Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
துரோக கலையே சென்று வா ….!
துரோக கலையே சென்று வா ….!
என்றே சாவாய் என்றே எண்ணிய
ஏக்கம் இன்று தணிந்தது
எங்களின் தலைவர் என்பவர் தலைகள்
எகிறுடும் காலம் பிறந்தது ….
கடவுளாய் உன்னை கூப்பியே தொழுதார்
காயங்கள் நெஞ்சில் வைத்தாய் …
கதறிய குரல்கள் கேழா நின்று
கை தட்டியே நன்று இரசித்தாய்….
செவந்த குருதியில் செத்தவன் தமிழன்
செந்தமிழ் வேந்தா அறியாய் ..?
பதவியின் மேலே பைத்தியம் கொண்டாய்
பார் தமிழ் உன்னில் உமிழ்ந்தார் …
அரியணை காத்திட அழுகுரல் காண
அன்றே அமைதி கொண்டாய் …
வாங்கிய பணத்தை காத்திட நன்றே
வஞ்சகம் புரிந்தாய் ….
இது நாள் வலியில் துடித்தவர் நெஞ்சம்
இன்றே கொஞ்சம் சிரித்தது …
இதய கணத்தில் இரண்டொரு பாதி
இன்றே கொஞ்சம் தணிந்தது ….
செத்தாய் என்றே செய்தி கூவி
சேர்க்குது மக்கள் கூட்டம் ..
பிணத்தை வைத்து பிறிதொரு நாடகம்
பிரளயமாய் இங்கு வெடிக்குது …
இறந்தும் உந்தன் இறப்பில் கூட
இயங்குது நன்றே நாடகம்
கலைஞ்ர் கருணா நிதியே
காட்டிய வழியில் ஊடகம் …
புதைத்தால் புழுவாய் எழுவாய் – தீ
புசித்த சாம்பால் ஆவாய் ….
முள்ளி வாய்க்கால் சிரிக்கிறது
முன்னே கொஞ்சம் பாராய் ….!
கருணா நிதி இறப்பில் ….!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08/08/2018
உன்னை மறக்க என் செய்ய …?
உன்னை மறக்க என் செய்ய …?
உன் பாடல் நான் கேட்டு ஆடவா ..? – தினம்
உன்னோடு நான் வந்து கூடவா ..?
ஏனோ இன்று நான் பாடும்
என் கீதம் நீ ஆனாய் …?
பாடி பாடி அழைத்தவளே
பாடி தேடி பார்க்கிறேன் …
என் தேகம் உள்ளுக்குள்ளே
என் செய்தாய் துடிக்கிறேன் …..
ஓடி வந்து காதுக்குள்ளே
ஓதி என்ன போகின்றாய் …?
ஏறி வந்து பார்க்கும் முன்னே
எங்கோ ஓடி மறைகின்றாய் …?
கனவாகி தினம் விழவே
கன்னி பூவே துடிக்கிறேன் ….
கனவுக்குள் வதைகள் செய்தேன்
கண்ணே நோக வைக்கிறாய் ….?
தலையாட்டி பாடும் குயிலே – உன்
தாலாட்டில் தூங்கிறேன் ….
ஏது செய்வேன் என் கிளியே
உனை மறக்க கூறாயோ …?
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018
சிறை பட்ட புலி ….!
சிறை பட்ட புலி ….!
சிறைக்குள்ளே புலி ஒன்று சிறை பட்டதோ ..?
சிறை பட்டும் அடங்காது குரல் இட்டதோ ….?
இவன் செய்த பாவம் இன்றென்னவோ..?
இது தான் தமிழ் என்றான் இது குற்றமோ ..?
ஏனடா தமிழா நீ மூடனா ..?
எரியடா தீயாய் நீ நாடடா …
சிறைக்குள்ளே நுழைந்து சிறை நிரப்படா
சீமான் பிள்ளைகள் நாம் சொல்லடா ….
கொடியவன் ,கொள்ளையன் அதிரட்டுமே
கொடியார் விலங்கும் உடையட்டுமே …
இனி ஒரு கைதை நிறுத்தட்டுமே
இது தான் போர்க்குணம் தமிழ் உரைக்கட்டுமே…
சிறை பட்ட புலி இனி தூங்கிடுமோ ..?
சிறுத்தையின் பிள்ளைகள் தூங்கிடுமோ ..?
ஏதடா தமிழா உன் போர்க்குணமோ ..?
எங்கே கட்டாட இது களமே….
அஞ்சுதல் தமிழுக்கு கேவலமே
அடிமை தமிழுக்கு சீதனமோ ..?
கெஞ்சுதல் இங்கே முதல் பாவமே
கொட்டடா முரசு விலங்கு உடையட்டுமே ….!
19/07/2018 சீமானை சிறை அடைத்த செய்தி அறிந்த போது…!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018
ஒரு பதில் சொல்லாயா
ஒரு பதில் சொல்லாயா
நடையை காட்டி இடையை காட்டும்
நர்மதா இவள் யாரோ ..?
தொங்கும் கூந்தல் சூடி நடக்கும்
தோகை இவள் யாரோ ..?
அங்கம் காட்டி அசையும் பூவே
அடைக்கலம் தருவாயா ..?
பஞ்சு மேனியில் பகலிரவாட
பாவை விடுவாயா ..?
தொட்டு தொட்டு தேகம் தடவ
தென்றல் அழைப்பவளே….
தொட்டு விழிகள் பார்க்க விட்டு
தேகம் மறைப்பதென்ன ..?
அச்சம் உன்னில் குந்திட தானோ
அழகே மறைகின்றாய் ..?
அடடா உன்னை செதுக்கிய – உந்தன்
அப்பன் எங்கயடி …?
எத்தனை கேள்வி கேட்டும்
ஏனோ காண மறுக்கின்றாய் ..?
ஏக்கம் நெஞ்சில் ஏற்றி வைத்து
எங்கோ மறைகின்றாய் …?
ஆசை ஊற நினைவு தூற
அழுகிறேன் எனை பாராய் …
தரணியை வாங்கி தருகிறேன் -என்
தங்கமே வாராய் …..!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/07/2018
பெண்ணை நம்பாதே …!
பெண்ணை நம்பாதே …!
மொட்டை மாடியில் காயும் புடவை
போல் ஒரு பொண்ணு போறாளே …
சாளரம் வைத்த சட்டை மாட்டி
சந்தன மேனி நடந்தாளே…..
தேடிய பயணம் பாதியில் விட்டு
தேவதை பின்னால் போனேனே …
ஆனது என்ன அவஸ்தை தானே
அடி வாங்கி தானே கண்டனே …
கோலம் உண்ணும் எறும்பது கொடியது
கோல மயில் பெண் தானே …
காலம் முழுதும் கண்ணீர் சூட்டும்
கருங்கடல் இந்த பெண் தானே …
வழியில் கண்டு நொடியில் மயங்கி
வாழ்வை தொலைத்தவர் ஏராளம் ..
வலியில் தவழ்ந்து நோயில் மிதந்து
வாழ்வது வையம் ஆண் தானே …
ஏதொரு பெண்ணும் தான் புரி தவறை
ஏற்ற தென்றும் இல்லை …
ஆணவர் கிழார் அவரே கொடியார்
அது தான் இந்த பெண் வாதம் …
ஆறா துயரை மீளொரு பொழுதும்
ஆக்கிட இங்கே முனைவார் ..
நோவதை கண்டு நொந்தவர் மனங்கள்
நோயதாம் பெண்ணை நம்பார் …!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/07/2018
ஏக்கம் ஒன்று தவிக்கிறது
ஏக்கம் ஒன்று தவிக்கிறது
கவிதை ஒன்று பாடவா – உந்தன்
காதில் வந்து கூற வா ..?
நீயும் நானும் ஒண்ணு தானே- எந்தன்
நினைவில் உந்தன் கண்ணு தானே …
ஆடைகளை அவிழ்க்கும் உந்தன்
பார்வையாலே நோகிறேன் – என்னை
ஆட வைக்கும் உந்தன்
ஞானத்தாலே தவிக்கிறேன் ….
கேள்விகளை தெளிக்கும் உந்தன்
சிரிப்பினிலே துடிக்கிறேன் – என்னை
சீண்டி பார்க்கும் உந்தன்
சில்மிசத்தால் வாடுறேன் …..
வேக வைத்து பார்த்து என்ன
தேவைதேயே காண்கிறாய் ..?
வேகம் தரும் நினைவு ஊட்டி
வேகமாக மறைகிறாய் …..

ஏனோ உன்னை நான் தேட
ஏங்க விட்டு செல்கிறாய் …?
எரியும் எந்தன் நினைவில் உன்னை
ஏற்றி வைத்தென் பார்க்கிறாய் …?
ஆவி உயிர் நோக தானோ
அழகு மயில் விடுவதோ …?
ஆராரோ பாடும் நாளை
அருகில் தர கூடாதோ …?
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -30/06/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
முடிந்தால் வா மோதலாம்
முடிந்தால் வா மோதலாம்
எழுந்தவர் வீழ்ந்தவர் நூறடா – இங்கு
எரியுது கேள்வி தீ பாராடா ….
தீர்வுக்கு நீர் நீ ஊற்றடா
தீராத பகை நீள் எதுக்கடா ..?
பொதுவென வந்தால் திறனடா
போர் என வந்தால் கள மடா …
எது இன்று உனக்கு சொந்தமோ …?
ஏற்று நீ வருவாய் மன்றமோ …?
அறியாதார் சிந்தைக்குள் ஆயிரம்
ஆமைகள் உள்ளதை காணலாம் …
புரிந்தவர் சிந்தைக்குள் ஆயிரம்
புரட்சிகள் வெடிக்குது மகிழலாம் ……
என்னடாய் சொன்னாய் ஏதிலி – சிந்தை
எண்ணா உள்ள போக்கிரி ….
யாரடா இங்கே சீர் கேடி …?
யாம் முன்னே என்னடா போர்க்கொடி …?
என் தமிழ் உனக்கென்ன கீழ் நிலையா ..?
என்னடா சொன்னாய் கேவலமா …
வன்னியின் மைந்தர்கள் மூலமே
வான் ஆண்டா சாட்சிகள் கூறுமே ….!
–வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -15/05/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
தேடி வருவேன் காத்திரு
தேடி வருவேன் காத்திரு
இருந்தால் வருவேன் இதயம் தருவேன்
இன்றே கொஞ்சம் பொறுத்திடு …..
நாளை மலரும் வேளை ஒன்று
நமக்காய் மலரும் காத்திரு …..
வலிகள் வந்து இடையில் வீழ்ந்தால்
வாழ்வை விட்டு ஒழிவதா…?
கால பிழையால் கசங்கிய வாழ்வை
கண்ணீர் தூவி சுமப்பதா …?
ஒரு நாள் மலரும் திரு நாள் ஒன்றில்
ஓலம் ஓங்கி மறையும் …
ஓடியே வீழ்ந்த வலிகள் எல்லாம்
ஒரு நொடி அங்கே சிதறும் …
நடக்கும் கால நிகழ்வுகள் எல்லாம்
நல்லதே என்றே நம்பு …
நாளை சிறக்கும் வாழ்விற்கிது
நம்பிக்கை தரும் கொம்பு ….!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -29/03/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்
அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்
வருகின்ற தடை கண்டு வாடாதே
வரும் வலி என்ன இடர் என்று கேளாதே ..
எதிர் என்ன வரிகினும் எழுந்தாடு
எதிர் புயல் என நின்றே பந்தாடு ..
உடையது இல்லா பழங்காலம்
உடையது தரித்தது இக் காலம் …
சிந்தனை தட்டி எழுந்தானே – இன்று
சீறும் வானம் தந்தானே ….
ஆறாம் அறிவை நீ தட்டு
ஆடலாம் ஆகாயம் நீ தொட்டு ..
நம்பிக்கை மனதில நீ நட்டு
நாள் எல்லாம் போடடாநடை நட்டு …
தோல்வி ஒவ்வொன்றும் படி நிலை தான்
தேறும் வெற்றியின் முதல் அடி தான் …
தளர நின்று நடை போடு
தரணியே உந்தன் காலடி தான் ….
அஞ்சி ஒடுங்குதல் அவமானம்
அவை கெஞ்சி வீழ்தல் இழி கேடு …
உன்னிலை இழக்கா நீ நடந்தால்
உலகில் நீயே முதல் புனிதன் …!
- வன்னி மைந்தன் -(ஜெகன் _
ஆக்கம் -09-03-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
முள்ளி வாய்க்கால் தமிழா சிரி
முள்ளி வாய்க்கால் தமிழா சிரி
அண்டி பிழைத்தவராம் – சிங்கள
அடி கழுவி நின்றவராம் ….
தொண்டுகள் இதுவாகி
தொழுதே திரிந்தவராம் …..
பண்டிகை அதுவாகி – தமிழன்
பலியில் சிரித்தவராம் ….
வெடி கொளுத்தி மகிழ்வில்
வெற்றி செய்தவராம் …..
காலம் முழுவதும்
கால் கழுவி நின்றவரை …
விட்டது பிழையென்று
விடயம் புரிந்தான் …
தட்டினான் தீ பற்றினான் ஊர்
தாரணி எல்லாம் கதறுதடா ….
கொட்டினான் தேளாகி
குளறுதடா கீழாகி ……
வராலாற்று தவறொன்று
வலிகள் புரிகிறது ….
வாடட்டும் தமிழா
வாய் கொட்டி சிரி….
நாடின்றி அவன் மடி
நக்கி பிழைத்தவர்கள் ….
கூடின்றி போகட்டும்
கூட்டடா வெடியதிர்வை….
ஆண்டுகள் முப்பது
ஆட்டம் போட்டவரை ..
கோட்டையில் இருத்தி
கொடி கட்டி மகிழ்ந்தவரை ….
வீட்டோடு எரிக்கிறான் – சிங்களன்
வீழ்ந்து சிரி தமிழா …
பாட்டு எழுதி படி – இது
பைந்தமிழன் வேலை ….
முறுக்கடா உன் மீசை – தமிழா
நறுக்கடா உன் பகையை …
புரிந்ததா புலி வீரம்
புண் பட்டு அழுவாய் ….
என்னடா சொன்னாய்
ஏதிலி என்றாய் ….
வாலாட்டி திரிந்தவரே – உன்
வாய் அறுத்தான் என் செய்வாய் ..?
நீறாகி எரியுதாடா
நீளமான உன் குடில்கள் ….
நக்கி பிழைத்தவனே
நாயாகி குலை ….
முக்கி முக்கி – தமிழன்
முன் எழுந்த வளர்ச்சியை- பகை
நக்கி நக்கியே நாராய் அறுத்தவா
நக்கி குலை …..
முதாலாளி உதைக்கிறான்
முனகாதே முன்னே வணங்கு …
சிலையாகி நிற்பாய் – அவன்
சித்திரம் வடிப்பான் ….

அல்லாவின் பிள்ளைகளே
அழுவதுவோ …?
சிரியுங்கள் இப்போது
இது உங்கள் சிம்மாசனம் …
முள்ளி வாய்காலில் – தமிழன்
முண்டமாய் வீழ்ந்த போது
பால்சோறு உண்டு பார்த்து சிரித்தவா
பறை கொட்டி வெடி ….
இது தான் உன் வேலை
இது தான் உன்வேலை …
இன்றேன் நீ அழுதாய் ..?
இடி தரும் வெடி எறிவாய்…!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07-03-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
ஓடி வா வெள்ளமே கொள்ளையர்கள் காத்திருக்கார்
ஓடி வா வெள்ளமே கொள்ளையர்கள் காத்திருக்கார்
ஊர்கள் தேடி ஓடி வா வெள்ளலையே
ஊதி பெருத்தவன் காத்திருக்கான் …
ஊரழிந்த செய்தி சொல்லி
உருட்ட கோடி பாத்திருக்கான் ……
வாழ்வழிந்த துயர் சூடி நாமழுவோம்
வந்து கை கூப்பி அவன் மகிழ்வான் ….
வேட்டிகளின் சட்டை பை வெள்ளமாகுதே
வெந்த மனம் நொந்து கண்ணீராகுதே ….
அயல் வந்து அரவணைத்து உணவூட்டும்
அவல கணக்கு நாடாள்வார் உயர்வு காட்டும் …
ஓடி வெள்ளம் வடிந்த பின்னே ஊரளுவார்
ஓடி வெள்ளை வேட்டி மனம் மகிழ்வான் …..
நீர் வடிந்த நிலம் கண்டு நாம் கதற
நின்ற வீடு காணா வாய் குழற …..
ஓடி வந்து சேதம் முன் அளப்பான்
ஒன்றுக்கு கோடிகளில் கொள்ளையடிப்பான் ….
கொள்ளை அடி மன்னவர்கள் நாடாள
கொழுத்து உடல் பருத்து அவராட…..
வந்து எங்கள் வீடுடைத்து போ
வாடி அழ நாமும் பார்த்து போ ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -06/12/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
பிணங்களால் மிதக்கும் தேசம்
பிணங்களால் மிதக்கும் தேசம்
கந்தக துகளிருந்து கதறுதடா பிஞ்சு
கை இழந்து பாவமடா நோகுதடா குஞ்சு …
என் செய்தார் என்றிவரை கொல்லுதடா நஞ்சு …?
எவன் உண்ண பிள்ளை கறி தேடுதடா சொல்லு …?
வாலாட்ட மறுத்ததாலே வாடுதடா நாடு
வல்லராசம் அமெரிக்கா புரிந்த செயல் கேடு …
வெள்ளையனாம் மாளிகைக்கு வெடிகுண்டை போடு -போர்
வெறியடங்கி நிமிருமடா உலகில் பல நாடு ….
தெருவெல்லாம் மிதக்குதடா பிள்ளைகளின் கூடு
தேம்பி தேம்பி அழுகுதடா உலகில் பலநாடு …
நெஞ்சை வெட்டும் கொடுமைகளை நிறுத்துவது யாரு ..?
நேசமுடன் உயிர் பலியை தடுத்திடுமோ போரு ..?
மா நிறத்து புழுதிக்குள்ளே மழலைகளை பார்த்தேன்
மாண்ட உயிர் மீண்டிடுமா மக ராசர்களே கூறும் ..?
பிள்ளைகளை கொல்வது தான் பிரியமுள்ள போரோ…?
பிரளையத்தை கிண்டியவர் நெஞ்சமதன் வேரோ…?
பிணங்களால் மிதக்கும் தேசம்
கை இழந்து ,கால் இழந்து கதறுதடா குஞ்சு
கண்ணிரண்டில் நீர் வழிய கதறுதடா நெஞ்சு ….
எவன் செயத வேலையடா இந்த இழி போரு..?
ஏறி இன்று போடுங்கடா அவன் உடலை துண்டு …
மானமுள்ள உலகத்தாரே மன்றில் ஏறி வாங்க
மழலைகளை காத்திட தான் ஒன்றாகி போங்க …
சிரிப்பிழந்த சிரியாவை சிறை மீட்க வாரீர்
சிறகடிச்சு பறக்கும் வெண்புறாவை தாரீர் …!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் – 04-03-2018
வன்னி மைந்தன் கவிதைகள்
தப்பி ஓடிய காதலன்
தப்பி ஓடிய காதலன்
சக்கரையா நீ இனிக்க
சமைஞ்சவளே நான் துடிக்க …
அக்கைரையை தேடுகிறேன் – அடி
ஆள் மனசில் என் உரசல் …?
நீ பதித்த கால் தடத்தை
நிலம் புரட்டி நான் எடுக்க ….
காதல் நெஞ்சில் நட்டவளே
காத்திருக்கேன் வாராயோ …?
ஈர் உடலும் ஓர் உடலாய்
இல்லமதில் தினம் கலக்க …
வந்து விடு என் கிளியே
வாசலிலே காத்திருக்கேன் …..
தவணைகளை அடுக்கி வைத்து
தண்டனையை ஏற்றி வைத்து ….
வேடிக்கை பார்ப்பதென்ன ..?- என்
வேதனையை தணிக்காயா ….?
குரல் உயர்த்தி பதில் உரைத்தால்
குனிந்து தலை அழுபவளே …..
உன் மனதில் உள்ளதென்ன …?
உயிரே பதில் கூறாயோ …?
தப்பி ஓடிய காதலன்
ஆசை வைத்து நீ தவிக்க
அதில் பாதி நான் துடிக்க ….
ஏது நான் செய்திடுவேன்
என் வீட்டின் கடைசி புள்ள ….
சீதைகளை கூட்டி வைத்து
சீதனத்தை ஏற்றி வைத்தால் …
பேதைகளோ என் செய்வார் …?
பேரின்பம் என்றடைவார் …?
ஆண்டு ஒன்று ஓடிவிட
அகவை ஒன்று கூடி விட ….
தேவதைகள் சிறைச்சாலை
தேடுபவர் உடைப்பாரோ …?
வந்தவர்கள் ஆயிரத்தில்
வண்டிகளில் தந்து விட …
முந்தி நின்று கேட்டு நிற்பின்
முதிர் கன்னி என் செய்வாள் …?
ஆசையோடு தவிப்பவரே
அவர் போல நீரூ மென்றால் …
நான் வாழும் சிறைச்சாலை
நான் உடைக்க முடியாதே ….?
பேரன்பு கொண்டவளே
பேரிடரை ஏன் தந்தாய் …?
அடியே உன்னை நான் மணக்க – இந்த
ஆயுள் ஒன்று போதாது ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -03/12/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா
மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா
ஊரின் பெயரில் சங்கம் வைத்து
ஊரார் கொள்ளையடா- தினம்
ஊரின் மாந்தர்க் என் செய்தீர்
ஊரின் கேள்விக்கு பதில் இல்லையடா …
அறத்தை நாட்ட முன் வந்தார்
அருவாள் காவுதடா …..
அட டா இது தான் அவர்கள்
அறத்தின் நிலையோடா …?
எதுகை மோனை ஒன்றில் தானே
ஏற்றம் உள்ளதடா – சந்தம்
ஏற்ற இறக்கம் அறியா சிந்தையில்
ஏது கொள்ளுமடா …?
உண்டு கழித்து உழல்வது தான்
ஊர் சங்க நிலையோடா ..?
மறை கழன்றார் நிலை இதுவென்றால்
மன்றம் சிறக்குமோடா….?
சாதி ,மத ,அரசியல் ,கலப்பின்
சங்கம் உருப்படுமோ ..? – தம்பி
கூடு கட்டிய மலட்டு சிந்தை
கூண்டை உடைத்திடுவீர் …..
நக்கி பிழைக்கும் நாய்களுக்கு இங்கு
நக்கல் தொழில் தானோ ..?- முரசு
நகரம் செழிக்க ரவுடிகள் கூடி
நகர் மன்றம் வந்தாரோ …?
மண்டையில் ஏதுமில்லா மாந்தர்
மன்றில் முதல் நிலையாம் – நகர்
மன்றம் செழிக்க இவரது சிந்தை
மன்றுக்கு முதல் படியாம் …..
தானே மேலென ஆடும் ஆணவம்
தர நிலை இழக்கிறதே – பதவி
தவறிய விந்தில் முளைத்தார் ஏற்பின்
தர நிலை உயர்ந்திடுமோ ….?
- வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -03/03/2018
மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா …?
வன்னி மைந்தன் கவிதைகள்
காதலே பதில் சொல்லு
காதலே பதில் சொல்லு
கொஞ்சி கொஞ்சி பேசும் பூவே
கொஞ்சம் வாராயா – நான்
கொஞ்சி பேசி கொஞ்சம் தழுவ
கொஞ்சம் தாராயா …?
ஆசை வைத்தால் அஞ்சுதல் பிழையே
அன்பே புரிவாயா ..? – நாள்
ஆர தழுவி ஆயுள் கழிக்க
அச்சம் தொலைப்பாயா ..? ….
விழிகள் பேசும் மொழிகளை எல்லாம்
விலைகள் பேசிடவா ..? – நான்
விரும்பி நோக்கும் நிலவே உன்னை
விரைவாய் பெற்றிடவா …?
இது நாள் வரையில் உன்னை தடவி
இனிமை கண்ட காற்று ….
இனியும் உன்னை விட்டு தொலைய
இதயம் இடுவாய் நாற்று ….
எது நாள் வரையில் பொறுமை காப்பேன்
ஏங்கும் கிளியே கூறாய்- என்
எண்ணம் புகுந்த ஒளியே உன்னை
என்று தருவாய் மொழிவாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
நீ பிள்ளையா
நீ பிள்ளையா
அழகான ஊருக்கும்
ஐயாறு பிள்ளைக்கும்
முதலான தந்தை
முன் என்ன தலை வெட்டு …?
காதில கம்மலும்
கரட்டி ஓணான் தாடியும்
குண்டி காட்டும்
குளியாத சட்டையும் …..
உலக அழகு என்று
ஊர் சுற்றும் காவாலி ….
போலான பிள்ளைக்கு
பொறுப்பெங்கே கூடி வரும் ..?
தான் உண்ணும் வேளையில்
தான் பெற்றது அழுகுதென்று
உண்டதை எறிந்தோடி
உயிர் காத்த அப்பனை …..
வழி மறந்து போனவனே
வாழ்ந் தென்ன கண்டாய் ..?
முதியோர் இல்லத்தில்
முன் எறிந்து ஏன் போனாய் ..?
எதிர் காலம் ஒன்றுண்டு
என்பதை மறந்தின்று …
உலவி திரிபவரே
உது போல நிலையுனக்கும் கான் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா
நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா
எண்ணம் கசக்கி எண்ணிய தெண்ணு
ஏற்றம் வாழ்வில் பிறக்கும் …
கண்ணில் கரைந்த கண்ணீர் துளியும்
கடுகதி நன்றே மறையும் …
கூடி நின்றார் குரல்வளை அறுத்து
குருதி குடிக்க துடிப்பார் – நீ
வீழ்ந்தாய் என்ற விலாசம் இட்டு
விசிலடித்து அலைவார் ….
பழகும் போதே பாம்பென அறியா
பழகி நீயும் உழல்வாய் ……
பார்த்த கணக்கு கை நொடி கூட
படு குழியில் வீழ்த்தி போவார் …

ஏறி நடந்தால் ஏறி வந்து
ஏசியாகி உரைப்பார் – தாம்
பேசி நின்ற வார்த்தை மறந்து
பெரியாராய் உன்னை மொழிவார் …..
சாவை தழுவ நோதல் வீசும்
சக பாடிகள் எனக்கு வேண்டாம் ….
ஆறாம் அறிவை தட்டி பேசும்
அறிவகம் ஒன்றே போதும் …..!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08-02-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
தண்டனை கொடு
தண்டனை கொடு
பாதணி இன்றே பணி செய் என்றான்
பாவி அவனொரு மூடன் – கொடும்
பாதகர் நிலையை புரிந்திடா எண்ணி
பாடியே நின்றான் வேடன்……
தன் அருள் ஒன்றே முன் பொருள் என்றே
தவறி வைத்தான் நன்றோ ..?- நீதி
தழுவல் மறந்து தண்டனை எய்தார்
தகுமோ இந்த ஊழி …?
எம்மொழி உரைத்தான் என்றே எண்ணா
எடுத்தே எறிந்தான் பகைமை ….
தன் நெறி கெட்டு தன் மதி விட்டு
தழுவுமோ விரல் அவர் பாதம் …?
செய் நெறி கெட்ட செயல் நிலையாளர்
செந்தணல் ஆகி எரித்திடு – கொடும்
வெண் சமர் ஆடியே வேண்டும் நீதி
வென்றே உலகை ஆண்டிடு …..
தருகிற தண்டம் தர்மம் கூவும்
தட்டடா தட்டு கதவை …
கொடும் தேளாகியே கொட்டடா கொட்டு
கொடும் விலங்குகள் இங்கு சிதற ….!
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் -08-02-2018
பணி புரிந்த இடத்தில பாதணி எறிந்த
குற்றவாளியை காப்பாற்றிய முதலாளிக்கு சமர்ப்பணம் …
வன்னி மைந்தன் கவிதைகள்
கோபம் தவிர் வாழ்வில் நிமிர்
கோபம் தவிர் வாழ்வில் நிமிர்
எரியுது இங்கொரு நெஞ்சு – தினம்
எறியுது ஏனது நஞ்சு ..?
புலனது சிந்தை பிஞ்சு – இது
புவி மேல் பறக்குமா குஞ்சு ..?
திசையது அறியும் பறவை – நீ
திசையது அறியா கறவை ….
விழியது கூர்மை பறவை
விடயங்கள் அறியும் நேர்மை …
தேடினாய் என்ன சொல்லு – நீ
தேறிய நிலையை வில்லு ….
புரிதலில் கிழிதல் கொண்டாய்
புண்களை விதைத்தேன் நின்றாய் …?
அறிதலில் வேகம் கொள்வாய்
அகிலம் வியக்க எழுவாய் …
தெளிதலில் வீரியம் பெற்றால் – நீ
தெரு நிலை வாழ்வியல் கழிவாய்…..
முடிதலில் என்ன கொள்வாய் ..?
முன்னே விளக்கி செல்வாய் …?
எதுவரை வாழ்வு கூறாய் ..?- இப்போ
எரிகிறாய் ஏனோ தீயாய்…?
-வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -01/02/2018
முரசு மண்ணே பதில் கூறாய்
முரசு மண்ணே பதில் கூறாய்
குறிஞ்சி ,மருதம் குடி கொண்ட மண்ணில்
கூடு கட்டிய ஊரே – நாளை
கூடுறாய் ஆண்டில் இரண்டு – நீ
கூவுவாய் என்ன கூறு …?
தேறுவாய் என்றே தேடியே வந்தார்
தேற்றம் காணவில்லை ….
அகவை இரண்டு கழிய இங்கு
அழைக்கிறாய் என்ன விந்தை …?
சோரம் போனவர் பேரமானவர்
சோடனையாய் தினம் கூட …
வளரும் சங்கம் வளமது இழக்கும்
வழிகளை தடுக்க முடியல …
சிந்தையில்லா ஐந்தறிவாகி -சங்கம்
சிறையில் அடைக்கிற கோரம் ….
கண்டு கொதித்து கணையாய் எழுதல்
காலத்தில் இங்கு பிழையாம் …
முரசு மண்ணே பதில் கூறாய்
திண்டு கழித்து திண்ணைகள் கூடி
திமிராய் பேசும் நிலையாம் …..
தொண்டு செய்தல் சங்க நிலையின்
தொழும் பணி நிகழ்வின் முனையாம் …
பயின்று எழுந்து பணியது புரியும்
பள்ளி இங்கு இல்லையா …?
பாதை நீளும் வானை முட்டும் – திறன்
பக்குவ வாத்தி இல்லையா…?
கொள்கை விற்று கொள்ளையடிக்கும்
கொள்ளையர் கூட்டம் யாரோ ..?- மனம்
கொதிக்கும் நிலையில் எமை எழவைத்த
கொடிய செயலின் வேர் நீரே ….
தடுக்க மறந்து வினை தலையது ஆட்டும்
தறுதலை இல்லை நாமே ….
செழிக்க சங்கம் மறுத்தால் இங்கே
செழு நிலை இழப்பீர் நீரே …
- வன்னிமைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -31/01/2018
லண்டனில் முரசு மோட்டை ஒன்றிய கூடல்
எதிர் வரும் மாசி 10/02/2018 கூடுவதை அறிந்த போது
மனதில் எழுந்த கொதிப்பின் பதிவு …! - வன்னி மைந்தன் கவிதைகள்






