாணத்தில் வீடுகளில் தீப்பற்றி வணங்கிய மக்கள் –

      யாழ்ப்பாணத்தில் வீடுகளில் தீப்பற்றி வணங்கிய மக்கள் –

      முள்ளி வாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெறுகிறது ,


      இவ்வேளை யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் மானமுள்ள தமிழர்கள்

      தமது பிள்ளைகளுடன் இணைந்து வீட்டின் முன்பாக தீபம் ஏற்றி இறந்த மக்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்

      வீடுகளை விட்டு மக்கள் வெளியேற அஞ்சி வரும் இவ் வேளையில் இந்த நினைவை நெஞ்சுறுத்தி இவர்கள் வழங்கியுள்ளமை இங்கே காணத்தக்கது

      யாழ்ப்பாணத்தில் வீடுகளில்
      யாழ்ப்பாணத்தில் வீடுகளில்
          Posted in இலங்கை செய்திகள்

          முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு!

          முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு!

          கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில்

          இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

          உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது உறவுகளை இழந்த மக்கள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

          படையினரின் கெடுபிடிகளை கடந்து அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் உள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அவர்

          இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

          இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த இராணுவம் மற்றும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு மேல்மட்டம்

          கொண்டு சென்று உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

          இதன்காரணமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நேரத்துக்கு

          செல்ல வேண்டிய விடயங்களை பற்றி தெளிவு படுத்தியநிலையில், தனது

          ஆதரவாளர்களுடன் சென்ற நான்கு வாகனங்களில் முன்னாள் பிரதி அமைச்சர்

          சென்ற வாகனத்தை மாத்திரமே அனுமதித்திருந்தனர்.உண்மையில் எமது மக்களின் இந்த உரிமையைக் கூட போராடி பெறவேண்டி

          ஏற்பட்டமை குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார்.

              Posted in இலங்கை செய்திகள்

              கடைகளை உடைத்து உள்ளே புகுந்த லொறி – அதிர்ச்சி photo

              கடைகளை உடைத்து உள்ளே புகுந்த லொறி – அதிர்ச்சி photo

              இலங்கை குருநாகல் பிரதான வீதியில் சீமேந்து ஏற்றி என்ற லொறி ஒன்று

              சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்துள்ளது

              இதனால் நான்கிற்கு மேற்பட்ட கடைகள் முற்றாத உடைந்து சேதமாகின

              ,எனினும் இந்த விபத்த்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

              சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

              சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

              கடைகளை உடைத்து
              கடைகளை உடைத்து
                  Posted in இலங்கை செய்திகள்

                  கிளிநொச்சியில் 60 000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம் -அமைப்பு

                  கிளிநொச்சியில் 60 000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம் -அமைப்பு

                  இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை

                  ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம்

                  மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்

                  ஹோமாகம தியகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

                  அமைக்கப்படவுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

                  ஹோமாகம தியகம என்ற இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட

                  நிலப்பகுதியை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன , மா நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி திரு. பிரியந்த

                  பந்துவிக்ரம , நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. பிரசாத் ரணவீர , இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு

                  சபையின் தலைவர் திரு.சமின் சில்வா , நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலரின் பங்களிப்புடன் பார்வையிட்டார்.

                  இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,நிர்மாணப்பணிகள்

                  நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை

                  முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக 26 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

                  பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படும் என்றும், முதற்கட்டத்தின் கீழ் போட்டியை பார்வையிடும் சுமார்

                  நாற்பதாயிரம் (40000) பேருக்கான வசதிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் இருபதாயிரம் (20000) ஆசனங்களை ஒன்றிணைத்து மொத்தமாக 60 000

                  பார்வையாளர்களின் ஆசனங்களை கொண்ட வசதிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

                  கிளிநொச்சியில் 60 000 பார்வையாளர்களை
                  கிளிநொச்சியில் 60 000 பார்வையாளர்களை
                      Posted in இலங்கை செய்திகள்

                      தமிழர் இன அழிப்பு நாளில் 14,617 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                      தமிழர் இன அழிப்பு நாளில் 14,617 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                      இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்த பேரினவாதி மகிந்தா ,கோட்டா

                      அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு இடம்பெற்று 11 வருடங்களை

                      எட்டியுள்ள நிலையில் ,ஆறாத வடுவோடும் வலியோடும் உலவும் தமிழர்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை

                      இந்த தமிழின அழிப்பு வெற்றி நாளில் 14,617 சிங்கள இராணுவத்தினருக்கு

                      பதவி உயர்வு வழங்கி கவுரவித்துள்ளார் ஆளும் இன படுகொலையாளி கோட்டபாய

                      இதில் பதவி உயர்வு வழங்க பட்ட அனைவரும் இறுதி போரில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது

                      தமிழர் இன அழிப்பு நாளில்
                      தமிழர் இன அழிப்பு நாளில்
                          Posted in இலங்கை செய்திகள்

                          முள்ளி வாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நிகழ்வு – வீடியோ

                          முள்ளி வாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நிகழ்வு – வீடியோ

                          முள்ளி வாய்க்கால் மண்ணில் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டன ஆளும் சிங்களஅரசு அந்த தமிழ் இன அழிப்பு இடம்பெற்று இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றன

                          எனினும் இதுவரை தமிழர்களுக்கு எவ்வித தீர்ப்பும் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்க படவில்லை


                          ஆளும் வல்லரசுகள் ஆதரவு வழங்கி செல்ல ,அந்த இன அழிப்பு நிகழ்வில் இருந்து சிங்கள அரசு தப்பித்து செல்கிறது

                          இந்த மக்கள் படுகொலைகளைக்கு தீர்ப்பு தருவது யார் ..? சிங்கள அரசுக்கு என்ன தண்டனை ..?

                          நன்றி தோழர்

                          https://www.youtube.com/watch?v=tPNTTGagGYQ
                              Posted in இலங்கை செய்திகள்

                              ஊரடங்குச் சட்டம் முற்றாக தளர்வு- மக்கள் நடமாட அனுமதி

                              ஊரடங்குச் சட்டம் முற்றாக தளர்வு- மக்கள் நடமாட அனுமதி

                              கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த

                              ஊரடங்குச்சட்டம் இன்று (18) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

                              கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

                              ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

                              கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மக்களில் வாழ்கைளை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                              அதற்கமைய தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் படி மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய நடைப் பயணமாக செல்ல முடியும்.

                              இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில்

                              கோரிக்கைக்கு அமைய பஸ் வசதிகளும், ரயில் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

                              இந்த நிலையில் இன்று (18) 19 தடவைகள் ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

                              ரயில்களில் ஏற்கனவே ஆசனங்களை முன்பதிவு செய்துக்கொள்ளாத

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

                                  தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

                                  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களுககான மண்சரிவு அனர்ரத எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

                                  இன்று வீசி கடும்காற்றின் காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

                                  மாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய

                                  மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

                                  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி

                                  மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்அனர்த்த முகாமைத்து மத்திய

                                  நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.

                                  கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்ற காலி மாவட்டத்தில் பத்தேகம, இரத்தினபுரி

                                  மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல, குருநாகல்

                                  மாவட்டத்தில் பொல்கஹவெல,மாவத்தகம,கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ,

                                  நுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                                  மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான

                                  இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

                                  இடர் நிலை ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை

                                  ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

                                  கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும்


                                  கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

                                  இந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின்

                                  பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

                                  தமிழன் அழிந்த நாளில்
                                  தமிழன் அழிந்த நாளில்
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      முப்படைகளினால் நாள் சம்பளத்தை அரசுக்கு இலவசமாக வழங்க முடியாது – இராணுவ மந்திரி

                                      முப்படைகளினால் நாள் சம்பளத்தை அரசுக்கு இலவசமாக வழங்க முடியாது – இராணுவ மந்திரி

                                      கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு

                                      ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு

                                      பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

                                      கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு

                                      ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு

                                      பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

                                      மேற்படி கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள திதி நெருக்கடிகளை சமாளிக்க அமைச்சின் கீழ் வரும் அனைத்து

                                      நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரைச் சம்பளம், வார சம்பளம் அல்லது மே

                                      மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

                                      ஜனாதிபதியின் செயலாளரர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தரவின் வேண்டுகோளுக்கு பங்களிக்க விரும்புபவர்கள் மாத்திரம்

                                      அவர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு நாங்கள் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

                                      முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சில சமூக

                                      ஊடகங்களில் வெளியான கருத்துக்களை முற்றாக மறுத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, நன்கொடை வழங்கும் இந்த கோரிக்கை

                                      இராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படையினருக்கு
                                      அவசியமற்றது என உறுதிப்படுத்தினார்.

                                      எவ்வாறாயினும், ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவது முப்படை, பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்புப்

                                      படைக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு

                                      திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு

                                          இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு

                                          ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல்

                                          19 ரயில்; சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                          இதுவரையில் 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

                                          இதற்கமைவாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 19 அலுவலக ரயில் சேவைகளை முன்னெக்கத்த

                                          திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
                                          நாவலப்பிட்டியிலில் இருந்து கண்டிக்கும் மாத்தளையி;ல் இருந்து கண்டிக்குமாக இந்த ரயில் சேவைகள்;

                                          இடம்பெறவுள்ளன.இதேபோன்று பொல்காவலையில் இருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து காலிக்குமிடையிலும் இதற்கு

                                          முன்னர் இடம்பெற்ற ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

                                          இதேவேளை பணிகளின் நிமித்தம் செல்பவர்கள் தங்கள் நிறுவங்களின் முகாமையாளர்கள் மூலம் ரயில்வே

                                          திணைக்களத்தில் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவார்கள் என்றும் அவரமேலும் கூறினார்.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              வீடுகளில் டெங்கு பரிசோதனைகள்

                                              வீடுகளில் டெங்கு பரிசோதனைகள்

                                              தற்போது நிலவும் மழையுடனான கால நிலையையடுத்து டெங்கு நோய் பரவக்கூடிய நிலை அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்தள்ளது.

                                              டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் வீடுகளின் சுற்றாடல்பகுதியை பரிசோதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள்

                                              முன்னெடுக்கப்படவிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அருனா ஜெயசேகர தெரிவித்தார்.

                                              கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை போன்று டெங்கு நோய் பரவுதை தடுப்பதற்கும்


                                              ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

                                              ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாட்டில் 413 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு

                                              நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, நாட்டில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 49 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி

                                                  தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி

                                                  ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது

                                                  ,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது

                                                  அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன

                                                  ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து

                                                  அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்

                                                  கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது

                                                  சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு

                                                  குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்

                                                  இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்

                                                  கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன

                                                  தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது

                                                  அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து

                                                  தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .

                                                  இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்

                                                  ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது

                                                  இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,

                                                  இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.

                                                  இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட

                                                  இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –

                                                  தேச துரோகி சுமந்திரன்
                                                  தேச துரோகி சுமந்திரன்
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும்-மனோ கணேசன்

                                                      மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும்

                                                      புதிய தூதுவர் கோபால் பாகலேயை வாழ்த்தி மனோ கணேசன் தெரிவிப்பு

                                                      மலையக தோட்ட புறங்களில் முன்னெடுக்கப்படும், இந்திய உதவி வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டும். பல வருடங்களாக நின்று போய் இருந்த அந்த திட்டத்தை

                                                      , 2015 க்கு பிறகு ஆரம்பித்து நடத்திய கட்சி என்ற முறையில், உங்களுக்கு இது தொடர்பான முழுமையான ஒத்துழைப்பை, தமிழ்

                                                      முற்போக்கு கூட்டணி எப்போதும் வழங்கும். அதேபோல், அதிகார பகிர்வின் ஒரே நடைமுறை ஊன்றுக்கோளாக இருக்கின்ற

                                                      மாகாணசபை மற்றும் 13ம் திருத்தம், உள்ளிட்ட தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இந்திய கரிசனை தொடர வேண்டும்.

                                                      நீங்கள் இலங்கை வந்த உடனேயே உங்களை தொடர்பு கொண்டு நான் உரையாடினேன். இப்போது அதிகாரபூர்வாக, இலங்கை ஜனாதிபதியிடம் உங்கள் பதவி ஆவணங்களை

                                                      சமர்பித்ததையடுத்து, நீங்கள் பாரத நாட்டின் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றுள்ளீர்கள். இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாகவும் இந்நாட்டு மலையக மற்றும்

                                                      ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன் என புதிய இந்திய தூதுவர் கோபால் பாகலே

                                                      உடன் தொலைபேசியில் உரையாடிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும

                                                      மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                                      இது தொடர்பில் அமைச்சரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

                                                      பல வருடங்களாக இந்திய வீடமைப்பு திட்டம் நின்று போயிருந்தது. எமது ஆட்சி அமைக்கப்பட்டவுடன், குடியிருப்பாளர்களுக்கு நில உரிமையை வழங்க நாம் அமைச்சரவை அனுமதியை பெற்றோம்.

                                                      இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் முன்னாள் இந்திய தூதுவருடன், எமது கூட்டணியின் பிரதிதலைவர் ‘மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய

                                                      அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சர், பழனி திகாம்பரம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டார். கடந்த காலங்களில் இருந்த முறையற்ற அரசியல் தலையீடுகளை தவிர்த்து, நாம்

                                                      மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களை கிராவாசிகளாக மாற்றும் புதிய கிராமங்களை இந்திய வீடமைப்பு திட்டம் மூலம்

                                                      ஆரம்பித்து நடத்தினோம். இது தொடர வேண்டும். இதற்கான எமது ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு.

                                                      அதேபோல் இந்நாட்டில் மாகாணசபை முறைகளையும், 13ம் திருத்தத்தையும் பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் தார்மீக

                                                      பொறுப்பை இந்தியா எக்காலத்திலும் கைவிடக்கூடாது. இது தொடர்பிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான

                                                      ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு என்பதையும் நான் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

                                                      எமது ஆட்சியின் போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கை மலையகத்துக்கு வந்த போது வரலாற்றில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு கூட்டத்தை நாம் முன்னின்று நோர்வூட் நகரில்

                                                      நடத்தினோம். அக்கூட்டத்திலேயே மேலும் பத்தாயிரம் வீடுகளை அமைக்கும் புதிய அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார் என்பதையும், பாரத பிரதமரின் அன்றைய

                                                      தூதுக்குழுவில் சிறப்பு அதிகாரியாக நீங்கள் வருகை தந்ததையும் நான் நினவு கூற விரும்புகிறேன்.

                                                      இவற்றுக்கு பதிலளித்த இந்திய தூதர் கோபால் பாகலே, வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான ஒத்துழைப்பை தான்

                                                      வரவேற்பதாகவும், இவை பற்றிய சமகால வரலாறு மற்றும் நிலவரங்கள் பற்றி தான் அறிந்து வருவதாகவும், இயல்பு

                                                      நிலைமைகள் திரும்பிய பின் நேரடியாக சந்தித்து உரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

                                                          Posted in இலங்கை செய்திகள் கனடா செய்திகள்

                                                          கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ஒட்டாவா சுரேஷ் விபத்தில் உயிரிழப்பு

                                                          கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ஒட்டாவா சுரேஷ் விபத்தில் உயிரிழப்பு

                                                          கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் சுரேந்திரன் தம்பிராஜா (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.

                                                          கனடாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தின் மத்தியில் ஒட்டாவா சுரேஷ் என்ற பெயரில் அவர் நன்கறியப்பட்டவர்.

                                                          நேற்று முன்தினம் (15) மாலை ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே மின் கம்பம் ஒன்றுடன் மோதிய

                                                          மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ், உதவி செய்துகொண்டிருந்த வேளை 3வது வாகனம் மின்

                                                          கம்பத்துடன் மோதியது. இதில் மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                                          சுரேஷ் உதவிக்கு சென்ற -முதலாவதாக விபத்தில் சிக்கிய சாரதி ஒருவர் சிறு காயத்துடன் வைத்தியசாலையில்

                                                          அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                          ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ், யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாக

                                                          கொண்டவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின்

                                                          தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.

                                                          கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.

                                                          ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் 1980களில் இருந்து 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.

                                                          2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக இவரே ஒழுங்கமைத்திருந்தார்.

                                                          2000 ஆண்டு இறுதியில் கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), மற்றும் டொரோண்டோவில் இயங்கிவரும் TVI, CMR வானொலி ஆகியவற்றின் ஆரம்ப உருவாக்கத்தில் சுரேஷின் பங்களிப்பு பெரியது.

                                                          ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய

                                                          இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் தலைவர், படையணிகளை புகைப்பட தொகுப்புகளாக உருவாக்கியிருந்தார்.

                                                          ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஆர்வம் கொள்ள வைத்திருந்தார்.

                                                          கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

                                                          கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ‘ஒட்டாவா சுரேஷ்’ விபத்தில் உயிரிழப்பு!
                                                          கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ‘ஒட்டாவா சுரேஷ்’ விபத்தில் உயிரிழப்பு!
                                                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                              15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது

                                                              15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது

                                                              இலங்கை ஆட்டங்கால பகுதியில் பதின் ஐந்து வயது சிறுமியுடன் கணவன் மனைவி போல வசித்து வந்த


                                                              இருபத்தி மூன்று வயது காதலன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

                                                              சிறுமியுடன் பாலியல் உறவை மேற்கொண்டார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது

                                                              இடம் பெற்றுள்ளது ,பெண் விட்டார் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்தே மேற்படி காதல் ஜோடிகள் கைது செய்ய பட்டுள்ளனர்

                                                              இதுபோல நாட்டில் பல்லாயிரம் பேர் சுத்துறாங்க ,இதில நம்ம மாட்டிக்கிட்டம் என இவர் புலம்பிய படி சிறை சென்றுள்ளனர்

                                                              மகள் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் ,காதல் செய்த அலங்கோலம்

                                                              15 வயது சிறுமியுடன்
                                                              15 வயது சிறுமியுடன்
                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – இருவர் உயிரிழப்பு

                                                                  வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – இருவர் உயிரிழப்பு

                                                                  நாட்டின் சில இடங்களில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். 1805 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                                                  பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மா – ஓயாவின் நீர்மட்டம் கிரியுல்ல பகுதியில் உயர்வடைந்துள்ளது. ; கிரியுல்ல – மரதகொல்ல பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்

                                                                  திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                                  சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளத்தில்

                                                                  சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் பணியில் கடற்படையின் பல பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

                                                                  மழை தொடருமாயின் கிரியுல்ல – குருணாகல் வீதியின் கிரியுல்ல பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

                                                                  களனி கங்கையின் ஹொலொம்புவ பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குகுலே கங்கை மற்றும் தெதுறு ஓயா

                                                                  நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும்

                                                                  மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

                                                                  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

                                                                  கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வெள்ளத்தினால் 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதே பகுதியில் வல்தெனிய

                                                                  பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை மாவட்டத்தில்

                                                                  இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

                                                                  மழையுடனான வானிலையை அடுத்து மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.

                                                                  கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவான இடங்களை முதல் கட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

                                                                  மழை தொடருமாயின் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும்

                                                                  நிலம் தாழிறங்கல் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

                                                                  இரண்டாம் கட்டத்திற்குள் அவதானத்துடன் செயற்பட வேண்டிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான இடங்கள்

                                                                  இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் தொடர்பில்

                                                                  அபாயம் நிலவுமாயின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

                                                                  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மூன்றாம் கட்டப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டியது கட்டாயமானதாகும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

                                                                  கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான பகுதிக்கு உட்பட்ட மக்கயேள இவ்வாறு அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

                                                                  மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள்

                                                                  பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தளை,

                                                                  இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                                                                  இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால் நாட்டை சூழவுள்ள

                                                                  கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


                                                                  நேற்று (15) காலை 8.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரையான காலப்பகுதியில் கேகாலை கலிகமுவ பகுதியில் அதிக

                                                                  மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 212 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

                                                                  காலி – சிறிகந்துர பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், காலி – ஹேகொடவில் 191 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


                                                                  காலி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் 163.3 மில்லிமீட்டரும், இரத்தினபுரி – கிரிஎல்லவில் 147.4 மில்லிமீட்டரும், இரத்தினபுரி –

                                                                  பரகடுவ பகுதியில் 141.5 மில்லிமீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

                                                                  களுத்துறை – மதுராவல பகுதியில் 133.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பு – மட்டக்குளி பகுதியில் 112 மில்லிமீட்டர்

                                                                  மழைவீழ்ச்சியும் களுத்துறை – மத்துகம பகுதியில் 105 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. மழையை அடுத்து களு, களனி மற்றும் கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

                                                                  வெள்ளத்தில் மிதக்கும்
                                                                  வெள்ளத்தில் மிதக்கும்
                                                                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                                      யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் அட்டகாசம் – இளம் பெண்ணுக்கு கத்தி வெட்டு

                                                                      யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் அட்டகாசம் – இளம் பெண்ணுக்கு கத்தி வெட்டு

                                                                      யாழ்ப்பாணத்தில் சமீபகாலங்களாக வாள்வெட்டு தாக்குதல்கள் தாய்கறிதா

                                                                      வண்ணம் உள்ளது,
                                                                      கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற சண்டையை விலக்கு பிடிக்க

                                                                      சென்றபி தங்கை மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                                                      ஒரு குழுவாக சென்ற இவர்களே வீட்டின் கதவு மற்றும் ,கதிரைகள் உடைமைகள்

                                                                      என்பனவற்றை அடித்து நொறுக்கியதுடன்
                                                                      அங்கிருந்த பெண்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்

                                                                      வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்

                                                                      மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                                                                      யாழ்ப்பாணத்தில் ரவுடிகள்
                                                                      யாழ்ப்பாணத்தில் ரவுடிகள்
                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          லண்டனில் மாட்டுக்கார மணியக்கா மீண்டும் மோசடி

                                                                          லண்டனில் மாட்டுக்கார மணியக்கா மீண்டும் மோசடி

                                                                          லண்டனில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடி வெல்ல போவதாக நாடு கடத்த படும் சங்கம் ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது

                                                                          இதில் எம்பிகளாக உள்ளவர்களும் ,அமைச்சர்களாக உள்ளவர்களில் முக்காவாசி பேர் மக்கள் வாக்கு இன்றி தெரிவு செய்ய பட்ட சாதனையாளர்கள்

                                                                          இவர்கள் தமது சங்கத்தில் இணைகின்றபவர்களுக்கு தேசிய அடையாள அட்டை ஒன்று வழங்க படுகிறது ,இதனை பெறுவதற்கு முன்னூறு பவுண்டுகள் வரை பெறுகின்றனர் .

                                                                          அது தவிர ஒரு கடிதம் வழங்குவதற்கு நூறு முதல் இருநூறு பவுண்டுகள் அறவிட படுகின்றன

                                                                          மேலும் இவ்வாறு பெறுபவர்கள் ஆறு வரஙக்ளுக்கு இவர்களுடன் இனைந்து பணி செய்திட வேண்டும் என்ன பணி தெரியுமா ..?

                                                                          துண்டு பிரசுரம் ஓட்டுதல் ,இவர்கள் அலுவலகங்கள் கூட்டி ,கழுவுதல் ,மேலும் இவர்கள் விற்பனை புரியும் டீ சேர்ட் ,புத்தகங்கள்,இறுவெட்டுக்கள் என்பனவற்றை விற்று கொடுக்க வேண்டும்

                                                                          அத்துடன் இவர்கள் சந்தா பணமும் வழங்க வேண்டும் ,இதனை செய்பவர்கள் வேறு யாருமில்ல அந்த விசா இன்றி அலைகின்ற வாலிபர்கள் தான் ..

                                                                          இதில் உலக புகழ் பெற்ற மாட்டு கார மணியாக்கா அமைச்சர் ,அவருடைய கணவர் கரும்புலி அமைச்சர் .ஒருவிடத்த்தில் சொல் தென்றால் குடும்ப ஆட்சி


                                                                          வன்னியில் போரால் பாதிக்க பட்டவர்களுக்கு மாடு வாங்கி கொடுப்பதாக கூறி அமைச்சரவையில் கணக்கு காண்பித்து விட்டு மாடு வாங்கி கொடுக்காது ,பின்னர் ,அந்த பணத்தை சுருட்டி ஏப்பம் விட்டவர்கள்

                                                                          இவ்வாறான சூத்து மாத்து பேர்வாழிகளை தன்னகத்தே வைத்து ,சங்கம் நடத்தி வரும் உருத்திரமானவர் அதன் அதிபதியாக உள்ளார் .

                                                                          பெரும்பாலும் இவர்கள் சங்க கடை திறப்பு ,மக்கள் இன்றி கதிரைகளுடன் பேசும் நிலையே உள்ளது ,


                                                                          பாதிக்க பட்டவர்கள் பல சான்றுகளை வைத்துள்ளனர் ,விரைவில் பழைய படி நாம் அணைத்து விடயங்களையும் கிளறி எடுத்து மக்கள் முன்பாக வைத்திட விழைகிறோம்

                                                                          அரசியல் என்பது பாதிக்க ப்பட்ட மக்கள் வாழ்வியல் விடயங்களுக்கு தீர்வு காணப்படும் ஒன்றாக இருக்கப் பட வேண்டுமே தவிர ,அந்த மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஏப்பம் விடுவதல்ல

                                                                          காத்திருங்கள் விரைவில் மேலும் பல விடயங்கள் உங்களை வாசல் வந்து தட்டும் . எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு

                                                                          லண்டனில் மாட்டுக்கார
                                                                          லண்டனில் மாட்டுக்கார
                                                                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                                              பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் தமிழ் பெண்கள் -லண்டனில் ஏமாந்த வாலிபர்கள்

                                                                              பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் தமிழ் பெண்கள் -லண்டனில் ஏமாந்த வாலிபர்கள்

                                                                              உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் பேஸ்புக் தமிழர்கள் வாழ்வில் ஒன்றாகி போனது .காரணம் நமது தமிழர்கள் அதிகம் பயன் பாட்டில் வைத்திருப்பது பேஸ்புக் ,மற்றும் டிக் டொக் ஆகும் .

                                                                              இதே பேஸ்புக்கில் அழகிய படங்களை காண்பித்து மயக்கும் வார்த்தைகளில் பேசி வரும் பெண்களிடம் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் வாலிபர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்

                                                                              பொய்யான செய்திகளை கூறி கண்ணீர் விட்டு கதறிய நிலையில் பணத்தை அனுப்பி வைக்கின்றனர் ,பின்னர் செக்ஸ் மோகம் கொடி கட்டி பறக்கிறது ,

                                                                              ஆண் மகன்கள் வீடியோ காணொளிகளை தமது கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் இந்த பெண்கள் அவர்களின் அந்தரங்க

                                                                              விடயத்தை வெளியில் கூறி விடுவோம் என் மிரட்டி பணம் கறப்பதில் ஈடுபட்டுள்ளனர் .

                                                                              துணிந்தவர்கள் கவல்துறையில் முறைப்பாடு செய்து அவர்கள் கணக்குகள் முடக்க பட்டுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

                                                                              யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிங்க பூரில் வசித்து வந்துள்ளார் ,லண்டனில் கோழிக்கடை உணவகம் ஒன்றில் வேலை

                                                                              பார்த்து வந்த வாலிபரிடம் இரண்டாயிரம் பவுண்டுகள் அதாவது ஐந்து லட்சம் ரூபாய்களை கறந்துள்ளார்

                                                                              அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்ய போவதக கூறி வந்த அம்மணி இவரை கைவிட்டு இலங்கை சென்று அங்கு திருமணம் செய்து விட்டார்

                                                                              இந்த வாலிபரோ விசர் பிடித்து உலவுகிறார் ,ஆசை படுவான் ஏன் ..|?அவஸ்தை படுவான் ஏன் .இவ்வாறான பெண்களை அஞ்சாதது

                                                                              அவர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு பாதிக்க படும் நபர்களையும் காப்பாற்ற இந்த வாலிபர்கள் முன் வரவேண்டும் .

                                                                              இவ்வாறு புரியாது ….போனது போகட்டும் என விட்டு வைப்பதால் தான் இவ்வாறான இழி செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,தாம் பத்தினிகள் என கூவியபடியே உலவுகின்றனர்

                                                                              மக்களே எச்சரிக்கை ,பேஸ்புக்கில் சொந்த படம் ,நட்பு வட்டாரம் ,புரோபில் பகுதியில் வெறுமையாக உள்ளது என்றால் அவரக்ளை உங்கள் நண்பர்கள் ஆக்கி கொள்ளாதீர்கள் .

                                                                              மேலும் முன் பின் தெரியாதவர்கள் முன்பாக உங்கள் கைபேசி கமரா திறந்து பேசாதீர்கள் ,இவ்விதம் செய்திட முனைந்தே

                                                                              சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்கின்கிறீர்கள் .எச்சரிக்கை ,நம்ம பொண்ணுகளில் சிலர் பணம் புடுங்கிட உங்களை துரத்து கின்றனர் .தப்பித்து கொள்ளுங்கள்