Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் பலி.
கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் பலி.
வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார்.
இன்று (24) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கற்குவாரியில் கல்
அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச் சிறுவன் கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளார்.
அதன் பின்னர் அச் சிறுவன் கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று தவறுதலாக கல் அகழ்வுக்காக வெட்டப்பட்ட குழியினுள் (நீர் நிரம்பிய நிலையில்) வீழ்ந்து நீரில் முழ்கியுள்ளான்.
சென்ற சிறுவனை காணவில்லை என கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்ற கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்
சிறுவன் குழியினுள் உயிருக்கு போராடுவதனை அவதானித்து உடனடியாக அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் சமயத்தில் சிறுவன்
உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
35 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் பதவி உயர்வு
35 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் பதவி உயர்வு
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள்
ஆணைக்குழுவின் அனுமதிவுடனும் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தள்ளது.
5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் இலஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகள்
5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் இலஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகள்
மலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்களில் இழுத்தடிப்புகளும்,
கழுத்தறுப்புகளும் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தள்ளார்.
பதுளையில் வைத்து நேற்று (23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில
மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு சில இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல்
ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கொரனோ தொற்றினால் 283 கடல்படையினர் குமடைந்தனர்
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 33 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட
பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 22 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
இவ்வாறு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 22 நபர்கள் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும், 04 நபர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும், 06 நபர்கள் முல்லேரியாவ வைத்தியசாலையிலும், 01 நபர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றனர்.
குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்
அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி அவர்கள் 2020 மே 22 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
அதன்படி, இந்த 33 நபர்களும் உட்பட 283 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
வன்னி மக்கள் காப்பகம் – டென்மார்க் அமைப்பின் மிக பெரும் பேரிடர் உதவி video
வன்னி மக்கள் காப்பகம் – டென்மார்க் அமைப்பின் மிக பெரும் பேரிடர் உதவி photo
இலங்கை தீவின் வன்னி பகுதியில் கொரனோவால் முடக்க பட்ட நிலையில் தமது வாழ்வா தாரத்தில் பின்தங்கிய வறுமையில்
வசித்து வந்த மக்களுக்கு, வன்னி காப்பகம் டென்மார்க் அமைப்பின் ஊடாக 80குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க பட்டன .
பிரதேச வாரியாக தெரிவு செய்ய பட்ட
01- முட்கொம்பன் பகுதியில் – 22 குடும்பங்கள்
02- பரந்தன் பகுதியில் – 06 குடும்பங்கள்
03- மலையாளபுரம் பகுதியில் – 12 குடும்பங்கள்
04- கோரக்கன்கட்டு பகுதியில் – 20 குடும்பங்கள்
05- ஆனந்தநகர் பகுதியில் – 19 குடும்பங்கள்
06- உதயநகர் பகுதியில் – 01 குடும்பம்.
ஆகிய 80 குடும்பங்களிற்கான இவ் நிவாரணப் பொதிகளை வன்னி மக்கள் காப்பகம் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்
டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043), தேசிகன் ( Haderslev தொலைபேசி – 004527574583 ) ஆகியோரின்
ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக பரந்தன் இளைஞர் வட்ட கழக உறுப்பினர்களினால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு
பொதிகள் தயார்செய்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது
சுமார் இராண்டாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் ஒவ்வொரு
வருக்கும் வழங்க பட்டுள்ளது,
இரண்டாம் கட்டமாக நடைமுறை படுத்த பட்டு வினியோகிக்க பட்ட காட்சி படங்கள் இவை
வன்னி மக்கள் டென்மார்க் அமைப்பின் ஊடாக மக்கள் வழங்கிய நிதி
பங்களிப்பில்
இரண்டாம் கட்டமாக எண்பது குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன
,இவ் உதவிகளை வழங்கிய டென்மார்க் மக்கள் மற்றும் இந்த உதவி
திட்டத்தை வழி நடத்திய பரந்தன் இளைஞர் வட்ட கழக அமைப்பினருக்கும்
,
அனைத்து மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும்
வன்னி
மக்கள் காப்பகம் டென்மார்க் அமைப்பினர் தெரிவித்து கொள்கிறது
நன்றி.
வன்னி மக்கள் காப்பகம்.
டென்மார்க்.
தேசிகன்
video பார்க்க இதிலோ அழுத்துங்க .அல்லது படத்தில் அழுத்தாவும்





வன்னி மக்கள் காப்பகம்


பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வீழ்த்திய பறவை – வெளியான அதிர்ச்சி தகவல் – வீடியோ
பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வீழ்த்திய பறவை – வெளியான அதிர்ச்சி தகவல் – வீடியோ
பாகிஸ்தான் பயணிகள் விமான இயந்திரத்திற்குள் பறவை ஒன்று
மோதி சிக்கி கொண்டதில் அந்த விமானம் இயந்திரத்தில் தீ பிடித்து வீழ்ந்து நொறுங்கியது
விமானத்தின் விமானி காட்டு பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு
விமான இயந்திரத்தைம் இழந்து விட்டோம் என்கிறார் ,அவர் உறுதி ப் படுத்துமாறு
கோரிய பொழுது அபாய குறியீட்டு இலக்கத்தை பயன் படுத்துகிறார் ,அவ்வாறான அந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது
விமானி விமானத்தை சாதூரியமாக இறக்க முற்பட்ட பொழுதும் அது தோல்வியில் முடிந்து வீழ்ந்து நொறுங்கியது
கட்டிடங்களில் மோதிடா விட்டால் பயணிகள் தப்பித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என நம்ப படுகிறது

கடற்றொழில் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் கடற்படை கப்பல்.
கடற்றொழில் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் கடற்படை கப்பல்.
அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில்
இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில்
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ கப்பல், ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை மீன்பிடிப் படகுகளை மீட்பதற்காக அங்கு சென்ற கடற்படை
கப்பல் படகுகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது
அம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து சென்ற குறித்த மீன்
பிடிப் படகுகளுடன் 180 மீனவர்களை மீட்பதில் கடற்படை கப்பல் ஈடுபட்டுள்ளது.
தொலைகே காட்சியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த போறாங்களாம் – இலங்கை அரசு
தொலைகே காட்சியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த போறாங்களாம் – இலங்கை அரசு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்களின் நலன் கருதி அரச
தொலைக்காட்சி கல்விச் சேவைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்வி ஒளிபரப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த சர்வதேச
மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற அரச தொண்டாற்று நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி மாவட்ட அரசாங்க அதிபரின் முயற்சியில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஒருங்கிணைப்புடன் அரச தொலைக்காட்சிகளில்
முன்னெடுக்கப்பட்டுவரும் இலவசக் கல்விப் போதனைகளை தடங்கலின்றி தொடர்ச்சியாக நடாத்துவதற்கு வசதியாக குறித்த
தொண்டார்வு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நேற்று (22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இவ் விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.
சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புன்னியமூர்த்தி மற்றும் இம்மாவட்டத்தில் செயற்படும்
பல்வேறு அரச, அரச சார்பற்ற தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் கொரோனா பரவும் சூழ்நிலையால் இம் மாவட்டத்தில் தடைப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகள் மாற்று வழிகள் மூலம் முன்னெடுக்கப்பட
வேண்டுமென்று மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரக்குமார் தலைமையிலான கல்வி அதிகாரிகள் குழுவென்று முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்
இக்குழுவினரும் தாமும் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்த அரச தொலைக்காட்சி பாட போதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
பயனுள்ள இப்பணியினை மேலும் முன்னெடுத்துச் செல்ல மேலதிக நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புக்கள் தேவைப்படுவதனால்
இம்மாவட்டத்தில் செயல்படும் தொண்டார்வ நிறுவனங்கள் இந்த மகத்தான கல்விப் பணிக்கு ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இந்த
வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தொண்டார்வ நிறுவனங்களின் சில பிரதிநிதிகள் இதற்கான பங்களிப்பை செய்வதற்கு தாம்
முன்வருவதாகவும், ஏனையோர் தமது நிதி அன்பளிப்பாளர்களின் உதவிகளைப் பெற்று உரிய திட்டத்திற்கு பங்களிப்பு நல்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
கொவிட் 19 கொரோனாபாதிப்பினால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன்கருதி அரச ஊடகங்களான இலங்கை
ரூபவாகினி கூட்டுத்தாபனமும், வசந்தம் தொலைக்காட்சியும் இலவச கல்விப் போதனைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புயல் உடைத்த வீடுகளை திருத்தி கொடுக்கும் இராணுவம்
புயல் உடைத்த வீடுகளை திருத்தி கொடுக்கும் இராணுவம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிவாரண நடவடிக்கைகள் பொதுமக்களுக்கான இராணுவ உதவி எனும் இராணுவத்தின் படை சாரா வகிபாகத்தின் (Non-
Military Role) ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 18 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு
இயல்புநிலை கொண்டுவரப்பட்டுள்ள பகுதிகள், சீரற்ற வானிலையினால் ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களில் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் மண்சரிவு அபாயம்
இடம்பெற்றுள்ளது. கண்டி மாவட்டத்தின் கம்பளை பிரதேசத்திலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளுக்கு, மத்திய
பாதுகாப்புப்படையின் 11 ஆவது பிரிவின் 116 ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தின் மூன்றாவது சிங்க
படையணியைச் சேர்ந்த படைவீரர்களினால் வெள்ள நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணியாளர்களுக்கும் படையினர் ஒத்தாசை வழங்கி வருகின்றனர். இவ்வாறு
மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள், மத்திய பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர்
ஜெனரல் கீர்த்தி கொஸ்த்தா, 11 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார 111 வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி ஆகியோரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இதேபோல், கேகாலை பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக நிலத்தில் புதையுண்ட பெண் ஒருவரை 61வது பிரிவின்
611 பிரிகேட்டைச் சேர்ந்த 8 வது சிங்க படையணியின் படைவீரர்கள் காப்பாற்றியுள்ளார்கள். இதேவேளை, மேற்கு பாதுகாப்பு படைத்
தலமையகத்தின் 61வது பிரிவின் 613 பிரிகேட்டைச் சேர்ந்த 20வது சிங்க படையணியின் படைவீரர்கள், மாத்தறை மாவட்டத்தில்
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிரதான வீதிகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் எல்பிட்டிய பிரதேசத்தில் சேதமடைந்த 34 வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.

இலங்கையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இலங்கையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1085.; இந்த நோயாளரகளில் 660 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்..
இன்றைய தினத்தில் (2020.05.23) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 17 பதிய நோயாளர்கள்;
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இந்த நோயாளர்களில் 15 பேர் கடற்படை அங்கத்தவர்கள். ஆவதுடன் இவர்களில் 10 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய
நிலையத்திலும் ஜவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.
ஏனைய இரு நோயாள்களும் டுபாயில் இருந்து வந்த பின்னர் கிராகம தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.
இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 416 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்றைய தினத்தில் (2020.05.22) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1970 ஆவதுடன் இத்தினத்தில்
அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்
யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் சிங்களவர் ஒருவரை மக்கள்
கட்டி வைத்து அடித்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
கொழும்பு பகுதியில் இருந்து யாழ்ப்பணம் வந்த இந்த சிங்கள நபரை மக்கள் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
போதை வாஸ்து விநியோகத்தில் ஈடுபட்ட இவர் பணத்தை வாங்கிட வந்த
பொழுதே அதனை தந்திட மறுத்து தமிழ் வியாபார கும்பல் ஒன்று கட்டி வைத்து தாக்கியுள்ளது
பலத்த அடிகாயங்களுடன் வயல் வெளியில் இருந்து மீட்க பட்ட இவர் தற்போது
காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்
தமிழர்கள் விவகாரத்தில் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் : கிழக்குத் திமோரின் ஜனாதிபதி
தமிழர்கள் விவகாரத்தில் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் : கிழக்குத் திமோரின் ஜனாதிபதி
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத்
தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா அலர்கள்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக்
கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம்
இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே,
கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழர்களைப் போன்று மீப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும்
பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்;. ஸ்பெயினில் கத்தலோனியர்களும்,
துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் ஸ்காட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச்
சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்து கருத்துரைத்தார்.
சிறிலங்காவில் தமிழர் இனவழிப்பு என்பதை குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் ஜெர்மனியில் யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு
ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு
மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும், ஒவ்வொரு தேசமும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த சுதந்திரத்தின்
பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும். என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய அவருடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை
எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது
என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் சுதந்திரத்துக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.
சிறிலங்கா அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் ரமோஸ்-ஹோர்தாவின்
கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீகள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ்
மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.
மே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது.
பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான
புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு
யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு
யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வாள் வெட்டு குழு நடத்திட திடீர்
வெட்டு தககுத்தலில் பலத்த காயமடைந்த நிலையில் இருவர்
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இவரக்ளில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆதரவு வழங்கி காவல் துறையினர் காப்பாற்றி செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் காவல்துறை தலைமையாகத்தால் உடனடி அமுலுக்கு
வரும் நிலையில் மூன்று ,முக்கிய காவல்துறை அதிகாரிகள்
உள்ளிட்டவர்கள் இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர்
குற்ற புலனாய்வுத்துறை ,பயங்கரவாத பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் இந்த திடீர் இடமாற்றத்திற்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
இது அரசியல் பழிவாங்கல் நிகழ்வா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
கடற்படை தளத்தில் கொரோனா பரவல் இல்லை சிங்கள – கடற்படை மறுப்பு.
கடற்படை தளத்தில் கொரோனா பரவல் இல்லை சிங்கள – கடற்படை மறுப்பு.
வெலிசர கடற்படைத் தளத்தில் வைரஸ் பரவல்நிலை தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வெளியிட்டுள்ள சில
ஊடகங்களின் அறிக்கைகளை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா முற்றிலும் மறுத்துள்ளார்.
கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று பரவலடைவதை தடுக்கும் தடுக்கும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் மற்றும் போதை பொருளுக்கு அடிமையாகியவர்களை கைது செய்வதற்கான
நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படும் செய்தி ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும் என அவர், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தெரிவித்தார்.
அபாய மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு திட்டங்களில் கடற்படை வீரர்கள்
ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக ‘ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின்போது
கடற்படை வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு மற்றும் சுகாதார அபாயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளன 578 கடற்படை வீரர்களில் இதுவரை மொத்தமாக 237 கடற்படை வீரர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடற்படை வீரர்களை
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வெலிசர கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் தொற்றுநோயியல் நிபுணர்களின்
அறிவுறுத்தல்களின் அடிப்படையில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை கடற்படைத் தளத்தை சூழவுள்ள பகுதிகளில் கடற்படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுதுவெல்லவிலிருந்து கொழும்பில் உள்ள நகலன் வீதி வரை ஈடுபடுத்தப்பட்ட கடற்படை வீரர்களினால் நாட்டில் ஏற்பட இருந்த
பாரிய ஒரு சுகாதார பேரழிவு தடுக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
கடற்படைத் தளத்தில் கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று மேலும் பரவலடைவதை தடுக்கும் வகையில் அவர்கள் வெவ்வேறு
தனிமைப்படுத்தல் மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதுவெல்ல சம்பவத்தின் போதே கடற்படை வீரர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்களுக்கு வேறு எங்காவது
இருந்து தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளது எனவும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு
மையத்தின் தலைவரும், இலங்கை இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கடற்படை தளத்தை பார்வையிட்ட தொற்றுநோயியல் பிரிவு அதிகாரிகள், வெலிசர கடற்படைத் தளத்தில் வைரஸ் பரவல்நிலை எவ்வாறு உயிர்ப்புடன் உள்ளது குறித்து சோதனை
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அவர்களிடையே கொரோனா வைரஸ் எவ்வாறு பரவலடைகிறது என்பது குறித்த
அவர்களின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ”எனவும் அவர் தெரிவித்தார்.
பிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்
பிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்
மே 18, 2020 அன்று, பிரித்தானிய வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப்( Dominic Raab), இங்கிலாந்து மற்றும்
இனப்படுகொலை இலங்கைக்கு இடையிலான “நெருங்கிய உறவு” குறித்து அவரும் இலங்கை அமைச்சர் டி.சி.ஆர் குணவர்தனவும்
உரையாடியதாக Twitter செய்தியாக வெளியிட்டார். வெளியுறவு செயலாளரின் Twitter இல் சிங்கள சிங்கக் கொடி மற்றும் Union Jack
ஆகியவை அடங்கும். பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் (TYO-UK) மற்றும் பதினான்கு தமிழ் மாணவர் சங்கங்கள் இணைந்து
இதற்கு பதிலளித்தனர். அதில் “இலங்கை அரசாங்கத்துடனான இங்கிலாந்தின் நெருங்கிய உறவைப் பற்றிய உங்கள் செய்தி, தமிழ் சமூகத்திற்கு கசப்பானது,” என தெரிவித்துள்ளனர். பிரித்தானிய
பிரதமர் போரிஸ் ஜான்சன் கோவிட் -19 தாக்கத்தில் இருந்த போது டொமினிக் ராப் துணை பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (TYO-UK), அங்கு வாழும் தமிழ் இளையோர்களையும் மாணவர் சங்கங்களையும்
ஒன்றிணைத்து ஒரு கூட்டு செய்தியை டொமினிக் ரபிற்கு அனுப்பி, “இலங்கையில் எவ்வளவு கபடத்தனமான நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது” என்பதை அவருக்கு நினைவூட்டியது.
மேலும், காலனித்துவ ஆட்சியின் போது பிரித்தானிய அரசால் இலங்கையில் ஒற்றையாட்சி அரசு உருவாக்கப்பட்டது, எனவே
பிரித்தானிய அரசிற்கு தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்கும் தார்மீகக் கடமை உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
“சமீபத்தில், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததற்காக பிரிகேடியர் பிரியங்கா
பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் முன் நிறுத்தி பிரித்தானிய தமிழ் சமூகம் தங்களுக்கான நீதியை நாடி சென்றது. இந்த வழக்கு எங்களுக்கு ஆதரவாகக் கண்டறியப்பட்டாலும், பிரிகேடியர்
பெர்னாண்டோ இலங்கைக்கு தப்பி ஓடினார், அங்கு 2020 மே 18 அன்று எங்கள் நினைவு நாளில், அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார், ”என்று TYO UK இன் அறிக்கை தெரிவித்துள்ளது.
Liberal Democrats கட்சியின் செயல்பாட்டு இணைத் தலைவரான சேர் எட் டேவி, Ilford தெற்கு Labour கட்சி நாடளுமன்ற உறுப்பினர் சாம் டாரி மற்றும் Harrow கிழக்கு conservative கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் பாப் பிளாக்மேன் ஆகியோர் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை தங்களது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் செய்திகளில் பயன்படுத்தினர். எவ்வாறாயினும், டொமினிக் ராப்
போன்ற உயர்மட்ட ஆளும் conservative கட்சியின் அரசியல்வாதிகள் கொழும்புடனான புவிசார் அரசியல் நடவடிக்கைகளைத்
தக்கவைத்துக்கொள்வதில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 19 அன்று இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவின் ஆத்திரமூட்டும் “ரணவீரு” (ஹீரோக்களுக்கான சிங்கள சொல்) தின உரைக்கு இங்கிலாந்து இன்னும் பதிலளிக்கவில்லை. அவர்
உரையில் “நமது நாட்டையும் நமது போர்வீரர்களையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து குறிவைக்கும் எந்தவொரு சர்வதேச நாடுகளிடமிருந்தோ அமைப்புகளிலிருந்தோ
இலங்கையை விலக்கிக் கொள்ள நான் தயங்கமாட்டேன்” என்
று பதிவு செய்துள்ளார்.
அத்தகைய சூழலில், Union Jack மே 18 அன்று Twitter இல் சிங்கள சிங்கத்துடன் கைகுலுக்கியது “கசப்பானது” மட்டுமல்ல, பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு நேரடியான அவமானம்.
1833 Colebrooke Cameron ஆணைக்குழு, 1931 Donoughmore அரசியலமைப்பு மற்றும் 1944 Soulbury ஆணைக்குழு
போன்றவையில் இருந்து நீண்ட காலமாக பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களின் பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்து வருகின்றது.
ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தாக்குதலின் போது, ஐக்கிய நாடுகள் சபையில் பிரித்தானியாவின் நிரந்தர
பிரதிநிதியாக இருந்த (ஆகஸ்ட் 2007 முதல் நவம்பர் 2009 வரை) சேர் ஜான் சாவர்ஸ் கூறினார்: “தமிழ் புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பு மற்றும் இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தமிழ்
புலிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இவை முடிவுக்கு வரப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ”
சாவர்ஸ் பின்னர் MI6 இன் தலைவராக நியமிக்கப்பட்டார் (நவம்பர் 2009 நவம்பர் 2014 வரை) என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தருணம் பிரித்தானிய அரசிடம் வற்புறுத்துவது யாதெனில்.
- தமிழினப் படுகொலைக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்காக சர்வதேச விசாரணைக்கு ஆதரவளித்தல்
- தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க அதிகார பூர்வமாக கோரிக்கை வைத்தல்
- தமிழர் தயாகப் பகுதிகளில் இருந்து சிங்கள படைகளை உடனடியாக அகற்றுவதற்கு கோரிக்கை வைத்தல்
- பிரித்தானிய அரசு தமிழர்களை ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரித்தல். தமிழர் தாயகத்தை அங்கீகரித்தல் மற்றும் தமிழர்களுக்கான சுநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
- பிரித்தானிய அரசு தமிழீழ தனியரசுக்கான சர்வஜன வாக்கெடுப்பில் புலம்பெயர் மக்களும் தாயக மக்களும் பங்குகொள்வதற்கு ஆதரவளித்தல்.
போன்ற விடயங்களை வலியுறுத்தி பிரித்தானிய வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப்( Dominic Raab) இற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

மனித நேயத்தை உணர்த்திய ரிஸ்வான்- வே.இராதாகிருஸ்ணன்
மனித நேயத்தை உணர்த்திய ரிஸ்வான்- வே.இராதாகிருஸ்ணன்
தலவாக்கலை பகுதியில் தனது உயிரையும் துச்சமென மதித்து ஒரு பெண் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதநேயத்திற்கு ‘
தலைவணங்குகின்றோம்.இன மத மொழிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் மனிதர்களே என்பதை இந்த உலகிற்கு உனர்த்தி
சென்றுள்ளான் ஆப்தீன் ரிஸ்வான் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா
சாந்தியடைவதற்கும் இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று கூறுகின்றார் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
தலவாக்கலையின் பெண்ணின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரிஸ்வான் என்ற இளைஞனின் உன்னத
செயற் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்
இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் மனிதத்துவம் சாகவில்லை. ஒருவருக்கு இன்னல் என்றவுடன் துடிதுடிதுடிக்கும்
உள்ளங்களே பொருமாலும் காணப்டுகின்றன. அரசியல் காரணங்களிளால் தான் இன்று இனங்கள் பிரிக்கப்பட்டு
வருகின்றன. ஆனால் மக்களளே அவற்றுக்கெல்லாம ஒருபடி மேல் சிந்தித்து செயற்படுகின்றனர். அந்த வகையில் ரிஸ்வானின்
செயற்பாடு மதிக்கதக்கது. எதிர்வரும் காலங்களில் இன மத பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை ரிஸ்வானின் செயற்பாது உணர்த்தி நிற்கின்றது.
ரிஸ்வானுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றாலோ அவரின் ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என்றும் நினைப்பவர்கள் ரிஸ்வானின்
கொள்கைளை கடைபிடியுங்கள் அதுவே இவருக்கு நாம் செய்யும் உன்னத மறியhதையாக இருக்கும். என்று மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.
ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
கடும் மழையினால் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள
மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (23) மாலை 3 மணி வரை
நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவிற்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை
நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, குருணாகல், காலி ஆகிய
மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழான மண்சரிவு அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷியாவில் தவித்த 260 இலங்கையர்கள் -விசேட விமானத்தில் நாடு வந்தனர்
ரஷியாவில் தவித்த 260 இலங்கையர்கள் -விசேட விமானத்தில் நாடு வந்தனர்
ரஷியாவுக்கு பயணித்த இலங்கையை சேர்ந்தஹ் 260 பேர் விமான
போக்குவரத்து இன்றி தவித்து வந்தனர் ,அவ்விதம் தவித்த 260
பெரும் மீள தற்பொழுது இலங்கைக்கு அழைத்து வர பட்டுள்ளனர்
விசேட விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
நோயின்றி உள்ளனர் என உறுதிப்படுத்த பட பின்னரே அவர் தம் வீடுகளுக்கு
இவர்கள் செல்ல அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
85 வயதிலும் உழைச்சு சாப்பிடும் பாட்டி அம்மா – கண்ணீர் வீடியோ
85 வயதிலும் உழைச்சு சாப்பிடும் பாட்டி அம்மா – கண்ணீர் வீடியோ
யாழ்ப்பாணத்தில் 85 வயதுடைய பாட்டியமம ஒருவர் ,கோயிலுக்கு முன்பாக கச்சான் விற்று தனது பிழைப்பை நடத்தி வருகின்றார் .
மழை வெயிலுக்குள் இந்த இயலாத வயதிலும் இந்த பாட்டியம்மா தன்னை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்
இவரது காணொளி பார்ப்பவர்களை வியக்கவும் ,கண் கலங்கவும் வைத்துள்ளது ,இதனை படம் பிடித்து இங்கே தர வேற்றம் செய்த
வீணா போனதுகள் ,அந்த பாட்டியம்மா தொலைபேசி இலக்கம் ,அல்லது அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்ற எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை
இந்த பாட்டிக்கு உதவிட வெளிநாடுகளில் எத்தனை மக்கள் துடிப்பார்கள்
வீனா போனவங்க இந்த காணொளிகளை பதிவேற்றம் செய்யும் பொழுது அவருடன் எவ்விதம் தொடர்பு கொள்வது என்ற விபரத்தையும் பதிவிடுக
சமூக பணி என்றால் அந்த காணொளியை வெளியிடுவதன் ஊடாக பாதிக்க பட்டவருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் ,ஒரு சிந்தித்து செயல் படுவீர்களாக







