Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளல் கடந்த 3ஆம் திகதி தொடங்கியது.
இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளது.
அத்துடன், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை (17) நிலைவரப்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வைப்புத்தொகை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது ,பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்ட 31 வயது நபர் ஒருவர் ஹோமாகமவில் உள்ள மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கோணபால பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் மே 12, 2023 அன்று அவிசாவெல்லவில் இரண்டு நபர்களைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.
2023 மே 26 அன்று அவிசாவெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்றும், அதில் ஒருவர் காயமடைந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
2023 செப்டம்பரில் அவிசாவெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதன் விளைவாக இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி. கூறும் எந்தவொரு கருத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.
பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வந்த ஏராளமான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை எம்.பி. பலமுறை புறக்கணித்து வருவதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று சபாநாயகர் கூறினார்.
யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு
யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு
யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்
காதலியை கொன்று சரணடைந்த காதலன்
காதலியை கொன்று சரணடைந்த காதலன்
காதலியை கொன்று சரணடைந்த காதலன் ,தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞன், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை(18) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் இருந்த நிலையில் அண்மையில் , இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என தனது காதலனிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண் ,முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சரண் அடைந்துள்ளார் .அப்படி என்றால் இதுவரை இவருக்கு அடைக்கலம் வழங்கியது யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது
எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க
எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க
எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க ,நானும், எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால்,
என்னதான் செய்து. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சமீபத்தில் நடைபெற்ற
கோப் குழுக் கூட்டத்தின் போது, தன்னை ‘பதுல்லே படா’ என்று குறிப்பிட்ட கோப் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
“பதுல்லே படா’ என்று கோப் உறுப்பினர் குறிப்பிட்டது தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் பதுளை மாவட்டத்தில் பெரிய வயிறு கொண்ட வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. அமைச்சர் சமந்த வித்யாரத்ன உட்பட
பதுளையில் உள்ள மற்றவர்களுக்கு வயிறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றும் சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.
“கோப் உறுப்பினர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும், கூட்டங்களின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென சொல்விக்கொடுக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு ,சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தமக்கான கொடுப்பனவுகள்
குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (18) காலை 7 மணிமுதல் நாளை புதன்கிழமை (19) காலை 7 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளான சமன் ரத்னபிரிய மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் திங்கட்கிழமை (17) நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
நிதி அமைச்சினூடாக பிரச்சினையைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தால் ஏற்பட்ட அநீதிக்கு அதிகாரிகளிடம் சரியான பதில்களில்லை, மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, அரச விடுமுறை கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, பதவி உயர்வுகள்
குறைக்கப்பட்டுள்ளமை, சலுகைகள் தொடர்பாக எவ்வித பதில்களும் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் ,யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
வழக்கு ஒன்றை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர்
20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) முன்னிலையாகினர்.
இதன்போது குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பொருட்களின் விலைகள் குறைப்பு
பொருட்களின் விலைகள் குறைப்பு
பொருட்களின் விலைகள் குறைப்பு ,சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும்.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 162 ரூபாய் ஆகும்.
ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாய் ஆகும்.
அத்துடன், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 185 ரூபாவாக உள்ளது.
ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌப்பியின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாய் உள்ளது.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபாய் என பதிகாகியுள்ளது.
ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்
வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்
வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம் ,பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை
மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது.
1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன.
37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது.
தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது
ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே, இது போன்ற வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன.
1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படை முகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்
இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது.
அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டன
சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள்
ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.
எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது.
ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது
உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு
பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு
கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு
கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றத்தை இனங்கண்ட பொதுக்கள் இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு சடலங்களுக்கு அருகாமையில் நஞ்சு போத்தல் இருப்பதாகவும் சிறிது காலம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு இந்த இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் மனைவி 37வயதுடைய பெருமாள் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிதிகமவில் துப்பாக்கிச் சூடு
மிதிகமவில் துப்பாக்கிச் சூடு
மிதிகமவில் துப்பாக்கிச் சூடு மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் முன் சுவரில் 3 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும், 1 தோட்டா ஜன்னல் பகுதியைத் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது ,கொலை சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மைத்திரி அதிரடி யோசனை
மைத்திரி அதிரடி யோசனை
மைத்திரி அதிரடி யோசனை ,88-89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாட்டில் பல்வேறு குற்றங்களைச் செய்த பிற கும்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனது காலத்தில் வேறு சில ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், அந்த குழுக்களின் அறிக்கைகளையும் செயல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய வங்கி நிதி மோசடி ஆணைக்குழு மற்றும் இலங்கை நிறுவனம் ஆகியவற்றை விசாரிக்கும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை செயல்படுத்துவது நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி கூறினார்,
ஆனால் இந்த ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட கடமைகள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
பஸ் விபத்தில் பலர் காயம்
பஸ் விபத்தில் பலர் காயம்
பஸ் விபத்தில் பலர் காயம்கொழும்பு-புத்தளம் வீதியில் பட்டுலுஓயா பகுதியில் திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டியவிலிருந்து அதிகம மற்றும் கீரியன்கல்லிய வழியாக கொழும்புக்கு தினமும் இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று, பாதையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேசபந்துவின் ரிட் மனு தள்ளுபடி
தேசபந்துவின் ரிட் மனு தள்ளுபடி
தேசபந்துவின் ரிட் மனு தள்ளுபடி ,வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) மறுத்துவிட்டது.
மேலும், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை சட்டத்தின்படி செயல்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதியரசர்களை கொண்ட, நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) முகமது லாஃபர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதற்கிடையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.
தேசபந்து தென்னகோன் தனது ரிட் மனுவில், மாத்தறை நீதவான் பிறப்பித்த பிடியாணையை ரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரியிருந்தார்.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அத்துடன், வழக்கு கட்டணமாக 10 ஆயிரத்து 500 ரூபாயை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள்
மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள்
மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள் ,பதுளை மாவட்டம் பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருட
காலமாக பூனாகலை மாகந்த தேயிலை தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் .
குறித்த 51 குடும்பங்களுக்கும் சனிக்கிழமை (15) அன்று 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் K.V சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில விஜயசேகர, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தகீர்த்தி,
நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் தீப்தி குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி மஹகமகே. உட்பட பதுளை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் மற்றும் பிரதேச செயலாளர் தோட்ட முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
10 பேர்ச் காணியுடன் குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு வீட்டுக்கு சுமார் 28 லட்சம் செலவிடப்படவுள்ளதுடன் .
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு
வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு
வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு ,மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்து, ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பேருந்து கல்லடிப்பால சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரணில் மீது பிமல் குற்றச்சாட்டு
ரணில் மீது பிமல் குற்றச்சாட்டு
ரணில் மீது பிமல் குற்றச்சாட்டு ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டதற்காக 40,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் (ரூ. 16
மில்லியனுக்கும் அதிகமான) பொது நிதியைப் பயன்படுத்தியதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
தனியார் பயணத்திற்காக பொது நிதியைப் பயன்படுத்துவது குற்றம் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார்.
விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியுடன் பத்து பேர் கொண்ட குழு ஒன்று சென்றதாக அவர் கூறினார்.
இந்தப் பயணம் ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட பயணமாக விவரிக்கப்பட்டதாகவும், பின்னர் நிதியைப் பெறுவதற்காக ஜனாதிபதி செயலகம் அனுப்பிய கடிதத்தில் உத்தியோகபூர்வ பயணமாக காட்டப்பட்டதாகவும் ரத்நாயக்க குற்றம் சாட்டினார்


























